Tag Archives: Jeeva

Kee New Movie Poojai Stills & News

Kee New Movie Poojai Stills & News

 

Kee New Movie Poojai Stills & News (13)

 

குளோபல் இன்போடெய்ன்மென்ட் திரு. மைக்கேல் ராயப்பன் வழங்கும்
ஜீவா நடிக்கும் “கீ” !!
“ நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன் “ என்று நட்பை பற்றி ஆழமாக பேசும் நாடோடிகள் ,ஈட்டி எனும் ஸ்போர்ட்ஸ் படம் ,மிருதன் எனும் ஜாம்பி படம் , சிம்பு நடிப்பில் உருவாகும்அன்பானவன் அசராதவன் அடங்காதவன் எனும் ஜனரஞ்சகமான திரைப்படம் எனவெவ்வேறு களங்களில் பயணிக்கும் வெற்றி படங்களை தயாரித்து வரும் தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும்வெற்றி படைப்பு “ கீ “ இது குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா , நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அணைகா சோடி , R.J. பாலாஜி , பத்ம சூர்யா , ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி, மனோ பாலா , மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ் இவர் இயக்குநர் செல்வ ராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். இன்று பூஜையுடன் துவங்கிய இப்படத்தின் படபிடிப்பு ஒரே கட்டமாக தொடர்ந்து நடைபெறவுள்ளது
நடிகர்கள்
ஹீரோ – ஜீவா
ஹீரோயின் – நிக்கி கல்ராணி
2nd ஹீரோயின் – அணைகா சோடி
நகைச்சுவை – R.J.பாலாஜி
வில்லன் ( அறிமுகம் ) – பத்ம சூர்யா (மலயாள நடிகர் )
மற்ற கதாபாத்திரங்கள் – ராஜேந்திர பிரசாத் , சுஹாசினி , மனோ பாலா , மீரா கிருஷ்ணன்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் – காலீஸ்
தயாரிப்பு – எஸ். மைகேல் ராயப்பன் , எம். செராபின் ராய சேவியர்
ஒளிப்பதிவு – அனீஸ் தருண் குமார் ( ரங்கூன் படத்தின் ஒளிப்பதிவாளர் )
இசை – விஷால் சந்திரசேகர்
படத்தொகுப்பு – நாகூரன்
கலை – எஸ்.எஸ் . மூர்த்தி
ஆடை அலங்காரம்- ஜாய் கிரிஸில்டா , சாரா.
நடனம் – “ பாபா “ பாஸ்கர் .

Composer Leon James ropes in Armaan Malik for Kavalai Vendam

Composer Leon James ropes in Armaan Malik for Kavalai Vendam

Composer Leon James ropes in Armaan Malik for Kavalai Vendam (2)

 

 

Composer Leon James ropes in Armaan Malik for ‘Kavalai Vendam’
“Behind Every favorite song there is an untold story…” No one would have forgotten the heart-warming medleys of the young music sensation leon James  from the recent blockbuster film ‘Ko 2’.  After acclaiming huge positive reviews for his “Kanamma” and “Kokila”, Leon is now currently busy in composing the tracks for Jeeva – Kajal agarwal starrer ‘Kavalai Vendam’. Produced by Elred Kumar of RS Infotainment and Directed by Deekay, this New-Age Rom-Com has Bobby Simha, Sunaina, RJ Balaji, Mayilsamy, Balasaravanan, Manobala, Shruthi Ramakrishnan, Madhumitha,and Manthra in the pivotal roles.
Composer Leon James ever hungry for a pre hype to the song he composes  roped in famous Indian singer Armaan Malik of ‘Jai Ho’ and ‘Yaar indha Muyal Kutty’ Fame for ‘Kavalai Vendam’. “I am a huge fan of Armaan Malik, especially for his voice. Thanks to the Social media which helped us to stay connected. As soon as I have sent him the audio track of our Pop-Medley “Un Kaadhal”, Armaan was impressed and said yes. He was very excited about this song as it sounds extremely fresh…We have recorded the song in Mumbai’s top most studio and I am pretty sure that “Un Kaadhal” from ‘Kavalai Vendam’ will give the Audience totally a different experience because, we brought something very unique to the table…” says Leon James, the composer of ‘Kavalai Vendam’ in a confident tone.
“கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக  பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ் 
“படைப்பு என்று இருந்தால் படைப்பாளி என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்…” அப்படி ஒரு சிறந்த இசை படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெரும் அளவில் பெற்றுவிட்டது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா – காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக இசையமைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே  இயக்கி வரும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெய் ஹோ’ மற்றும் ‘யார் இந்த முயல் குட்டி’ ஆகிய பாடல்களை பாடிய இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாடகர்  அர்மான் மாலிக்கை ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். “அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன் தான். சமூக வலைத்தளத்தின் உதவியால் தான் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது. எங்கள் ‘கவலை வேண்டாம்’ படத்தின்   ‘உன் காதல்…’ என்னும் பாப் – மெலோடி பாடலை அவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான் இந்த பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவிற்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது. மும்பையின் புகழ் பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். நிச்சயம் ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடலானது   தமிழக ரசிகர்களுக்கு  ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.”கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக  பிரபல பாடகர் அர்மான் மாலிக்கை பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்
“படைப்பு என்று இருந்தால் படைப்பாளி என்ற ஒருவர் கண்டிப்பாக இருக்க வேண்டும்…” அப்படி ஒரு சிறந்த இசை படைப்பாளியாக தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டிருப்பவர் இளம் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற கோ 2 திரைப்படத்திற்காக இவர் இசையமைத்த “கண்ணம்மா…’ மற்றும் “கோகிலா…” பாடல்கள் இள வட்டாரங்களை மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெரும் அளவில் பெற்றுவிட்டது. இப்படி ஒரே படத்திலேயே தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த லியோன் ஜேம்ஸ் தற்போது ஜீவா – காஜல் அகர்வால் நடித்து கொண்டிருக்கும் ‘கவலை வேண்டாம்’ திரைப்படத்திற்காக இசையமைக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார். ஆர். எஸ். இன்போடைன்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்து, டீகே  இயக்கி வரும் இந்த ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாபி சிம்ஹா, சுனைனா, ஆர் ஜே பாலாஜி, மயில்சாமி, பாலசரவணன், மனோபாலா, ஸ்ருதி ராமகிருஷ்ணன், மதுமித்தா மற்றும் மந்த்ரா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.
‘ஜெய் ஹோ’ மற்றும் ‘யார் இந்த முயல் குட்டி’ ஆகிய பாடல்களை பாடிய இந்தியாவின் பிரசித்தி பெற்ற பாடகர்  அர்மான் மாலிக்கை ‘கவலை வேண்டாம்’ படத்தில் பாட வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ். “அர்மான் மாலிக்கின் குரலுக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த வகையில் நானும் அவருடைய மிகப்பெரிய ரசிகன் தான். சமூக வலைத்தளத்தின் உதவியால் தான் நான் அவரிடம் தொடர்பில் இருக்க முடிந்தது. எங்கள் ‘கவலை வேண்டாம்’ படத்தின்   ‘உன் காதல்…’ என்னும் பாப் – மெலோடி பாடலை அவருக்கு அனுப்பிய அடுத்த கணமே அர்மான் இந்த பாடலை பாட சம்மதித்து விட்டார். அந்த அளவிற்கு இந்த பாடலானது அவரை கவர்ந்துவிட்டது. மும்பையின் புகழ் பெற்ற ஒரு ஸ்டுடியோவில் இந்த பாடலை நாங்கள் பதிவு செய்தோம். நிச்சயம் ‘கவலை வேண்டாம்’ படத்தின் பாடலானது   தமிழக ரசிகர்களுக்கு  ஒரு புதுமையான அனுபவத்தை தரும் என்ற நம்பிக்கை எனக்கு முழுமையாக இருக்கிறது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘கவலை வேண்டாம்’ படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ்.

Thirunaal Press Meet Stills & News

Thirunaal Press Meet Stills & News

Thirunaal Press Meet Stills & News

 

‘திருநாள்’ படத்தில் இயக்குநர் சொன்னதை மட்டும்தான் செய்தேன் : ஜீவா பேச்சு

ஜீவா-நயன்தாரா நடித்துள்ள படம் ‘திருநாள்’. இப்படத்தை பி.எஸ். ராம்நாத் இயக்கியுள்ளார். கோதண்டபாணி பிலிம்ஸ் சார்பில் எம். செந்தில்குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் பாடல்கள் இன்று வெளியிடப் பட்டன.‘திருநாள்’ படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா பேசும்போது

” இன்று ஒரு நல்ல நாள். இந்த திருநாளில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.. இது ஒரு பாசிட்டிவான டீம். நல்ல எண்ணம் கொண்ட  நண்பர்கள் கொண்ட படக்குழு. இந்தப் படத்தின் கதையை நீண்டநாட்கள் முன்பே கேட்டேன்.

பிறகு தயாரிப்பாளராக செந்தில்குமார் அமைந்தார். அவர் வெறும் தயாரிப்பாளர் அல்ல, எங்கள் குடும்ப நண்பர். சூப்பர்குட் பிலிம்ஸ் நிறுவனத்தில்  ‘சூர்யவம்சம்’,’திருப்பாச்சி’ போன்ற பல வெற்றிப் படங்களுக்குப் பின்புலமாக இருந்தவர்.

அவர்தான் படத்தைத்  தயாரிப்பது என்று முடிவானதும் உடனே படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டோம்.ஒரே மூச்சில் படத்தை முடித்தோம்.

பொதுவாகப் படப்பிடிப்பில் எல்லாம் தினம் ஒரு பிரச்சினை வரும்.
படப்பிடிப்பில் ஒரு நடிகனுக்கு பிரச்சினை வரக்கூடாது. எந்தப் பிரச்சினையும் வராமல்  இருந்தால்தான் நிம்மதியாக  நன்றாக நடிக்க முடியும்.
இப்படத்தில்  அப்படி எதுவும் தெரியவே இல்லை. நாங்கள் நிம்மதியாக இருந்தோம். எல்லாவற்றையும் செந்தில்குமார் பார்த்துக் கொள்வார் அவர் பார்க்காத பிரச்சினையா?அப்படிப்பட்ட அனுபவசாலி அவர்.

படத்தின் இயக்குநர் ராம்நாத் திட்டமிட்டு எடுப்பவர் எல்லாவற்றிலும் தெளிவாக இருப்பவர்.

இந்தப் படம் முழுக்க வேட்டியில்தான் வருகிறேன். நீண்டநாட்களாகவே லோக்கலாக இறங்கி படம் பண்ணவில்லை என்று  என்னைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  அப்படி லோக்கலாக அமைந்த படம்தான் ‘திருநாள்’.

ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசாமி சத்தம் போட்டுப் பேசி நான் பார்த்ததில்லை. பதற்றமாகி  நான் பார்த்ததில்லை .அவருடன் 100 படங்கள் கூட வேலை பார்க்கலாம். கலை இயக்குநர் சீனு ராவ் கடினமான உழைப்பாளி.இசையமைப்பாளர் ஸ்ரீ அழகழகான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.  ஈ’ ‘தெனாவட்டு’ படங்களுக்குப் பிறகு அவருடன்  இதில் வேலை பார்த்தது மகிழ்ச்சி. முதலில் இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு அதிர்ச்சி அடைந்தேன். ஸ்ரீ எப்போதும் குத்துப் பாட்டுதான் போடுவார் என்று நினைத்தேன் . ஆனால் இதற்காக இனிமையான மெலடி பாடல்கள் போட்டுள்ளார்.

நயன்தாராவுடன் 9 ஆண்டுகளுக்குப் பின் நடித்திருக்கிறேன்.  படத்தில் முதலிலேயே அவரைத்தான் நடிக்க வைக்க நினைத்தோம் .ஆனால் அப்போது அவர் பிஸியாக இருந்தார் .பிறகு வேறு நடிகைகள் எல்லாம் பார்த்தோம். சரிப்பட்டு வரவில்லை.ஆனால்  தாமதமானாலும் நயன்தாராதான் பொருத்தமாக இருப்பார் என்று தோன்றியது.

பிறகு அவரே வந்து  சேர்ந்துவிட்டார் .முதல்நாள் படப்பிடிப்பு முதல் கடைசிநாள் படப்பிடிப்பு வரை இயக்குநர் சொன்னதை மட்டும்தான்  ஆர்வமாகச் செய்தேன். இப்படத்தில் விருப்பமாக நடித்தேன்., சுதந்திரமாக நடித்தேன். பிளேடு வாயில் வைப்பது  போன்ற  பல காட்சிகளில் சிரமப்பட்டு நடித்தேன். . இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத படமாக இருக்கும். ” என்றார்.

இசையமைப்பாளர் ஸ்ரீ பேசும் போது

” என்னைக் குத்துப்பாட்டு இசையமைப்பாளர்  என்பார்கள். இதில் ‘உருமாறிய கருமாரி’ போல முழுக்க  முழுக்க மாறி இருக்கிறேன். நாலு இனிமையான பாடல்கள் போட்டு இருக்கிறேன் .கங்கை அமரன், டி.இமான் போன்ற இசையமைப்பாளர்கள்  பாடியிருக்கிறார்கள். எஸ். ஜானகியம்மா பாடியிருக்கிறார். அது என் நீண்டநாள் கனவு ”என்றார்.

இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் பேசும் போது

” ‘அம்பா சமுத்திரம் அம்பானி’ என் முதல் படம்.இது என் இரண்டாவது படம்.  ‘திருநாள்’ படத்தின் முழுக்கதையையும் பைண்ட் செய்து 5 ஆண்டுகள்  தேடினேன். தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. தயாரிப்பாளர் செந்தில்குமார் சார் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார். மறுநாளே ஜீவாவும் இரண்டே கால் மணிநேரம் கதை கேட்டார்.உடனே ஓகே சொன்னார். நயன்தாராவும் முழுக் கதையும் கேட்டார். .இது கும்பகோணத்தின் பின்னணியில்  நடக்கும் ரவுடியிசம் சார்ந்த கதை. இதற்காக ஜீவாவை அவர் நடித்த கடந்த 25 படங்களில் அவர் செய்யாத நடை ,உடை, பாவனை, தலைமுடி, சட்டை,நிறம் வேட்டி என எல்லாமும் மாற்றினோம்.இதில் நயன்தாரா ,பள்ளி ஆசிரியையாக வருகிறார். ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி எனக்கு பக்கபலமாக இருந்தார். இது மாதிரி  படம்  தொடங்கியது முதல்  படம் முடியும் வரை அதே  உற்சாகத்துடன் ,பலத்துடன் இருக்கும்படியான ஒரு தயாரிப்பாளர் கிடைப்பது சிரமம்.” என்றார்.

நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் எம். செந்தில்குமார் ,ஒளிப்பதிவாளர் மகேஷ்முத்துசாமி, பாடலாசிரியர் ஜீவன்மயில், கலை இயக்குநர் சீனுராவ், நடன இயக்குநர் பாலகுமார். ஆகியோரும் பேசினார்கள்.

[Gallery not found]