Tag Archives: 6 அத்தியாயம்

“6 அத்தியாயம் பார்த்து மிரண்டு போனேன்”; இயக்குனர் இமயம் பாரதிராஜா.!

“6 அத்தியாயம் பார்த்து மிரண்டு போனேன்”; இயக்குனர் இமயம் பாரதிராஜா.!

 

‘6 அத்தியாயம்’ திரைப்படம் சமீபத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. இந்தப்படத்தை பார்த்துவிட்டு பாரதிராஜா பேசியதாவது..
 
“பொதுவாக திரைப்படங்களை பார்க்க அழைக்கிறவர்கள் படம் முடிந்து செல்லும்போது என் முன் மைக்கை நீட்டிவிடுவார்கள்.. சம்பிரதாயத்திற்காக ஏதோ ஒன்றை சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் பெரும்பாலும் நழுவிவிடுவேன்.. ஆனால் இந்த ‘6 அத்தியாயம்’ படத்தை பார்த்து முடித்ததுமே, நானே இந்தப்படத்தை பற்றி பேசிவிட்டுத்தான் போகவேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.
 
இந்தப்படம் திரையிடப்பட்டு முதல் அத்தியாயம் முடிந்ததுமே, எங்கேயோ ஒரு குரூப் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகிறதே என நினைத்தேன்.. இரண்டாவது, மூன்றாவது எபிசோடுகளில் அது கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, கடைசி அத்தியாயத்தில் அப்படியே மிரண்டு விட்டேன்.
 
பொதுவாக பெங்காலிகள் உட்பட வடக்கில் உள்ள படைப்பாளிகளை நான் பெரிதும் பாராட்டுவேன்.. காரணம் அவர்கள் சின்ன படமாக இருந்தாலும், பெரிய படமாக இருந்தாலும் சிந்திக்கும் விதத்தில் வித்தியாசம் காட்டுவார்கள்.. சமீபத்தில் வந்த நம் தமிழ்ப்படங்களில் பல நம்மை கெடுத்து குட்டிச்சுவராக்கி கொண்டிருக்கிற இந்த தருணத்தில், இந்த ‘6 அத்தியாயம்’ படம் பார்த்து நான் உண்மையிலேயே மிரண்டுதான் போனேன்.
 
எனக்கும் இதுபோன்ற சிந்தனைகள் இருந்ததுண்டு.. ஆனால் அதை ஒருபோதும் நான் செயல்படுத்த முயன்றதில்லை. கச்சிதமான சிந்தனை என்பது ஒரு சினிமாவுக்கு செய்யக்கூடிய தர்மம். பிரெஞ்ச், ஈரானிய, ஜப்பானிய, சைனீஸ் படங்களையெல்லாம் பார்த்துவிட்டு பாராட்டுகிறோம். தமிழ்நாட்டுல இவ்வளவு பிரமாதமான கலைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்த்ததுமே, யார் இவர்கள்.. இவர்களை பாராட்டியே ஆகவேண்டும் என்று தான் நானே மைக் பிடித்தேன்.
 
இந்த யோசனையே புதிதாக உள்ளது. தமிழ்சினிமாவிற்கு இது ஒரு வித்தியாசமான அணுகுமுறை. 6 அத்தியாயங்களை  எப்படி ஒன்று சேர்ப்பது..? ஒரு அத்தியாயம் முடிந்ததுமே எழுந்து போகக்கூடிய அபாயம் இருக்கிறது. ஆனால் இந்தப்படத்தில் முதல் அத்தியாயம் முடியும்போதே இரண்டாம் அத்தியாயத்தை பார்க்கும் விதமாக நம்மை இழுத்து பிடித்து அமர வைத்து விடும் யுத்தியை இதில் கையாண்டிருக்கிறார்கள்.
 
இப்படி ஆறு அத்தியாயங்களுக்கும் நம்மை கட்டிப்போட்டு கடைசியில் அனைத்திற்கும் சேர்த்து 6-வது அத்தியாயம் முடிவில் எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முடிவு சொல்லியிருக்கிறார்கள். இது மிகச்சிறந்த யோசனை. மிகப்பெரிய சாதனையும் கூட. இதுபோல நல்ல கலைஞர்கள் வந்தார்கள் என்றால் தமிழ் திரையுலகை பற்றி உலகம் முழுதும் பேசுவார்கள்.
 
குறும்படத்திலேயே இவ்வளவு கெட்டிக்காரத்தனம் காட்டினால், அதை ஒரு முழுநீள திரைப்படத்திலும் நிச்சயம் கொண்டுவரமுடியும்.. உலகளவில் நம் படங்களை கொண்டுபோய் சேர்க்கமுடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் கொடுத்திருக்கிறது. 6 அத்தியாயம் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள்” என பாராட்டி பேசினார் பாரதிராஜா. 
 
‘6 அத்தியாயம்’ பற்றி… 
 
தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது.
 
பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ்,  ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு  அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.
 
பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,   பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.
 
ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர். தாஜ்நூர்,  ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.
 
படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ்  சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார்.  இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
 
படத்திற்கான கேம் ஆப் “RunForUrLife” எனும் பெயரில் கூகிள் பிலே ஸ்டோர் மற்றும் ஐடியூன்ஸ் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் படக்குழு  விரைவில் வெளியிடயிருக்கிறது.
‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில்  சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது… விஷாலுக்கு சவால்!

தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது… விஷாலுக்கு சவால்!

 

தமிழ் சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் விளையாடும் காலம் இது. அப்படி ஒரு வித்தியாசமான நல்ல முயற்சி தான் ‘6 அத்தியாயம்’. பல குறும்படங்களை ஒன்றிணைத்து ‘அந்தாலஜி’ படங்களாக வெளியிட்டிருப்பார்கள். ஆனால் இது அப்படி அல்ல. ‘6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. தமிழ் சினிமாவின் சமீபத்திய ஹிட் ட்ரெண்டான ஹாரர் பாணியில் அமைந்திருப்பது படத்தின் வெற்றியை பறை சாற்றுகிறது. ‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில்  சங்கர் தியாகராஜன் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார்.இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ்,  ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு  அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,   பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தாஜ்நூர்,  ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

படத்தின் ப்ரோமோ சாங்கை ‘விக்ரம் வேதா’புகழ்  சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இ . இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த  ‘6 அத்தியாயம்’  படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. விழாவில் நடிகர் இயக்குநர் பார்த்திபன், இயக்குனர்கள் சேரன், வெற்றிமாறன், எஸ் எஸ் ஸ்டான்லி, சசி, ரவிக்குமார், மீரா கதிரவன், அறிவழகன், ஏ வெங்கடேஷ், தாமிரா, தயாரிப்பாளர் இயக்குனர் சுரேஷ் காமாட்சி, கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும்  இசையமைப்பாளர் தாஜ்நூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.  ‘6 அத்தியாயம்’ படத்தின் இசைத்தகட்டை இந்த படத்தின் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன் அவர்களின் தாயார் பிரேமாவதி வெளியிட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பெற்றுக்கொண்டனர்.

 

விழாவுக்கு வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் பேசியவை…

இயக்குநர் எஸ் எஸ் ஸ்டான்லி

இதே தியேட்டரில் ஒரு ஷோ முடிந்தபிறகு கேபிள் சங்கரும் நானும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது அவர் ஒரு கதை சொல்லி என்னை நடிக்க சொன்னார். பிரமாதமான கதை. சங்கர் தியாகராஜனுக்கு பெரிய நன்றியை சொல்லவேண்டும். எல்லா வெள்ளிக்கிழமையும் காலை முதல் நாள் முதல் ஷோ பார்க்கும்போது எங்களுக்குள் விவாதங்கள் நடக்கும். வாராவாரம் கூடி பேசுவோம். மிக சரியாக திட்டமிட்டு இதனை செயல்படுத்திக் காட்டியிருக்கிறார்கள். முக்கியமாக அஜயன்பாலா, பொன் காசிராஜன் இருவருமே பெரிய திறமைசாலிகள். இருவரும் இதில் இடம்பெற்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இசையமைப்பாளர் தாஜ்நூர்

இயக்குநர் சுரேஷ் என்னிடம் ஒரு குறும்படம் என்று சொன்னார். அது பெரிய படமாக வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இயக்குநர் சேரன் கேபிள் சங்கர், சங்கர் தியாகராஜன் இருவருக்கும் நன்றி. ஒரே படத்தில் 6 டீம்களை அறிமுகப்படுத்தியிருப்பதற்கு தான் அந்த நன்றிகள். 60 பேருக்கு வாழ்க்கை அமைத்துக்கொடுத்திருக்கிறீர்கள். இதுபோன்ற முயற்சிகள் நிறைய வரவேண்டும். இதுதான் நல்ல மாற்றம். புதிய இயக்குநர்கள் எல்லோருக்கும் ஹீரோக்களை நினைத்து பயம் இருக்கிறது. ஆனால் விரைவில் அவர்களுக்கு நல்ல காலம் வரவிருக்கிறது. இன்னும் சில ஆண்டுகளில் சினிமா அடுத்த கட்டத்துக்கு செல்லும். தியேட்டர்களை விட வீடுகளுக்குள் நம் படங்கள் உள்ளே செல்லும். அப்போது இந்த இளைஞர்களுக்கு தான் எதிர்காலம். இனி சினிமாவை நினைத்து பயப்பட வேண்டியதில்லை. இணையம் அதற்கான பெரிய ப்ளாட்ஃபார்மாக மாறும்.

தயாரிப்பாளர் தனஞ்செயன்

எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இதை சரியான முறையில் புரமோஷன் செய்து வியாபாரத்திலும் லாபம் பார்க்க வேண்டும். சேரன் சொன்னதுபோல இணையத்தில் வெளியிட்டும் பெரிய லாபம் பார்க்க வேண்டும். அஜயன்பாலா இயக்குநராகி இருப்பது சந்தோஷம் அளிக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து ‘பாஃப்டா’ சார்பாக இதேபோல் வண்ணச்சிறகுகள் என்று ரிலீஸ் ஆகவிருக்கிறது. எனவே இந்த படத்தின் ரிசல்ட்டை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

கில்டு தலைவர் ஜாக்குவார் தங்கம்

வித்தியாசத்துக்கு பார்த்திபனும் ஆக்ரோஷமாக பேச சுரேஷ் காமாட்சியும் இருக்கிறார்கள். சேரன் உணர்ச்சிமயமாக பேசுபவர். ஆனால் உண்மையைத் தான் பேசுவார். கில்டு சார்பில் சில முயற்சிகள் நடக்கின்றன. அவை நடைமுறைக்கு வந்தால் பட ரிலீஸ் அன்றே தயாரிப்பாளர்கள் கைகளில் ஒன்றரை கோடி இருக்கும். இன்னும் ஆறு மாதங்களில் நல்ல காலம் பிறக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடையும்.

இயக்குநர் சசி

என்னுடைய நண்பர்கள் இந்த படத்தில் இருக்கிறார்கள். இந்த டீம் மிகவும் நம்பிக்கையான டீமாக இருக்கிறது. படத்தை காண ஆவலோடு இருக்கிறேன்.

இயக்குநர் ரவிக்குமார்

அஜயன்பாலாவும் கேபிள் சங்கரும் தான் நான் வரக் காரணம். தமிழில் இரண்டு கதைகள் கொண்ட படம், அவியல் போன்ற ஒரு வித்தியாசமான முயற்சி இது. ஒரே கதையாக பார்க்கும் நமக்கு இது ரொம்ப புதுசா இருக்கும். சில படங்களில் அரை மணி நேரம் தான் கதை இருக்கும். இழுத்திருப்போம். அதுபோன்ற கதையை இப்படி எடுக்கலாம்.

இயக்குநர் மீரா கதிரவன்

இந்த நிகழ்வு என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்று. என்னை வழி நடத்திய அஜயன்பாலா இயக்குநர் ஆகியிருக்கிறார். கேபிள் சங்கர் சினிமா வியாபாரத்தை பற்றி எழுதியவர். ரசிகர்களின் கணக்கும் நம் கணக்கும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தால் தான் வெற்றியை பார்க்க வேண்டும். ரசிகர்கள் என்று பொதுவாக சொல்கிறோம். ஆனால் ரசிகர்களில் வெவ்வேறு வகை உண்டு. ஆனால் இன்றைய நாளில் மூன்றே நாளில் படத்தின் ஆயுள் முடிந்துவிடுகிறது. இனி சினிமாவைத் தேடி ரசிகன் வரமாட்டான். அவனைத் தேடி நாம் தான் செல்ல வேண்டும். சினிமாவுக்கான இன்னொரு தளமாக இணையம் உருவாகிக்கொண்டிருக்கிறது. என் படம் ரிலீஸ் தள்ளிப்போனபோது எனக்காக பார்த்திபன் குரல் கொடுத்திருந்தார். அது எனக்கு பெரிய ஆறுதல் தந்தது. பார்த்திபன் அவர்களுக்கு நன்றிகள். ஒரு படத்தின் புரமோஷனுக்கு ஆர்ட்டிஸ்ட் வரவேண்டும் என்பதை சங்கங்கள் கட்டாயமாக்க வேண்டும்.

இயக்குநர் அறிவழகன்

பார்த்திபன் சார் எப்போதுமே சுவையாக பேசக்கூடியவர். அந்த சுவாரஸ்யம் தான் சினிமாவுக்கு தேவை. இந்த படம் பற்றி கேட்கும்போதே சுவாரஸ்யமாக இருக்கிறது. ஷங்கரிடம் வேலை பார்த்தாலும் மற்ற இயக்குநர்களிடமும் ஒவ்வொன்று ஏகலைவனாக கற்றிருக்கிறேன். படத்தை வீடுகளுக்கு கொண்டு செல்வது இனி மிக அவசியம்.

இயக்குநர் ஏ வெங்கடேஷ்

கேபிள் சங்கர் எனக்கு நல்ல நண்பர். நான் ஒரு படத்துக்கு அஜயன்பாலாவை வசனம் எழுத அழைத்தேன். அவர் யோசித்தார். கமர்ஷியல் தான் கஷ்டம் என்று சொல்லி எழுத வைத்திருக்கிறேன். இந்த படம் தான் எதிர்கால சினிமா. டீம் டீமாக சேர்ந்து படம் பண்ணுவது இனி அதிகரிக்கும். இந்த படம் அதற்கு தொடக்கமாக அமையும். மாஸ் ஹீரோவுக்கு நிகரான பேய் இந்த படத்தில் இருக்கிறது. அது நிச்சயம் ஹிட்டை தரும். சேரனின் சி2எச்சுக்கு இந்த திரையுலகம் உதவி புரியவில்லை என்பதை சுரேஷ் காமாட்சி விளக்க வேண்டும்.

இயக்குநர் தாமிரா

இந்த மேடையை பார்க்கும்போது எனக்குள் பேய் இல்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இந்த படம் தொடங்கியது முதல் கூடவே இருந்தேன். ஆனால் எனக்கு ஒரு படம் இயக்க வாய்ப்பளிக்கவில்லை. தாமதமாகத் தான் கேபிள் சங்கரிடம் கேட்டார். என்னிடம் முன்பே கேட்டிருந்தால் இது 7 அத்தியாயமாக மாறி இருக்கும். வெகு விரைவில் அஜயன்பாலா பெரிய படம் ஒன்றை இயக்குவார். அதற்கான வேலைகள் நடக்கின்றன.

நடிகர் இயக்குநர் பார்த்திபன்

மழை வணக்கம். மத்திய அரசு செய்யவேண்டியதையும் சேர்த்து விவசாயிகளுக்கு செய்யும் மழைக்கு என் நன்றிகள். 2.ஓ ஆடியோ நிகழ்ச்சிக்கு என்னை அழைத்தார்கள். அங்கு நான் போகாமல் இங்கே வந்திருக்கிறேன். இங்கு நான் தேவை. அங்கு நான் தேவை இல்லை. 6 பேர் சேர்ந்து ஒரு படம் இயக்குவது பெரிய வேலை இல்லை. இங்கே 2 பேர் சேர்ந்து ஒரு ஆட்சியே நடத்தும்போது 6 பேர் சேர்ந்து இயக்குவது பெரிய விஷயமா என்ன? இந்த கதைகள் இணைக்கப்பட்டிருக்கும் விதம் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விஷயம் உள்ளவர்களை பார்த்தால் தான் சின்ன மிரட்சி ஏற்படும். அப்படி அஜயன்பாலாவை பார்த்து மிரட்சி அடைந்திருக்கிறேன். தி நகரில் ஒரிஜினல் நெய்யினால் செய்யப்பட்ட போளியை விற்பார்கள். போளியை விற்கவே ஒரிஜினாலிட்டி தேவைப்படுகிறது. போலிகள் நிறைந்திருக்கும் சினிமாவிலும் ஒரிஜினாலிட்டி தேவை. 6 அத்தியாயங்கள் அப்படி ஒரு படமாக அமையும்.

இயக்குநர் வெற்றிமாறன்

இந்த மாதிரியான முயற்சிகள் உலகம் முழுக்கவே நிகழ்ந்திருக்கின்றன. தமிழிலுல் மிகச்சில நடந்தன. இந்த முயற்சி நாம் ஊக்குவிக்க வேண்டியது. நாங்கள் முயற்சித்தோம். ஆனால் முடியவில்லை. இது மிகவும் சிரமமான வேலை. எல்லோரையும் ஒன்றிணைக்க வேண்டும். ஆனால் பேயை கையில் எடுத்திருப்பது வியாபாரத்துக்கு எளிதாக இருக்கும். அஜயன்பாலாவை என்னுடைய குரு பாலு மகேந்திரா தான் அறிமுகம் செய்து வைத்தார். சிறந்த எழுத்தாளர். நேர்மையான விமர்சகர். அவர் மீது நம்பிக்கை உள்ளது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

சினிமா வியாபாரத்தை பற்றி பேசுகிறோம், படிக்கிறோம். ஆனால் அது அழிந்துபோய்க்கொண்டிருக்கிறது. பர்மா பஜாரில் பத்து டிவிடி வாங்கினால் படம் பண்ணிவிடலாம். படம் பண்ணிவிட்டால் அதன்பின் கருத்து சுதந்திரம் என்று சமாளிக்கலாம். கருத்து சுதந்திரம் வேண்டும் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. காமராஜர் தோற்றதற்கு காரணம் சினிமா. மக்களிடம் நேர்மையாக ஒரு விஷயத்தை சொல்வது இல்லை. தவறான விஷயத்தை சொல்லிவிட்டு பின்னர் கருத்து சுதந்திரம் என்று சொல்வது. இது எல்லாம் தவறான ஒன்று.

கதாசிரியர்களை மதிப்பதில்லை. காம்பினேஷனுக்கு தான் இங்கே மதிப்பு. இந்த படத்துக்கு எடுத்த முயற்சியை புரமோஷனிலும் எடுத்து சரியாக கொண்டு சேர்க்க வேண்டும். இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தமிழ் சினிமாவுக்கு இரண்டு புதிய பிஆர்.ஓக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களிடம் கொண்டு சென்றால் போதும்.

சேரன் கொண்டு வந்த சி2எச் ஏன் தோல்வி அடைந்தது என்று பார்த்திபன் தான் பதில் சொல்லவேண்டும். அவர்தான் தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர். பைரசியை தடுத்துவிட்டதாக பொய் சொல்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸை பிடிக்கவே முடியாது. நடிகர்கள் தான் அத்ற்கு காரணமாக இருப்பார்களோ என்ற சந்தேகம் இருக்கிறது.

ஒன்பது மாதங்களாக என்னென்ன வேலைகள் செய்திருக்கிறீர்கள்? ஸ்ட்ரைக்கை அறிவித்து பின்னர் முடித்தீர்கள். ஜிஎஸ்டிக்கு ஸ்ட்ரைக் அறிவித்தீர்கள். ஆனால் 2 சதவீதம் குறைத்தவுடன் வாபஸ் வாங்கினீர்கள்? தமிழ் சினிமா டிஜிட்டல் என்று தெரிந்துவிட்டது. சேரனை ஆதரிக்காதது தமிழர் என்ற காழ்ப்புணர்ச்சி தான். சேரனை அழைத்து ஏன் பேச மறுக்கிறீர்கள்?

பெரிய தயாரிப்பாளர்கள் 10 பேருக்காகத் தான் சங்கம் நடக்கிறது. கோக்க கோலாவை எதிர்த்து வசனம் பேசும் ஹீரோ தான் கோக்க கோலா விளம்பரத்தில் நடிக்கிறார். ஆன்லைன் வியாபாரத்தை எல்லா தயாரிப்பாளர்களுக்கு விளக்கி இருக்கிறீர்களா? அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டாமா? எங்கள் தலைவர் க்யூப் கட்டணத்தை குறைக்க இருப்பதாக சொன்னார். ஆனால் அதிகமாகத் தான் ஆகியிருக்கிறது. 32 ஆயிரமாக ஏறிவிட்டது. கேபிள் டிவியில் ஒன்றரை கோடி எப்படி வரும்? ஒரிஜினல் சிடி மார்க்கெட்டை திறந்துவிட்டால் தான் திருட்டு டிவிடி ஒழியும். அரசாங்கம் போலத் தான் இவர்களும் நம்மை ஏமாற்றுகிறார்கள்.

தியேட்டர்காரர்கள் மூன்று மாதங்கள் கழித்துதான் வசூல் விபரம் வருகிறது. இது உடனே கிடைக்க ஆவண செய்தால் என்ன? இதுப்போன்ற என்னுடைய ஆதங்கத்தை பார்த்திபன் அவர்கள் தான் சங்கத்திற்கு எடுத்து செல்ல வெண்டும். தீபாவளிக்கு பத்தாயிரம் கொடுக்கவும் பொங்கலுக்கு வேட்டி சேலை கொடுக்கவும் தான் சங்கமா? விஷாலுக்கு எதிராக ஏன் எப்போது பேசுகிறீர்கள் என்று கேட்கிறார்கள். எனக்கு விஷால் உள்பட அனைத்து ஹீரோக்களுமே நண்பர்கள் தான்.

 

இலங்கையில் நடைபெறும் ‘6 அத்தியாயம்’ பட இசை வெளியீடு!

இலங்கையில் நடைபெறும் ‘6 அத்தியாயம்’ பட இசை வெளியீடு!

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் ‘அந்தாலஜி’ வகைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கியிருப்பார்கள்.. அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும்.. இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக இருந்து வருகிறது.

 

ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில்

ஆனால் 6 அத்தியாயம்’ திரைப்படத்தில், முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை, ஆறு இயக்குனர்கள் இயக்கி, இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும் வழக்கம்போல அத்தியாயங்களின் முடிவில் சொல்லப்படாமல், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படுகிறது. இது உலக அளவில் முதல் முயற்சி என்றே சொல்லலாம்.

 

இயக்குனர் கேபிள் சங்கர்

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான கேபிள் சங்கர் இவற்றில் ஒரு அத்தியாத்தை எழுதி இயக்கியிருக்கிறார். தவிர படத்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் இவர் பணியாற்றியிருக்கிறார்.

 

எழுத்தாளர் அஜயன் பாலா

இன்னொரு அத்தியாயத்தை பிரபல எழுத்தாளர் அஜயன் பாலா எழுதி இயக்கியுள்ளார். எழுத்தாளர் மட்டுமல்லாமல் மனிதன், சென்னையில் ஒரு நாள், வனயுத்தம், வனமகன் ஆகிய படங்களின் மூலம் ஒரு வசனகர்த்தாவாகவும் அடையாளம் காணப்பட்டவர் இவர்.. தற்போது இதில் ஒர் அத்தியாயத்தை எழுதி, இயக்குவதன் மூலம் முதல் முறையாய் இயக்குனராகவும் அறிமுகமாகிறார்.

இவர்களுடன் தயாரிப்பாளர் சங்கர் தியாகராஜன், லோகேஷ்,  ‘லைட்ஸ் ஆன் மீடியா’ சுரேஷ், குறும்பட உலகில் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் மீதி நான்கு  அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

 

இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர், ‘குளிர் 100’ சஞ்சய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,  பேபி, வீர சிவாஜி, நிசப்தம் படங்களில் நடித்த பேபி சாதன்யா ஆகியோருடன் மேலும் பல புதுமுகங்கள் இந்த ஆறு அத்தியாயங்களிலும் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களுக்கும், பிரபல புகைப்பட கலைஞர் பொன்.காசிராஜன், அருண்மணி பழனி, அருண்மொழி சோழன், மனோ ராஜா ஆகியோர் தலா ஒரு அத்தியாயத்திற்கும் ஒளிப்பதிவாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

தாஜ்நூர்,  ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் ஆகியோர் இந்த அத்தியாயங்களுக்கு இசையமைத்துள்ளனர்.

 

ப்ரோமோ சாங் – சி.எஸ்.சாம், மா.கா.ப ஆனந்த்

படத்தின் ப்ரோமோ சாங்கை சி.எஸ்.சாம் இசையமைத்துள்ளார். இவர் மாதவன் – விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான ‘விக்ரம் வேதா’ மற்றும் விரைவில் வெளிவரவுள்ள ’புரியாத புதிர்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து கவனம் ஈர்த்தவர். இந்தப்பாடலை விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்தப்பாடல்,  நடனக்கலைஞர்களை கொண்டு படமாக்கப்பட்டு, 2டி அனிமேஷனாகவும் மாற்றப்பட்டுள்ளது இன்னொரு ஹைலைட்.

 

இலங்கையில் பாடல் மற்றும் டிரைலர் வெளியீடு!

‘ஆஸ்கி மீடியா ஹட்’ எனும் நிறுவனம் சார்பில் சங்கர் தியாகராஜன் தயாரித்துள்ள இந்தப்படத்தின் பாடல் மற்றும் டிரைலரை ஆகஸ்ட் மூன்றாவது வாரத்தில் இலங்கையில் மிக பிரமாண்ட முறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். மேலும் படத்தை செப்டம்பர் முதல் வாரத்தில்  வெளியிட தீர்மானித்துள்ளனர்.

 

பஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் 

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் பஸ்ட் லுக் மோஷன் போஸ்ட்டரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ட்விட்டரில் வெளியிட்டார். அது அனைத்து தரப்பு மக்களிடமும் படத்தின் மீதான நம்பிக்கையை அதிகப்படுத்தியுள்ளது.

 

திரையில் ஒரு புதிய முயற்சி!

திரையில் ஒரு புதிய முயற்சி!

திரையில் ஒரு புதிய முயற்சி
” 6 அத்தியாயம்” எனும் ‘ஹெக்ஸா’
முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள முழு திரைப்படம் தான் இந்த  6 அத்தியாயம்.

‘ஹெக்ஸா’  என்றால் கிரேக்க மொழியில் எண் 6 -ஐக்குறிக்குமாம்.

இதில் என்ன புதுசு? என்று கேட்பவர்களுக்கு “அமானுஷ்யத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படும்” இது உலக அளவில் முதல் முயற்சி  என்றே சொல்லப்படுகிறது.

இது ஒரு பரபர திகில் படம் தான் என்றாலும் ஆறு அத்தியாயமும், படம் பார்ப்பவர்களுக்கு அறுசுவை உணவுண்ட திருப்தியைத் தரும்.

பிரபல எழுத்தாளரும், மனிதன், சென்னையில் ஒரு நாள், வன யுத்தம் போன்ற படங்களின் வசனகர்த்தாவும் வனமகன், நேத்ரா ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி வருபவருமாகிய அஜயன் பாலா அவர்கள், ஒர் அத்தியாயத்தை எழுதி முதல் முறையாய் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான “கேபிள் சங்கர்” ஒரு அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் படத்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அமெரிக்க நியுஜெர்ஸி பிலிம் ஸ்கூலில் திரைப்பட உருவாக்கம் குறித்து கற்ற சங்கர் தியாகராஜன்,  இந்த படத்தை தயாரிப்பதுடன்,  ஆறு அத்தியாயங்களில் ஒர் அத்தியாயத்தை இயக்கியும் உள்ளார்.

இவர்களுடன் மர்ம் தேசம் முதல் ஜீபூம்பா வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’  சுரேஷ், குறும்பட உலகின் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் ஒவ்வொரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தொட்டால் தொடரும்’ போன்ற படங்களில் நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர்,  ‘குளிர் 100’ சஞ்செய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,  பேபி, வீர சிவாஜி, நிசப்தம் படங்களில் நடித்த பேபி சாத்தன்யா மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோருடன் மேலும் பல பதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

சீனியர் கலைஞர்களான சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களில் ஒளிப்பதிவு செய்ய, பிரபல புகைப்பட கலைஞர் பொன். காசிராஜன் இப்படத்தின் ஒர் அத்தியாயத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக களம் இறங்குறார்.  இவர்களைத் தவிர புதியவர்களான அருண் மணி பழனி, அருண்மொழி சோழன் மற்றும் மனோ ராஜா ஒளிப்பதிவாளர்களாய் பணியாற்றியுள்ளனர்.

இசையில் பிரபல இசையமைப்பாளர் தாஜ்நூர்,  சாம், ஆகியோருடன் ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் போன்ற வளரும் இசைக் கலைஞர்கள் புதிய இசையமைப்பாளர்களாக அறிமுகமாகியுள்ளனர்.

‘தீம் சாங்’ எனப்படும் கருத்துப் பாடலை பிரபல நடிகர், விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இப்படத்திற்காக புரியாத புதிர் புகழ் சி.எஸ்.சாம் இசையில் ஒர் ஷூயூர் ஷாட் சூப்பர் ஹிட் பாடலை பாடியிருக்கிறார்.

மேலும் இப்பாடல்,  நடனக் கலைஞர்களை கொண்டு, படம் ஆக்கப்பட்டு, அதை 2டி அனிமேஷனாக மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தயாரித்துள்ள சங்கர் தியாகராஜன், பல உலக புகழ் பெற்ற பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில் அமெரிக்காவில் பணிபுரிந்து,  தாயகம் திரும்பிய இந்த சேலத்துக்காரர்.  ஐபோன், ஆண்டிராய்ட் போன்களில் பிரபலமான ‘ப்ளாஷ் கார்ட்ஸ் தமிழ் லெசன்ஸ்’ என்னும் ஆப்- யை வடிவமைத்து, பெங்களூரில் ‘வண்ணால மொபல் ஆப்ஸ் (பி) லிமிடேட்’ என்னும், மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.  இப்படத்தை ”ஆஸ்கி மீடியா ஹட்” எனும் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

”6 அத்தியாயம்”  எனும் ஹெக்ஸா’   திரையில் ஒரு புதிய அனுபவம் தர இன்னும் சில மாதங்களில் வெளியாகிறது.