Tag Archives: Vimal

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்!

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்!

கரு:வீடு புகுந்து சின்ன சின்ன பொருள்திருட்டுகளும், பெண்கள் திருட்டும் செய்யும் இரு திருடர்கள்., பெரிய திருட்டு செய்து மாட்டிக் கொள்ளும் கரு.

கதை :விமல், சிங்கம் புலி இருவரும்ஒரு மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது போலீஸில் மாட்டாத வண்ணம் வேலைப் பார்க்கும் கடையிலும், வெளியிலும்சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.

யாராவது வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்வது இவர்களது கண்களில் பட்டு கவனத்துக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு திருடிய சுவடே தெரியாத மாதிரியானசின்ன சின்ன பொருட்களை மட்டும் ஆட்டையப் போட்டு , அதை எடைக்கு போட்டும் , பாதி விலையில் விற்றும்., அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஒரு மாதிரி வாழ்க்கையைஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், விமல் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு கெஸ்ட்டாகவரும் ஆஷ்னா சவேரி மீது விமலுக்கு காதல் வருகிறது.

இந்த நிலையில், ஒருநாள் இரவு சிங்கம் புலியுடன் திருட செல்லும் ஒரு வீட்டில் இருந்து விமலுக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை சிங்கம் புலிக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார் விமல். அதே நாளில் மற்றொரு வீட்டில் திருட செல்லும் இந்த இருவர் கும்பலில் சிங்கம் புலிக்கு, அங்கு விமலுக்கு கிடைத்த மாதிரியே ஐந்து லட்சம் பணம் கிடைக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.

இதற்கிடையே விமல், சிங்கம் புலி திருடிய அந்த வீடுகளின் தட்டு முட்டு சாமான்களில்தங்களது பாஸ் ஆனந்தராஜின்ஒரு கோடி மதிப்புள்ளமுக்கியமான பொருள் ஒன்று சிக்கிக் கொண்டு இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு .. அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ஆனந்தராஜின் அடியாள் கும்பல் ஒன்று அவர்களை விரட்டி விரட்டித் தேடுகிறது. அதே நேரத்தில் போலீசான பூர்ணாவும் உயரதிகாரி மன்சூரலிகான் உத்தரவுபடி , இருவரையும் வலை வீசித்தேடி வருகிறார்.

கடைசியில், விமல், சிங்கம் புலி இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த ஐந்து ப்ளஸ் ஐந்து பத்து லட்சம்பணம் என்னவானது? விமல் – ஆஷ்ணாவின் காதல் என்னவானது ..? ஒரு கோடி மதிப்புள்ள பொருள் உரியவரிடம் கிடைத்ததா ? இல்லையா ..? என்பது தான் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு … ” படத்தின் மீதிக்கதையும், களமும்!

காட்சிப்படுத்தல் : சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் இருவரது தயாரிப்பில் ., விமல் .ஆஷ்னா , பூர்ணா , மியாராவ் , சிங்கம் புலி , ஆனந்தராஜ் ,மன்சூரலி… உள்ளிட்டோர் நடிக்க ,”குண்டூர் டாக்கிஸ் ” எனும்தெலுங்குப்பட ரீமேக்காகஏ.ஆர்.முகேஷ் எழுதி இயக்கிட வெளி வந்திருக்கும் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு … ” திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’மாதிரியான அடல்ட் காமெடி ஜானர் ஸ்டோரி படங்களின் பாதிப்பில் வந்திருக்கிறது .அது மாதிரி கதையை தேர்ந்தெடுப்பதில் இயக்குனர் காட்டிய ஈடு பாட்டை கொஞ்சம் ஸ்கிரீன் ப்ளேயிலும், காட்சிப்படுத்தலிலும்காட்டியிருந்தால் இந்தப்படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

கதாநாயகர் : தான்நடித்த,”பசங்க” , ”களவாணி ” படங்களை இளவட்ட பசங்க பார்க்கும் மாதிரி நடித்த விமல் ., இந்த படத்தில்பசங்க பார்க்கக்கூடாத மாதிரி, அதுவும் முழுக்க சதையை மையப்படுத்திய கதையில் அதிலும் , கதையே இல்லாத கதையில் நடித்திருப்பது சற்றே பலவீனம்.

மற்றபடி ., காதல், திருட்டு போன்ற காட்சிகளில் விமல் தனது வழக்கமான பத்தாம் பசலித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே நேரம் , கவர்ச்சி புயல் மியா லியோனிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் மட்டும் காமெடியும், காம நெடியும் ததும்ப தியேட்டரில் களேபரத்தை ஏற்படுத்துகிறார்.

கதாநாயகி :ஆஷ்னா சவேரி ., எந்தளவிற்கு இறங்கி காட்ட., சாரி நடிக்க முடியுமோ? அவ்வளவு இறங்கி இருக்கிறார். தன் உறவுப்பெண்ணுடன் ஒழுக்கக் கேடாக இருக்கும் விமல் மீது இவருக்கு ஓடிப்போகும் அளவு காதல் வருவது நம்பும்படியாக இல்லை.

காமெடியன் : காமெடியன் சிங்கம் புலியுடனானவிமலின் திருட்டு புரட்டு கூட்டணி ரசனை. அதே நேரம் சிங்கம் புலியின் மனைவி, புடவைக்காகஓடிப்போன கதை,பிள்ளைகளின் பாத்ரூம் அலசல் காட்சிகள்… உள்ளிட்டவை படத்திற்கு தேவையா ? என்பதை இயக்குனர் யோசித்திருக்கலாம். மற்றபடி , சிங்கம் புலி வழக்கமான தனது கடி காமெடிகளால் நெளிய வைக்கிறார்.

பிற நாயகியர் : போலீஸ் சப்-இன்ஸாக நடித்திருக்கும் பூர்ணா நல்ல போலீஸாக ஒரு வழியாக படத்தை க்ளைமாக்ஸில் முடித்து வைப்பது ஆறுதல்.

காமத்துடன் கவர்ச்சியையும் அள்ளித் தெளித்து விட்டு சென்றிருக்கிறார். லண்டன் கன்பைட் காஞ்சனா மியா ராய் லியோன்.அதிலும் , கவர்ச்சிகாட்சிகளில் அச்சம் மடம் பயிர்ப்பு ஞானம் எல்லாம் இல்லாது அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

பிற நட்சத்திரங்கள்: அண்ணாச்சி – ஆனந்த்ராஜ், இன்ஸ்’செங்கல்வராயன் -மன்சூர்அலிகான் , மெடிக்கல் ஷாப் ஓனர் – வெற்றிவேல்ராஜ் மற்றும் லோகேஷ் உள்ளிட்டோர் தங்கள் அனுபவ நடிப்பை சில இடங்களில் ஓவராகவும் சில இடங்களில் பாந்தமாகவும் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள். பலே!

தொழில்நுட்பகலைஞர்கள் : சங்கர நாராயணன் நடராஜனின் இசையில்

“இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு … ” ,” கிச்சு கிச்சுத்தாடா ” உள்ளிட்ட பாடல்கள் ரசித்துகேட்கும் ரகம். கோபிஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகளில் ஒரு குறையுமில்லை … என்பது ஆறுதல்!

பலம் : இப்படிப்பட்ட காம களியாட்டப்படத்தில் , பூர்ணா ., துளியும் கவர்ச்சி காட்டாது , அதிரடி பெண் போலீஸாக அசத்தியிருப்பது பலம்.

இயக்கம் :காதல்,காமம் , காமெடி, கவர்ச்சி இவை நான்கையும் நம்பி மொத்தப்படத்தையும் இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முகேஷ். முதல் பாதி கதையே இல்லாமல் வெறும் காட்சிப்படுத்தல்களுடன் ரொம்பவே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் ஆனந்த் ராஜ், மன்சூரலிகான்வருகைக்கு பின் படம் சற்றே வேகமெடுக்கிறது . ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை மாதிரியான அடல்ட் காமெடி ஜானர் ஸ்டோரியை தேர்ந்தெடுப்பதில் காட்டிய ஈடு பாட்டை கொஞ்சம் ஸ்கிரீன் ப்ளேயிலும், காட்சிப்படுத்தலிலும்காட்டியிருந்தால் இந்தப்படம் இன்னமும் சிறப்பாக, இளம் வயதினரை கவரும் படி இருந்திருக்கும்.

மற்றபடி : படத்தில் சிங்கம் புலியின் வாரிசாகஇடம்பெறும் சிறுவர்கள் முதல் ஹீரோ விமல் வரை ஒன் பாத்ரூம் ,டூ-பாத்ரூம் காட்சிகளை அடிக்கடி அசிங்கமாக காட்டுவது ., சிங்கம்புலியின் அம்மாவாக வரும்அந்த பாட்டி கேரக்டர் கூட மூட்டுவலி என தொடையை காட்டியபடியே இருப்பது உள்ளிட்ட அசுசைக் காட்சிகளைக் காட்டிலும் வசனங்களில் பெரிய அளவில் வக்கிரம் இல்லாதது ஆறுதல்!


“இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் இந்த மன்னர் வகையறா”

“இன்னொரு வருத்தப்படாத வாலிபர் சங்கம் தான் இந்த மன்னர் வகையறா”

mannar-vahaiyara-1

mannar-vahaiyara-2

mannar-vahaiyara-3

mannar-vahaiyara-4

mannar-vahaiyara-5

mannar-vahaiyara-6

mannar-vahaiyara-7

mannar-vahaiyara-8

mannar-vahaiyara-9

mannar-vahaiyara-10

mannar-vahaiyara-11

mannar-vahaiyara-12

mannar-vahaiyara-13

mannar-vahaiyara-14

mannar-vahaiyara-15

mannar-vahaiyara-16

mannar-vahaiyara-17

mannar-vahaiyara-18

mannar-vahaiyara-19

mannar-vahaiyara-20

mannar-vahaiyara-21

mannar-vahaiyara-22

mannar-vahaiyara-23

mannar-vahaiyara-24

mannar-vahaiyara-25

mannar-vahaiyara-26

mannar-vahaiyara-27

mannar-vahaiyara-28

mannar-vahaiyara-29

mannar-vahaiyara-30

mannar-vahaiyara-31

mannar-vahaiyara-32

mannar-vahaiyara-33

mannar-vahaiyara-34

mannar-vahaiyara-35

mannar-vahaiyara-36

mannar-vahaiyara-37

mannar-vahaiyara-38

mannar-vahaiyara-39

mannar-vahaiyara-40

mannar-vahaiyara-41

mannar-vahaiyara-42

mannar-vahaiyara-43

mannar-vahaiyara-44

mannar-vahaiyara-45

mannar-vahaiyara-46

mannar-vahaiyara-47

mannar-vahaiyara-48

 

A3V சினிமாஸ் சார்பில் விமல் தயாரித்து நடித்துள்ள படம் ‘மன்னர் வகையறா’. கமர்ஷியல் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க, ரோபோ சங்கர், சாந்தினி தமிழரசன், இளையலதிலகம் பிரபு, சரண்யா பொன்வண்ணன், கார்த்திக் குமார், சிங்கம்புலி, யோகிபாபு, வம்சி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ், நீலிமா ராணி என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.  

பி.ஜி.முத்தையா, சூரஜ் நல்லுசாமி இந்தப்படத்திற்கு ஒளிபதிவு செய்துள்ளனர். ஜாக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர்கள் விக்ரமன், பேரரசு, தயாரிப்பாளர் சுவாமிநாதன், எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் ரோகிணி பன்னீர் செல்வம், தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் விக்ரமன், “திடீரென ஏற்பாடு செய்த இந்த விழாவுக்கு வந்ததற்கு விமல் நன்றி சொன்னார். ஆனால் நான் ‘நினைத்தது யாரோ’ என்கிற படத்தை இயக்கியபோது அதில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுக்க விமலை அணுகினேன்.. அதற்கு முன் அவருடன் நெருங்கிய பழக்கம் இல்லாவிட்டாலும் நான் கேட்டதும் உடனே ஒப்புக்கொண்டார். அதை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்கமாட்டேன். இயக்குனர் பூபதி பாண்டியன் கலாய்ப்பதில் வல்லவர்.. அவர்தான் என் படங்களை முதன்முதலில் கலாய்த்தவர். தேவதையை கண்டேன் படத்தில் சூர்ய வம்சம் படத்தை கலாய்த்தவர், இதில் எந்தப்படத்தை கலாய்த்திருக்கிறாரோ தெரியவில்லை” என வாழ்த்தி பேசினார்.

இயக்குனர் பேரரசு பேசியதாவது “இந்த விழாவுக்கு வந்தது நடிகர் விமலுக்காக அல்ல.. தயாரிப்பாளர் விமலுக்காகத்தான். பாக்யராஜூக்கு பிறகு சிறந்த திரைக்கதை எழுதுபவர் என்றால் அது பூபதி பாண்டியன் தான். ஆனால் இன்று இவர்கள் இருவரையும் மிஞ்சும் வகையில் அரசியல்வாதிகள் திரைக்கதை எழுதுகின்றனர். நாம்தான் ஜாக்கிரதையா இருக்கணும். விமலின் இழப்புகளுக்கு ஈடாக இந்தப்படம் லாபம் சம்பாதித்து கொடுக்கும் என்பது உறுதி”. என்றார்.

இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள ரோபோ சங்கர் பேசியதாவது, ‘ சில படங்களில் நடிக்கும்போதே தெரிந்துவிடும் அது நிச்சயம் ஹிட்டாகும் என்று. அது இந்தப்படத்திலும் தெரிந்தது. மாரி, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தைப்போல இந்த ‘மன்னர் வகையறா’வும் காமெடியில் எனக்கு திருப்புமுனையை ஏற்படுத்தும். இன்னும் சொல்லப்போனால் வடிவேலுக்கு எப்படி ‘வின்னர்’ அமைந்ததோ அப்படி எனக்கு இந்தப்படம் இருக்கும்” என கூறினார். 

கதாநாயகி ஆனந்தி பேசியதாவது, “இந்தப்படத்தில் காமெடி ஏரியாவிலும் நிறைய ட்ரை பண்ணியிருக்கேன். ரோபோ சங்கரை இமிடேட் பண்ணி டான்ஸ் ஆடியிருக்கிறேன். நிச்சயம் ஒர்க் அவுட் ஆகும் என நம்புகிறேன். பூபதி பாண்டியன் சாரிடம், நான் உங்ககிட்ட கொஞ்சநாள் உதவி இயக்குனரா வேலை பார்க்கிறேன்” என வாய்ப்பு கேட்டேன். அந்த அளவுக்கு அவரின் காமெடி டைமிங் சென்ஸ் பார்த்து பிரமித்துப்போனேன்” என பேசினார்.

இந்தப்படத்தின் இசையமைப்பாளர் ஜாக்ஸ் பிஜாய் பேசியபோது, “துருவங்கள் பதினாறு படத்தை தொடர்ந்து, இந்தப்படத்தில் வேறு ஜானரில் இசையமைத்துள்ளேன்” என கூறினார். இதில் பூபதி பாண்டியன் எழுதிய ‘உங்க அண்ணனை பத்தியும் கவலை இல்லை’ பாடலும், அதற்கு ஜாக்ஸ் பிஜாய் அமைத்துள்ள துள்ளலான இசையும் அதற்கு விமல்-ஆனந்தி நடனத்தையும் பார்க்கும்போது நிச்சயம் இந்தப்பாடல் இளைஞர்களிடம் இடம் பிடிக்கும் என்பது உறுதி

இயக்குனர் பூபதி பாண்டியன் பேசியதாவது, “எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் தான் இந்தப்படத்தை முதலில் தயாரிப்பதாக இருந்தது.. ஆனால் படத்தில் இத்தனை நட்சத்திரங்கள் இருப்பதை பார்த்து பின்வாங்கிவிட்டார் போல தெரிகிறது. அதன்பின் தான் விமல் இந்தப்படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். எனக்கு ஒரு ராசி இருக்கிறது.. என் டைரக்சனில் நடித்த ஹீரோக்கள் தனுஷ், விஷால் ஆகியோர் வெற்றிகரமான தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள். அந்தவகையில் விமலும் வெற்றிகரமான தயாரிப்பாளராக பயணத்தை ஆரம்பித்துள்ளார். அவருக்கு படத்தயாரிப்பில் உறுதுணையாக நின்ற சிங்காரவேலனுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்..

இந்தப்படத்தின் ஷூட்டிங்ஸ்பாட்டுலதான் ஒரு விஷயத்தை கவனிச்சேன். நிறைய நடிகர்களுக்கு சரியா வேட்டி கட்டவே தெரியலை. அந்த அளவுக்கு நம்ம பண்பாட்டை கொஞ்சம் கொஞ்சமா தொலைச்சுட்டு வர்றோம். ஒரு பாடல் காட்சி படப்பிடிப்பின்போது எனக்கும் விமலுக்கும் சின்னதாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு இரண்டு நாட்கள் பேசமால் இருந்தோம்.. ஆனால் பின்னர்தான் பேசாமல் இருந்ததை விட பேசியே இருக்கலாம் என சொல்லும் வகையில் தனித்தனியாக எங்கள் உதவியாளர்களிடம் புலம்பிக்கொண்டு இருந்தோம்.

இந்தப்படத்தில் ஒளிப்பதிவு செய்துள்ள சூரஜ் நல்லுசாமி, ‘அவள் அப்படித்தான்’ படத்தில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளரின் மகன் என்பதில் எனக்கு பெருமைதான். இசையமைப்பாளர் பிஜாய் ஜாக்ஸ், தெனாலி கமல் போல எதற்கெடுத்தாலும் பயப்படுவார். ஆனால் அது படம் நன்றாக வரவேண்டும் என்பதற்காகத்தான். இந்தப்படத்தின் எடிட்டர் கோபியை நான் இயக்கிய ‘திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தின்போது உதவியாளராக சேர்த்துவிட்டேன்.. இன்று என் படத்துக்கே எடிட்டராக மாறி எனக்கே அறிவுரை சொல்லும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இடைவேளைக்குப்பின் இடம்பெற்றுள்ள சரண்யா-நீலிமா காமெடி மிக முக்கியமாக பேசப்படும்” என்றார்.

தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான சிங்காரவேலன் பேசியபோது, “இந்தப்படத்தை தயாரிக்க ஆரம்பித்தபோது அந்த சமயத்தில் வெளியான விமலின் படங்கள் வியாபார ரீதியாக சரியாக போகவில்லை. ஆனாலும் கதையின் மீது இயக்குனர் பூபதி பாண்டியன் மீதும் கொண்ட நம்பிக்கையால் பொதுவாக விமலின் படங்களுக்கு ஆகும் பட்ஜெட்டைப்போல மூன்று மடங்கு இதற்கு செலவழித்துளோம்.. ஆனால் இந்த நிமிடம் ரிலீஸுக்கு முன்னாடியே படத்தின்  வியாபாரம் முடிந்து நாங்கள் படத்திற்காக செலவழித்த பணம் திரும்பி வந்துவிட்டது ‘மன்னர் வகையறா’வுக்கு கிடைத்த முதல் வெற்றி.

விஷால் நடித்த மலைக்கோட்டை படத்தையே 7௦ நாட்களில் எடுத்தார் பூபதி பாண்டியன். ஆனால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு மொத்தம் 83 நாட்கள் நடந்துள்ளது. அதில் கிட்டத்தட்ட 18 நாட்கள் எடுத்த காட்சிகளை நீக்கியுள்ளோம்.. அந்த அளவுக்கு படத்தில் பெர்பெக்சன் பார்த்துள்ளோம். செலவு கூடுகிறதே என வருத்தப்பட்டபோது, தனது சம்பளத்தில் பாதியை விட்டுக்கொடுத்தார் இயக்குனர் பூபதி பாண்டியன். நிச்சயம் இந்தப்படம் இன்னொரு ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ஆக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

விமல் இந்தப்படத்திற்காக இரண்டு வருடங்கள் வேறு எந்தப்படங்களையும் ஒப்புக்கொள்ளாமல் இருந்தது நிச்சயம் வீண்போகாது. 2018ல் அவர் நடிப்பில் 6 படங்கள் தயாராக இருக்கின்றன. ஜனவரி-17ல் வெற்றிவேல் பட இயக்குனர் வசந்தமணி டைரக்சனில் விமல் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் துவங்க இருக்கிறது.

பொங்கல் பண்டிகையில் இந்தப்படம் ரிலீசாவது உறுதி. நிறைய படங்கள் வருகின்றதே என சிலர் கேட்டார்கள்.. இமயமலையே இடிந்தாலும், பரங்கிமலையே பறந்தாலும் பொங்கலுக்கு இந்தப்படம் ரிலீசாவது உறுதி” என்றார் சிங்காரவேலன்.

வரும் ஜன-12ல் பொங்கல் வெளியீடாக இந்தப்படம் திரைக்கு வருகிறது..