Tag Archives: Kurangu Bommai

Kurangu Bommai News

Kurangu Bommai News

2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்.

bharathiraja-vidharth-3

 

BLUE SAPPHIRE” என்பது கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்கள்.
இந்த அறிவிப்பினை  “BLUE SAPPHIRE” நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. அஜீஷ் ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 சிறப்பு (ஜூரி) விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் “விக்ரம் வேதா”, “அருவி” “அறம்” என பல வெற்றிப்படங்கள்  இடம்பெற்று  கடுமையான போட்டி நிலவிய சூழலில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினை ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் மற்றும் பலர் நடித்து, நித்திலன் இயக்கியிருந்த “குரங்கு பொம்மை” திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. அது மட்டுமல்லாமல், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது “இயக்குநர் இமயம்” பாரதிராஜா-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக சர்வேதச அளவிலான ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் நடிப்பது தெரியாமல் நடிக்கும் ஒரே நடிகன் பாரதிராஜா பாராட்டு!

தமிழ் சினிமாவில் நடிப்பது தெரியாமல் நடிக்கும் ஒரே நடிகன், விதார்த்!

இயக்குநர் இமயம் பாரதிராஜா பாராட்டு!

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தில் பாடல்கள் வெளியீடு இன்று நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP  நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

“குரங்கு பொம்மை” இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், பொதுவாக இந்த மாதிரி நிகழ்ச்சிகளுக்கு நான் வர விரும்புவதில்லை. வருவதில்லை. அதிலும் இது நானே நடித்திருக்கும் படம் வரமாட்டேன் என்று தான் சொன்னேன். ஆனாலும் இந்த படத்தின் இயக்குநருக்காக வந்தேன். இந்த படத்தின் இயக்குநர் நித்திலன், வளர்ந்து வரும் தளிர். அந்த தளிரை பாராட்டவே வந்தேன். நித்திலன் பார்க்க ரொம்ப அமைதியாக இருப்பான். அவன் மிக ஆழமான சிந்தனை உடைய இளைஞன். அவனது குறும்படம், “புன்னகை வாங்கினால், கண்ணீர் இலவசம்” பார்த்துவிட்டு அவன்மீது மிகுந்த பொறாமை கொண்டேன். அந்த அளவு திறமைசாலியான பையன். இந்த படத்தில், நான் பாரதிராஜா என்பதை ஓரமாக தூக்கி போட்டுவிட்டு நடிகனாக என் வேலையை மட்டும் செய்திருக்கிறேன். நித்திலன் நிச்சயம் மிகப்பெரிய இயக்குநராக பாராட்டப்படுவார். என் வாழ்த்துகள்.

விதார்த், மிக வீரியமான நடிகன், பெங்காலி சினிமாக்களையும் மலையாள சினிமாக்களையும் பார்க்கும்போது அந்த நடிகர்களின் மிக யதார்த்தமான நடிப்பை பார்த்து பிரமிப்பேன். விதார்த், அப்படி ஒரு நடிகன். தமிழ் சினிமாவில், நடிப்பது தெரியாமல் நடிக்கக்கூடிய ஒரே நடிகன் விதார்த். நிச்சயம் பெரிய இடத்தை பிடிப்பான். விரைவில் நடிப்பிற்காக தேசிய விருது வாங்குவான். அவனுக்கு என் வாழ்த்துகள். இந்த படத்தின் ஒட்டு மொத்த நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் வாழ்த்துகள் என்றார்.

 

பாரதிராஜா ஒரு குரங்கு! குருவின் குருவை வித்தியாசமாய் பாராட்டிய பார்த்திபன்.

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தில் பாடல்கள் வெளியீடு இன்று நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP  நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

குரங்கு பொம்மை, பாடல்கள் வெளியீட்டு விழாவில் பேசிய, வித்தியாச “மாணவர்”, பார்த்திபன் தன் குருவின் குருவை வித்தியாசமாக பாராட்டினார்.

விழாவில் நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் பேசுகையில், இயக்குநர் இமயம், பாரதிராஜா அவர்களை பாராட்டுவதற்கு வாழ்நாள் போதாது. தமிழ்சினிமா ஒட்டுமொத்தமாக பாரதிராஜா அவர்களுக்கு ஒரு பெரிய பாராட்டுவிழா எடுக்கவேண்டும். இந்த படத்தின் தலைப்பு ரொம்ப வித்தியாசமாக இருக்கிறது. எனவே இயக்குநர் இமயம் அவர்களை வித்தியாசமாக பாராட்ட ஆசைப்படுகிறேன்.

பாரதிராஜா நல்ல இயக்குநர்னு எல்லாரும் சொல்வாங்க. பாரதிராஜா சிறந்த மனிதர்னு சொல்வாங்க. ஆனா, நான் என்ன சொல்றேன்னா பாரதிராஜா ஒரு சிறந்த “குரங்கு”. குரங்கு நான்கு எழுத்து.

கு / நல்ல குணவான்

ர / சிறந்த ரசனையாளர்

ங் / இங்கிதம் தெரிந்தவர்

கு / குவாலிட்டியானவர்

இதுதான் அந்த குரங்குக்கு அர்த்தம் என்று பேசினார்.

 

புதுமுக நடிகையை பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு அழைத்த நடிகர்!

ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் “இயக்குநர் இமயம்” பாரதிராஜா, விதார்த் நடிப்பில் நித்திலன் இயக்கத்தில், அஜனீஷ் லோக்நாத் இசையில் உருவாகி இருக்கும் “குரங்கு பொம்மை” படத்தில் பாடல்கள் வெளியீடு இன்று நடைபெற்றது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் இயக்குநர் மனோபாலா, நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குநர் தரணி, நடிகர் சிபிராஜ், நடிகர் விதார்த், தயாரிப்பாளர், நடிகர் பி.எல்.தேனப்பன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா, நடிகர் மைம்கோபி, டான்ஸ் மாஸ்டர் ராதிகா, ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP  நிறுவனத்தின் நிர்வாக தயாரிப்பாளர் கண்ணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில் இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் பேசுகையில், இந்த படத்தின் கதாநாயகி, டெல்னா டேவிஸை எல்லோரும் பக்கத்து வீட்டு பெண் போல அழகாக இருக்கிறார் என்றார்கள். என் பக்கத்து வீட்டுல யாரும் டெல்னா டேவிஸ் மாதிரி அழகா இல்ல. எனவே டெல்னா டேவிஸ், நீங்க என் பக்கத்து வீட்டுக்கு வாடகைக்கு வந்தீங்கன்னா, நானும் உங்களை என் பக்கத்து வீட்டு பொண்ணுன்னு சொல்லிப்பேன் என்றார்.

குரங்கு பொம்மை

நடிகர்கள், நடிகைகள்

பாரதிராஜா, விதார்த், டெல்னா டேவிஸ், பி.எல்.தேனப்பன், குமரவேல், கஞ்சா கருப்பு, பாலாசிங், கிருஷ்ணமூர்த்தி, ரமா

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : B.அஜனீஷ் லோக்நாத்

ஒளிப்பதிவு : N.S.உதயகுமார்

படத்தொகுப்பு : அபினவ் சுந்தர் நாயக்

வசனம் : மடோன் அஸ்வின்

பாடல்கள் : நா.முத்துக்குமார்

நடனம் : ராதிகா

நிர்வாகத் தொடர்பு : M.கண்ணன்

ஸ்டண்ட் மாஸ்டர் : மிராக்கல் மைக்கேல்

இயக்கம் : நித்திலன்

தயாரிப்பு : ஸ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP