இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக!

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக!

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலர் தமிழக ரசிகர்களிடம் அமோக பாராட்டுகளை பெற்றது. பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், சந்தனு நடனம் ஆடி இருக்கும் ‘டமுக்காட்லான் டுமுக்காட்டலான்’ பாடல், நடிகர் தனுஷ் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் பாராட்டுகளையும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
“பார்த்திபன் சார் என்னை ஒரு நாள் அழைத்து, ‘நான் கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கின்ற படத்தை இயக்குகிறேன். அதில் நீ தான் கதாநாயகன். நாளை முதல் படப்பிடிப்பு’ என்று கூறினார்’. ஆரம்பத்தில் எனக்கு சற்று மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தாலும், பார்த்திபன் சார் மீதும், அவருடைய கதை மீதும் நான் வைத்திருக்கும் ஆணித்தனமான நம்பிக்கையால், என்ன கதை என்பதை கூட கேட்காமல், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டேன். சிறிது நாட்களுக்கு பிறகு தான், பார்த்திபன் சார் என்னை இந்த படத்திற்காக ரகசியமாக கண்காணித்து வந்தார் என்பதை தெரிந்து கொண்டேன்.
ஒரு திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும் அம்சங்களை மாற்றி, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குபவர் பார்த்திபன் சார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம், ரசிகர்கள் ஒரு புதிய சாந்தனுவை காண்பார்கள்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சாந்தனு.
“Parthiban sir observed me in clandestine…” reveals the filler of ‘F_ll in the B_anks’ Shanthnu  
Filmmaker Radhakrishnan Parthiban’s next drawing ‘Koditta Indagalai Nirappuga’ is all set to release on 14th January, 2017 by making the festive contest much tougher. The avatar of the male lead Shanthnu and his drastic performance in the teaser and trailer of Koditta Idangalai Nirappuga has turned the heads of Audience. Shanthanu who has plenty of promise in his earlier  films  is all set to convert that promise of potentiality into success in Koditta idangalai nirapouga. The teaser of ‘Damukaatlan Dumukaatalan’ song in which Shanthnu shakes his legs for Prabhudeva’s choreography has received huge praises from Media Critics as well as from the entire Tamil film industry, including actor Dhanush.
“Parthiban sir called me one fine day, he again called me and said that, ‘We are going on floors from day after tomorrow. Film name is Koditta Idangalai Nirappuga and you are the hero.’ And that’s how our Koditta Idangalai Nirappuga commenced with a Surprise Shock. Knowing him i wasn’t surprised because he is a director who has got many aces up is sleeves and surprise and innovativeness are his second names.  Only after few days I came to know that Parthiban sir has observed my body language and nuances secretly for several days.
I never asked about the script to Parthiban sir because, I had a blind trust on him. As soon as he called me, I departed for the shoot.  He is the updated director who can break the regular grammars of Film Making and I am extremely happy to be a part of his film. Until now Koditta Indangalai Nirappuga is surprising me on every little factor, and I am quite sure that the same surprise will be experienced by the Audience too. Get ready to answer the fill in the blanks from January 14th” says Shanthnu confidently.