Tag Archives: விவேக்

30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு!

30 லட்சம் மாணவர்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகை – எழுமின் தயாரிப்பாளர் அறிவிப்பு!
ஒரு படம் தயாரிப்பாளருக்கும் கதாநாயகனுக்கும் எதைத் தந்தது என்பதை விட அந்தப்படம் சமூகத்திற்கு என்ன தந்தது என்பது தான் முக்கியம். இதைக் கவனத்தில் கொண்டு உருவாகி இருக்கும் படம் தான் ‘எழுமின்’. வையம் மீடியாஸ் நிறுவனம் சார்பில் வி.பி.விஜி தயாரித்து இயக்கி இருக்கும் இப்படத்திற்கு தோள் கொடுத்திருக்கிறார் நடிகர் விவேக். மேலும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம் போன்ற நடிகர்களோடு சிறுவர் சிறுமிகளும் இப்படத்தின் பாகமாக இருக்கிறார்கள். அக்டோபர் 18ம் தேதி வெள்ளித்திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
இதில் நடிகர் விவேக், இயக்குனர் வி.பி.விஜி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, கணேஷ் சந்திரசேகர், நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம், சிறுவர்கள் பிரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிர்த்திகா, தீபிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.
நடிகர் விவேக் பேசும்போது, ‘அக்டோபர் 18-ம் தேதி என்றதும் எல்லோர் முகத்திலும் ஒரு பரவசம் தெரிந்தது. ஏனென்றால் அன்று புரட்டாசி முடிகிறது. எழுமின் அன்று தான் ரிலீஸ். இந்தப்படத்தைப் பற்றி ஏற்கெனவே நிறைய பேசிவிட்டோம். இன்னைக்கு ஹீரோவை காட்டிலும் வில்லனுக்கு நிறைய பேர் கிடைக்கிறது. அதுபோல் இப்படத்தின் வில்லன் ரிஷிக்கும் பேர் கிடைக்கும். ஒவ்வொரு படத்திற்கும் வணிகம் லாபம் என பல நோக்கம் இருக்கும். இந்தப்படத்தில் மாணவர்களுக்கு ஒரு நல்ல விஷயத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதைச் செய்து இருக்கிறார்கள். இந்தப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருமான விஜி, டெக்னாலஜி விஷயங்களை மிக வேகமாக கற்றுக்கொள்ளும் திறன் உள்ளவர். இந்தப்படத்தின் உண்மையான ஹீரோ யார் என்றால் இந்த படத்தில் நடித்த மாணவர்கள் தான். அவர்களோடு நான் நடித்திருப்பது மகிழ்ச்சி. மேலும் இப்படத்தில் மிக முக்கியமானவர்கள் இசை அமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், ஸ்டண்ட் மாஸ்டர் கேமராமேன் இவர்கள் தான். பின்னணி இசைக்காக மட்டும் ஸ்ரீகாந்த் தேவாவை அணுகினோம். அவர் பெரிய மனதோடு சம்மதித்தார்.
18-ம் தேதி ‘வடசென்னை’, ‘சண்டக்கோழி’ என இரண்டு பெரிய படங்கள் வருகிறது. இவர்களோடு நாங்களும் வருகிறோம். இந்தப்படத்தை பார்க்க மாணவர்கள் வரவேண்டும். அப்படி தியேட்டருக்கு வரும் மாணவர்களுக்கு தயாரிப்பாளர் எதாவது சலுகை அளிக்க வேண்டும்” என்ற கோரிக்கையோடு பேசி முடித்தார்.
அதன்பின் இயக்குனரும் தயாரிப்பாளருமான வி.பி.விஜி பேசும்போது, ‘விவேக் சாரின் கோரிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன். மாணவர்கள் இப்படத்தை பார்ப்பதற்காக சலுகை வழங்க இருக்கிறோம். அதாவது 30 லட்சம் மாணவர்கள் தியேட்டரில் படம் பார்ப்பதற்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்ய இருக்கிறோம். நாங்கள் தரும் டோக்கனை வைத்து தியேட்டரில் மாணவர்கள் கொடுத்தால், அவர்களுக்கு டிக்கெட் விலையில் ரூ.15 தள்ளுபடி செய்து கொடுக்கப்படும்’ என்றார்.
மேலும் ஒரு படம் இயக்க வேண்டும். அது பெற்றோர்களுக்கான படமாக இருக்க வேண்டும், மாணவர்களுக்கான படமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இந்தப்படத்தில் பெரிய தூண் விவேக் சார். மற்றும் தேவயானி, அழகம்பெருமாள், பிரேம், மற்றும் ஆறு மாணவர்கள் நடித்து இருக்கிறார்கள். மாணவர்கள் வெறும் படிப்பை மட்டும் கற்றுக் கொண்டால் போதாது என்று நினைத்தேன். அதுதான் உண்மையும் கூட. இந்தப் படத்திற்காக நான் நிறைய பேருக்கு நன்றி சொல்ல வேண்டும். எக்சிகியூட்டிவ் புரொடியூசர் மற்றும் கேமராமேன் இசை அமைப்பாளர், முக்கியமாக ஸ்டண்ட் மாஸ்டர் அனைவரின் உழைப்பும் அபாரமானது. இன்னும் படத்தைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆனால் நான் பேசாமல் படம் பேசினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.
விழாவில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகர், பின்னணி இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் ரிஷி, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஷ்வரன், கலை இயக்குனர் ராம் ஆகியோர் பேசினார்கள்.

வையம் மீடியாஸ் பெருமையுடன் வழங்கும் எழுமின்!

வையம் மீடியாஸ் பெருமையுடன் வழங்கும் எழுமின்!

சமீபத்தில் வெளிவந்த உரு படத்தின் தயாரிப்பாளர் V.P.விஜி, ‘எழுமின்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

தற்காப்பு கலைகளை தங்களது விருப்பமாக தேர்ந்தெடுத்து அதில் சாதிக்க நினைக்கும் ஆறு சிறுவர்களை சுற்றியே ‘எழுமின்’ படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

விஷ்வநாதனின் மகன் அர்ஜூனும் ஐந்து சிறுவர்களும் நெருக்கமான நண்பர்களாக இருக்கிறார்கள். சிறுவர்கள் ஒன்றாக அகாடமியில் கராத்தே, குங்ஃபூ, பாக்ஸிங் மற்றும் சிலம்பம் போன்ற தற்காப்பு கலைகளை பயில்கிறார்கள். வசதியில்லாத இந்த ஐந்து சிறுவர்களுக்கு அவர்களது பெற்றோர்களே தடையாக இருக்கையில், விஷ்வநாதனும் அவரது மனைவியும் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். விஷ்வநாதனாக விவேக்கும் அவரது மனைவியாக தேவயானியும் நடித்திருக்கிறார்கள்.

இந்த ஐந்து சிறுவர்களின் வாழ்க்கையில் ஏற்படும் தடைகளும், வேறு சில எதிர்பாராத சூழ்நிலைகளையும் தாண்டி சிறுவர்கள் எப்படி சாதிக்கிறார்கள் என்பது புதிய கோணத்தில் சொல்லப்பட்டிருக்கும் திரைப்படம் எழுமின்.

ஐந்து சிறுவர்களும் படத்தில் இடம்பெற்ற கடுமையான சண்டை காட்சிகளில் தத்ரூபமாக நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் நிஜ வாழ்விலும் மாநில மற்றும் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் நடிகையர்

‘சின்னக் கலைவாணர்’ விவேக், தேவயானி, ப்ரவீன், ஸ்ரீஜித், வினித், சுகேஷ், கிருத்திகா, தீபிகா, அழகம் பெருமாள், பிரேம்

தொழில் நுட்ப கலைஞர்கள்

ஒளிப்பதிவு                     : கோபி ஜெகதீஸ்வரன்

படத்தொகுப்பு                   : கார்த்திக் ராம்

இசை                            : கணேஷ் சந்திரசேகர்

பாடல்கள்                       : பா. விஜய், மோகன் ராஜ், தமிழணங்கு

சண்டைப்பயிற்சி               : ‘மிராக்கிள்’ மைக்கேல் ராஜ்

கலை                            : S.ராம்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

V.P.விஜி

தயாரிப்பு

வையம் மீடியாஸ்

devayani-1

devayani-2

devayani-3

director-v-p-viji-8

director-v-p-viji-9

director-v-p-viji-10

director-v-p-viji-11

ezhumin-movie-stills-1

ezhumin-movie-stills-4

ezhumin-movie-stills-13

ezhumin-movie-stills-20

ezhumin-movie-stills-21

ezhumin-movie-stills-22

ezhumin-movie-stills-23

வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி – பத்திரிக்கையாளர் சந்திப்பு

வேலையில்லா பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகம் வெற்றி – பத்திரிக்கையாளர் சந்திப்பு

கலைப்புலி எஸ் தானு அவர்களின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் சேர்ந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – 2.

வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் தனுஷ், கஜோல்,அமலா பால், சமுத்திரக்கனி மற்றும்  விவேக் நடித்துள்ளனர். கடந்த 11 ஆம் தேதி வெளியான இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வசூல் சாதனை படைத்து வருகிறது. மேலும் இந்த படத்தின் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெர்ஷன்கள் இம்மாதம் 18 ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் நடிகர் தனுஷ், விவேக், இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்துடன் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்களும் கலந்து கொண்டார்.

படத்தின் கதாநாயகன் தனுஷ் பேசிய போது,

” படத்தின் கதையை இயக்குனரிடம் கொடுக்கும் பொழுதே வி.ஐ.பி-யின் முதல் பாகம் அளவிற்கு இருக்காது என்பதை சொல்லியே தான் கொடுத்தேன். இருப்பினும் படத்தின் இந்த மிகப்பெரிய வெற்றி மிகுந்த சந்தோஷத்தை தருகிறது. படத்திலிருக்கும் ஸ்ட்ராங்க் ஆன கதையே படம் வெற்றி பெற காரணம். பாஸிட்டிவிட்டிக்கு என்றைக்குமே ஒரு எனர்ஜி இருக்கும், அதுதான் இந்தப் படத்தில் ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. ஒரு தாய் இல்லாத வீட்டில் ஒரு தந்தை தாயகவும் மகனுக்கு நல்ல தோழனாகவும் இருக்க வேண்டும், அதே போல படத்தின் இறுதியில் வில்லியாக வரும் பெண்  தோற்பது தான் வழக்கமான கிளைமாக்ஸ், ஆனால் அப்படி இருக்கக் கூடாது ஆண், பெண் இருவருமே சமம் என்று கருத்தினை வலியுறுத்திதான் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வி.ஐ.பி-2 படத்திற்கு வட இந்தியாவில் 1600 தியேட்டர்கள் புக் ஆகியுள்ளது. கண்டிப்பாக ஹிந்தியிலும் நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். வி.ஐ.பி-3 ஆம் பாகமும் கண்டிப்பாக உருவாகும், கண்டிப்பாக அந்தப் படம் இதை விட நல்ல வரவேற்பை பெறும்,”என்று கூறினார்.

நடிகர் விவேக் அவர்கள்,

“தானு சாரிடம் ஒரு இன்டியூஷன் இருக்கிறது. ஏனெனில் வளர்ந்து  வருகின்ற கதாநாயகனாக இருந்த ரஜினிகாந்த் அவர்களை அப்போதே அவர் சூப்பர்ஸ்டார் என்று இனம் கண்டவர். இப்போது அவருடைய ஆசிர்வாதமான கரங்கள் தனுஷிற்கு கிடைத்துள்ளது. மேலும் டாப் 10 ஹீரோக்களில் தனுஷ் அவர்கள் இருப்பது பெருமையாக உள்ளது. வைரமுத்து அவர்கள் ஒரு பாடலில் சொன்னது போல் “சிங்கத்தின் பாலாக இருந்தால் அதை தங்க கிண்ணத்தில் வைத்து கொடுக்க வேண்டும்”, அதே போல் தனுஷ் சிங்கத்தின் பால், தானு ஒரு தங்கக் கிண்ணம்.” என்று கூறினார். இறுதியாக பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்கும் நிறுவனங்களுக்கு, நீங்கள் எடுக்கும் படங்களில் வெற்றியடையும் படங்களின் வியாபரத்தின் ஒரு சிறு பகுதியை கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த்,

“எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, படம் வெற்றியடைந்துள்ளது. தானு சாருக்கு நன்றி, என்னை மகள் போல் பார்த்துக்கொண்டார். பொதுவாகவே சீக்வல் படங்கள் எடுப்பதில் பெரிய சவால் இருக்கும் அதைத் தாண்டி நான் இயக்கிய படம் வெற்றி அடைந்திருப்பது பெரிய மகிழ்ச்சி. தானு சார் பாக்ஸ் ஆபிஸ் விவரம் பற்றி சொன்னது எனக்கு நான் இயக்கிய படமா என்று ஆச்சரியமாக இருந்தது. வாய்ப்பு கிடைத்தால் வி.ஜ.பி-3 ஆம் பாக்த்தையும் இயக்குவேன். ”

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள்,

“இந்த நாளிது, இனிய நாளிது. வி.ஐ.பி படம் திரையிடப்பட்டு வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் இருந்து அழைத்த நண்பர் டாப் 10 ஹீரோ லிஸ்ட்டில் வி.ஐ.பி-2 படத்தின் மூலமாக தனுஷூம் இடம் பிடித்துள்ளார் என்று கூறினார்.வி.ஐ.பி-2 தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் வெளிநாட்டிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.” என்று அவர் கூறினார். பின் வெளிநாட்டிலும், தமிழ் நாட்டிலும் (மாவட்ட வாரியாக) வி.ஐ.பி படத்தின் வசூல் பற்றிய புள்ளி விவரங்களை கூறினார். இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகவும் பலமாக இருந்த நடிகர் தனுஷ்,இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் விவேக் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

அவ்னி மூவிஸ் சுந்தர் .c  வழங்கும் ” மீசைய முறுக்கு ” இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.c ,
இப்படத்தில் கதாநாயகனாக நடித்து , இசையமைத்து , கதை – திரைக்கதை – வசனம் – பாடல்களை எழுதி இயக்கும் ஹிப்ஹாப் தமிழா , நாயகிகள்  ஆத்மீகா , மனிஷா , நடிகர் விக்னேஷ் காந்த் , ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார் , ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன் , படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
விழாவில்  தயாரிப்பாளர் சுந்தர்.C பேசியது :- 
 
” கிளப்புல மப்புல ”  பாடல் வெளியான நேரத்தில் நான் ஹிப்ஹாப் தமிழா ஆதியை சந்தித்தேன் அவர் ஏதோ பணக்கார குடும்பத்தை சேர்ந்தர்வர் என்று நினைத்திருந்தேன். ஆனால் பழைய ஜீன்ஸ் , டீ- ஷார்ட் போட்டுக்கொண்டு என்னை சந்திக்க வந்தார் ஆதி. ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டும்  என்று கூறினேன். முதலில் ஆம்பள படத்தில் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்களை நியமிக்கலாம் என்று இருந்தேன். ஆதி இசையமைத்த ” பழகிக்கலாம் ” பாடலை கேட்டேன் நன்றாக இருந்தது. அதன் பின் ஆதி நான் தான் அனைத்து பாடல்களுக்கும் இசையமைப்பேன் என்று என்னிடம் கூறினார். நானும் அவரிடம் சரி என்றேன். அவர் சொன்னது போலவே ஆம்பள படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. அதன் பின் ஆம்பள படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  ஆதியை நான் கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளேன் என்று கூறினேன். சொன்னது இன்று நிறைவேறிவிட்டது ஆதி இன்று கதாநாயகனாக , இயக்குநராக அறிமுகமாகிறார். மீசைய முறுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பையோ- கிராபி திரைப்படம் போல் இருக்கும்.
கொஞ்சம் கற்பனை கதை , நிறைய உண்மை கதை இது தான் மீசைய முறுக்கு திரைப்படம். ஆதி இந்த கதையை என்னிடம் கூறியதும் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆதியை மிகப்பெரிய அளவில் நான் லாஞ் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஆதி தன்னோடு மியூசிக் வீடியோவில் பயணித்த அதே டீமோடு பயணிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார் , அவர் சொன்னது போலவே இந்த குழு சிறப்பாக பணியாற்றி நல்ல படத்தை எடுத்துள்ளது. யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள். படத்தில் எனக்கு சாராவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. நான் சாராவின் ரசிகன். பாடல்கள் , படமென்று அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. வருகிற 

ஜூலை 21 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டும் கூறினார் தயாரிப்பாளர் சுந்தர் C .

 
விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியது :-
இண்டிபெண்டண்ட் மியூசிக்கில் ஆரம்பித்து, திரைப்பட இசையமைப்பாளராகி , தற்போது ஹீரோ மற்றும் இயக்குநராக மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்.C அவர்களுக்கு தான் நன்றி கூறவேண்டும்.நான் கதாநாயகனாக  அறிமுகமாகும் இந்த படத்தை மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு தயாரிக்க வேண்டும் சுந்தர்.C சார் என்னிடம் கூறினார். ஆனால் எனக்கு என்னுடன் பல ஆண்டுகளாக இனைந்து பயணிக்கும் குழுவோடு நான் இந்த படத்தில் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியவுடன் அதுவும் நன்றாக தான் இருக்கும் என்று உடனே ஒப்புக்கொண்டார் சுந்தர்.c சார்.
இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் நான் சுந்தர்.C சாரிடம் கேட்ட நடிகர் விவேக் சார் தான். விவேக் சார் தான் அப்பா கதாபாத்திரத்தில்நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தது போலவே அவரும் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருக்கும். ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. என்னை போல் யூடியூப் மூலம் புகழ் பெற்ற பலர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். குறும்படம் எடுத்து பலர் டீமாக சினிமாவுக்கு வந்தார்களோ அதே போல் இப்போது யூடியூப் மூலம் சென்சேஷன் ஆன நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். எங்களை போல் இன்னும் பலர் வருவார்கள் அதற்க்கு மீசைய முறுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும் என்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

நான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமானம் சாந்தனு பாக்யராஜ்!

நான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமானம் சாந்தனு பாக்யராஜ்!

வணக்கம்.
நான் நடிகனாக அறிமுகமான நாள் முதல் இன்று வரை ஆதரவளித்து, எனக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வரும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
நான் நடித்து விரைவில் வெளியாகவுள்ள முப்பரிமானம் படத்தில் இடம்பெற்ற “Lets Go Party” நேற்று வெளியானது.
சக்கரக்கட்டி படத்தில் இடம்பெற்ற  “டாக்ஸி டாக்ஸி” என்ற பாடலின் மூலம் எனக்கு அடையாளம் அளித்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹமான் அவர்களால் “Lets Go Party” பாடல் வெளியானது மிகவும் பெருமைக்குறிய விஷயமாக கருதும் அதே வேளையில் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
மேலும் இப்பாடலில் நடித்த நடிகர்கள் ஜாக்கி ஷாரோப், பிரபு, பார்த்திபன், பாண்டியராஜன், விவேக், ரம்யா கிருஷ்ணன், ராதிகா, ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, வெங்கட்பிரபு, பிரேம்ஜி, வித்தார்த், ஆரி, ப்ரித்திவி, கலையரசன், அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஐஸ்வர்யா ராஜேஷ், மோட்டை ராஜேந்திரன், பிரசன்னா, கிருஷ், சங்கிதா, பாபி சிம்ஹா, மற்றும் எனது குடும்பத்தாரான எனது தாய் பூர்ணிமா பாக்யராஜ், தந்தை k.பாக்யராஜ் எனது மனைவி கீர்த்தி ஆகியோருக்கு எனது இதயம் கனிந்த நன்றியை முப்பரிமானம் படக்குழுவின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்.
27 நடிகர்கள் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த பாடல் 3 நாட்களில் படமாக்கப்பட்டது. இரு மாதிரிகளாக படம்பிடிக்கப்பட்ட இப்பாடலின் ஒரு பதிப்பு தற்போது வெளியாகிவுள்ளது. இப்பாடலின் முழுவடிவம் திரைப்படத்தில் இடம்பெறும்.
இத்தருணத்தில் “Lets Go Party” பாடலுக்காக மிகவும் சிறந்த முறையில் நடன பயிற்சி அளித்த பிருந்தா மாஸ்டருக்கும், மேலும் இப்பாடல் சிறப்பாக அமைய மிகவும் கடினமாக செயல்ப்பட்ட இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு ராசாமதி, கலை இயக்குனர் மாயபாண்டி, இயக்குனர் அதிரூபன், தயாரிப்பாளர் விசு, குமார் மற்றும் படத்தின் நடிகர் நடிகையரருக்கு எனது நன்றிகள்.
“Lets Go Party” பாடல் வெளியான தருணம் முதல் இப்பாடலை மிகப்பெரும் வெற்றிப்பாடலாக உருமாற்றிய பத்திரிகை ஊடக நண்பர்கள் மற்றும் அனைத்து தர ரசிகர்களுக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
உங்கள் ஆதரவை என்றும் நாடும்,
சாந்தனு பாக்யராஜ்