Tag Archives: விஷால்

தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது – விஷால்

தயாரிப்பாளர் சங்க தலைவரான என்னுடைய படத்தை வெளியிடவே பிரச்சனை ஏற்பட்டது – விஷால் 
விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்றிருக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “ … விஷால் , அர்ஜுன் , சமந்தா நடிப்பில் , யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்து அனைவரிடமும் நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள இத்திரைப்படத்தின் வெற்றி விழா மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் விஷால் , அர்ஜுன் , இயக்குனர் மித்ரன் , எடிட்டர் ரூபன் , கலை இயக்குனர் உமேஷ் , நடிகர் காளி  வெங்கட் , ரோபோசங்கர் , எழுத்தாளர்கள் ஆண்டனி பாக்யராஜ் , பொன் பார்த்திபன் , காஸ்டியூம் டிசைனர் சத்யா , ஜெயலட்சுமி ஆகியோர் கலந்துகொண்டார்.
விழாவில் விஷால் பேசியது :- 
      இந்த படத்தில் நான் பல காட்சிகளில் மிகவும் உண்மையாக யதார்த்தமாக நடித்தேன். ஒரு காட்சியில் என்னுடன் பாங்க் ஏஜெண்டாக நடித்த சக நடிகரை அடித்தேவிட்டேன். படத்தில் என்னுடன் நாயகியாக நடித்த சமந்தாவுக்கு நன்றி. கல்யாணமானால் நடிக்கக்கூடாது என்று இருந்த ஒரு விஷயத்தை இன்று அவர் உடைத்துவிட்டார். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது.
இந்த படத்தை வெளியிட நான் மிகவும் போராடினேன். பணத்தின் அருமை அப்போது தான் எனக்கு தெரிந்தது. என்னுடைய நண்பன் வெங்கட் காரை விற்று எனக்கு பணம் கொடுத்தார். இன்னொரு நண்பன் பத்திரத்தை விற்று பணம் கொடுத்தார். ஏன் என்னுடைய படத்தை வெளிவராமல் தடுத்தார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதுவரை எனக்கு இது போல் நடந்தது இல்லை. தயாரிப்பாளர்  சங்க தலைவரான என்னுடைய படத்தையே இவர்கள் வெளிவராமல் தடுக்கிறார்கள் என்றால் யோசிக்க வேண்டிய ஒன்று தான். ஒரு தயாரிப்பாளர் சங்க தலைவரின் படத்தையே தடுத்துவிட்டோம் என்று காட்ட முயற்சி செய்துள்ளார்கள் என்று நினைக்கிறேன். படத்தில் உள்ள ஆதார் கார்ட் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க கோரி போராடுகிறார்கள். அவர்கள் அனைவரும். தியேட்டர் அருகே போராடாமல் வள்ளுவர் கோட்டம் போன்ற இடங்களில் போராடினால் யாருக்கும் இடைஞ்சல் வராது.
ஆர்யா தான் இதில் வில்லனாக நடிக்கவேண்டியது. அப்போது இருந்த வெர்ஷனே வேறு. இப்போது அர்ஜுன் சார் நடித்துள்ள இந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுள்ளது.
படம் வெளியாக எனக்கு ஆதரவாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபுவுக்கு நன்றி என்றார் விஷால்.
விழாவில் நடிகர் அர்ஜுன் பேசியது : 
இரும்புத்திரையை பற்றி எல்லோரும் பாசிட்டிவாக எழுதியதற்கும். என்னுடைய கதாபாத்திரத்தை பற்றி நல்ல விமர்சனங்கள் கொடுத்ததற்கும் நன்றி. நானும் விஷாலுடைய தந்தையும் நண்பர்கள். அவர் தான் விஷாலை எனக்கு அறிமுகம் செய்து என்னிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர்த்துவிட்டார். விஷால் என்னிடம் இயக்கம் தான் கற்க வந்தார். ஆனால் ஒருமுறை வேறு ஒரு நடிகருக்கு பதிலாக விஷாலை ஒரு காட்சியில் நடிக்க சொன்னேன். விஷாலும் ட்ரைளுக்காக அதில் நடித்தார். அதை பார்த்ததும் விஷாலை நடிகராக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது அதை நான் விஷாலுடைய தந்தையை சந்திக்கும் போது கூறினேன். அவரும் விஷாலை வைத்து செல்லமே படத்தை தயாரித்தார். படம் வெற்றி பெற்றது. நான் சொன்னது போலவே விஷால் இன்று வெற்றிகரமான ஹீரோவாக , தயாரிப்பாளராக , நடிகர் சங்க பொது செயலாளராக மற்றும் தயாரிப்பாளர் சங்க தலைவராக உள்ளார். சந்தோஷமாக உள்ளது. இன்று அவருடைய படத்தில் அவருக்கு வில்லன்னாக நடித்துள்ளேன். மகிழ்ச்சியாக உள்ளது.
நான் ஜென்டில்மேன் படத்தில் நடிக்கும் போது இயக்குனர் ஷங்கர் புதுமுக இயக்குநர் தான். அதே போல் திறமையான இயக்குநராக மித்ரன் வருவார் என்றார் அர்ஜுன்.
“MY FRIEND MORTGAGED HIS CAR ON NIGHT BEFORE IRUMBU THIRAI RELEASE TO HELP ME” – VISHAL 
The entire crew of Irumbu Thirai was present this afternoon at Green Park Hotel thanking media and press for the great support rendered for the film.
ACTOR VISHAL
“When editor Ruben referred PS Mithran for the script narration, I was quite reluctant as our previous script discussion for another project didn’t work out well. But when he came prepared with the ‘Irumbu Thirai’ script, it was so much fantastic and engrossing. Arya couldn’t take up the project on the spur of moment due to some reasons. But when PS Mithran suggested me ‘Action King Arjun’, I just had my few breathing skipped and told him approach Arjun sir by himself.  But sooner, I was so much excited to see that sir had given a nod to this script with some of additional inputs to his characterization… I’m so happy that Samantha broke the myth that actresses after marriages can still be at their best spell.”
Vishal continued to reveal about troublesome issues that happened a night before the release of Irumbu Thirai… “Few people in the industry had a thought that Irumbu Thirai release should be stalled at least for a day so that others could say, “When a film from TFPC president himself is not releasing, how will he take care of other producers?” The whole night till next day morning was a big learning experience to me about certain things in life. “My friend mortgaged his car on night before Irumbu Thirai release to help me financially. I must really thank my friends, especially producer SR Prabhu for being strong support. He happens to be the major reason behind the film’s release.”
ACTION KING ARJUN 
“All throughout my career, I have preferred working with first time directors like Shankar and many top directors in Telugu and Tamil as well. This is a kind of selfishness as I would like to make use of the spark that is inside the debut filmmakers. Irumbu Thirai isn’t just a commercial success, but has a social message. The kind of detailing he has included in the script is really huge. One of the greatest things about PS Mithran is his listening ability. He never puts down any suggestions and makes sure that the team work is always there on top priority.”
DIRECTOR P.S. MITHRAN
“Till the last minute of release, the situation was so bleak for the release of Irumbu Thirai. But it was Vishal sir’s scrutinizing efforts that made the release happen or else it would have not seen the light through tunnel. The moment Action King Arjun sir accepted the film, it became a blockbuster. Cinematographer George C Williams and Editor Ruben are my pillars and they helped me a lot to make my dreams come true.”
PON PARTHIPAN 
“This is a real big success for the film, where we get to see the overall reviews are turning to be positive and so are the receptions of audience. When Mithran informed Vishal that I have been considered to write the dialogues, he immediately gave a nod.”


ART DIRECTOR UMESH
“The only reason behind the film’s success is Vishal Film Factory. None other than this production house would have made this project possible. Since, crucial portions of this film needed set works, we had to develop them and were surprised to see that Vishal instantly agreed to proceed spending huge budget without any hesitation. Cinematography by George C Williams and brilliance of filmmaker PS Mithran are the major contributions to the success of this film.”

கீ” படத்தின் இசை வெளியீட்டு விழா!

கீ” படத்தின் இசை வெளியீட்டு விழா!

இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் காலீஷ் மனம் திறந்து பேசியவை ” இப்படத்தை தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பன் சாருக்கு என் முதல் நன்றி.பல வருடமா இப்படத்த தயாரிக்க யாருமே முன் வரல.ஒரு அறைக்குள் அடைந்துகிடந்தேன்.இறுதியா மைக்கல் சார் தயாரிக்க ஒத்துக்கிட்டாரு.ஜிவா, நிக்கி கல்ராணி மற்றும் அனைவரும் நன்றாக ஒத்துழைத்து நடித்துள்ளார்கள்.தயாரிப்பாளர்கள் எங்களை போல இளம் இயக்குனர்களுக்கும் வாய்ப்பளித்து உதவுங்கள்.பத்திரிகையாளர்கள் அனைவருக்கும்
‘ கீ ‘படக்குழு சார்பாக நன்றிகள்.”

படத்தின் நாயகன் ஜிவா பேசியவை “படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தை மலயாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா நடித்துள்ளார். மிகவும் சிறப்பாக நடித்துள்ளார்.
நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.படத்திற்கு விஷால் அருமையாக இசையமைத்துள்ளார்.அருமையான கதையைக் கொண்டது இத்திரைப்படம்.தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமையும்.தயாரிப்பாளர் மைக்கெல் ராயப்பனுக்கும் மற்றும் இயக்குனர் காலீஷ் அவர்களுக்கும் நன்றிகள் மற்றும் பாராட்டுக்கள்.”

விழாவில் நடிகை நிக்கி கல்ராணி பேசியவை  “இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் அவர்களுக்கும் , காலீஷ் அவர்களுக்கும் நன்றி.ஜிவா மற்றும் பலருடன் இப்படத்தில் நடித்துள்ளேன்.மகிழ்ச்சியாக உள்ளது.சமூகத்திற்கு நல்கக் கருத்தை தரும் படமாக அமையும்.தற்ப்போது சமூகத்தில் பெண்கள் இருக்கும் ஓர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.விஷால் சூப்பரா மியுசிக் போட்டுக்காரு.”

“இப்படத்தில் இசையமைக்க என்னை பரிந்துரை செய்த R.J பாலாஜி அவவர்களுக்கு நன்றி.வாய்பளித்த இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கும் மிக்க நன்றி.பாட்டு எல்லாமே அருமையாக
வந்துள்ளது.உங்க அனைருக்கும் மிகவும் பிடிக்கும் வகையில் அமையும்.பாடல்களை அழகாகக எழுதிய தாமரை,கார்கி,அமுதவன்,சுபு ஆகியோர்க்கு என் நன்றிகள்.” இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் கூறினார்.

இசை வெளியீட்டு விழாவில் கோவிந்த் பத்மசூரியா பேசியது ” தமிழில் எனக்கு இது முதல் படம்.நான் ஜிவா படங்கள் நிறைய பாத்துருக்கேன். நான் அவருடைய ரசிகன். படப்பிடிப்பு துவங்கும் 2மாதங்களுக்கு முன்பே ட்டிரைலர்.ரெடி பண்ணிட்டாங்க.நா ரொம்பவே வியந்தேன்.படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குனருக்கும், தயாரிப்பயாளருக்கும் எனது நன்றி.விஷால் மிக அருமையாக மியூசிக் போட்டுள்ளார்.”

இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கூறியது
“இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்  பிரமாண்டமா இருக்கு.நண்பன் ஜீவாவிற்கு எனது வாழ்த்துக்கள்.
நிக்கி கல்ராணி மற்றும் இசையமைப்பாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். இயக்குனர் காலீஷ் அவர்களின் முதல் படத்தின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் அவர்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வளர வேண்டும்.”

இசை வெளியீட்டு விழாவில் விஷால் பேசியவை
” படத்தின் பாடல்கள் மற்றும் ட்டிரைலர் பார்த்தேன்.மிக அற்ப்புதம் இருக்கு .படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.”

இசை வெளியீட்டு விழாவில் பேசிய R.B உதயகுமார் கூறியது
“சுகாசினியும் நானும் சிறு வயதில் இருந்து நெருங்கிய நண்பர்ள்.இந்த படம் போஸ்டர்களை பார்க்கும்போதே தெரிகிறது.தற்ப்போது இருக்கும் தலைமுறையினருக்கு நல்லக் கருத்தை தரும் படமாக அமையும்.ப்ளூ வேல் கேம் மாதிரி ஒரு ஆபத்தான விளையாட்டை எதிர்கொள்வதால் ஏற்ப்படும் விளைவுகளை இத்திரைப்படம் தெரிவிக்க உள்ளது.இசையமைப்பாளர்,  இயக்குனர் மற்றும் படத்தில் நடித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள்.”

“இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு என்னை அழைத்தத மைக்கல் ராயப்பன் அவர்களுக்கு நன்றி.படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.” என்று இசை வெளியீட்டு விழாவில் இமான் அண்ணாச்சி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் கே.வி ஆனந்த் பேசியவை” இசை வெளியீட்டு விழாவிற்க்கு என்னை அழைத்ததற்க்கு நன்றி.ஜிவா திறைமையுள்ள நடிகர், விஜய் சேதுபதியும் அப்படித்தான்.ஜிவா பிஞ்சிலேயே பழுத்தவர்.விஜய் சேதுபதி பழுத்து பிஞ்சானவவர். பாடல்களும் காட்ச்சியமைப்பும் மிகவும் பிரமாண்டமாக உள்ளது. இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகருக்கும், இயக்குனர் காலீஷ் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.தைரியமாக படத்தை தயாரிக்க முன் வந்த மைக்கல் ராயப்பனுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒளிப்பதிவாளர் அபி நந்தன் மிகச் சிறப்பான வேலையை செய்துள்ளார்.

“38 வருடங்களுக்கு முன்பு படத்தில் நடிக்கும் போது எப்படி ஒரு படபடப்பு இருந்ததோ அதேபோல் தற்போது இப்படத்தில் நடிக்கும்போதும் இருந்தது.பழைய காலங்களில்  பெரியவர்களிடம் நிறைய கற்றுக்கொண்டோம்.தற்போது காலீஷ் போன்ற அறிமுக இயக்குனர்களான சிறியவர்களிடம் கற்றுக்கொள்கிறோம்.படத்தில் அனைவருடனும் நடித்ததில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் ” என நடிகை சுகாசினி பேசினார்.

இத்திரைப்படம் பிப்ரவரி 9ம் தேதி திரைக்கு வெளிவர இருக்கிறது.

kee-movie-audio-launch-1

kee-movie-audio-launch-2

kee-movie-audio-launch-3

kee-movie-audio-launch-4

kee-movie-audio-launch-5

kee-movie-audio-launch-6

kee-movie-audio-launch-7

kee-movie-audio-launch-8

kee-movie-audio-launch-10

kee-movie-audio-launch-11

kee-movie-audio-launch-12

kee-movie-audio-launch-15

kee-movie-audio-launch-16

 

“Irumbu Thirai will be a real big different experience to audiences” – Vishal

“Irumbu Thirai will be a real big different experience to audiences” – Vishal

irumbu-thirai-press-meet-stills-1 irumbu-thirai-press-meet-stills-2 irumbu-thirai-press-meet-stills-3 irumbu-thirai-press-meet-stills-4 irumbu-thirai-press-meet-stills-5 irumbu-thirai-press-meet-stills-6 irumbu-thirai-press-meet-stills-7 irumbu-thirai-press-meet-stills-8 irumbu-thirai-press-meet-stills-9 irumbu-thirai-press-meet-stills-10 irumbu-thirai-press-meet-stills-11 irumbu-thirai-press-meet-stills-12 irumbu-thirai-press-meet-stills-13 irumbu-thirai-press-meet-stills-14 irumbu-thirai-press-meet-stills-15 irumbu-thirai-press-meet-stills-16 irumbu-thirai-press-meet-stills-17 irumbu-thirai-press-meet-stills-18 irumbu-thirai-press-meet-stills-19

The screening of Irumbu Thirai to media, press and special invitees happened last evening at Green Park Hotel in Chennai. The entire event was emblazoned with a much sparkling ambience that commuted the spectators to a state of enthrallment. The event commenced on an unexpected surprisal note, where every person over there at venue received a computerized call from Vishal on the film’s concept.

The event was graced by team members of ‘Irumbu Thirai’ including Samantha, who happens to make her first visit to Chennai after her wedding bells. Speaking on the occasion, Vishal said, “Irumbu Thirai will be definitely a real big experience to audiences in theatres. I am so much awestruck to have my mentor Action King Arjun and me sharing the screen space together. I am sure the last 30 minutes of the movie will keep everyone edge-seated, which involves the combact between me and Arjun sir. While working with Samantha, I felt really youthful and so much exhilarated.”

Samantha said, “While working with big actors like Vijay and Suriya sir, I would be more formal. But working with Vishal was more like fun. I would feel that he is so much younger to me for he is so energetic all the time.”

Vishal sparked up humorous quotient referring Robo Shankar saying that whenever he would be tensed and broken down, Robo would tickle his funny bones by mimicking many leading actors and personalities including Kala master.

Robo Shankar, RV Udhay Kumar, Delhi Ganesh, Mansoor Ali Khan, Dream Warrior Pictures SR Prabhu and many other prominent celebrities were present for the occasion.

Vishal’s father GK Reddy and younger sister Aishwarya honoured the special guests gifting them bouquets.

 
சோறு போட்ட இந்த சினிமாதுறைக்கு  நான் நல்லது செய்யவேண்டும் – விஷால்
விஷால் நடிப்பில் , விஷால் பிலிம் பேக்டரி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் இரும்புத்திரை. இத்திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று  நடைபெற்றது. இதில் நாயகன் விஷால் , நாயகி சமந்தா , இயக்குநர் P.S. மித்ரன் , இயக்குநர் சுசீந்திரன் , தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு , தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , தயாரிப்பாளர் 5ஸ்டார் கதிரேசன் , இயக்குநர் திரு , நடிகர் ரோபோ ஷங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விஷால் பேசியது :-
இரும்புத்திரை படம் விஷால் பிலிம் பேக்டரியில் தொடங்கி தாமதமாக வெளிவரும் படம். பாண்டிய நாடு தொடங்கி நிறைய படங்களை  தயாரித்துள்ளோம். இரும்புத்திரை முதலில் ஏப்ரல் 14 வெளியிட முடிவு செய்திருந்தோம் ஆனால் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடவேண்டிய சூழ்நிலை கட்டாயம் அதனால் படம் வெளி வருவதில் தாமதமானது.  R.K நகர் தேர்தலில் நான் போட்டியிட கூடாது என்று பல்வேறு நபர்கள் வேண்டிக்கொண்டதில் மித்ரனும் ஓருவன். ஏனெனில்  மீண்டும் படம் தள்ளி போய்விடும் என்று எண்ணி தேர்தலில் எனது பரிந்துரையை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று மித்ரன் வேண்டுதல் நிறைவேறியது.
நான் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடாமல் நான் சுயநலவாதியாக என்னுடையப்படம் நான் வட்டி கட்டிக்கொண்டு இருக்குறேன் இன்னும் ஒரு ஆறு மாதம் தள்ளி போனால் வட்டி அதிகரிக்கும் என்று எண்ணி ஏப்ரல் 14 வெளியிடலாம் என்று நினைத்து இருந்தால் ஆனால் இந்த தொழில்துறை நன்றாக இருக்கவேண்டும் என்ற ஓரே காரணத்தால் தான் இந்த படத்தை தள்ளி போடப்பட்டது. ஏன்னென்றால் பணத்தை நான் இன்று இழந்து விட்டால் எப்போ வேண்டும் என்றாலும் சம்பாதிக்க முடியும் ஆனால் சோறு போட்ட இந்த தொழில்துறைக்கு நான் நல்லது செய்யவேண்டும் என்ற நம்பிக்கையில் நான் என்  குழுவோடு இணைந்து தேர்தலில் போட்டியிட கட்டாயம் ஏற்பட்டது.
சொன்ன விஷியத்தை செய்துகொண்டு இருக்கிறோம். நிறைய சர்ச்சைகள் இருக்கின்றன இருந்தாலும் செயல்பாடுகளில் தான் நாங்கள்  காட்ட வேண்டும் என்று உறுதியாக இருக்கின்றோம். அதை நிறைவேற்ற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் மூலமாக அணைத்து தயாரிப்பாளர்களுக்கும் நல்லது நடக்கும். மித்திரன் இந்த கதையை எனக்கு கூறும்போது இது எனக்கு  சரியான கதையாக இருக்கும் என்று தோன்றியது துப்பறிவாளன் படத்துக்கு பின்பு இந்த படம் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன். பின்பு மிக முக்கியமாக ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் மற்றும் சாம் இவர்கள் இணைந்த அணைத்து படங்களும் வெற்றி பெற்றுள்ளன அதை போன்று இந்த படமும் வெற்றி பெறும். எடிட்டர் ரூபன், கலை இயக்குநர் உமேஷ் மற்றும் என்னுடைய நெருங்கிய நண்பர் யுவன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மொத்த டீமும் சிறப்பாக பணியாற்றி உள்ளோம்.
இந்த படத்தின் இசை வெளிட்டு விழா ஜனவரி 6 மலேசியாவில் நடைபெற உள்ளது. ஒரு நடிகனாவும் தயாரிப்பாளராகவும் அனுபவிக்க அனுபவமகா இருந்தது. இரும்புத்திரை என்னுடைய கேரியரில் மிக முக்கியமான திரைப்படம். முதல் முறையாக சமந்தாவுடன் வேலை செய்கிறேன் ஒரு அழகான நபர். சமந்தாவுடன் நடிக்கும்போது எல்லா பிரட்ச்சனைகளையும் மறந்து சந்தோஷமாக இருக்கும். படத்தில் காதல் காட்சிகள் மிக சிறப்பாக வந்துள்ளன. என்னுடைய குருநாதர் நான் முதலில் படத்திற்கு ஒப்புக்கொண்டு அப்பாவிற்கு  தொலைபேசியில் இந்த பையன நான் ஹீரோவா ஆக்கினா இவன் என்னைய வில்லனா  மாத்திடான் அப்படின்னு சொல்லிட்டார். ஏனா அவர் தான் எனக்கு உக்கம் கொடுத்து  ஹீரோவாக உருவாக்கினர் செல்லமே படத்தில். ரொம்ப நன்றி அர்ஜுன் சார். ரெண்டு பேருக்கும் கடைசில் சண்டை காட்சி ஒன்று உள்ளது அதை ரெண்டு பேரும் ரொம்ப ரசித்து எடுத்துள்ளோம். படத்தின் கடைசி 30 நிமிட காட்சிகள் மிக சிறப்பாக அமைத்துள்ளது.
விழாவில் சமந்தா பேசியது :-
இரும்பு திரை படத்தில் கதையும் , காட்சியும் உண்மையாக இருக்கும். அறிமுக இயக்குநர் மித்ரனின் இயக்கத்தில் இப்படத்தில் நடித்தது சிறப்பான அனுபவமாக இருந்தது. நான் அவருடைய இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. நான் விஜய் சார் , சூர்யா சார் போன்ற மூத்த நடிகர்களின் படங்களில் நடிக்கும் போது அவர்களுக்கு மரியாதை அளித்து நடிக்க வேண்டி இருக்கும். ஆனால் இப்படத்தில் விஷாலுடன் நடித்தது என்னை விட வயதில் இளையவர் ஒருவரோடு நடித்தது போல் இருந்தது. விஷால் இஸ் தி பெஸ்ட் என்றார் சமந்தா.

வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால்!

வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால்!

வில்லன் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டார் விஷால் – இரும்புதிரை இயக்குநர் மித்ரன்
விஷால் பிலிம் பேக்டரி சார்பாக விஷால் நடித்து தயாரிக்கும் திரைப்படம் “ இரும்புத்திரை “. இப்படத்தில் கதாநாயகனாக விஷால் , கதாநாயகியாக சமந்தா நடிக்க பவர்புல்லான வில்லன் வேடத்தில் நடிகர் அர்ஜுன் நடிக்கிறார். ஜார்ஜ் C வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் , ஆண்டனி L ரூபன் படத்தொகுப்பில் உருவாகும் இப்படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.
படத்தை இயக்குநர் மித்ரன் கூறியது :-
இரும்புத்திரை படத்தின் கதையை முதலில் நான் விஷாலிடம் சொல்லும் போது அவர் இந்த கதை பிடித்திருந்தால் விஷால் பிலிம் பேக்டரியின் மூலம் வேறு யாரையாவது கதாநயாகனாக  வைத்து இப்படத்தை தயாரிக்கலாம் என்ற முடிவில் தான் கதையை கேட்டார். நான் கதையை சொல்லி முடித்ததும் இப்படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த கதையில் நானே நடிக்கிறேன். நானே தயாரிக்கிறேன்.
நாம இந்த படத்தை பண்றோம். ஆனால் நான் வில்லன் வேடத்தில் தான் நடிப்பேன் என்றார். நான் தான் அவரிடம் பேசி அவரை ஹீரோ வேடத்தில் தான் நீங்கள் நடிக்க வேண்டும் என்றேன். அந்த அளவுக்கு படத்தில் வில்லன் வேடம் வலிமையானதாக இருக்கும். விஷால் போன்ற மிகப்பெரிய ஸ்டார் ஹீரோ எனும் போது அவருக்காக படத்தில் நிறைய மாற்றங்கள் செய்தேன்.
முதலில் நம்மை போன்ற சாதாரணமான ஒரு கதாபாத்திரமாக இருந்த நாயகனின் கதாபாத்திரத்தை விஷாலுக்காக ‘ மிலிட்டரி மேன் கதாபாத்திரமாக மாற்றினேன். இப்படம் சமூகவலைதளத்தில் நமக்கு தெரியாமல் நடக்கும் நிறைய மருமங்களை பற்றியும் அது ஏற்படுத்தும் விளைவு பற்றியும். இன்னும் நாம் அறியாத பல விஷயங்களை பற்றியும் பேசும் படமாக இருக்கும். அதை நான் மிலிட்டரி பேக் டிராபை கொண்டு உருவாக்கியுள்ளேன்.
படத்தில் சமந்தாவுக்கு முக்கியமான கதாபாத்திரம் அதை பற்றி இப்போது கூற முடியாது. நிச்சயம் வழக்கம் போல் வரும் கதாநாயகியின் காதாபாத்திரம் போல் இல்லாமல் கதையில் முக்கியமான கதாபாத்திரமாக அவருடைய கேரக்டர் இருக்கும்.
முதலில் விஷால் அவர்கள் மட்டும் படத்தில் பெரிய ஸ்டாராக இருக்கட்டும் மற்றவர்களை எல்லாம் புதியதாக நாம் தேர்ந்தெடுக்கலாம் என்று நான் முடிவெடுத்திருந்தேன். ஆனால் விஷால் சார் தான் படத்தை பெரியதாகவே நாம் பண்ணலாம். நீங்கள் சிறந்த நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களையே படத்துக்கு கொண்டு வாங்க , படம் நல்ல வரணும் அவ்வளவு தான் என்று எனக்கு கேட்டவற்றை எல்லாம் கொடுத்தார் விஷால்.
அவர் எனக்கு அளித்த ஊக்கம் மற்றும் சுதந்திரம் மிகப்பெரியது. எனக்கு விஷால் சாரிடம் பிடித்தது அவருடைய மல்டி டாஸ்கிங். ஒரே நேரத்தில் இங்கு படத்தில் நடித்துக்கொண்டிருப்பார் பின்பு நடிகர் சங்க வேலை , தயாரிப்பாளர் சங்க பஞ்சாயத்து , செக் கையெழுத்திடுதல் என ஒரு மனிதனால் இத்தனை வேலைகளை செய்ய முடியுமா என்று நம்மை வியக்க வைப்பார் விஷால் சார் என்றார் மித்ரன்.

Mohanlal-Vishal starrer Villain Movie Premiere Show Stills

Mohanlal-Vishal starrer Villain Movie Premiere Show Stills

Special screening of Mohanlal-Vishal starrer Villain happened in Chennai with many from film industry attending it.

இரு பெரும் நடிகர்கள்- மோகன் லால் , விஷால் இணைந்து நடித்த ‘வில்லன்’ மலையாள திரைப்படத்தின் பிரத்யேக காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

திரை பிரபலங்கள் பங்கேற்றனர்.

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு சந்தீப் வருவார் என்று நம்புகிறேன்!

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு சந்தீப் வருவார் என்று நம்புகிறேன்!

தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B & C ஹீரோவாக சந்தீப் வருவார் என்று நம்புகிறேன் – இயக்குநர் சுசீந்திரன் பேச்சு

அன்னை பிலிம் பேக்டரி தயாரிப்பில் , இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள நெஞ்சில்துணிவிருந்தால் ட்ரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

விழாவில் விஷால் பேசியது :-

இயக்குநர் சுசீந்திரன் திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது என்னுடைய சொந்த படத்தின் விழாக்களில் கலந்துகொள்வது போன்றது. தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்தால் கண்டிப்பாக விழாக்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று இல்லை. எனக்கு பாடல் வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது பிடிக்காது. ஆனால் இந்த விழாவில் எனக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள்.

அதனால் தான் வெளியே சில சர்ச்சைகள் இருந்தாலும் இங்கு வந்துள்ளேன். விக்ராந்த் என்னுடைய தம்பி , சந்தீப்பும் என்னுடைய தம்பி தான். ஆனால் அவர் பை-லிங்குவல் தம்பி. தமிழ் , தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் நடித்துவருகிறார். அவரை இங்கே நான் தம்பி என்று அழைப்பேன். தெலுங்கில் தம்முடு என்று அழைப்பேன். அவர் மாநகரம் திரைப்படத்தில் கலக்கியிருந்தார். அவருக்கு இரண்டு மொழிகளில் மார்கெட் இருப்பது நல்ல விஷயம். தயாரிப்பாளர்களுக்கு அது பெரிதும் உதவும். மெஹ்ரீனுடன் நான் “ தம்ப்ஸ் அப் “ விளம்பரத்தில் நடித்துள்ளேன்.

அவர் எனக்கு நல்ல நண்பர். அவர் தமிழில் முதன் முதலாக அறிமுகமாகிறார்.அவரும் வெற்றி பெற வேண்டும். இந்த திரைப்படம் இவர்கள் அனைவரையும் அடுத்த இடத்துக்கு அழைத்து செல்லும். இது என்னுடைய பட விழா போல் உள்ளது. இயக்குநர் சுசீந்திரன் , இசையமைப்பாளர் இமான் , தயாரிப்பாளர் ஆண்டனி என்று அனைவரும் இங்கு உள்ளார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் டிஜிட்டல் Platformல் படத்தை வெளியிடுவதன் மூலம் பணம் சம்பாத்திக்க முடியும் என்பதை தெரிந்துகொண்டு அவர்கள் தங்களுடைய படத்தை டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட வேண்டும். சாட்டிலைட் உரிமையை இன்று அதிகமாக விற்பனையாவது இல்லை.

அதனால் டிஜிட்டலில் இன்று படத்தை வெளியிட தயாராக உள்ள நிறுவனங்களை தயாரிப்பாளர் சங்கத்தின் மூலம் அணுகி அதை பற்றிய தகவலை சேகரித்து பின் வெளியிடலாம். துப்பறிவாளன் மற்றும் மகளிர் மட்டும் டிஜிட்டலில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதை போல் தயாரிப்பாளர்கள் அனைவரும் தயாரிப்பாளர் சங்கத்தை அனுகி தங்களுடைய திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை விற்பனை செய்து லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றார் விஷால்.

விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசியது :-

நான் மகான் அல்ல திரைப்படம் எப்படி வெற்றிப்படமாக அமைந்ததோ அதை போலவே இந்த திரைப்படமும் வெற்றி படமாக அமையும். பாண்டிய நாடு போலவே இந்த படத்திலும் அனைத்து பாடல்களும் ஆல்பமாக ஹிட்டாகியுள்ளது. இமான் அண்ணனோடு நான் தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.

நாயகன் சந்தீப் கிஷன் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார். அவரோடு நான் ஜீவா திரைப்படத்திலேயே இணைந்திருக்க வேண்டும். ஜீவா திரைப்படத்தை முதலில் தமிழ் மற்றும் தெலுங்கில் Bi-lingual படமாக எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து தமிழில் விஷ்ணு விஷாலை வைத்தும் தெலுங்கில் சந்தீப்பை வைத்தும் எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆரம்பித்தேன். ஆனால் அதுக்கு கடுமையான உழைப்பு தேவைப்பட்டது.

இரண்டு நாள் படபிடிப்புக்கு பின் தான் இரண்டு மொழிகளிலும் வெவ்வேறு ஹீரோவை வைத்து படமெடுப்பது கடினம் என்பது எனக்கு தெரிந்தது. சில காலத்துக்கு பிறகு சந்தீப்புடன் இணைந்துள்ளேன். தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பிறகு பி மற்றும் சி செண்டர் நாயகனாக சந்தீப் வருவார். ஒரு நடிகன் டயலாக்கை எளிதாக பேசிவிடலாம். ஆனால் அவர் நடிப்பின் மூலமாக அனைவரையும் ஹோல்ட் செய்கிறார். சந்தீப் என்ற மிக சிறந்த நடிகனை இந்த படத்தில் நான் பார்த்தேன். அவருடைய நடிப்புக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும் என்றார் இயக்குநர் சுசீந்திரன்.

 

ஸ்ட்ரைக் வாபஸ் – தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு!

ஸ்ட்ரைக் வாபஸ் –  தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு!

மே 30 நடக்கவிருந்த ஸ்ட்ரைக் வாபஸ் – தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அறிவிப்பு

நாம் பயந்தது போல ஜி.எஸ்.டி வரி தற்போது 28% அறிவிக்கவுள்ளார்கள். நாங்கள் எந்தவொரு அரசாங்கத்துக்கும் எதிரானவர்கள் அல்ல. தமிழ் திரையுலகம் நன்றாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் எங்களுக்கு வாக்களித்து தேர்வு செய்துள்ளீர்கள்.

தணிக்கை முடிந்து வரிச் சலுகை சான்றிதழ் வாங்கி ஜுனில் வெளியாக நிறைய படங்கள் தயாராக உள்ளது. ஜுலையில் வெளியிட்டால் ஜி.எஸ்.டி வரிச் சேர்ந்து வெளியிடும் சூழல் ஏற்படும் என்றார்கள். தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் செல்வமணியும் இது தொடர்பாக பேசினார்கள். மேலும், செல்வமணி சாரும் எங்களுடைய வேலை நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினார். அதற்கு நன்றி.

க்யூப் பிரச்சினை

க்யூப் நிறுவனம் ஒரு படத்துக்கு 20 ஆயிரம் நிர்ணயம் செய்து முறையாக சம்பாதிக்கிறார்கள். ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கு 20 ஆயிரம் வாங்குகிறார்கள். இதற்கு ஹைதராபாத்திலிருந்து ஒரு நிறுவனம் 5 ஆயிரத்துக்குச் செய்து தருகிறோம் என்கிறார்கள். அதுவும் ஒரு படத்தின் முழுமையான ஓட்டத்துக்கும் 5 ஆயிரம் ரூபாய் தான். 2K, 4K, Barco, Sony போன்ற எந்தவொரு format என்றாலும் 5 ஆயிரம் தான் என்கிறார்கள். வாரத்துக்கு பணம் கட்டும் முறையில் 2500 தான் என்றார்கள். அதன்படி பார்த்தால் திரையரங்கில் ஒரு காட்சிக்கு 150 ரூபாய் தான் ஆகும்.

ஆகஸ்ட் மாத்த்துக்குள் 5 ஆயிரம் கட்டணத்துக்குள் செல்லாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம் தயாரிப்பாளருக்கு நிறைய பணம்மிச்சமாகும். சிறு தயாரிப்பாளர்களுக்கு இதில் பாதி தான் 2500 ரூபாய் மட்டுமே.

க்யூப் நிறுவனத்தை அழைத்து 5 ஆயிரம் ரூபாய்க்கு தருகிறோம் என்கிறார்கள் என பேசினோம். அப்போது நாங்கள் சரியான பணத்துக்குத் தான் செய்து கொடுக்கிறோம். 5 ஆயிரம் ரூபாய்க்கு வேண்டுமானால் 5 தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுக்கு மட்டும் செய்து கொடுக்கிறோம் என்றார்கள். அப்போது பிரகாஷ்ராஜ் சார் “என்ன லஞ்சம் கொடுக்கிறாயா” என கேட்டார். அப்போது போனவர் தான் பிறகு வரவே இல்லை. இப்பிரச்சினை நான் கையில் எடுத்து அதற்கான வேலையில் ஈடுபட்டு வருகிறேன்.

கேபிள் தொலைக்காட்சி

பாபா கேபிள் விஷனில் ஒரு மாத்த்துக்கு 20 லட்ச ரூபாய் என ஒப்பந்தம் போட்டுள்ளார்கள். நம்முடைய உழைப்பை போட்டு அவர்கள் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்களை அழைத்து பேசிய போது, எங்களிடம் பட உரிமை இருக்கிறது என்றார்கள். அவரிடம் உங்களுக்கு யார் படம் போடுவதற்கு உரிமை கொடுத்த்து எனக் கேட்டால் பதில் இல்லை . அவர்களை வெளியே அனுப்பிவிட்டோம். அடுத்து வந்தவர் 60 லட்ச ரூபாய் தருகிறேன் என்றார். அவருக்கும் முடியாது என கூறிவிட்டோம். தற்போது ஒன்றரை கோடி வரை கேட்கிறார்கள். அந்த ஒன்றரை கோடியே குறைவு என்று ஞானவேல்ராஜா பேசி அதற்கான பணிகளை பேசி வருகிறார். வெறும் பாடல்கள், காட்சிகள் மட்டும் போடுவதற்கு ஒன்றரை கோடி தருகிறேன் என சொல்கிறார்கள்.

1100 கேபிள் தொலைக்காட்சிக்கு ஒரு முறை போடுவதற்கு ஒரு சிறு திரைப்படம் திரையிடக் கொடுக்கிறேன் என்று வைத்துக் கொள்வோம்.அப்படத்தின் கதைக்கு ஏற்றவாறு 42 லட்சம் வரை தருகிறோம் என்கிறார்கள். இன்னும் தொலைக்காட்சி உரிம்ம், பாடல் உரிம்ம் உள்ளிட்ட எதுவுமே விற்காமல் 42 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்பது எத்தனை தயாரிப்பாளருக்கு தெரியும்.

தேர்தலுக்கு முன்பு பல்வேறு அணிகளாக இருந்தோம். ஆனால், தற்போது அப்படியில்லை. அனைவருமே ஒரே அணி தான். தயாரிப்பாளர்கள் அனைவரும் ஜெயிக்க வேண்டும். அப்படி ஜெயித்தால் மட்டுமே திரையுலகம் ஜெயிக்கும். கேபிள் தொலைக்காட்சி தொடர்பாக 32 மாவட்டங்களில் அலுவலகம் போடுகிறோம். அதன் மூலமாக ஒன்றரை கோடி பணம் சம்பாதித்து அது சிறு தயாரிப்பாளர்களுக்கு போய் சேரும். அதற்கு 2 மாதங்கள் நேரம் வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கத்துக்கு என தனியாக தொலைக்காட்சி ஆரம்பிக்கலாமா என்ற எண்ணமுள்ளது. தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்துதொலைக்காட்சி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என்றேன்.

திருட்டு விசிடிக்கு என தனியாக 20 பேர் கொண்ட குழு அமைக்கவுள்ளோம்.இன்சூரன்ஸ் தொடர்பான முறைகேட்டை ஆராய்ந்து வருகிறோம்.

ஜி.எஸ்.டி வரி வந்தவுடன் ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும், நடிகருக்கும் தனது படத்தின் வியாபாரம் என்னவாகிறது என்பது தெரிந்துவிடும். இனிமேல் தவறாக போய் பணம் திரும்ப வேண்டும் என கேட்க முடியாது. இனிமேல் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஒவ்வொரு படத்தின் வசூல் என்ன என்பது தெரியவரும். மல்டிப்ளக்ஸ் மட்டுமன்றி அனைத்து திரையரங்குகளுக்கும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை என்பது வைக்க வேண்டும். எத்தனை பேர் படம் பார்க்கிறார்கள் என்பது அனைவருக்குமே தெரியவரும்.

ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு 120 ரூபாய், ஜி.எஸ்.டி வந்தவுடன் 153 ரூபாய் வரும், இணையத்தில் டிக்கெட் புக் செய்தால் அவர்கள் 30 ரூபாய் ஒரு டிக்கெட்டுக்கு வாங்குகிறார்கள். ஒரு ரசிகர் படம் பார்ப்பதற்கு அவர்களுக்கு பணம் போகீறது. ஆகவே தயாரிப்பாளர் சங்கமே தனியாக இணையம் தொடங்கும். அப்பணம் தயாரிப்பாளருக்கு வருவதில்லை. நமது பட்த்தை திரையரங்கில் போடுவதற்கு வேறு ஒருத்தர் ஒரு டிக்கெட்டுக்கு 30 ரூபாய் சம்பாதிக்கிறார்கள். ஆகவே தயாரிப்பாளர் சங்கத்தின் இணையத்தில் அது 10 ரூபாயாக இருக்கும். அதில் 2 ரூபாய் தயாரிப்பாளர் நன்மைக்கு கொடுக்கப்படும்.

எங்களுக்கு க்யூப், கேபிள் உள்ளிட்ட எதிலிருந்தும் கமிஷனே வேண்டாம். இந்த பதவியை வைத்து சூப்பர் ஸ்டார் பண்ண விரும்பவில்லை.

எங்களுடைய அழைப்பை ஏற்று சில திரைப்படங்கள் தங்களுடைய வெளியீட்டை தள்ளி வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் நன்றியும், மன்னிப்பும் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒரு படத்தின் தயாரிப்பு நிலையில் இருக்கும் போதே, எப்போது வெளியிடலாம் என்று முடிவு செய்கிறீர்களோ அதை தயாரிப்பாளர் சங்கத்திடம் தெரிவியுங்கள். அதற்கான ஒரு மொபைல் ஆப் தயாராகி வருகிறது. இணையம், மொபைல் ஆப் ஆகியவை தயாரானவுடன் இனிமேல் படத்தலைப்பு பிரச்சனைகள் அனைத்தையுமே ஒரே க்ளிக்கில் முடித்துவிடலாம். படத்தயாரிப்பு மற்றும் படப்பிடிப்பில் பிரச்சினையும் பதிவு செய்தீர்கள் என்றால் நாங்களே உங்களைத் தொடர்பு கொள்வோம். தொலைக்காட்சி, திரையரங்கம், இசை உள்ளிட்ட எந்தவொரு உரிமையும் விற்றீர்கள் என்றால் அதையும் இணையத்தில் தெரிவியுங்கள். ஏனென்றால் நாங்கள் பண்ற வியாபாரம் உங்களுக்கு தெரியும். நீங்கள் செய்வது எனக்கு தெரியும்.

ஒரு தயாரிப்பாளர் சங்கத் தலைவராக விஷாலை தேர்ந்தெடுத்துள்ளோம். 1 மாதமாகிவிட்ட்து. இன்னும் 23 மாதங்கள் இருக்கிறது. நவம்பருக்குள் அனைத்து பிரச்சினைகளும் சரிசெய்யப்படும்.

தயாரிப்பாளர்கள் மட்டுமே உங்களுக்கு படத்துக்கு ராஜா. தயவு செய்து அதை மனதில் செய்யுங்கள். என்ன பிரச்சினை என்றாலும் தயாரிப்பாளர் சங்கத்துக்கு வாருங்கள். உங்களுக்கான சரியான தொகை கிடைக்க வேண்டும் என்று தான் உழைத்து வருகிறோம். நம்முடைய படத்தைதவறாக உபயோகித்து வருகிறார்கள். தயாரிப்பாளர் பணம் அவர்களுக்கு தான் கிடைக்க வேண்டும், வேறு யாரும் ஆட்டையப் போடக் கூடாது. பஞ்சாயத்து என்பதற்கே இங்கு இடமில்லை. வெளிப்படைத்தன்மை அனைத்து விஷயங்களிலும் கடைப்பிடிக்கப்படும்.

பழைய சங்கம் போல இங்கு கோஷம் போட எல்லாம் முடியாது. இந்த வேலைநிறுத்த்த்தை வாபஸ் பெறுகிறோம். ஏனென்றால் செல்வமணி சார் வந்து பேசி முடிவு செய்தார். அனைவரும் சங்கத்துக்கு வாருங்கள், நல்லது மட்டுமே செய்ய காத்திருக்கிறோம்.

நடிகர் சங்க கட்டிடம் பத்மஸ்ரீ கமலஹாசனும், பத்மவிபூஷன் ரஜினிகாந்த் அவர்களும் அடிக்கல் நாட்டி வாழ்த்தினர்!

நடிகர் சங்க கட்டிடம் பத்மஸ்ரீ கமலஹாசனும், பத்மவிபூஷன் ரஜினிகாந்த் அவர்களும் அடிக்கல் நாட்டி வாழ்த்தினர்!

தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிடத்தின் அடிக்கல் நாட்டு விழா 31.03.2017 அன்று காலை 9.50மணியளவில் சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. இவ்விழாவிற்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர்,பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர்கள் கருணாஸ் மற்றும் பொன்வண்ணன் அவர்கள் கலந்து கொண்டு விழாவைத் தொடக்கி வைத்தனர். பொருளாளர் கார்த்தி இராஜஸ்தானிலிருந்து அலைபேசி மூலமாக தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

உலக நாயகனும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் அறங்காவலரும்மான பத்மஸ்ரீ கமலஹாசனும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் அடிக்கல் நாட்டி கட்டிடத்தின் பலகையை திறந்து வைத்தனர்.திரு.கமலஹாசன் பேசுகையில், இந்தக் கட்டிடம் நல்ல முறையில் கட்டி முடித்து குறித்த தேதியில் திறக்கப்பட தனது வாழ்த்துக்களையும், ஆசியையும் நாசருக்கும், விஷாலுக்கும் மற்றும் கட்டிட குழுவிற்கும் தெரிவித்தார். மேலும், இக்குழுவினர் திறம்பட செயல்படுவார்கள் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். திரு. ரஜினிகாந்த் தனது வாழ்த்துக்களையும் நல்லாசிகளையும் அனைவருக்கும் தெரிவித்தார்.

இருவரும் தங்களது திருக்கரங்களால் செங்கலை எடுத்து வைத்து வாழ்த்தினர்.

பொதுச்செயலாளர் விஷால் பேசுகையில், இக்கட்டிடத்தின் கட்டி முடிப்பதே தனது கனவென்றும்,அதன்பின் தான் தனக்கு திருமணம் என்றும் சபதம் எடுத்தார்.

தலைவர் நாசர் பேசும்பொழுது, எல்லோருடைய ஆசியோடு இக்கட்டிட பணியை சிறப்பாக முடிப்போம் என்று உறுதி அளித்தார். மேலும், இம்மாதம் நடக்கவிருக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முழு ஆதரவும், ஒத்துழைப்பும் உண்டு என்று கூறினார்.

துணைத் தலைவர் கருணாஸ், இக்கட்டிடத்தின் மூலமாக வரும் நிதி நலிந்த கலைஞர்களுக்கும், நடிகர் நடிகைகளுக்கும், உறுப்பினர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகள், மருத்துவ செலவுகள், கல்வி செலவு உட்பட அனைத்து செலவுகளும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமே செலவழிக்கப்படும் என்று கூறினார்.

 

இக்கட்டிடத்தின் பணிக்காக விஷாலும், கார்த்தியும் சேர்ந்து 10 கோடி தங்கள் சொந்தப் பணத்தில் நிதி உதவி அளிப்பதாக தெரிவித்தனர்.

 

மேலும் இக்கட்டிடம் செப்டம்பர் 2௦18 – ஆம் ஆண்டு முழுமையாக முடிவடையும் என்று உறுதி அளித்துள்ளனர்.

இதில் செயற்குழு உறுப்பினர்கள் ராஜேஷ், ஜூனியர் பாலையா, பூச்சி முருகன், பசுபதி, ஸ்ரீமன், S.பிரேம்குமார், A.விக்னேஷ்,

M.A.பிரகாஷ், அயூப்கான், M.பாலதண்டபாணி, A.L.உதயா, ரமணா, S.D.நந்தா, T.P.கஜேந்திரன், ‘தளபதி’ தினேஷ், திருமதி. S.குட்டி பத்மினி, செல்வி.கோவை சரளா, திருமதி. C.சிவகாமி, திருமதி.சங்கீதா, திருமதி.சோனியா

நியமனகுழு உறுப்பினர்கள்

L.லலிதாகுமாரி, ஹேமசந்திரன், B.அஜெய்ரத்னம், P.A.காஜா மொய்தீன், M.மருதுபாண்டியன், S.M.காளிமுத்து, V.K.வாசுதேவன்,

மனோபாலா, சரவணன், ஜெரால்டு மில்டன், G.காமராஜ், S.கலிலுல்லா, M.நாசர் (தலைவர்), விஷால் (பொதுச் செயலாளர்),

 

பொன்வண்ணன்       –      கருணாஸ் (துணைத் தலைவர்கள்), கமல்ஹாசன், ஐசரிK.கணேஷ், ராஜேஷ், பூச்சிமுருகன்,

திருமதி. எஸ்.குட்டி பத்மினி

சிவகுமார்,மோகன்,சத்யராஜ்,சச்சு அம்மா,

பத்ம ஸ்ரீ கமலஹாசன், பத்மவிபூஷன்-ரஜினிகாந்த், விக்ரம், சூரியா,

இயக்குநனர் S.P.முத்துராமன், வரலட்சுமி, சுரேஷ், கமில நாசர், சிவகர்த்திகேயன், சிபிராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், சிம்பு,

ஜெயம் ரவி,பிரகாஷ்ராஜ், விஜயகுமார்,கதிர்,சத்யராஜ் யைஜெய்திமால,y.g.மகேந்திரன்,சிவகுமார்,ஷீலா, லதா, தயாரிப்பாளர்G.K.ரெட்டி, கார்த்திக், கெளதம்கார்த்திக், பூர்ணிமா, பாக்யராஜ், சாந்தனு, சரோஜாதேவி, ஹரி, பிரித்த ஹரி,

கேமரா பிரியன்,பரத்,மீனா,தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன்,விச்சு,சுந்தர்.C,சச்சு அம்மா,மைக் மோகன்,

கனா உலகநாதன், ஜீவன்,லொள்ளு சபை ஜீவா மற்றும் சாமிநாதன்,சாம்ஸ்,ரமாக்ரிஷ்ணன்,மயில்சாமி,கலையரசன்,பொண்ட மணி,தன்ஷிகா,மகேந்திரன்,ஆன்சன்,வென்னிலாடை நிருமலா,பவன்,செந்தில்,ஜெயமாலினி,யோகிபாபு,மன்சூர்அலி காஹன்,லிஸ்ஸி,காயத்திரி ரகுராம்,ஆரியன்,அழகு,M.S.பாஸ்கர்,பார்த்திபன்,M.N.ராஜம், தயாரிப்பாளர் ராஜு மகாலிங்கம்,S.R.பிரகாஷ் பாபு,S.R.பிரபு,K.E.ஞானவேல்,அபினேஷ்,நடிகர் லொள்ளு சபை மனோகர்,விஜய் அன்டனி,சரத் பாபு,அதாவ் கண்ணதாசன்,ராஜ்கிரண்,ஆனத்ராஜ்,பிந்துமாதவி,உமா ரியாஸ்காஹன்,ஜனகராஜ்,ஜீவா,ஹரிஷ்,வாணிஸ்ரீ,தயாரிப்பாளர் 2D ராஜா,லிவின்ஸ்டன்,அருண்விஜய்,படியராஜன்,தயாரிப்பாளர் A.L.அழகப்பன்,

நடிகர் செந்தில்,மனோஜ் பாரதிராஜா,பாலா சரவணன்,மிஸ்கின்,சோனா,இயக்குனர் k.s.ரவிக்குமார்,நடிகை ஜெய சித்ரா,நடிகர் அசோக்,ஹரி குமார்,மிருதள,இயக்குனர் R.K.செல்வமணி,சஞ்சீவ்,சாக்க்ஷிஅகர்வால்,துளசி,நந்திதா,காஞ்சனா,R.K.சுரேஷ்,தேவயானி, ராஜா குமரன்,சோபி மாஸ்டர் மற்றும் அவருடைய மனைவி,எடிட்டர் மோகன்,இயக்குனர் P.வாசு,சக்தி வாசு,ரோகினி,விவேக்,சஞ்சனா சிங்,ஜகுவார்தங்கம்,சிம்ரன்,  ஆர்த்தி,தம்பிராமையா,கதிர்,ஆடுகளம் நரேன்,ஷிரிஷ் மெட்ரோ,அம்பிகா,நடராஜன்.முனிஷ்காந்த்,கிருஷ்ணா,கிரீஸ்,ரேவதி,சாரமில,மற்றும் பலர் விழாவில் கலந்துகொண்டனர்

 

மற்றும் SOUTH INDIAN CHAMBER,STUNT UNION,DANCE UNION,DRIVERS UNION,FEFSI UNION,PHOTOGRAPHER UNION,CINEMATOGRAPHER UNION,EDITOR UNION,PRO UNION,CINEMA PATHIRIKAIYALAR UNION,MUSIC UNION &OTHER 24 CRAFT’S