Kadhali Kanavillai Movie Stills & News

Kadhali Kanavillai Movie Stills & News

Kadhali Kanavillai Movie Stills & News

நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் கிஷோர் மோதல் காதலி காணவில்லை படத்திற்காக படமானது

மனுநீதி, காசு இருக்கனும், எங்க ராசி நல்லராசி, போன்ற பல படங்களை தயாரித்த ஜி.ஆர்.கோல்டு பிலிம்ஸ் படநிறுவனம் அடுத்து தயாரிக்கும் “ காதலி காணவில்லை “ படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்றுக் கொண்டிருகிறது.

கிஷோர் கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக ஹார்திகா நடிக்கிறார்.  மற்றும் சோப்ராஜ், பத்மாவசந்தி உட்பட பலர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு   –    தயாள் ஓஷோ

இளையகம்பன், அண்ணாமலை பாடல்களை  எழுதுகிறார்கள் .

தேவா இசையமைக்கிறார்.

கலை  –    சுந்தர்ராஜன் /  எடிட்டிங்      –   தேவராஜ்

தயாரிப்பு நிர்வாகம்   –  ராகுல் /  தயாரிப்பு   –  ஆர்.பி.பூரணி

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  ரவி ராஜா

படம் பற்றி இயக்குனர்கள்  ரவி ராஜாவிடம் கேட்டோம்…

படம் முடிவடையும் கட்டத்தில் உள்ளது.

சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு கண்டெயினர் யார்டில் பிரமாண்டமான ஒரு சண்டைக் காட்சியை படமாக்கினோம்.

கிஷோர் நூற்றுக்கணக்கான ரவுடிகளுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியை பத்து நாட்கள் படமாக்கினோம். நவீனரக மெஷின் கொண்டு இயக்கும் அந்த கண்டெய்னர் யார்டில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட கண்டெயினர்களுக்கு மத்தியில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது.

இதற்கான செலவு நிறைய ஆகும் என்று தயாரிப்பாளர் ஜி.ஆரிடம் கூறினோம். செலவு பற்றி கவலை இல்லை ஆனால் பிரமாண்டம் ஸ்கிரீன்லே தெரியனும்னு சொல்லி நிறைய செலவு செய்தார்.     இந்த சண்டைக் காட்சியில் கிஷோருடன், சோப்ராஜ், ஹார்தி பட அதிபர் ஜி.ஆர் ஆகியோரும் பங்கேற்றனர் என்றார்கள்.

[Gallery not found]

 

Kadhal Agathee Movie Stills & News

Kadhal Agathee Movie Stills & News

Kadhal Agathee Movie Stills & News

                                             ஹரிகுமார் –   ஆயிஷா நடிக்கும்  “ காதல் அகதீ ”

ராமய்யா சினி கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பாக ஓசூர். எம். ராமய்யா தயாரிக்கும் படத்திற்கு “ காதல் அகதீ “ என்று பெயரிட்டுள்ளனர்.

இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிகுமார் நடிக்கிறார். தூத்துக்குடி, மதுரைசம்பவம், போடிநாயக்கனூர் கணேசன், திருத்தும் போன்ற படங்களில் நடித்த ஹரிகுமார் இந்த படத்தில் வேறு விதமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

கதாநாயகியாக ஆயிஷா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக மமதா ராவத் நடிக்கிறார். மற்றும் பாண்டியராஜன், தேவதர்ஷினி, சிங்கமுத்து, லொள்ளுசபா மனோகர், பிளாக்பாண்டி, மைசூர் மஞ்சுளா, திருச்சி பாபு, ஷாமி ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  –  ஷியாம்ராஜ்

விவேகா பாடல்களுக்கு பர்ஹான்ரோஷன் இசையமைக்கிறார்.

கலை   –  பத்மநாபன்

ஸ்டன்ட்    –  மிரட்டல் செல்வா

நடனம்   –  ராதிகா

தயாரிப்பு மேற்பார்வை –  கார்த்திக் ரெட்டி

தயாரிப்பு   –  M. ராமய்யா

எழுதி இயக்குபவர் –  ஷாமி திருமலை

படம் பற்றி இயக்கம் ஷாமி திருமலையிடம் கேட்டோம்…

காய்கறி மார்கெட் நடத்தும் தாதா சத்யாவுக்கும் சாதாரண குடும்ப பெண்ணான சாவித்ரி மீது காதல் ஏற்படுகிறது.   காதல் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாமல் தனது அகத்துக்குள்ளேயே பூட்டி வைத்து அது தீயாக ஒருவனை சுட்டெரிக்கும் உணர்வுகளை வைத்து படு கமர்ஷியல் படமாக உருவாக்கி இருக்கிறோம்.

நான் ஏற்கனவே R.C.சக்தி, ஆதவன், கே.விஜயன், உமேஷ், வேணுகோபால், கேசவா, போன்ற பிரபல தமிழ், கன்னட இயக்குனர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறேன்.    படப்பிடிப்பு  சென்னை, ஹைத்ராபாத் மற்றும் பெங்களூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

 

 

[Gallery not found]

 

 

Enakkul Oruvan Movie & News

Enakkul Oruvan Movie & News

திரையரங்கு ஒன்றில் வேலை பார்க்கும் இளைஞனாக விக்கி (சித்தார்த்). இவர் தினமும் தூக்கமின்மையால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார். தன்தூக்கத்தையும், ஏக்கத்தையும் தேடி அலையும் இவருக்கு கிடைப்பது தான் லூசியா என்ற மாத்திரை.

இதை சாப்பிட்ட பிறகு கனவு உலகத்திற்கு செல்ல, அங்கு அனைவரும் விரும்பும் பெரிய நட்சத்திர நாயகனாக வலம் வருகிறார் விக்னேஷ் (சித்தார்த்).

நிஜ வாழ்க்கையில் என்னென்ன கதாபாத்திரங்கள் வருகிறதோ, அதே கதாபாத்திரங்கள் கனவுலகிலும் வருகிறது. அது மட்டுமில்லாமல், இங்குஅவருக்கு நடக்கும் சம்பங்கள் சற்று மாறுதலுடன் அங்கும் அரங்கேறுகிறது. ஆனால், இரண்டிலும் ஒரே கரு காதல்.

இந்த இரண்டு கதைகளுக்கும் சம்பந்தமற்ற மற்றொரு கதையும் உள்ளே நடக்கிறது. விக்னேஷ் என்னும் நடிகர் திடிரென கோமாவிற்கு செல்கிறார். அவரது இந்த நிலைமைக்கு என்ன காரணம் என்று புரியாமல் திகைக்கின்றனர் காவல் துறையினர்.

ஆனால் இறுதியில் கனவுளகில் வாழ்ந்து வரும் நடிகர் விக்னேஷ் என்ற கதாபாத்திரமே உண்மை வாழ்க்கையில் லூசியா மருந்தின் காரணத்தால் விக்கி என்ற திரையரங்கில் வேலைபார்க்கும் கதாபாத்திரத்தில் கனவுலகில் வாழ்ந்து வந்த உண்மை தெரிகிறது.

இறுதியில் விக்னேஷ் கோமாவில் இருந்து மீண்டு வந்தாரா என்பதே மீதி கதை.

Cast & Crew Details:

Artist                             Character Name

Siddharth           –          Vikki & Vignesh

Deepa sannidhi –         Divya

Srushti               –         Thanushree (heroine)

Naren                –         Durai annan

Magesh             –         Ranjith cbi

Ajay rathnam    –         Paranjothi police officer

Mahadhevan    –          Don

Yog japee        –          Hench man

Indhirajith        –           Micheal sub inspector

Ramadoss       –          Sundaram

Mippu             –            Murugan

Vetri               –            Aravind

producer – CV kumar

production house – thirukumaran entertainment

directed by – prasath Ramar

Dop – Gopi Amarnath

music – Santosh narayanan

editor – Leo john Paul

art director – vijay adhinathan

stunt – bills jagan

sound design – Sree shankar and Vishnu govind

choreography – sherif and kalyan

lyrics – muthamizh , gkb & vivek

PRO – Nikkil

 

 

 

 

Director Cheran’s C2H Cinema 2 Home Inauguration Event Stills

Director Cheran’s C2H Cinema 2 Home Inauguration Event Stills

Director Cheran's C2H Cinema 2 Home Inauguration Event Stills

 

 

[Gallery not found]

 

BOFTA Launch Function Stills & News

BOFTA Launch Function Stills & News

BOFTA Launch Function Stills & News

                                         பாஃப்டா (BOFTA): ப்ளூ ஓஷன் ஃபிலிம் & டெலிவிஷன் அகாடமி

பாஃப்டா தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களால்

இன்று (மார்ச் 4 2015) தொடங்கிவைக்கப்படுகிறது

ப்ளூ ஓஷன் ஃபிம் & டெலிவிஷன் அகாடமி (பாஃப்டா – BOFTA) புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒரு நிறுவனம். சினிமாவிலும் தொலைக்காட்சியிலும் 20 வருடங்களுக்கும் மேல் அனுபவமும் திறனும்கொண்டவர்களால் நடத்தப்படும் கல்வி நிறுவனம். துறை சார்ந்த நிபுணர்கள் சிறப்பு விரிவுரையாளர்களாகவோ அல்லது வருகை தரு ஆசிரியர்களாகவோ இருக்கும் கல்வி நிறுவனங்களைப் போல அல்லாமல் தலை சிறந்த வல்லுநர்கள் பாஃப்டா-வில் முழுநேர ஆசிரியர்களாக இருக்கிறார்கள். இவர்கள் மாணவர்களுடன் உரையாடி திரைப்படத் தயாரிப்பு மற்றும் தொலைக்காட்சி நிகழ்சித் தயாரிப்பு குறித்த நுணுக்கங்களை அவர்களுக்குக் கற்றுத் தருவார்கள்.

பாஃப்டா-வில் நவீன யுக ஊடகத் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் மற்றும் வல்லுனர்கள் மூலம் கற்றுக்கொள்ளும் அரிய வாய்ப்பை இந்த அகாடமி மாணவர்களுக்கு வழங்குகிறது. தலைசிறந்தவர்களிடம் கற்றுக்கொள்ளும் ஒரு சிறந்த வாய்ப்பாக இது மாணவர்களுக்கு அமையும். மாணவர்கள் தங்கள் படைப்புத்திறனை மேம்படுத்திக்கொண்டு, அவற்றை வெளிப்படுத்தி, சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறைகளில் பொருத்தமான வாய்ப்புகளைப் பெறுவதற்கான தகுதிபெற வைப்பதுதான் பாஃப்டா-வின் நோக்கம்.  கற்றுக்கொள்வது என்பது சுவாரஸ்யமாகவும் நடைமுறை சார்ந்த்தாகவும் இருக்க வேண்டும். அந்தச் சூழலில்தான் மாணவர்களின் தலை சிறந்த படைப்பாற்றல் திறன் வெளிப்படும் என்பதால் பாஃப்டா-வின் பாடத்திட்டங்கள் இந்த முறையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த அகாடமியில் படித்து முடிக்கும் மாணவர்கள் உடனடியாக திரைத்துறை மற்றும் தொலைக்காட்சித் துறையில் பணியமர்த்தப்படும் தகுதியோடு இருக்க வேண்டும் என்ற தெளிவாக நோக்கத்துடன் பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இங்கு வழங்கப்படும் பெரும்பாலான வகுப்புகள் தற்போதைய தொழில்நுட்ப, சமூக, கலாசார மற்றும் பொருளாதார மாற்றங்களை மனதில் கொண்டு, நிபுணர்களிடம் கற்கும், நடைமுறை கற்றல் முறையில் வடிவமைக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்டுள்ளன.

திரைத் துறையின் வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களின் ஆதரவுடனும் அவர்களின் வழிகாட்டுதலுடனும் தென்னிந்தியாவின் புகழ் வாய்ந்த சினிமா மற்றும் தொலைக்காட்சி அகாடமியாக மாற வேண்டும் என்பதுதான் பாஃப்டா-வின் லட்சியம். மாணவர்களுக்கு நடைமுறை சார்ந்த அறிவை வழங்கி, அவர்களுக்குச் சிறந்த முறையில் பயிற்சி அளித்து, திறனை மேம்படுத்தி திரைப்படத் துறை சர்ந்த தங்களது கனவை நனவாக்கிக்கொள்ள அவர்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம்.

பாஃப்டா-வின் ஆசிரியர் குழு

இயக்குநர் பாடத்தின் துறைத் தலைவர்: இயக்குநர் மகேந்திரன்

திரைக்கதை பாடத்தின் துறைத் தலைவர்: இயக்குநர் கே. பாக்யராஜ்

நடிப்பு பாடத்தின் துறைத் தலைவர்: நடிகர் நாஸர்

ஒளிப்பதிவு பாடத்தின் துறைத் தலைவர்: ஒளிப்பதிவாளர் மது அம்பாட்

எடிட்டிங் பாடத்தின் துறைத் தலைவர் : எடிட்டர் பி லெனின்

திரைப்பட இதழியல் பாடத்தின் துறைத் தலைவர்: கார்ட்டூனிஸ்ட் மதன்

தொலைக்காட்சித் தயாரிப்பு பாடத்தின் துறைத் தலைவர்: நடிகை குட்டி பத்மினி

திரைப்படத் தயாரிப்பு மேனேஜ்மன்ட் பாடத்தின் துறைத் தலைவர்: தயாரிப்பாளர் டி. சிவா

மேற்கண்ட துறைகளின் மூத்த ஆசிரியர் குழு:

இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதும் பயிற்சி: இயக்குனர்கள் ஆர். பார்த்திபன், மனோபாலா, ஞான ராஜசேகரன், கே. ராஜேஷ்வர், சசி, வெங்கட் பிரபு, விஷ்ணுவர்த்தன், விஜய், பாண்டிராஜ், ராம், கார்த்திக் சுப்பராஜ், ஆர். எஸ். பிரசன்னா, எழுத்தாளர் கருந்தேள் ராஜேஷ் மற்றும் வரலாற்று ஆசிரியர் அறந்தை மணியன்.

ஒளிப்பதிவாளர் பயிற்சி: ஒளிப்பதிவாளர் பி. கண்ணன், மகேஷ் முத்துஸ்வாமி மற்றும் சிஜே. ராஜ்குமார்.

நடிப்பு பயிற்சி: நடிகர் ஷண்முகராஜா மற்றும் சந்திர மோஹன். நடிகர்கள் ராஜேஷ், ‘தலைவாசல்’ விஜய், ஜீவா மற்றும் ரோஹிணி ஆகியோரும் இந்த அகாடமிக்கு ஸ்டார் சிறப்பு ஆசிரியர்களாக வர ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

திரை இதழியல் பயிற்சி: மோஹன் ராமன், ஸ்ரீதர் பிள்ளை மற்றும் கேபிள் சங்கர்.

திரைப்படத் தயாரிப்பு பயிற்சி: தயாரிப்பாளர்கள் கோ. தனஞ்ஜெயன், ஜே. சதீஷ் குமார், இயக்குநர் கேபிள் சங்கர் மற்றும் புரொக்‌ஷன் டிசைனர் ஆர். வெங்கட்.

6 மாதப் படிப்புகளான திரைப்படத் தயாரிப்பு மற்றும் திரை இதழியல் பாடங்கள் தவிர மற்ற 6 பாடங்களும் 12 மாத கால பாடங்கள்.

2015, ஜூலை 1 தேதியில் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இவற்றுக்கான அட்மிஷன்கள் இன்றிலிருந்து தொடங்குகின்றன. காலை 9.30 முதல் மாலை 4.30 வரை திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இந்த வகுப்புகள் நடைபெறும்.

தமிழ் திரைப்படத் துறையின் மையத்திற்கு (கோலிவுட்) வெகு அருகில், பாஃப்டா, ரவி பிரசாத் ஃபிலிம் லாப்ஸ், எண்.8 -11, வி.ஓ.சி. முதல் மெய்ன் தெரு, ராம் தியேட்டருக்கு முதல் சந்து, கோடம்பாக்கம், சென்னை- 600 024 என்ற முகவரியில் மூன்று மாடிக் கட்டடத்தில் இந்த அகாடமி உருவாக்கப்பட்டுள்ளது.

நவீன வகுப்பறைகள், ஒரு ப்ரிவ்யு தியேட்டர், டப்பிங் தியேட்டர், எடிட்டிங் சூட், படப்பிடிப்புத் தளங்கள், புத்தகங்களும் டி.வி.டி.க்களும் கொண்ட ஒரு நூலகம், மாணவர்கள் பார்ப்பதற்காக இரண்டு ஸ்க்ரீனிங் அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளை இந்த அகாடமி மாணவர்களுக்கு வழங்குகிறது.

பாஃப்டா-வைப் பற்றி இதன் இணை நிறுவனர் கோ. தனஞ்ஜெயன் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “திரைத் துறை மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த ஜாம்பவான்கள் மற்றும் வல்லுனர்களிடம் நேரடியாக பயிற்சி பெற்று, அதன் மூலம் திரைப்படம் மற்றும் தொலைகாட்சித் துறையில் சுலபமாக வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படும் மாணவர்களின் கனவை நனவாக்குவதுதான் இந்த அகாடமியின் நோக்கம். இதைப் பற்றிக் கேள்விப்பட்டு இங்கு சேர விரும்புவதாக ஏராளமான மாணவர்கள் கூறியுள்ளனர். அவர்களை விரைவில் சந்திக்க இந்த அகாடமி ஆவலுடன் காத்திருக்கிறது. தாங்கள் விரும்பும் கோர்ஸ்களை அவர்கள் தேர்ந்தெடுக்கலாம்.”

இன்று மியுசிக் அகாடமியில் நடைபெற்ற பிரம்மாண்டமான விழாவில் உலக நாயகன் பத்ம பூஷன் டாக்டர் கமல் ஹாசன் முறைப்படி பாஃப்டா-வைத் தொடங்கிவைத்தார். சினிமா மற்றும் தொலைக்காட்சித் துறையைச் சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் விழாவில் கலந்துகொண்டனர். தொலைக்காட்சி அரசி திருமதி ராதிகா சரத்குமார், மாணவர்களுக்கான வழிகாட்டு நூலை (ஸ்டூடன்ட்ஸ் கெய்ட்) வெளியிட, திருமதி பூர்ணிமா பாக்யராஜ் அதைப் பெற்றுக்கொண்டார். பிரபல நடிகர் ஆர்யா பாஃப்டா-வின் வலைதளமான www.bofta.in  ஐத் தொடங்கிவைத்தார். இந்த அகாடமியில் சேர முன்வந்துள்ள மாணவர்களுடன் பாஃப்டா-வின் ஆசிரியர் குழுவினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

RSVP: நிகில்

BOFTA is officially launched today (4th March 2015) by the

Legends of Tamil Cinema

Blue Ocean Film & Television Academy (BOFTA) is a newly formed Academy/Institute, backed and managed by professionals from the Film and Television industry, with over 20 years of experience and relationship with top talents. Unlike other film schools or institutes, where the top talents visit them as guest lecturers once in a while, at BOFTA, top talents are brought in as regular faculty to interact with the students and teach them the nuances of film making and television program management.

The Academy offers a rare combination of legends and experts from the new age media industry joining hands to teach under a single umbrella called BOFTA and it will be the biggest platform for students to learn from the Masters. BOFTA’s objective is to enable the students to enhance and display their creativity, so that they get the right opportunities in the film and television industry. BOFTA will follow a culture of learning with fun so that the best creativity and talent from students emerge in an easy and free atmosphere.

BOFTA is set up with a clear vision to offer job oriented courses so that the students passing out of the Academy are ready to be employed by the industry. Most courses are designed and developed with the focus on practical learning from the Masters and are up to date, keeping in mind the current technological, social, cultural and economic changes.

BOFTA’s Vision is to become South India’s most reputed Film and Television Academy, backed and managed by Experts and Professionals from the industry. We aim at training and developing talent by imparting practical knowledge, to help students achieve their career dreams and can be ‘readily employed’ by the industry.

BOFTA’s Faculty:

Head of the Department for Direction course: Direction Mahendran

Head of the Department for Screenplay Writing course: Direction K. Bhagyaraj

Head of the Department for Acting course: Actor Nasser

Head of the Department for Cinematography course: Cinematographer Madhu Ambat

Head of the Department for Editing course: Editor B. Lenin

Head of the Department for Film Journalism course: Cartoonist Madhan

Head of the Department for Television Production course: Actress Kutty Padhmini

Head of the Department for Film Production Management course: Producer T. Siva

Senior Faculty for the above departments:

Direction and Screenplay writing course: Directors R. Parthiban, Manobala, Gnana Rajasekaran, K. Rajeshwar, Sasi, Venkat Prabhu, Vishnuvardhan, Vijay, Pandiraj, Ram, Karthik Subbaraj, R.S. Prasanna, Writer Karundhel R@jesh and Historian Arandhai Manian.

Cinematography course: Cinematographers B. Kannan, Mahesh Muthuswami and CJ. Rajkumar

Acting course: Actor Shanmugraja and Chandra Mohan. The Academy will also have the Star Guest Faculty of Actors Rajesh, ‘Thalaivasal’ Vijay, Jiiva and Rohini.

Film Journalism course: Mohan Raman, Sreedhar Pillai and Cabe Sankar

Film Production course: Producers G. Dhananjayan, J. Satish Kumar, Director Cable Sankar and Production Designer R. Venkat.

Except the Film Production and Film Journalism courses, which are for 6 months each, the other 6 courses are for 12 months period.

Courses commencing on 1st July 2015 and the admissions commence from today. The classes will be held from 9.30 a.m to 4.30 p.m from Monday to Saturday.

The Academy is set up in a 3-storey building in the heart of Tamil Film Industry (Kollywood) at BOFTA, Raviprasad Film Labs, No.8 to 11, V.O.C. 1st Main Street, Lane before Ram Theatre, Kodambakkam, Chennai – 600 024.

The Academy offers world-class infrastructure for students with modern class rooms, a preview theatre, dubbing theatre, editing suite, shooting floors, a library of books and DVDs and film screening rooms for students viewing.

Speaking about BOFTA, the co-founder, G. Dhananjayan mentioned that ‘It is dream come true for the students aspiring to enter the film industry by learning directly from the legends and experts of the film and television industry, which will enable them a faster access to the industry. We are delighted with the response from the students aspiring to join the Academy and looking forward to meet them soon to finalize the batches for each of the courses.’

BOFTA is formally launched by Ulaga Nayagan Padma Bhushan Dr. Kamal Haasan today at a glittering ceremony at Music Academy, which was attended by, who is who of the film and television industry. Queen of Television Mrs. Radikaa Sarathkumar unveiled the Student’s Guide, which was received by Mrs. Poornima Bhagyaraj. Popular actor Arya launched the BOFTA’s website www.bofta.in during the event. The faculty team of BOFTA along with several students aspiring to join were present during the event.

RSVP: NIKKIL

 

[Gallery not found]

 

 

Benchtalkies Press Show Stills & News & Video

Benchtalkies Press Show Stills & News & Video

Benchtalkies Press Show Stills & News & Video

அனைத்துச் செய்தித்துறை மற்றும் ஊடக நண்பர்களுக்கு,

பென்ச்டாக்கீஸ் என்ற நிறுவனத்தின் முதல் சாதனை நிகழ்வாக திரையிடப்படும்

நிகழ்வுக்கு வருகைதந்துள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்.

உங்கள் வருகைக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பீட்சா மற்றும் ஜிகர்தண்டா என்ற திரைப்படங்களை இயக்கி திரையுலகில் புதிய அதிர்வுகளை

ஏற்படுத்திய இளம் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் மற்றும்  அவரது நண்பர்கள் சிந்தனையில்

உருவாகி அந்தப் புதுமையான சிந்தனைக்குக் கொடுத்த வடிவம்தான் ஸ்டோன் பென்ச் கிரியேஷன்ஸ்.சுயமாக திரைப்படம் எடுப்பவர்கள், தனித்திறமைகள் மிளிர நடிக்கவேண்டும் என்ற தாகமுள்ள நடிகர்கள் ஆகியோருக்குத் துணைக்கரம் நீட்டும் நிறுவனமாக பொழுதுபோக்குத் துறையில் தடம்பதிக்க மலர்ந்துள்ளது இந்த நிறுவனம்.

குறும்படங்கள் எடுக்கும் இயக்குனர்கள் அணுகக்கூடிய, அங்கீகாரம் பெறுத்தரக்கூடிய மற்றும் வருமானம் ஈட்டக்கூடிய வாய்ப்புகளை உருவாக்கி குறும்படங்களைதிரையரங்குகள்,தொலைக்காட்சிகள்,விமான பொழுதுபோக்கு ஊடகங்கள்,வானொலி

மற்றும் டிஜிட்டல் அரங்குகளில் வெளியிட வினியோகிக்கும் ஒரு துணை நிறுவனமாக பென்ச்பிலிக்ஃஸ் இயங்குகிறது.

ஸ்டோன்பென்ச் கிர்யேஷன்ஸ் நிறுவனத்தின் முதல் குறும்படங்களின் தொகுப்பு ‘பென்ச் டாக்கீஸ்–தி ஃபஸ்ட் பென்ச்’

என்பது ஆறு குறும்பட இயக்குனர்களால் ஆறு குறும்படங்கள் இயக்கப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது.

தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இந்தக் குறும்படங்கள் 2015 மார்ச் 6 ஆம் தேதி கோயம்புத்தூர் நகரில் SPI சினிமாஸ்

மற்றும் PVR சினிமாஸ் திரை அரங்குகளிலும் பெங்களூரு PVR சினிமாஸில் 2015 மார்ச் 13 ஆம் தேதியிலும் வெளியிடப்படுகின்றன.

பென்ச் டாக்கீஸ் இயக்குனர்கள்: அனில் கிருஷ்ணன், சாருகேஷ் சேகர், கோப்பகுமார், மோனேஷ், ரத்னகுமார் ஆர் எம் மற்றும் கார்திக் சுப்பாராஜ்

கலைத்துறையில் சாதனை முத்திரை பதிக்கவும் ஆக்கபூர்வ மாற்றத்தை ஏற்படுத்தவும் பென்ச் டாக்கீஸ் நிறுவனம் முனைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

குறும்பட இயக்குனர்களுக்கு தனித்துவ அடையாளத்தை இது ஏற்படுத்திக் கொடுக்கும்.குறும்படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு உங்களுடைய முழு ஆதரவை

வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். உங்களுடைய ஆதரவு திரைப்பட இயக்குனர்களின் வெற்றிக்கு முதுகெலும்பாக அமையும் என்று நம்புகின்றோம்.

Teaser link: <http://youtu.be/jmY-eAcFXcA>

Trailer link: <http://youtu.be/dBzXzjScAwQ>

என்றும் நன்றியுடன்

ஸ்டோன்பென்ச் குழு

 

To all the Press & Media friends,

Welcome to the screening of Bench Talkies – The First Bench & Thank you so much for your presence!

Stone Bench Creations is an organization conceived by Pizza and Jigarthanda fame Director Karthik Subbaraj and his friends to develop innovative solutions in the Entertainment industry that will support independent film makers, aspiring actors and other talents.

Bench Flix is a product developed to provide Reach, Recognition and Revenue to independent short film makers by distributing their short films across different avenues such as theaters, television, in-flight entertainment, radio and digital platforms.

Stone Bench Creations’ first collection of short films ‘Bench Talkies – The First Bench’ is the first-of-its-kind movie in Tamil directed by 6 independent short film makers to be released in theaters. The movie is censor certified (U/A) and is releasing on 6th March 2015 in SPI Cinemas & PVR Cinemas in Chennai and Coimbatore and on 13th March 2015 in PVR Cinemas, Bangalore.

The Directors of Bench Talkies are Anil Krishnan, Charukesh Sekar, Gopakumar, Monesh, Rathnakumar RM and Karthik Subbaraj.

Teaser link: http://youtu.be/jmY-eAcFXcA

Trailer link: http://youtu.be/dBzXzjScAwQ

Bench Talkies is the starting of a good change in the film industry that will give an identity to many independent film makers. We request your full support in making independent short films successful and be the backbone of many film makers success.

Thank you.

Stone Bench Creations Team

 

 

[Gallery not found]

 

 

குறள் இணையத்தொலைக்காட்சி