September 18, 2020

Odu Raja Odu Tamil Movie Review

Odu Raja Odu Tamil Movie Review

ஓடு ராஜா ஓடு விமர்சனம்

odu-raja-odu-tamil-movie-review

கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும்கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும்அண்ணன் விட்டதை பிடிக்க நினைக்கும் வருங்கால தாதாவான தம்பிஇவர்கள் மூவருக்கும் இடையிலான ஈகோ மோதலில் சிக்கித் தவிக்கும் நாயகர் மற்றும் நண்பர்களே ஓடு ராஜா ஓடு படக்கரு

கதை: சென்னையில் சினிமா கதாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் நாயகன் குருசோமசுந்தரம்இவரது மனைவி லட்சுமி பிரியா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார்தங்கள் திருமண நாளில் வீட்டில் செட்அப் பாக்ஸ் வாங்கி வைத்து புருஷனுடன் படம் பார்க்க ஆசைப்படுகிறார் லட்சுமிபிரியாஇதற்காக குருசோம சுந்தரத்திடம் பணம் கொடுத்து செட்அப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்லுகிறார்

அந்த பகுதியில் கஞ்சா விற்று வரும் தனது நண்பருடன் சேர்ந்து செட்அப் பாக்ஸ் வாங்க செல்லுகிறார் குரு சோமசுந்தரம்அங்கு எதிர்பாராத விதமாக மனைவி கொடுத்த பணத்தை இழக்கிறார்மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்இது ஒரு பக்கம் நடக்கமற்றொரு பக்கம் அந்தப் பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் சாருஹாசன்கவலைக்கிடமான நிலையில்இனிமேல் ரவுடி தொழில் செய்யக் கூடாது என்று அவரது மகன் நாசரிடம் சத்தியம் வாங்கி விட்டு இறந்து போகிறார்ஆனால்நாசரின் தம்பி ரவீந்திர விஜய்யோ நாசரை கொன்று விட்டுதாதாவாக முயற்சி செய்கிறார்இச்சூழலில் நாசரால் ஏமாற்றப்பட்ட மற்றொரு நாயகர் ஆனந்தசாமி 5 வருடம் சிறை தண்டனை பெற்று வெளியில் வருகிறார்நாசரை கடத்தி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்

அதே பகுதியில் ஆதரவற்ற சிறுவர்கள்சிறு சிறு திருட்டு தொழில்கள் செய்து வருகிறார்கள்இவர்கள் எல்லோரும் ஒரு அசாதாரண சூழலில் சந்திக்கிறார்கள்இறுதியில் என்ன ஆனதுகுருசோம சுந்தரம் செட்அப் பாக்ஸ் வாங்கினாராநாசர் ஆனந்தசாமிரவீந்திர விஜயால் கொல்லப்பட்டாராஇல்லையா…? இப்படத்தில்சிம்ரன் அவரது கணவர் திபக்பாஹா ஆகியோரின் ரோல் என்ன…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும்விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது… “ஓடு ராஜா ஓடு” படத்தின் மீதிக்கதையும்களமும்

காட்சிப்படுத்தல்: விஜய் மூலன் டாக்கிஸ் வழங்கும் கேன்டல் லைட் புரொடக்சன்ஸின் தயாரிப்பில் “ஜோக்கர்” குருசோமசுந்தரம்ஆனந்தசாமிப்ரியா சந்திரமெளலிஆஷிகா செல்வம்நாசர்சிம்ரன்,தீபக் பாஹாசோனா ஹைடன்ரவீந்திர விஜய்மெல்வின் எம்.ரஞ்சன்அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ்ஹரிநாத்வினுஜான்அருண்மொழி சிவப்பிரகாசம்அமுதன்பேபி ஆர்ஹரணிமாஸ்டர் .ராகுல் உள்ளிட்ட ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த தெரியாதரசிகர்கள் அறிந்த அறியாத ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க டோஷ் நந்தாவின் இசையில்நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இருவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “ஒடு ராஜா ஓடு.” படத்தில், “எவ்ளோ பெரிய வாயி…”, ” 500 ரூபாக்கு உன் வாயில தான் வைப்பேன்… துப்பாக்கிய…”, “காலையில நான் டெய்லி எழுந்ததும் பயப்படுற விஷயம் ஒண்ணே ஒன்னு தான் வேற யார் கூடயும் என் பொண்டாட்டி ஒடிப்போயிடுவாளோங்கற பயம் தான்அது…” , “இம்ரான் நீ எங்க வந்தஇதுல ப்ரண்ட்லியா பண்ண என்ன இருக்கு?”ரொம்ப நாள் ஆச்சு இப்படி நடந்து இன்னொரு ரவுண்ட் போலாமா? “என் ஜாவ உடைச்சுட்டான்….” “ஹெல்ப் தானடா பண்ண சொன்னேன்… ” , “நீங்க 2 பேரும் எனக்கு ஒண்னு தான் … ” என்பது உள்ளிட்ட டபுள்ட்ரிபிள் மீனிங் வசனங்களை நடிகைசோனா உள்ளிட்ட இப்படப் பாத்திரங்கள் ஆங்காங்கே பேசியிருக்கும் காட்சிகளை விரசமில்லாமல் காட்சிப்படுத்தியிருக்கும் விதம் இப்படத்திற்கு கூடுதல் பலம்

கதாநாயகர்: படத்தின் முதல் நாயகனாக நடித்திருக்கும் குருசோம சுந்தரம் யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கதாசிரியராக கிளைமாக்ஸ் கிடைக்காமல் தவிப்பதுநண்பருடன் சேர்ந்து செட்அப் பாக்ஸ் பணத்தை இழந்து தவிப்பதுஅதை மீட்க போராடுவதுமனைவிக்கு பயப்படுவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்

மொத்தத்தில்சினிமா டைரக்ஷன் லட்சியத்தில்மனைவி சம்பாத்யத்தில்வீட்டோட புருஷனாக இருக்கும் மனோகராக “ஜோக்கர்” குருசோமசுந்தரம்அந்த பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்

அவரை மாதிரியே அண்ணன் நாசர் கைவிட்டதாதாயிஸத்தை கையிலெடுக்கத் துடிக்கும் நாசரின் தம்பி செல்லமுத்து – ரவீந்திர விஜய்யும்ரவீந்திர விஜய் செய்த கொலைக்காகதான் செய்யாத கொலைக்கு சிறை சென்றுகாதலியை நண்பனிடம் பங்கு வைத்த ஆனந்தசாமியும்…. கூட அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்

கதாநாயகியர் ப்ரியா சந்திரமெளலிஆஷிகா செல்வம்இருவரில் குருசோமசுந்தரத்திற்கு மனைவியாக வரும் பிரியா சந்திரமெளலிபுருஷனை அதிகம் கடிந்து கொள்ளும் பாசக்கார மனைவியாக அசத்தியிருக்கிறார் என்றால்ஆஷிகா செல்வம் காதலர் ஜெயிலுக்கு போனதால் அவரது நண்பருடன் சல்லாபிக்கும் நாயகியாக நன்றாகவே நடித்திருக்கிறார்

பிற நட்சத்திரங்கள்: கஞ்சா கஜபதியாக வரும் மெல்வின் எம்ரஞ்சன்மெல்வினின் பாஸ் நிகழ்கால தாதா தீபக் பாஹா (நிஜத்தில் மாஜி நாயகி சிம்ரனின் வீட்டுக்காரர்…) இவர்கள் எல்லோருக்கும் முன்னாள் தாதா இறந்த கால தாதா காளிமுத்து – நாசர்குருவின் கஞ்சா பொட்டல நண்பர் பீட்டர்பீட்டருக்கு பொட்டலம் சப்ளை செய்யும் கஞ்சா ஹோல்சேல் கஜபதி – மெல்வின் எம் .ரஞ்சன் மற்றும் அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ்ஹரிநாத்வினுஜான்அருண்மொழி சிவப்பிரகாசம்துப்பாக்கி சப்ளை செய்யும் மாற்றுத்திறனாளி அமுதன்குப்பத்து பிக்பாக்கெட் பொடிசுகள்சிறுமி மலர் – பேபி ஆர்ஹரணிசிறுவன் சத்யா – மாஸ்டர் ராகுல்… அவர்களுக்கு உதவும் லயன் – கால பைரவியாக வரும் சிம்ரன்நாசரின் ஆசை மனைவி சோனா ஹைடன்உள்ளிட்ட ஒவ்வொருவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர்

தொழில் நுட்பகலைஞர்கள்: இப்பட இரட்டை இயக்குனர்களில் ஒருவரான நிஷாந்த் ரவீந்திரனின் திரைக்கதை மற்றும் படத்தொகுப்பாகட்டும்மற்றொரு இயக்குனரான ஜித்தின் ஷங்கர் ராஜ் மற்றும்சுனில் சி.கே.வின் ஒளிப்பதிவாகட்டும் இவை மூன்றிலும் பெரிய குறையேதுமில்லைடோஷ் நந்தாவின் இசையில், “ம்பளக்கடி ஜும்பா… ஹேப்பி லைப்பு செம ஹேப்பி….”,”தமாசு தமாசு வேடிக்கை நீ பாரடா. “உள்ளிட்ட பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு பெரும் பலம்

பலம்: டார்க் காமெடி ஸ்டைலில் இப் படத்தை இயக்கி இருக்கிறார்கள் இரட்டை இயக்குனர்கள் ஜத்தின் மற்றும் நிஷாந்த்படம் ஆரம்பத்தில் வெவ்வேறு கதைகளுடன் அங்கும் இங்குமாக அலை பாயும் திரைக்கதையாகஅமைந்தாலும்பிற்பாதியில் சரியாக ஒன்று சேர்த்திருக்கிறார்கள்பல இடங்களில் டார்க் காமெடி செமயாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறதுஒரு செட்அப் பாக்சில் ஆரம்பித்து அதை வாங்குவதற்கு இடையே நடக்கும் பல சிக்கல்களை ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார்கள்….என்பது பெரும் பலம்

இயக்கம்: நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜித்தின் ஷங்கர் ராஜ் இருவரதுஇயக்கத்தில்ஒரு டயலாக் ஒரு இடத்தில் முடியும் சொல்லில் அடுத்த காட்சி வேறொரு இடத்தில் ஆரம்பமாகும் புதுமை மற்றும் , “அடுப்புக்கு பயந்து நெருப்பில் விழுந்த கதை… ” பழமொழிகள் ,ஜப்பான் காரன் டொயாட்டோ கார் மொக்க ஜோக் கு, “எங்க கிட்டேயும் இருக்குபெருசு பெருசா .. கன்னு” , என்பது உள்ளிட்ட காம நெடி டயலாக்குகள் எல்லாவற்றிலும் இப்படம் திரும்பி பார்க்க வைக்கிறது

இவை எல்லாவற்றுக்கும் மேல், “ஒப்புக்கு சப்பான்ஸ் கொசுறு” , “அன்புள்ள அரிப்பு” , “ 2 இசட் கல பொறுக்கி” , “நகுல் – கட்டத்துல சனி” , “மேரி ஆசை நாயகி” , “இம்ரான் துணை காதலன்” , “இறந்த கால தாதா” ,”நிகழ்கால தாதா“, “வருங்கால தாதா, “கீழ்பாக்கம் அங்கம்மாள் போதை மாமி மேரி” , ” பேன்ட் சட்டை கேங்கு” , “மொரட்டு பீஸ் பேன்ட் சர்ட் கேங்” , “கொலைகாரன் பேட்டையின் வேறிடத்தில்….”உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திர அறிமுகத்திற்காக திரையில் மிளிரும் சப்டைட்டில்கள் இந்த இரட்டையர்களின் இயக்கத்தில் செம புதுசாக இருக்கிறது