Saravanan Irukka Bayamaen Movie Stills & News

Saravanan Irukka Bayamaen Movie Stills & News

அழகும், திறமையும் ஒருங்கே வாய்க்க பெற்ற, ரசிகர்களை தன் அபார அழகால் கவர்ந்து இழுக்கும் துறுதுறு நடிகை ரெஜினா கஸாண்ட்ரா. பக்கத்து வீட்டு பெண் போல இருக்கும் ரெஜினா, எளிதாக எந்த ஒரு வேடத்திலும்  பொருந்தி போகக் கூடியவர். தமிழ் சினிமாவில் தன் அதிர்ஷ்ட தேவதையாக வலம் வரும் இவர், நடித்தாலே அந்த படமும் வெற்றி படமாக மாறுவது தனிச்சிறப்பு.
மாநகரம் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக   சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ள ரெஜினா, இயக்குனர் எழில் படத்தில் நடிப்பது மிகவும் சந்தோஷமான விஷயம், மிகவும் சௌகர்யமான இயக்குனர் அவர். வணிக ரீதியான படத்துக்கு தேவையான சிறப்பான திரைக்கதையை அமைத்துள்ளார் எழில். எனக்கும், உதயநிதிக்கும் பொருத்தமான கதாபாத்திரம் அமைந்திருக்கிறது.
உதயநிதி மிகவும் எளிமையான மனிதர், அவரின் நகைச்சுவை உணர்வு அலாதியானது. அவரோடு நடித்தது ஒரு மறக்க முடியாத அனுபவம் என தன் ஹீரோ உதயநிதியை பற்றியும் புகழ்ந்து பேசுகிறார்.
சரவணன் இருக்க பயமேன் ஒரு முழுநீள பொழுதுபோக்கு படம், கோடை காலத்தில் குடும்பத்தோடு வந்து பார்த்து ரசிக்கும் வகையில் இருக்கும். இமானின் அற்புத இசையில் பாடல்கள் சிறப்பாக வந்துள்ளது. இசை மட்டுமல்லாமல் யுகபாரதியின் பாடல் வரிகளும் பேசப்படும் என்கிறார் இந்த அழகுப்புயல்.
_______________________________________________________________________________
_______________________________________________________________________________
தமிழ் சினிமாவில் எல்லா ஹிரோக்களுக்கும்  ரீலிலும், ரியலிலும் நண்பனாக இருப்பது சாதாரண விஷயமல்ல. அப்படி ஒரு இடத்தை நிரந்தரமாக பிடித்திருப்பவர் தான் ‘பரோட்டா’ சூரி. இல்லை இல்லை ‘புஷ்பா புருஷன்’ சூரி. பரோட்டா சூரியாக இருந்த என்னை ‘புஷ்பா புருஷன்’ சூரியாக மாற்றிய பெருமை என்  இயக்குனர் எழில் சாரையே சேரும். அவருடைய சிஷ்யன் சுசீந்திரன் எனக்கு கொடுத்த பரோட்டா சூரி என்ற அடையாளத்தை, அவரின் குரு எழில் சாரே உடைத்து அதை விட பெரிய அடையாளத்தை உருவாக்கி கொடுத்ததும், இரண்டுமே என் நண்பன் விஷ்ணு ஹீரோவாக நடித்த படங்கள் என்பது மேலும் சிறப்பு என மகிழ்ச்சியோடு ஆரம்பிக்கிறார் சூரி.

எழில் இயக்கத்தில் 5 வது முறையாக சரவணன் இருக்க பயமேன் படத்தில் நடித்துள்ளேன். வழக்கமாக ஹீரோ பக்கத்தில் நண்பனாக இருக்கும் நான், இந்த படத்தில் கல்யாணம் என்ற காமெடி கலந்த வில்லத்தனமான கதாபாத்திரத்தில் உதயநிதிக்கு எதிரி. ரெஜினாவுடன் சேர்ந்து உண்டில்லனு பண்றது தான் என் கதாபாத்திரம், காமெடிக்கு உத்தரவாதம். ஹீரோவோட நண்பனா மத்தவங்கள கலாய்க்கிறது ரொம்ப ஈசி, ஆனா இந்த படத்துல வில்லனா நடிச்சு ஹீரோவையே கலாய்க்கணும். ரொம்ப கஷ்டப்பட்டு ரசிச்சு பண்ணியிருக்கேன்.

உதயநிதி சார் கூட என்னோட முதல் படம். அவர் குடும்பத்தை பற்றி நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. அப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தும் அவ்வளவு எளிமை. ஒழுக்கம், பணிவு மரியாதை, நேரம் தவறாமை, சின்சியாரிட்டி எல்லாம் அவர்கிட்ட தான் கத்துக்கணும். அவரோட தொடர்ந்து 3 படம் நடிச்சதுல ரொம்ப சந்தோஷமான அனுபவம். படத்தோட இன்னொரு ஹீரோ இசையமைப்பாளர் இமான். இமான், எழில், யுகபாரதி கூட்டணின்னாலே ஹிட்டு தான். எழில் சாரோட முந்தைய படங்களை விட இது மிகப்பெரிய ஹிட் ஆகும் என அடித்து சொல்கிறார் தன்னம்பிக்கையோடு.