Tag Archives: Seemathurai

ஒரு காதல் ஜோடியின் கதையே சீமத்துரை – விமர்சனம்!

 ஒரு காதல் ஜோடியின் கதையே சீமத்துரை – விமர்சனம்!

ஊரில் உள்ள காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பது தான் நாயகன் கீதன் மற்றும் நண்பர்களின் தலையாயப்பணி. தெருத்தெருவாக சென்று கருவாடு விற்று மகனை கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார் நாயகனின் தாய் விஜி சந்திரசேகர்.

பக்கத்து ஊரின் பெரிய தலைக்கட்டு குடும்பமான மணியார் வீட்டு செல்லக்கிளி நாயகி வர்ஷா பொல்லம்மா. கீதன் படிக்கும் அதே கல்லூரியில் முதலாமாண்டு மாணவி. வர்ஷாவை கண்டதும் காதல் வயப்படுகிறார் கீதன். வர்ஷாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார்.

ஒருகட்டத்தில் வர்ஷாவும் கீதனை காதலிக்க, விஷயம் நாயகியின் வீட்டிற்கு தெரிந்து பிரச்சினையாகிறது. இதற்கிடையே வர்ஷாவின் தாய்மாமன் காசிராஜன், இவர்களுக்கு வில்லனாக மாறுகிறார். காதலர்கள் சேர்ந்தார்களா இல்லையா என்பதே கதை. இந்த படத்தை பொறுத்த வரைக்கும் ஹீரோவாக நடித்திருக்கும் கீதன், நாயகி வர்ஷா, விஜி சந்திரசேகர், வில்லன் காசிராஜன் என அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் கீதன், துறுதுறு நடிப்பின் மூலம் தனது பாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். உருண்டு, பிரண்டு, அடி வாங்கி, உதை வாங்கி மிகுந்த சிரத்தை எடுத்து நடித்திருக்கிறார்.

பாவாடை தாவணி, தலையில் கனகாம்பரப்பூ, வீட்டில் டிசர்ட் பாவடை என பக்கத்து வீட்டு பெண் போலவே காட்சி அளிக்கிறார் வர்ஷா. பாடல் காட்சிகளில் கொள்ளை அழகாக இருக்கிறார். அதேசமயம் நடிக்கவும் செய்திருக்கிறார். படத்தில் நடித்துள்ள சீனியர் விஜி சந்திரசேகர் மட்டும் தான். அதனாலே தன்னுடைய பாத்திரத்தை அவ்வளவு நேர்த்தியாக செய்திருக்கிறார். முந்தானையில் முடிஞ்சு வெச்சிருக்கும் விபூதி, இடுப்பில் சொருகி வைக்கும் மணிபர்ஸ் என கச்சிதமான கிராமத்து தாய்யாக வருகிறார். வில்லனாக நடித்திருக்கும் காசிராஜன், ஆதேஷ் பாலா உள்பட படத்தில் வரும் அனைவருமே தங்கள் பங்களிப்பை சரியாக செய்திருக்கிறார்கள்.

குறிப்பாக இசையமைப்பாளர் ஜோஸ் ஃபிராங்கிளினிற்கு தனி பாராட்டுகள். படத்தில் வரும் பாடல்கள் எல்லாமே அற்புதமாக இருக்கின்றன. பின்னணி இசையும் சிறப்பாகவே இருக்கிறது. சண்டைக் காட்சிகளை மிக தத்ரூபமாக செய்திருக்கிறார் டேஞ்சர் மணி.

கேமராமேன் திருஞானசம்பந்தம், எடிட்டர் வீரசெந்தில் ராஜ் ஆகியோரும் தங்களால் முடிந்த அளவிற்கு உழைப்பை தந்திருக்கிறார்கள். படத்தின் முக்கிய பிரச்சினை கதையும், திரைக்கதையும் தான். ஏற்கனவே நாம் பார்த்து போரடித்து போன அதே பழைய கதை. திரைக்கதையிலாவது புதுமை சேர்த்திருக்கலாம். அதுவும் இல்லை என்பதால், நாயகனோ, நாயகியோ அடுத்து பேசப்போகும் வசனத்தை கூட பார்வையாளர்களால் மிக எளிதாக யூகித்துவிட முடிகிறது.

தஞ்சை மாவட்டம் தான் படத்தின் கதை களம். ஆனால் ஒவ்வொரு பாத்திரமும் ஒவ்வொரு மாவட்ட மொழியில் பேசுகிறார்கள். ஆனால் நாயகன், நாயகியின் வீடு, டீக்கடை என படத்தில் வரும் இடங்கள் எல்லாமே யதார்த்தமாக இருக்கின்றன. படம் எந்த காலத்தில் எடுக்கப்பட்டது என்பதே புரியவில்லை.

ஒரு சில காட்சிகளில் சமீபத்தில் வெளியான படங்களின் போஸ்டர்கள் பின்னணியில் இடம்பெறுகின்றன. ஆனால் ஒருவர் கையில் கூட போன் இல்லை. குக்கிராமத்தில் கூட ஆன்ட்ராய்டு போன் ஆதிக்கம் செலுத்தி வரும் இன்றைய காலத்தில் போன் இல்லாமல் ஒரு ஊரே இருப்பது நம்பும்படியாகவா இருக்கிறது இயக்குனரே. அதுவும் அந்த க்ளைமாக்ஸ் காட்சி உச்சக்கட்ட சோகம். இதில் எண்ட்கார்டில் பாரதியின் பாடல் வரிகள் வேறு. ஒருவேளை 80களில் இந்த படம் வெளிவந்திருந்தால் நிச்சயம் ஓடியிருக்கக்கூடும்.

Seemathurai Movie Audio Launch Stills

Seemathurai Movie Audio Launch Stills

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E சுஜய் கிருஷ்ணா தயாரிப்பில்,  சந்தோஷ் தியாகராஜன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படம் “சீமத்துரை”.
இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் கதாநாயகன் கீதன், கதாநாயகி வர்ஷா பொல்லம்மா, இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ராங்க்ளின் என இந்த விழாவில் கலந்து கொண்ட அத்தனை பேரும் இளையோர்களாக இருந்தாலும் அவர்களை வாழ்த்த தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குனர்கள் மிஷ்கின், வசந்தபாலன், இயக்குனர் நடிகர் மனோபாலா, பொன்வண்ணன், தயாரிப்பாளர்கள் “அம்மா கிரியேஷன்ஸ்” சிவா, தனஞ்செயன், நடிகர்கள் கலையரசன், கதிர் மற்றும் எழுத்தாளர் நடிகர் வேலா ராமமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு விழாவை பிரம்மாண்டமாக்கினார்கள். குறிப்பாக இந்த படத்தில் நடித்ததோடு நின்று விடாமல், இசை வெளியீட்டு விழாவில் இவ்வளவு பிரபலங்களும் கலந்து கொள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவராகிய நடிகை விஜி சந்திரசேகரும் வந்திருந்து விழாவை சிறப்பாக்கினார்.
இயக்குநர் மிஷ்கின், தனது வழக்கமான பேச்சு நடையால் விழாவை கலகலப்பாக்கினார். “பொதுவாக இசை வெளீயிட்டு விழா என்பது பொய்கள் நிறைந்ததாகவே இருக்கும். இது என் படங்களுக்கும் பொருந்தும். ஆனால் உண்மையிலேயே இங்கே இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. காரணம் இங்கு வந்திருப்பவர்களின் பொய்யற்ற வெகுளித்தனம். விஜி சந்திரசேகர் இந்திய சினிமா குறைத்து மதிப்பிட்டு வைத்திருக்கும் ஒரு நடிகை, நிச்சயம் அவர் வரும் நாளில் கொண்டாடப்படுவார். அவர் தோழமையோடு கண்டிப்பாக கேட்டுக்கொண்டதின் பெயரிலேயே நான் இங்கிருக்கிறேன். இயக்குநர் சந்தோஷ் என்னை சந்திக்க வந்திருந்த போது தான் அவரை முதன் முதலாகப் பார்த்தேன். பார்த்த மாத்திரத்திலேயே அவரது நம்பிக்கை மிகுந்த கண்களும், முகமும் எனக்கு மிகவும் பிடித்துப் போனது. அவரது நம்பிக்கையே “சீமத்துரை” நன்றாக இருக்கும் என உறுதிசெய்கிறது. தான் வாழ்ந்த மண் சார்ந்தே தனது முதல் படத்தை எடுத்துள்ள இயக்குநருக்கு வாழ்த்துகள். குறிப்பாக தனது முதல் படத்திலேயே இசை வெளியீட்டு விழாவில் “மேக்கிங்” காட்சிகளை ஒளிபரப்பிய நம்பிக்கை எனக்கு பிடித்திருந்தது. இதற்கு முன்னர் நான் மட்டும் தான் “சித்திரம் பேசுதடி” படம் வந்தபோது இதை செய்தேன். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கும் கீதன் மிகவும் இயல்பாக நடித்திருக்கிறார். அவரது முகம் எல்லோருக்குமே எளிதில் பதியும் விதத்தில் இருப்பது அவரது பலம், நிச்சயமாக உயரங்கள் தொடுவார்.  ட்ரைலரில் கருவாடு விற்பது போல காட்சிகள் இருந்தது, இந்த உலகத்தின் மிகமிக சுவையான உணவு கருவாடு தான். பழைய சோற்றுக்கும், கருவாட்டுக் குழம்பிற்கும் ஈடு இணையான உணவே கிடையாது. இங்கே மூன்று பாடல்களை ஒளிபரப்பினார்கள், நேரம் கருதி அதை குறைத்திருக்கலாம். ஆனால் அத்தனை பாடல்களையும் நம்மை பார்க்க வைத்தது கூட அவர்களது நம்பிக்கையை பிரதிபலித்தது. இந்த படத்தின் பாடல்களை பார்க்கும் போது அதில் ஒரு மிகையில்லாத ஒளிப்பதிவு நேர்த்தியை காண முடிந்தது. இசையமைப்பாளர் ஜோஸ் ஃப்ரான்க்ளின் அழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார். படக்குழுவினர் அத்தனை பேருக்கும் என் வாழ்த்துகள்.” என்று பேசி முடித்தார்.
விஜி சந்திரசேகர், “இந்தப் படத்தின் இயக்குநர் கதை சொன்ன விதம் எனக்கு பிடித்திருந்ததது. அதனால் தான் நடிக்க சம்மத்தித்தேன். இதில் பணியாற்றியிருக்கும் இந்த இளைஞர்களுக்கெல்லாம் என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் என்பதற்காகவே அவர்களுக்கு துணையாக நிற்கிறேன். ஊரார் பிள்ளைகளை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளைகள் தானே வளரும் என்பதை நம்புகிறேன். நம்மால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவுவது நல்லது. சீமத்துரையில் ஓரளவிற்கு நன்றாக நடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி” என்று சுருக்கமாக பேசினார்.
எழுத்தாளர் வேலா ராமமூர்த்தி, “கோயில் திருவிழாக்களில் எத்தனை கடைகள் இருந்தாலும், கொண்டாட்டங்கள் நிறைந்திருந்தாலும் யானையை எல்லோரும் வியப்பாக பார்ப்பார்கள். அப்படி இந்த சீமத்துரை படத்தில் இந்த இளைஞர் படைக்கு நடுவில் யானையாக விஜி சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவர் மதயானை கூட்டம் படத்தில் எனக்கு தங்கையாக நடித்திருந்தார், அப்போதே அவர் நடிப்பில் வியந்திருக்கிறேன். நிச்சயம் இந்த படத்திலும் மதயானை கூட்டம் படத்தில் வருவது போல வலுவான கதாபாத்திரத்தில் தான் அவர் நடித்திருப்பார். கதாநாயகன் கீதன் மிக அழகாக இருக்கிறார், அவரது சிரிப்பு எல்லோரையும் எளிதில் கவரும் வகையில் இருக்கிறது. அவர் நிச்சயமாக சாதிப்பார். அதே போல் வர்ஷா பொல்லம்மாவும் அழகாக இருக்கிறார். இருவருக்கும் என் வாழ்த்துகள். பொதுவாக தென் மாவட்டங்களின் கலாச்சாரத்தை விட தஞ்சாவூரின் கலாச்சாரம் மிகச் சிறப்பானது. அப்படிப்பட்ட தஞ்சாவூர் மண் சார்ந்து இந்த படத்தை இயக்கியிருக்கும் இயக்குனருக்கு என் பாராட்டுகளும் வாழ்த்துகளும்” என்று பேசினார்.

 

Actor Arya Launched Seemathurai Movie First Look

Actor Arya Launched Seemathurai Movie First Look

dm-1ad3ueaaadg5

 

புவன் மீடியா வொர்க்ஸ் சார்பில் E.சுஜய்கிருஷ்ணா தயாரிக்கும் புதிய படம் “சீமத்துரை”.
கீதன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை சந்தோஷ் தியாகராஜன் எழுதி இயக்குகிறார். நாயகியாக வர்ஷா பொல்லம்மா நடிக்கிறார். ஜோஷ் ஃப்ராங்க்ளின் இசையமைக்கிறார்.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று மாலை ஐந்து மணிக்கு நடிகர் ஆர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.