Tag Archives: வெங்கட் பிரபு

LOCK UP Movie Vaibhav- Venkat Prabhu starrer Debutant SG Charles directorial

LOCK UP Movie Vaibhav- Venkat Prabhu starrer Debutant SG Charles directorial

நித்தின் சத்யா தயாரிப்பில்

 வைபவ் – வெங்கட் பிரபு நடிப்பில்

 அறிமுக இயக்குனர் SG.சார்லஸ் இயக்கும் 

லாக்கப்

சினிமா கலையை கற்றதோடு நில்லாமல் அந்த கலையில் சாதிக்க துடிக்கும் இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பளிப்பதில் ஆர்வம் காட்டும் தயாரிப்பாளர்களில் முக்கியமானவர் நித்தின் சத்யா.

தனது தயாரிப்பு நிறுவனமான “ஷ்வேத் – எ நித்தின் சத்யா புரொட்கஷன் ஹவுஸ்” சார்பாக  நித்தின் சத்யா சென்ற வருடம் ஜெய் நடிப்பில் உருவான “ஜருகண்டி” படத்தை புதுமுக இயக்குனர் பிச்சுமணி இயக்கினார். தற்போது அவர் பிரம்மாண்டமாக தயாரித்திருக்கும் இரண்டாவது படமான “லாக்கப்” படத்தை புதுமுக இயக்குனர் SG சார்லஸ் இயக்கியுள்ளார். SG சார்லஸ் இயக்குனர் மோகன்ராஜாவிடம் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் வெளியான “லாக்கப்” படத்தின் முதல் பார்வை போஸ்டர் அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

முழுக்க முழுக்க இன்வெஸ்டிகேடிவ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் வைபவ் கதாநாயகனாகவும் வாணி போஜன் கதாநாயகியாகவும் நடிக்க, பிரபல இயக்குனரும் நடிகருமான வெங்கட்பிரபு முற்றிலும் மாறுபட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஈஸ்வரி ராவ்,  பூர்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் பல நடிகர்கள் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஆரோல் கரோலி இசையமைக்க, சாண்டி ஒளிப்பதிவை மேற்கொள்கிறார்.

படத்தொகுப்பு – ஜெரால்டு ஆனந்த்

கலை – ஆனந்த் மணி

மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ள படக்குழுவினர் “லாக்கப்” திரைப்படம் விரைவில் வெளியாகி ரசிகர்களுக்கு திரைவிருந்தாக அமையும் என்று கூறியுள்ளனர்.

Team Chennai 600028-II launched the film’s Official Merchandise in association with Fully Filmy!

Team Chennai 600028-II launched the film’s Official Merchandise in association with Fully Filmy!

Teaser launches, trailer launches, first look launches are a thing of the past! In an effort to change the game of movie promotion, director Venkat Prabhu and the cast of Kollywood’s most awaited sequel, Chennai 600028 – II launched a brand new line of Official Chennai 600028 products in collaboration with Fully Filmy, the one-stop shop for movie merchandise in India. This star studded event was not like any other launch event; but was like a fun reunion of long lost friends.The energy level at the venue resembled of a cricket stadium!
The team’s first film, Chennai 600028 featured an ensemble cast of newcomers and explored the theme of street cricket matches in Chennai. The film broke many rules, set several trends and became a cult favourite of the youth, giving rise to popular quotes and pop culture elements that are a rage even today.
In order to capitalise on the frenzy that surrounds the film, director Venkat Prabhu along with cast members Premgi Amaren, Vijay Vasanth, Vaibhav, Aravind Akash, Nithin Sathyaa and Mirchi Shiva launched an exciting new range of products at the Fully Filmy store at Phoenix Marketcity, Velachery, Chennai on Sunday, October 30, 2016.  However, with the film’s release set in late November, this is just the beginning of their collaboration and there will be many, many interesting announcements on the way!
Fully Filmy is one of India’s very few movie merchandise brands that was started in June 2015 with the aim of harnessing the potential of the Indian population’s love for films. While movie merchandise is a culture in the West, it is still relatively in its nascent stages in India considering the fact that we are the largest producers and consumers of cinema in the world, and Fully Filmy are the flag bearers of this newly emerging trend. Fully Filmy has already teamed up with some of Kollywood’s biggest releases in the past year like Mani Ratnam’s OK Kanmani, Wunderbar FIlms’ Maari and Naanum Rowdy Dhaan, and this year’s Vikram starrer Iru Mugan to name a few.
 
 
வெங்கட் பிரபுவும், சொப்பன சுந்தரியும், இப்போது ஆடைகளிலும், பொருட்களிலும்…
தமிழ் திரையுலகில் திரைப்படங்களை விளம்பர படுத்துவதற்காக புதுமையான பல யோசனைகளையும், முயற்சிகளையும் படக்குழுவினர் கையாண்டு வருகின்றனர்….
டீசர் வெளியீட்டு விழா, டிரைலர் வெளியீட்டு விழா, படத்தின் முதல் காட்சி போஸ்டர் வெளியீட்டு விழா என எண்ணற்ற விளம்பர யுக்திகள் திரையுலகில் கடைபிடிக்கப்பட்டு வந்தாலும், தற்போதைய  காலக்கட்டத்தில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பது, ‘மெர்ச்சண்டைஸ்’ எனப்படும் படத்தை சார்ந்த ஆடைகள், பொருட்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவது  தான்….
அப்படிப்பட்ட புதுமையான யுக்தியை  ‘ஃபுள்ளி பிலிமி’ நிறுவனத்தோடு இணைந்து  சமீபத்தில் கையாண்டு இருக்கின்றனர் வெங்கட் பிரபுவும் அவருடைய  ‘சென்னை 28 – II ‘ படக்குழுவினரும்.
‘சென்னை 28’ படத்தின் பிரபலமான நகைச்சுவை வசனங்களை கொண்டும், தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்டு வரும் ‘சென்னை 28 – II’ படத்தின் சொப்பன சுந்தரி பெயரை கொண்டும் பல ‘டீ – ஷர்ட்களும்’, ஆடைகளும் உருவாக்கப்பட்டிருக்கிறது….
இதனை கடந்த அக்டோபர் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வெங்கட் பிரபுவும் அவருடைய ‘சென்னை 28 – II ‘ படக்குழுவினர்களான பிரேம்ஜி அமரன், விஜய் வசந்த், வைபவ், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா மற்றும் மிர்ச்சி சிவா ஆகியோரும் இணைந்து வேளச்சேரியில் உள்ள ‘பீனிக்ஸ் மாலில்’ வெளியிட்டனர்.
நவமபர் மாத இறுதியில் வெளியாக இருக்கும் ‘சென்னை 28 – II’ படத்திற்கு இந்த புதுமையான விளம்பரம் மேலும் சிறப்பு சேர்த்துள்ளது.
இப்படிப்பட்ட புதுமையான விளம்பர முயற்சிகளை நடத்தி வரும் பல முன்னணி நிறுவனங்களில் ஒன்று தான்  ‘ஃபுள்ளி பிலிமி’.
கடந்த ஜூன் 2015 ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிறுவனம்,  தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட வெற்றி பெற்ற மணிரத்னமின் ‘ஒகே கண்மணி’, ‘வண்டர்பார் பிலிம்ஸ்’ தயாரிப்பில் வெளியான ‘மாரி’, ‘நானும் ரௌடி தான்’ மற்றும் விக்ரமின் ‘இரு முகன்’  ஆகிய படங்களின் விளம்பர பணியில் இணைந்து பணியாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Kalam New Movie Stills & News Teaser

Kalam New Movie Stills & News Teaser

“Kalam’s teaser gives me a couple of jerks!” says Venkat Prabhu
Kalam, the upcoming Tamil film’s teaser was released by director Venkat Prabhu. “I’d seen the motion poster and teaser of Kalam – Arul Movies’ production debut. Even they are mysterious in nature – you can never conclude if it’s a supernatural thriller, or a horror-suspense or which specific genre it belongs to”, giggles Venkat Prabhu. “The teaser looks nice, and at the same time, intriguing. With the promising works of debutantes – the script-writer Subish Chandran and the director Robert S Raaj, I’m sure it’s got a proper production-value”, he added.
On the track of horror genres in 2016 Venkat prabhu said, “Handling horror is no easy job – there are a lot of horror movies where the audiences do not even flinch. However, with Kalam, even the teaser gives me a couple of jerks and I wish the entire Kalam Team all the very best!” The film is expected to be released in the days of April.
“களம் படத்தின் முன்னோட்டம் என்னை நடுங்க வைத்துவிட்டது” – வெங்கட் பிரபு 
தமிழ் சினிமாவிற்கு மேலும் திகிலூட்டக்கூடிய வகையில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘களம்’. இந்த படத்தின் முன்னோட்டத்தை இன்று இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ” தற்போது தான் இந்த படத்தின் முன்னோட்டத்தை நான் பார்த்தேன். ஓர் திகில் சினிமாவிற்குரிய அனைத்து அம்சங்களும் இதில் அமைந்திருக்கிறது”, என்கிறார் வெங்கட் பிரபு. மேலும் அவர் கூறுகையில், “பொதுவாக ஓர் திகில் படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல; பார்வையாளர்களை பயத்தில் வைத்திருப்பதே அதனுடைய சிறப்பம்சம். அந்த வகையில், களம் படத்தின் முன்னோட்டம் என்னை சில இடத்தில் ஆட்டம் காட்டிவிட்டது. அறிமுக இயக்குனர் ராபர்ட் S ராஜ் மற்றும் கதை ஆசிரியர் சுபிஷ் K சந்திரன் அவர்களுக்கும், படம் வெற்றிப்பெற நான் வாழ்துகிறேன்”, என்றார்.
ஏப்ரல் மாத நாட்களில்,இந்த  திகில் அனுபவத்தை நாம் எதிர்ப்பார்க்கலாம்.