Tag Archives: நடிகர் ஆரி

 அமேஸான், நெட்பிளிக்ஸால் சின்ன படங்களுக்கு ஏற்பட போகும் அபாயம் ; ஆரி எச்சரிக்கை! 

 அமேஸான், நெட்பிளிக்ஸால் சின்ன படங்களுக்கு ஏற்பட போகும் அபாயம் ; ஆரி எச்சரிக்கை! 
‘ஸரோமி மூவி கார்லேண்டு’ நிறுவனம் சார்பில் ஆர்.தங்கப்பாண்டி தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ரூட்டு’.ஏ.சி. மணிகண்டன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதாநாயகனாக கவித்ரன், கதாநாயகியாக மதுமிதா மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் மைம் கோபி, அப்புக்குட்டி, கூல் சுரேஷ் ஆகியோர்  நடித்துள்ளனர். இந்த படத்திற்கு விஜய் பிரபு  இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது.
படத்தின் தயாரிப்பாளர் தங்கபாண்டி பேசும்போது, “சென்னை போன்ற பெரிய நகரங்களில் அன்றாடம் நாம் ஒரு இடத்திலிருந்து கிளம்பி, நினைத்த நேரத்தில் இன்னொரு இடத்திற்கு செல்ல முடியுமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. அதை மையப்படுத்தி அதனால் ஏற்படும் விளைவுகளை வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. படம் பார்க்கும் ஒவ்வொருவரும் அட இந்த நிகழ்வு நமக்கு நடந்தது போன்று இருக்கிறதே என்கிற உணர்வு நிச்சயம் ஏற்படும். இந்த படத்தின் இயக்குனர் மணிகண்டன் படத்தை  சொன்ன நேரத்தில் எடுத்துக்கொடுத்துள்ளார். அவரை தயாரிப்பாளரின் இயக்குனர் என  உறுதியாக சொல்வேன்” என்றார்.
முக்கிய வேடத்தில் நடித்துள்ள அப்புக்குட்டி பேசும்போது, “இதில் பள்ளி செல்லும் குழந்தைக்கு தந்தையாக நடித்துள்ளேன். ஒரு அப்பாவுக்கும் மகளுக்குமான பாசப்பிணைப்பை இந்த படம் அழகாக சொல்கிறது. இக்கட்டான நேரத்தில் ஒரு மனிதன் எந்த மாதிரியான முடிவை எடுக்கிறான் என்பதை இந்த படம் விறுவிறுப்பாகச் சொல்கிறது” என கூறினார்.
கில்டு சங்கத் தலைவர் ஜாக்குவார் தங்கம் பேசும்போது, “ஒரு பெரிய ஹீரோவின் படத்திற்கு 3000 தியேட்டர்கள் கிடைக்கின்றன. ஆனால் ஒரு சின்ன படத்திற்கு 3 தியேட்டர்கள் தான் கிடைக்கின்றன இதுதான் இன்றைய சினிமாவின் அவல நிலை. இதுகுறித்து முதல்வர் மற்றும் அமைச்சரிடம் நான் பேசி உள்ளேன். பெரிய பட தயாரிப்பாளர்களுக்கு சிறிய பட தயாரிப்பாளர்களின் வலி தெரிய வேண்டும். அதை உணர்ந்து மற்றவர்களுக்கும் அவர்கள் வழி விட வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். கன்னடத்தில் படம் எடுத்தால் அரசாங்க 10 லட்சம் தருகிறது.. அதேபோல இங்கேயும் நிச்சயமாக சினிமாவை காப்பாற்றும் ஒரு அரசாங்கம் வரும். இந்த அரசாங்கம் தமிழ் மொழியை வளர்க்க வேண்டும்” என்றார் உணர்ச்சி பொங்க.
நடிகர் ஆரி பேசும்போது, ‘இந்த படத்தின் தயாரிப்பாளர் தங்கப்பாண்டி இயக்குனரைப் பற்றி பேசும்போது, தயாரிப்பாளருக்கான இயக்குனர் என்று சொன்னாரே அதுதான் இந்த படத்தின் முதல் வெற்றி. பெரிய படங்களின் விழாக்களுக்கு செல்வதை விட, இதுபோன்ற சின்ன படங்களை கைதூக்கி விடுவதற்கு நான் தயாராக உள்ளேன். அதனால் என்னை எப்போதும் தாராளமாக அழைக்கலாம். எப்போதுமே சமூக வேலைகள் என சுற்றி வருவதால் பட வாய்ப்புகள் எதுவும் இல்லையோ  எனக் கேட்கும் அன்பான நண்பர்களுக்கு, தற்போது நான்கு படங்களில் நடித்து வருகிறேன் என்பதையும் சொல்லிக் கொள்கிறேன்.
‘ரூட்டு’ என்கிற வார்த்தைக்கு எல்லாருமே ஆளுக்கு ஒரு விளக்கம் சொன்னார்கள். நானும் ஒரு ரூட்டு போட்டு தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரே எம்.ஜி.ஆர் தான். இப்போது எல்லாருமே எம்.ஜி.ஆர் ஆக வேண்டும் நினைப்பதால் தான், பல பிரச்சனைகள் உருவாகின்றன. சமீபத்தில் எனது நண்பர் ஒருவர் பேசும்போது சினிமாவில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன ஆனால் சினிமாக்காரர்கள் ஏன் அரசியலுக்கு வர துடிக்கிறார்கள் என பலரும் கேட்கிறார்கள். இப்போது  சினிமாக்காரர்களை ஒழுங்காக சினிமா எடுக்க  விடவில்லை என்பதால் தான் அவர்கள் அரசியலை பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறார்கள். அவர்கள் வேலையை செய்ய குறுக்கே நிற்காதீர்கள்..
இந்த படத்தை இயக்குவதற்கு டைரக்டர் போட்ட ரூட்டு மாதிரி, இந்த படத்தின் தயாரிப்பாளர் இனி பட ரிலீசுக்காக தியேட்டர்களுக்கு ரூட்டு போட வேண்டிய நேரம் வந்துவிட்டது. தயாரிப்பாளர் சங்கம் இந்த சிறிய படங்களுக்கு, யார் இந்த படத்தை ரிலீஸ் செய்கிறார்களோ, அவர்களுக்கு நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். பணம் உள்ளவர்கள் மட்டுமே படத்தை ரிலீஸ் செய்ய முடியும் என்றால் மற்றவர்களெல்லாம் படம் எடுக்க முடியாத சூழல் உருவாகிவிடும்.
சமீபத்தில் ஒரு நாளிதழில் ஒரு நடிகர் நடிக்கும் வெப் சீரியஸ் தொடருக்கு ஒரு பக்க விளம்பரம் கொடுத்தார்கள். ஆனால் அதுவே தங்களது திரைப்படங்களுக்கு, தயாரிப்பாளர்கள் செலவழிக்க தயாராக இருந்தும் கூட, அப்படி விளம்பரம் கொடுக்க கூடாது என நிபந்தனை விதித்து இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் அமேசான் ப்ரைம், நெட்ப்ளிக்ஸ் போன்றவை எல்லாம் இப்படி சினிமாவிற்கு ஊடுருவ ஆரம்பித்து விடும். இதனால் சிறிய படங்கள் மேலும் தற்கொலைக்கு நிகரான ஒரு நிலைக்கு தள்ளப்படுவார்கள். இதனால் சின்ன படங்கள் தியேட்டருக்கு வர முடியாத ஒரு அபாயகரமான சூழல் ஏற்படும்.
சினிமாவில் எல்லா இடங்களிலும் இரண்டு அணியாக இருக்கிறோம். சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் அனைவரும் அறிந்தது தான்.. அதை சரி என சொல்லவில்லை. தற்போது விஷால் அந்த நிகழ்வுக்கு காரணமானவர்கள் மீது நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த இடத்தில்  விஷாலுக்கு  நாம் வைக்கும் கோரிக்கை என்னவென்றால் தவறுக்கு தண்டனை கொடுப்பது மரபாக இருக்கலாம் ஆனால் அவர்களை தண்டிப்பதை விட, அவர்களை மன்னித்து அவர்களை அரவணைத்து செல்லலாம்.
அவர்களை ஒன்று சேர்த்து முடிவுகளை எடுக்க தவறினால் வரும் நாட்களில் படம் எடுப்பவர்கள் மிகப்பெரிய சங்கடங்களை சந்திக்க நேரிடும். நமது மொத்த சம்பாத்தியத்தையும் வெளியில் இருந்து வருபவர்கள் அள்ளிக்கொண்டு சென்றுவிடுவார்கள் அதனால் தான் தயாரிப்பாளர் சங்கத்தில் நமக்கான ஒரு ஆப், நமக்கான ஒரு வலைதளத்தை உருவாக்கி அதன்மூலம் புதிய வியாபார உத்திகளை கொண்டு வாருங்கள் என நான் அவ்வப்போது வலியுறுத்தி வருகிறேன்” என்றார் ஆரி.
படக்குழுவினரை வாழ்த்தி இயக்குனர் பேரரசு பேசும்போது, “இந்த படத்தில் நடித்துள்ள அப்புக்குட்டி என்னுடைய திருத்தணி படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்தார். அதற்கடுத்து ஒரு படத்திற்காக அவரை அணுகியபோது எத்தனை நாட்கள் கால்ஷீட் என்று கேட்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டார். நடிகர் திலகம் சிவாஜி போன்ற மிகப்பெரிய நடிகர்களுக்கு கூட கிடைக்காத தேசிய விருது அப்புகுட்டிக்கு கிடைத்திருக்கிறது என்றால் இதைவிட அவருக்கு வேறு என்ன பேரும் புகழும் கிடைத்து விடமுடியும்.. இந்த படத்தின் இயக்குனர் பெயர் மணிகண்டன்.. அதாவது ஐயப்பன் பெயர்.. அதனால் பிரச்சனை வரத்தான் செய்யும்.. அந்த மணிகண்டன் இடத்திற்கு பெண்கள் போகிறார்களோ இல்லையோ, இந்த மணிகண்டன் படத்திற்கு பெண்கள் கூட்டம் கூட்டமாக வரவேண்டும்” என பேசினார்.
படத்தில் இயக்குனர் மணிகண்டன் பேசும்போது, “இந்தப்படத்தை முதலில் வேறொரு தயாரிப்பாளர் தயாரிப்பதாக இருந்தது. இடையில் சில காரணத்தால் அவர் அதிலிருந்து விலகிவிட, அந்த நேரத்தில் என்னிடம் உதவி இயக்குனராக இருந்த தங்கப்பாண்டி தான், இது அருமையான படம் இதை கிடப்பில் போட்டு விடக்கூடாது என கூறி தன்னுடைய சக்திக்கு மீறி இந்த படத்தை தானே தயாரிக்க முன்வந்தார். அதேபோல இந்த படத்தில் நாயகியாக நடிக்க இருந்தவர் படத்தின் முதல் நாள் திடீரென வர முடியாது என கூறி விட, குறைந்த கால அவகாசத்தில் கதாநாயகியாக இந்த படத்திற்குள் வந்தவர் தான் இந்த மதுமிதா ஆனாலும் முதல் நாள் முதல் ஷாட்டிலேயே அவருடைய தேர்வு நியாயமானது என்பதை நிரூபித்து விட்டார்” என கூறினார்.

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் – ஆரி..!

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர் – ஆரி..!

aari-7

அமெரிக்காவை அசத்திய ஆர்கானிக் நடிகர்…
 
அமெரிக்காவில் உள்ள தமிழ் அமைப்புகளான ஃபெட்னா மற்றும் மெட்ரோப்ளக்ஸ் நடத்திய வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் 31 வது தமிழர் விழாவின் மூன்றாம் நாளான ஜூலை 2 -ம் தேதி 2018 அன்று நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ஆரி கலந்து கொண்டு சிறப்பித்தார், 
 
இவ்விழா மேடையில் தமிழர்களின் ஆரோக்கிய வாழ்வு மேம்பட அக்கறை கொண்டு  அயராது உழைக்கும் நடிகர் ஆரிக்கு, பாரம்பரிய உணவு மற்றும் இயற்கை விவசாய முறையை ஊக்குவித்து வருவதற்காகவும், சமீபத்தில் நமது நாட்டு விதைகளை பாதுகாக்க சீனாவின் கின்னஸ் உலக சாதனையை முறியடித்து  கின்னஸ் சாதனை புத்தகத்தில் தனது மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் பதிவு செய்தார், இதுபோன்ற தமிழர்களின் சமூக நலனில் அக்கரை கொண்ட ஆரி அவர்களுக்கு ஃபெட்னா மற்றும் மெட்ரோப்ளக்ஸ் அமைப்புகளின் அமெரிக்கா வாழ் தமிழர்கள் நினைவுக் கேடயம் வழங்கி கௌரவித்தனர்,
 
கருத்தரங்கு ;
 
அமெரிக்க வாழ் தமிழர்கள் பலரும் கலந்து கொண்டு பல தலைப்புகளின் கீழ் உலக தமிழர்கள் ஒருங்கிணைந்து  விவாதிக்கப்பட்ட கருத்தரங்கில் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின்  மேலாண்மை அறங்காவலர் நடிகர் ஆரி நிகழ்த்திய உரை,
 
இயற்கை வேளாண்மை ;
 
விவசாயம் என்பது வியாபாரம் அல்ல வாழ்க்கை முறை என்கிற நம்மாழ்வாரின் கருத்துக்கு ஏற்றார்போல் நம் தமிழினத்தின் ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான இளைய சமுதாயத்தை  உருவாக்க வேண்டும் அதற்கு இன்றைய உணவு கலாச்சார தீங்குகளில் இருந்து இளைஞர்களை மீட்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்,
 
சமூகப் பார்வை;
 
இப்போதைய சமூக சூழலில் கூட்டுக் குடும்பமாக வாழ்வதே குறைந்து வரும் நிலையில் எதிர்கால இளைய தலைமுறைக்கு தனி மனித ஒழுக்கம் என்பது ஏட்டுக் கல்வியில் மட்டுமில்லாமல் வாழ்க்கை முறை சார்ந்த கல்வியாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார், 
 
மரபணு விதைகள் ;
 
மரபு சார்ந்த விவசாயமானது இன்றைய நாகரீகத்தால் மறக்கடிக்கப்பட்டு  மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்துகிறோம், இதனால் ஏற்படும் பக்க விளைவுகளால் இன்றைய இளைஞர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள், இந்நிலை மாற வேண்டுமென்றால் நமது பாரம்பரிய விவசாயத்தின் அடிப்படை அம்சங்கள் குறித்து தெரிந்து நாம் கொள்ள வேண்டும், மாற்றம் என்பது எங்கேயோ யாரால் நிகழ்த்தப்படுவதில்லை நம்மிலிருந்து துவங்குவதே அதனால் மாற்றத்தை உணவிலிருந்தும் பாரம்பரிய விவசாயத்தில் இருந்து துவங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்,
 
மாடித்தோட்டம் ;
 
இந்நிகழ்ச்சியில் அமெரிக்க வாழ் தமிழர்களுக்கு நம் நாட்டு விதைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்கிற தன் உயர்ந்த நோக்கத்தினை பதிவு செய்ததுடன், நஞ்சில்லாத உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க  ஒவ்வொருவரும் எளிய முறையில் தங்கள் வீட்டிலேயே மாடித்தோட்டம் அமைப்பது பற்றிய எளிய முறைகளையும் விளக்கினார் என்பது மிக சிறப்பு, 
 
பாராட்டு ;
 
இந்த கலந்துரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அமெரிக்க வாழ் தமிழர்கள் வெகுவாக நடிகர் ஆரி அவர்களை பாராட்டி நானும் ஒரு விவசாயியாக மாறுவோம் மாற்றுவோம் என உறுதிமொழி மேற்கொண்டனர்.

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..!

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த தமிழக அரசுக்கு நன்றி – நடிகர் ஆரி..!

hqdefault

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ அல்லது பயன்படுத்துவதோ கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதில் பால் தயிர் எண்ணெய் மற்றும் மருத்துவ பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது மற்ற பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பை மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்கள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கு நடிகரும் சமூக சேவகருமான ஆரி தனது நன்றியை தெரிவித்துள்ளார், இவர் பல வருடங்களாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என போராடியிருக்கிறார் குறிப்பாக தனது படபூஜை விழா மற்றும் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் அவர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் விழா ஏற்பாடு செய்திருக்கிறார் மற்றும் பல கல்லூரிகலில் விழிப்புணர்வும் செய்திருக்கிறார்.

எனவே தனது ஆசையை தமிழக அரசு நிறைவேற்றியுள்ளதாக தமிழக அரசு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு தனது நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துள்ளார் நடிகர் ஆரி…

பரபரப்பு பற்றிக் கொள்ளும் இசை வெளியீட்டு விழா “தல-தளபதி”

பரபரப்பு பற்றிக் கொள்ளும் இசை வெளியீட்டு விழா “தல-தளபதி”

actor-aari

b-t-arasakumar-2

director-s-a-chandrasekar-1

director-s-a-chandrasekar-2

director-s-a-chandrasekar-3

director-s-a-chandrasekar-4

director-vetri-mahalingam

hero-raj-surya

hero-ram-saravana

lyricist-madhan-karky-1

music-director-dhanraj-manickam

music-director-navin-shankar

visiri-movie-audio-launch-1

visiri-movie-audio-launch-2

visiri-movie-audio-launch-3

visiri-movie-audio-launch-4

visiri-movie-audio-launch-5

visiri-movie-audio-launch-6

visiri-movie-audio-launch-7

visiri-movie-audio-launch-8

visiri-movie-audio-launch-9

“தல-தளபதி” என்றாலே, அது பரபரப்பு பற்றிக் கொள்ளும் விசயம் தான். அப்படிப்பட்ட ஒரு கதையை வைத்து படமாக்கப்பட்ட “விசிறி” படத்தின் இசை வெளியீட்டு விழாவும் பரபரப்பாக நடந்திருக்கிறது.
“வெண்ணிலா வீடு” படத்தின் மூலம் நல்ல இயக்குநர் என்று பெயரெடுத்த வெற்றி மகாலிங்கம் தான் “விசிறி” படத்தை இயக்கி, தயாரித்திருக்கிறார். அறிமுக நாயகர்களாக ராஜ் சூர்யா, ராம் சரவணா நடிக்க, இவர்களோடு தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இசையமைப்பாளர்களாக தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர் ஆகிய மூவர் பணியாற்றியிருக்கிறார்கள். பாடலாசியர் மதன் கார்க்கி இந்த படத்தின் முக்கியமான பாடலை எழுதியிருக்கிறார்.
விசிறி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநரும், நடிகர் விஜயின் தந்தையுமாகிய எஸ்.ஏ.சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன், நடிகர் ஆரி, பாடலாசிரியர் மதன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அரசியல்வாதியாக இல்லாமல், ஒரு நடிகராக தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர் பி.டி.அரசகுமாரும் கலந்துகொண்டார்.
பாஜக நபரை மேடையில் வைத்துக் கொண்டே, பத்மாவதி பிரச்சனையோடு பேச ஆரம்பித்தார் நடிகர் ஆரி. “கருத்து சுதந்திரம் குறித்து எல்லோரும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கிறோம். ஆனால் இப்போது சினிமாக்காரர்கள் மட்டுமல்ல நாடு முழுவதுமே கருத்து சுதந்திரம் குறித்த கேள்விகள் எழுந்த வண்ணமே இருக்கிறது. சம்பந்தப்பட்ட கட்சியின் பொறுப்பாளர் நம்மோடு இங்கே மேடையில் இருக்கிறார். அவரிடம் சொன்னால் நமது பிரதமர் மோடியிடமே சொன்னது போலாகும். அதனால், தயவு செய்து கருத்து சுதந்திரத்தில் கை வைக்க வேண்டாம் என்று இந்த மேடையின் வாயிலாக ஒரு தமிழனாக வேண்டுகோள் வைக்கிறேன்” என்று திரியைப் பற்ற வைத்தார்.
அடுத்து பேசிய பி.டி.அரசகுமார், “மோடி அரசும், தமிழக பாஜகவும் கருத்து சுதந்திரத்தில் கை வைப்பதாக சொன்னதற்கு முதலில் பதில் சொல்லி விடுகிறேன். தம்பி விஜய் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர். அவருக்குத் தமிழகமெங்கும் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர் ஒரு விசயத்தைப் பேசுகிறார் என்றால் அது வெகு சீக்கிரமாக மக்களை சென்றடைகிறது. இப்படி இருக்கும் சூழலில் தம்பி விஜயால் ஒரு தவறான கருத்து வெளியில் சென்றுவிடக் கூடாது என்பதால் தான் நாங்கள் எதிர்த்தோம்” என்று பேசினார்.
ஆரி பற்ற வைத்த சிறு நெருப்பை, பெரு நெருப்பாக மாற்றினார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர். “நான் இன்று இந்த இடத்தில் நிற்கிறேன் என்றால் எனது நேரம் தவறாமையே காரணம். நேரத்தைக் கடத்தாமல் ஒவ்வொரு நொடியையும் பொன்போல மதித்து நடந்தாலே வெற்றி பெறலாம். அண்ணன் பி.டி.அரசகுமார் பேசும்போது, ஒரு நடிகர் ஒரு தவறான கருத்தை பேசும்போது அது எளிதில் மக்களை சென்றடைவதாக சொன்னார். இதற்கு நான் பல பேட்டிகளில் பதில் சொல்லிவிட்டேன், இருந்தாலும் இந்த மேடையிலும் சொல்கிறேன். சினிமா வேறு, அரசியல் வேறு, வாழ்க்கை வேறு. சினிமாவில் கொடூரமான வில்லன்களாக நடிப்பவர்கள் நேரில் குழந்தை மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அதேபோல் நம்மோடு குழைந்து பேசுபவர்களும் சில நேரங்களில் நம் கழுத்தறுத்து விடுவார்கள். எம்.ஜி.ஆர் காலத்தில் கலைஞரை கைது செய்த போது, கண்டித்து ஒரு பக்க அளவிற்கு பத்திரிக்கையில் கண்டனம் செய்தவன் நான். நான் எந்த கட்சியையும் சாராதவனாக இருந்தாலும், கலைஞரை எனக்கு பிடிக்கும் என்கிற காரணம் தான் அது. ஆனால் அதையெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் அவரது கம்பெனியில் படம் இயக்க என்னை ஒப்பந்தம் செய்தார். அப்படித்தான் அப்போதைய அரசியல்வாதிகள் இருந்தார்கள். அவர்கள் அரசியலையும் சினிமாவையும் வாழ்க்கையையும் பிரித்தறிகிற ஆற்றலும், நம்பிக்கையும் கொண்டிருந்தார்கள்.
ஆனால், இப்போதிருக்கும் அரசியல்வாதிகளுக்கெல்லாம் அந்த பக்குவமும், நம்பிக்கையும் இல்லை. எங்கே ஏதாவது ஒரு நடிகன் நாடாள வந்துவிடுவானோ? என்ற பயத்திலேயே இருக்கிறார்கள். அதனால் தான் இவர்களால் சினிமாவையும், அரசியலையும் வேறு வேறாக பிரித்தறிய முடியவில்லை. “விசிறி” படம் “அஜித்-விஜய்” ரசிகர்கள் மோதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக சொன்னார்கள். இந்த பிரச்சனை இப்போது மட்டும் இல்லை, எம்.ஜி.ஆர்-சிவாஜி காலத்திற்கு முன்பிருந்தே தொடங்கிய ஒன்று. ரசிகர்களே சூப்பர் ஸ்டார்களை உருவாக்குகிறார்கள், ரசிகர்கள் இல்லாவிட்டால் இங்கு சூப்பர் ஸ்டார்கள் இல்லை. இந்த சூப்பர் ஸ்டார்களின் ரசிகர்கள் மோதிக்கொண்டாலும், நடிகர்கள் நண்பர்களாக ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். அதனை உணர்ந்து இரு தரப்பு ராசிகர்களும் ஒன்றிணைந்தால் புது சரித்திரத்தையே இங்கு உருவாக்க முடியும். அதேபோல எல்லா நடிகர்களுடைய ரசிகர்களும் ஒன்றிணைந்தால் தவறு செய்கிற அரசியல்வாதிகள் எல்லாம் தலைதெறிக்க ஓடி விடுவார்கள். ஊழல்வாதிகள் எல்லாம் ஒழிந்து போவார்கள். அந்த இளைஞர்களால் மட்டுமே நம்முடைய வரிப்பணத்தை எல்லாம் தங்கள் பைகளில் போட்டுக்கொள்ளும் அரசியல்வாதிகளை பஞ்சு பஞ்சாக விரட்டியடிக்க முடியும். அந்த காலம் வந்துவிட்டது, மெரினாவில் கூடிய இளைஞர் பட்டாளமே அதற்கு சான்று.
இளைஞர்கள் வந்துவிட்டார்கள், இனி எல்லா அரசியல்வாதிகளும் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளவும். நான் பாஜகவையும் சேர்த்து தான் சொல்கிறேன். தமிழர்கள் நாங்கள் ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்கிற கோட்பாட்டில் வாழ்பவர்கள். இங்கு தேவையில்லாமல் ஜாதியையும், மதத்தையும் ஏன் திணிக்கிறீர்கள்? நாடாள்கிற ஒரு கட்சியின் முக்கியமான பதவியிலிருக்கும் ஒருவர் பொறுப்பில்லாமல் ஜாதி, மத அடிப்படையிலான கருத்துக்களை சொல்வது எவ்வளவு மோசமான செயல்?
இங்கிருக்கிற அரசியல்வாதிகள் எல்லாம் படத்தைப் பார்க்காமலேயே விமர்சனம் செய்யக் கிளம்பிவிடுகிறார்கள். படத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையில் அந்த வசனம் இடம்பெறுகிறது என்பதைக் குறித்து எந்த கவலையும் இல்லை. தயவுசெய்து மற்ற மாநிலங்களில் இருப்பது போல் தமிழ் சினிமாவை வாழவிடுங்கள்” என்று பேசினார்.
பாஜக பிரமுகரை வைத்துக் கொண்டே எஸ்.ஏ.சந்திரசேகர் இப்படியெல்லாம் பேச, அரங்கமே அதிர்ந்தது.
நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள்
கதாநாயகர்கள் : ‘ராம்சரவணா’ & ‘ராஜ் சூர்யா
கதாநாயகி:ரெமோனா  ஸ்டெபனி
ஒளிப்பதிவு: விஜய் கிரண்,
இசை: தன்ராஜ் மாணிக்கம், சேகர் சாய்பரத், நவீன் ஷங்கர்
எடிட்டிங்: வடிவேல் – விமல்ராஜ்,
வசனம்: பித்தாக் புகழேந்தி
பாடல்கள்: மதன் கார்க்கி, ஞானகரவேல், ரேஷ்மன் குமார், ஸ்ரீ ராவன்
இணை தயாரிப்பு : பூமா கஜேந்திரன், S. சரஸ்வதி சரண்ராஜ், N.K. ராஜேந்திர பிரசாத் (துபாய்)”.
நிர்வாக தயாரிப்பு : A.P.பிரகலாதன், கர்ணன் மகாலிங்கம், V.ராஜேஸ்வரி
கதை, திரைக்கதை, இயக்கம்  : வெற்றி மகாலிங்கம்

குரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீட்டு விழா!

குரு உச்சத்துல இருக்காரு இசை வெளியீட்டு விழா!

guru-uchaththula-irukkaru-3

guru-uchaththula-irukkaru-5

guru-uchaththula-irukkaru-12

guru-uchaththula-irukkaru-16

guru-uchaththula-irukkaru-18

guru-uchaththula-irukkaru-21

guru-uchaththula-irukkaru-22

guru-uchaththula-irukkaru-23

guru-uchaththula-irukkaru-26

guru-uchaththula-irukkaru-29

guru-uchaththula-irukkaru-32

guru-uchaththula-irukkaru-33

guru-uchaththula-irukkaru-34

guru-uchaththula-irukkaru-35

அறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில்தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் குரு உச்சத்துலஇருக்காரு‘. குரு ஜீவா கதா நாயகனாகவும் பைசா திரைப்படத்தில் நடித்த ஆரா கதா நாயகியாகவும் நடித்திருக்கும் இப்படத்தில்பாண்டியராஜன், MS பாஸ்கர்நமோ நாராயணன்இமான் அண்ணாச்சிமனோ மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

குரு உச்சத்துல இருக்காரு திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் விஜய் வசந்த்திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன்நடிகர் ஆரி,பின்னணிப் பாடகர் வேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் சினேகன் வருகை தந்திருந்தனர்.

இவர்கள் முன்னிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் மற்றும் படத்தில் வரும் இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. வருகை தந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இயக்குநரைதயாரிப்பாளரைபடத்தில் பணிபுரிந்த கலைஞர்களை பாராட்டி படம் வெற்றி பெற வாழ்த்தினார்கள். குரு உச்சத்தில இருக்காரு திரைப்படத்திற்கு இசையமைத்த தாஜ் நூர்இதில் வேலை பார்த்தது தனக்கு ஒரு புது அனுபவத்தை தந்ததாகவும்பாடல் காட்சிகள் படப்பிடிப்புகள் முடிந்த பின்னால் இசையமைத்தது சவாலாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

சினேகன்பா. விஜய் மற்றும் மீனாட்சி சுந்தரம் இந்த திரைப்படத்தின் பாடல் வரிகளை எழுதி இருக்கிறார்கள்.

 

ஆதரவற்றோர்க்கும் ஆரேக்கிய உணவு – நடிகர் ஆரி

ஆதரவற்றோர்க்கும் ஆரேக்கிய உணவு – நடிகர் ஆரி

நடிகர் ஆரி நாட்டு  விதைகள் மூலம் இயற்கை  உரங்களை கொண்டு   காய்கறி தயாரிக்கும் மாடிதோட்ட திட்டத்தை அன்னையர் தினத்தன்று  பள்ளிகரனையில் உள்ள  இதய வாசல் முதியோர் இல்லத்தில் மாடிதோட்டம்  உருவாக்க அறிவித்து இருந்தார்.
 
முதியோர்  இல்லத்தில் மாடி தோட்ட திறப்பு விழா அறிவித்த படி  பள்ளிகரணையில் உள்ள ‘இதய வாசல்’ முதியோர் இல்லத்தில் நேற்று  06-07-2017 தன் மனைவி நதியா பிறந்தநாளில் கீரை காய்கறி மாடித்தோட்டத்தை பயண்பாட்டுக்கு அந்த முதியோர் இல்லத்தில் உள்ள விஜயா பாட்டியை வைத்தே திறந்து வைத்தார். மேலும்  நாட்டு  விதைகள் நாளுக்குநாள் அழிந்தவண்ணம் உள்ளது, தற்போது நம் நாட்டில் 50% மட்டுமே நம் நாட்டின் விதைகள் உள்ளன. மற்றவற்றை எல்லாம் நாமே  கலப்பின சேர்க்கையில் அழித்துவிட்டோம் .  மீதமுள்ள 50% விதைகளையாவது    நாம் முறையாக பாதுகாக்க வேண்டும் ஏனெனில் ஒவ்வொரு விதையிலும் ஒரு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதென்றும், பல வருடங்கள் கழித்து நாம் நம் நாட்டில் என்ன விதைகளை பயன்படுத்தினோம் என்ற சுவடே தெரியாமல் போய்விடும், விதைகளுக்காக நாம் மற்ற நாட்டிடம் கையேந்துகிற நிலை கூடாது என்றவர்  தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து முதியோர் மற்றும் அனாதை இல்லங்களில் மாடி வீடுகளிலும் இந்த நாட்டு விதை  இயற்கை உணவு முறை  மாடி தோட்டம் உருவாக  ஊக்குவிக்க உள்ளார்.
இவ்வாறாக ஒவ்வொருவரும் முன்வந்து தங்களது மாடி வீடுகளில் இயற்கை உணவுமுறை நாட்டு விதை  மாடித்தோட்டத்தை உருவாக்கினால் நாட்டு  விதை அழிவினை தடுக்க முடியும், மேலும் நச்சு உணவுப்பொருட்களிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க இயலும்.மேலும் சுற்றுப்புற சூழலை மாசாக்கும் பிளாஸ்டிக் பைகளை வைத்து இத்தகைய மாடித்தோட்டம் உருவாக்கப்படுகிறது.
  
மாடிதோட்டத்தை மனைவிக்கு பரிசலித்த ஆரி
 
மேலும் அவரது முக்கிய செய்தியாக குழந்தைகளின் பிறந்தநாளில் பெற்றோர்கள் விஷத்தை கெடுகிறார்கள் ! கேக் என்ற பெயரில்.இதற்க்கு விழிப்புணர்வு எற்படுத்தும் விதமாக மாற்றத்தை தன்னிடம் இருந்தே ஆரம்பிக்கும் விதமாக தன்   மனைவியின் பிறந்த நாளில் நவதானியன்களால் உருவான கேக்கை உருவாக்கி அதை வெட்டி கொண்டாடினார்.இது முற்றிலுமாக கம்பு,பாம்,வெல்லம்,வெண்ணெய்,தயிர்,கேரட்,ஆப்பிள்,முந்திரி,ஆரஞ்சு , ஜாதிக்காய் பொடி,கறுவா தூள்,உருளைக்கிழங்கு,ஆயில்,தேன்,முட்டை,இஞ்சி  போன்ற ஆர்கானிக் தானியங்களால் உருவான கேக் உருவாக்கி பிறந்த நாளை கொண்டாடினார்.இவ்வாறாக   கொண்டாடும் போது பிறந்த நாள் அன்றும் குழந்தைகள் நச்சு  உணவு உண்பதை தவிர்க்கலாம் என்கிறார்,பிறந்த நாள் கலாச்சாரம் சில வருடங்களாகதான் அதிகரித்து வருவது நல்லதுதான் ஆனால் உடலுக்கு கேடு தரும் கேக் வகைகளை தவிர்த்து நல்ல ஆரோக்கியமான கேக் வகைகளை  உண்போம்  குழைந்களின் பாதுகாப்பினை உறுதி செய்வோம்
 
சிரத்தை எடுத்து நவதானிய கேக்கினை உருவாக்கிய  சுஷ்மா ராஜன் அவர்களின்  Cake Affairs நிறுவனத்திற்கு  நன்றி….

நாகேஷ்திரையரங்கம் படத்தை வெளியிட தடை!

நாகேஷ்திரையரங்கம் படத்தை வெளியிட தடை!

நாகேஷ்திரையரங்கம் படத்தை வெளியிட தடைகேட்டு,மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷின் மகனும் நடிகருமான ஆனந்த்பாபு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப்போட்டுள்ளார்..சமீபத்தில் நாகேஷ்திரையரங்கம் படத்தின் டீசரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்..நடிகர் ஆரி, ஆஷ்னாசவேரி நடிப்பில் இசாக் இயக்கியுள்ள இப்படத்தை ட்ரான்ஸ் இண்டியா மீடியா எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனர் ராஜேந்திர. எம் ராஜன் தயாரித்துள்ளார். மேலும் ஆனந்த்பாபு  இப்படத்தை வெளியிட நஷ்டஈடு தரவேண்டும் என்று கூறிவருவதாக சொல்லப்படுகிறது..ஆனந்த்பாபு அனுப்பியுள்ள மனுவிற்கு படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் தரவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது..