Tag Archives: சுராஜ்

விமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..!

விமல்-வடிவேலு கூட்டணியுடன் களத்தில் இறங்கும் சுராஜ்..!
vadivelu
vimal-01
vimal-02
 
கடந்த ஜனவரியில் வெளியான மன்னர் வகையறா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கோலிவுட்டில் தவிர்க்கமுடியாத கதாநாயகனாக உருவெடுத்துள்ளார் விமல். ஆக்சன், ரொமான்ஸ், சென்டிமென்ட் இவை அனைத்தையும் சரிவிகிதத்தில் கலந்து குடும்பப்பாங்கான கதைகளில் ஜொலிப்பதற்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக தெரிகிறார் நடிகர் விமல்..
‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களும் புதிய இயக்குனர்களும் விமலை அணுகி கதை சொல்லி வருகின்றனர். நிதானமாக அவற்றை கேட்கும் விமல், அதில் தனக்கு செட்டாகும் கதைகளையும், அவற்றை இயக்கும் அனுபவம் மற்றும் திறமை வாய்ந்த இயக்குனர்களுடன் அடுத்தடுத்து கைகோர்க்க இருக்கிறார்.
அந்தவகையில் இந்த வருடத்தில் விமல் நடிப்பில் அரை டஜன் படங்களுக்கு மேல் களம் காண இருக்கின்றன. இயக்குனர் எழில் டைரக்சனில் மீண்டும் நடிக்கிறார் .  சுராஜ் டைரக்சனில் போலீஸ் அதிகாரிகளாக விமல்-வடிவேலு நடிக்கும் படம் ஒன்று மருதமலை பாணியில் கலக்கலாக உருவாகவுள்ளது.
இதுதவிர  ‘வெற்றிவேல்’ இயக்குனர் வசந்தமணி, ‘தமிழன்’ பட இயக்குனர் மஜித், ஆகியோரின் படங்களில் அடுத்தடுத்து நடிக்க இருக்கிறார் விமல்.  ‘மன்னர் வகையறா’ வெற்றியை தொடர்ந்து மீண்டும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் . ஆக, இந்த வருடம் விமலின் கால்ஷீட் டைரி இப்போதே நிரம்பிவிட்டது.
இன்னொரு பக்கம் ஏற்கனவே விமல், வரலட்சுமி ஜோடியாக நடித்துவரும் ‘கன்னிராசி’ படம் இறுதிக்கட்ட பணிகளில் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.. மேலும் சற்குணம் டைரக்சனில் ’களவாணி-2’ படத்தின் படப்பிடிப்பிலும் கலந்துகொண்டு நடித்துவந்தார் விமல். கடந்த ஒன்றரை மாதமாக நடைபெற்றுவந்த வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த நிலையில் தற்போது ’களவாணி-2’, படத்தின் படப்பிடிப்பு வரும் மே-3ஆம் தேதி முதல் மீண்டும் முழுவீச்சில் துவங்குகிறது.
இந்த வேலை நிறுத்தம் சமயத்தில் கிடைத்த இந்த 3௦ நாட்கள் தான் விமலுக்கு கிடைத்த ஒய்வு நாட்கள்.. ஆம்.. இனி வரும் நாட்களில் ஓய்வில்லாமல் அடுத்தடுத்த படங்களில் நடிக்க தயாராகிவிட்டார் விமல்.

Kathi Sandai New Movie News

Kathi Sandai New Movie News

Kathi Sanda New Movie News (2)

                                                    விஷால் நடிக்கும் “ கத்தி சண்டை “

                                                            சுராஜ் இயக்குகிறார்

                           நகைச்சுவை வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் “ வீரசிவாஜி “ படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக கத்திசண்டை படத்தையும்  தயாரிக்கிறார்.

நகைச்சுவை  வேடத்தில் வடிவேலு நடிக்கிறார். விஷால் வடிவேலு ஏற்கனவே திமிரு படத்தில் இணைந்து நடித்து அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் தலைநகரம், மருதமலை இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள்.

கதாநாயகியாக நடிக்கும் அதிஷ்டம் யாருக்கு என்று தெரியவில்லை. மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

அதிரடிக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் கத்திசண்டை படத்தை சுராஜ் இயக்குகிறார்.  காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தை பக்கா கமர்ஷியல் மற்றும் காமெடி படமாக உருவாக்குகிறார்.

இந்த கத்திசண்டை படத்தை விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் இணைந்து பக்கா கமர்ஷியல், காமெடியாக உருவாக்குகிறார்கள்.

எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் கத்திசண்டை படத்தின் படிப்பிடிப்பு இம்மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.