September 29, 2020

Kadal Thandha Kaaviyam Movie Trailer Launch Stills & News

Kadal Thandha Kaaviyam Movie Trailer Launch Stills & News

Kadal Thandha Kaaviyam Movie Trailer Launch Stills & News

ஜாதியும் மதமும் காதல் எதிரியா?

என்பதை சொல்லும்

“கடல் தந்த காவியம்”!

ஜாதி  மதம் காதலர்களை துரத்துகிறது வேறு வயின்றி காதலர்கள் தற்கொலைக்கு  முயல்கிறார்கள்.அப்போது  தேவாலயத்தின் மணி ஒலிக்கின்றது. “உங்கள்  ஒவ்வொருவரையும் தேவன் வாழ படைத்துள்ளார்”. மேற்கண்ட தேவ குரல் காதலர்களை சிந்திக்க வைக்கிறது. தங்கள் காதலை நிறைவேற்ற  எதிர்போரை எதிர்க்க துணிகின்றனர்.  இவர்கள் போராட்டத்தில் வெற்றி பெற்றார்களா இல்லையா? என்பதன் அடிப்படையில் “ஜார்ஜ் பிலிம் இன்டர்நேஷனல்” தயாரிப்பில் உருவாகியுள்ள படம் “கடல் தந்த காவியம்”.

படம் பற்றி இயக்குனர் பிரகாஷ் ஜியோ கூறுகையில், காதலையும்  அன்னை மரியன்னை பக்தியும் மைய கருவாக கொண்டு கதை களம் உருவாக்க பட்டுள்ளது. தீண்டாமை, ஜாதி கொடுமை, ஏழை  பணக்காரன் பேதம் உள்ளிட்ட சமுக சீர்கேடுகளை சுட்டிகாட்டி ஏற்ற தாழ்வுகளை மறந்து காதலர்களை வாழ வைப்போம் என்ற கருத்தினை வலிவுருத்துகிறது  “கடல் தந்த காவியம்”.

தேவாலய குரு காதல் ஜோடிக்கு மரியன்னை செய்த அற்புதங்களை சொல்வதாக கதை அமைக்கப்பட்டுள்ளது.

மரியன்னை கரங்கள் விரித்து காட்சி தருவதை கிராபிக்ஸ் முறையில் மெய் சிலிர்க்கும் வகையில் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில்    உருவாக்கியுள்ளோம். நீண்ட இடை வெளிக்கு  பிறகு மரியன்னையின் அற்புதங்களை  தாங்கி இப்படம் வெளியாகிறது.

நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் என்ற ஊரின் மையத்தில் அமைந்திருக்கும் மரியன்னை திருத்தலமும் இது தோன்றிய விதத்தையும் சிறப்புகளையும் தாங்கி  கடல் தந்த காவியம் உருவாகிறது.

நாயகன்: அப்ரஜித், நாயகி’: அஸ்ருதா, இயக்கம்: பிரகாஷ் ஜியோ, இசை & தயாரிப்பு: சரத் பிரியன்.

[Gallery not found]