September 29, 2020

Walking For Tamil Justice Stills & News & Video

Walking For Tamil Justice Stills & News & Video

Walking For Tamil Justice Stills & News & Video

 

                                                       Vanakkam, அனைவருக்கும் வணக்கம்,

அவுஸ்திரேலியா மெல்பேர்ன் நகரில் 15 – 03 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற “அவுஸ்திரேலியாவில் நீதிக்கான நடைபயணமும் பேரணி – 2015” நிகழ்வு பற்றிய செய்திஅறிக்கையை (செய்தியும், படங்களும்) இத்துடன் இணைத்துஅனுப்பப்பட்டுள்ளது. அத்துடன் அவுஸ்திரேலிய சமூக தொலைக்காட்சியின் (SBS TV’s 6.30 PM news Coverage) செய்தி அறிக்கையின் ஒலித்தொகுப்பும் இணைத்துஅனுப்பப்பட்டுள்ளது.

தயவுசெய்து உங்களின் ஊடகங்கள் ஊடாக இச்செய்தியை வெளியீட்டு உதவிடும்படி அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம். அத்துடன் உங்களிற்கு அறிமுகமான சகோதர ஊடகங்களிற்கும் இதை அனுப்பி வைக்குமாறும் தயவுகூர்ந்து கேட்டுக்கொள்கின்றோம்.

Dear Friends,

Here we enclose the news & photos from the “Walk for Justice & Rally” been held at Melbourne (State Library of Victoria, Melbourne) on March 15th 2015. Please accommodate this news item in your respective media and share with all your friendly Tamil Media outlets.  Please see the attachments for Photo’s, SBS TV news Link & Event news.

Thank you நன்றி.

அவுஸ்திரேலியாவில் நீதிக்கான நடைபயணமும் பேரணியும் அனைத்து சமூகமக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

விசாரணையின்றி அடைத்துவைக்கப்பட்டிருக்கு அரசியல் கைதிகளின் விடுதலையை கோரியும், படையினரின் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழரின் வாழ்விடங்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரியும், படையினரிடம் சரணடைந்த அல்லது காணாமல்போகச்செய்யப்பட்டவர்களுக்கு என்ன நடைபெற்றது என்ற விபரத்தை வெளியிடுமாறு கோரியும் இப்பேரணி நடைபெற்றது.

இன்று 15 – 03 – 2015 அன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு கிளன்வேவலி என்ற இடத்திலிருந்தும் காலை 10.30 மணிக்கு சண்சைன் என்ற இடத்திலிருந்து ஆரம்பித்த நடைபயணத்தில் 15 இற்கும் மேற்பட்டவர்கள் பங்குகொண்டனர். மாலை 3 மணிக்கு மெல்பேணின் மத்தியிலுள்ள State Library என்ற இடத்தையடைந்த நடைபயணம் அங்கு நடைபெற்ற நீதிக்கான பேரணியில் இணைந்துகொண்டனர்.

ஏழுவயதான சிறுமி ஒருவரும் தனது தாயாருடன் இணைந்து 25 கிலோமீற்றர்கள் தூரத்தை ஐந்து மணித்தியாலத்தில் நடந்துமுடித்தமை அனைவராலும் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நீதிக்கான பேரணியில் இணைந்துகொண்டு மனிதவுரிமைவாதியும் பிரபல சட்டவாளருமான றொப் ஸ்ராறி தமிழ் அகதிகள் அவையைச் சேர்ந்த றெவர் கிராண்ட் மனிதவுரிமை செயற்பாட்டாளர் சூ வோல்ற்றன் உட்பட பலர் உரையாற்றினார். இந்நிகழ்வுக்கு தமிழ்ச்செயற்பாட்டாளர் சிவகுமார் தலைமை தாங்கினார்.

மாலை நான்கு மணிக்கு நிகழ்வு சிறப்புற நிறைவுபெற்றது.

Video Link.for SBS TV coverage

https://www.youtube.com/watch?v=Z2E0NL8MWPg

Good media coverage on other media’s as well, which made the rally really a worthwhile effort.

More Photo’s & Video:  http://www.newzulu.com.au/en/photos/australia/2015-03-15/9147/melbourne-tamil-community-calls-for-justice.html#f=0/95421

நூல் வெளியீட்டு நிகழ்வு – மெல்பேண்

கலாநிதி முருகர் குணசிங்கள் எழுதிய “புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் – ஓர் உலகளாவிய ஆய்வு” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு மெல்பேணில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் 22 மார்ச், ஞாயிற்றுக்கிழமை நிகழவுள்ள இந்நூல் வெளியீட்டு நிகழ்வில் கலாநிதி முருகர் குணசிங்கம் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார். ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் உலகின் பலபாகங்களிலும் ஏற்கனவே வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்ற இந்நூல் மெல்பேணில் எதிர்வரும் 22ஆம் நாள் வெளியிடப்படுகின்றது.

இடம்: UNOH House, 6-12 Airlie Avenue, Dandenong, VIC. 3175

காலம்: 22 March, Sunday @ 5.00 – 6.30 PM. 

 

[Gallery not found]