Tag Archives: டேனியல் பாலாஜி

தனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின் ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தனுஷ் நடித்துள்ள ” வட சென்னை ” படத்தின்  ட்ரைலர் ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.
dfqhpqwvmaavldf
விசாரணை படத்திற்கு பிறகு இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நீண்ட வருடங்களாக உருவாகி வரும் படம் ‘வட சென்னை’. மூன்று பாகமாக வெளிவரவுள்ள இந்த படத்தின் முதல் பாகத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் பிறகு முதல் பாகத்தை வெளியிடுவதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் முதல் பாகத்தின் ட்ரைலர் வரும் ஜூலை 28 ஆம் தேதி வெளியிடுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் பிறகு இந்த படத்தின் முதல் பாகத்தினை செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளது.
சென்னையில் நடக்கும் கேங்க்ஸ்டர் கதைகளை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் தனுஷ் அன்பு என்ற கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார்.தனுஷ்- வெற்றிமாறன்   இந்த கூட்டணி பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்துள்ளது.
இந்த கூட்டணியில் சமுத்திரக்கனி, அமீர், டேனியல் பாலாஜி, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், கிஷோர், கருணாஸ், பவன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.  மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகி வரும் இந்த படம் செப்டம்பரில் வெளியாக உள்ளது. இது தவிர இந்த படத்தினை லைக்கா ப்ரொடக்சன் நிறுவனம் பிரமாண்டமாக வெளியிட உள்ளது.

பொங்கல் விருந்தாக வருகிறது பைரவா!

பொங்கல் விருந்தாக வருகிறது பைரவா!

img_4529

 

பாதாள பைரவி, மாயாபஜார், மிஸ்ஸியம்மா, எம்.ஜி.ஆர் நடித்த – எங்கவீட்டு பிள்ளை, நம்நாடு, ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி, கமலஹாசன் நடித்த நம்மவர் மற்றும் தாமிரபரணி, படிக்காதவன், வேங்கை, வீரம் உட்பட 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம் பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்ஷன்ஸ்.
பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில்  பி.பாரதி ரெட்டி, இளைய தளபதி விஜய் நடிக்கும் பைரவா படத்தை ஏராளமான பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமானமுறையில் தயாரித்து வருகிறார்.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி – பரதன் இயக்கும் பைரவா படத்துக்கு, கவிப்பேரரசு வைரமுத்து தன் வைர வரிகளால் பாடல்கள் எழுதியுள்ளார்.
இப்படத்தில் இளைய தளபதி விஜய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
இவர்களுடன் ஜெகபதிபாபு, சதீஷ், ஒய்.ஜி.மகேந்திரன், தம்பி ராமைய்யா, டேனியல் பாலாஜி, மைம் கோபி, ‘ஆடுகளம்’ நரேன், ஸ்ரீமன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
பைரவா திரைப்படத்தின் டீசர் வெற்றிக்கு பின் பைரவா ட்ரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலோடு காத்திருந்தனர். அவர்களுக்கு விருந்து படைக்கும் வகையில் “ பைரவா ட்ரைலர் “ டிசம்பர் 31 ஆம் தேதி இரவு வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்ப்பை பெற்றது. பைரவா ட்ரைலர் புத்தாண்டு விருந்தாகவும் அமைந்தது என்பது குறிப்பிடதக்கது. இது வரை தமிழ் சினிமாவில் வெளிவந்த ட்ரைலர்கள் படைத்த சாதனைகள் அனைத்தையும் முறியடித்து. இளையதளபதி விஜயின் பைரவா ட்ரைலர் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்து புதிய சாதனைகளை உருவாக்கி வருகிறது. டிசம்பர் 31 ஆம் தேதி வெளிவந்த பைரவா ட்ரைலரை இது வரை 5மில்லியன் பேருக்கு மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
இளையதளபதி விஜயின் பைரவா திரைப்படத்தை சென்சார் குழுவினர் இன்று பார்த்து , படத்தை பாராட்டி படத்துக்கு “ U “ சான்றிதழ் வழங்கியுள்ளனர். “ U “ சான்றிதழ் பெற்றுள்ள பைரவா பொங்கல் விருந்தாக வருகிற January 12 தேதி திரைக்கு வருகிறது.