பதவுரை :
அறம் ஆழி – தருமக்கடலாகிய
அந்தணன் – இரக்கம் உள்ள கடவூளின்
தாள் – பாதமாகிய (மரக்கலத்தை)
சேர்ந்தார்க்கு – சேர்ந்தவர்க்கு அல்லாமல்
மற்றவர்களால்
பிற ஆழி – பொருளும் இன்பமுமாகிய வேறு
கடல்களை
நீந்தல் – நீந்திக் கரையேறுவது
அரிது – முடியாத செயல்
வீச்சுரை :
அறக் கடலா
விளங்கும்
ஆண்டவனை வணங்கிக்
கிடப்பார்
அனைத்துக்
கடல்களையூம்
கடப்பார்!
ஆனால்…
அறத்திற்கு
எதிரானவர்
துன்பக்
கடலில்
நித்தம் துடிப்பார்!
அவர்
எப்படி நீந்தி
நடப்பார்?
|