September 29, 2020

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்!

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்!

கரு:வீடு புகுந்து சின்ன சின்ன பொருள்திருட்டுகளும், பெண்கள் திருட்டும் செய்யும் இரு திருடர்கள்., பெரிய திருட்டு செய்து மாட்டிக் கொள்ளும் கரு.

கதை :விமல், சிங்கம் புலி இருவரும்ஒரு மருந்து கடையில் வேலை பார்க்கிறார்கள். சிங்கம் புலி மனைவியை பிரிந்து தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். இருவருக்குமே சம்பளம் குறைவு என்பதால், அவ்வப்போது போலீஸில் மாட்டாத வண்ணம் வேலைப் பார்க்கும் கடையிலும், வெளியிலும்சின்ன சின்ன திருட்டு வேலைகளை செய்கிறார்கள்.

யாராவது வீட்டை பூட்டி விட்டு வெளியில் செல்வது இவர்களது கண்களில் பட்டு கவனத்துக்கு தெரிய வந்தால், அந்த வீட்டில் நுழைந்து அங்கு திருடிய சுவடே தெரியாத மாதிரியானசின்ன சின்ன பொருட்களை மட்டும் ஆட்டையப் போட்டு , அதை எடைக்கு போட்டும் , பாதி விலையில் விற்றும்., அதில் கிடைக்கும் பணத்தை வைத்து ஒரு மாதிரி வாழ்க்கையைஓட்டி வருகிறார்கள். இந்த நிலையில், விமல் குடியிருக்கும் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு கெஸ்ட்டாகவரும் ஆஷ்னா சவேரி மீது விமலுக்கு காதல் வருகிறது.

இந்த நிலையில், ஒருநாள் இரவு சிங்கம் புலியுடன் திருட செல்லும் ஒரு வீட்டில் இருந்து விமலுக்கு 5 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை சிங்கம் புலிக்கு தெரியாமல் எடுத்துக் கொண்டு தனது காதலியுடன் செட்டிலாகி விட நினைக்கிறார் விமல். அதே நாளில் மற்றொரு வீட்டில் திருட செல்லும் இந்த இருவர் கும்பலில் சிங்கம் புலிக்கு, அங்கு விமலுக்கு கிடைத்த மாதிரியே ஐந்து லட்சம் பணம் கிடைக்கிறது. இருவருமே இதை ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைக்கின்றனர்.

இதற்கிடையே விமல், சிங்கம் புலி திருடிய அந்த வீடுகளின் தட்டு முட்டு சாமான்களில்தங்களது பாஸ் ஆனந்தராஜின்ஒரு கோடி மதிப்புள்ளமுக்கியமான பொருள் ஒன்று சிக்கிக் கொண்டு இருப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு .. அவர்களிடம் இருந்து அந்த பொருளை மீட்பதற்காக ஆனந்தராஜின் அடியாள் கும்பல் ஒன்று அவர்களை விரட்டி விரட்டித் தேடுகிறது. அதே நேரத்தில் போலீசான பூர்ணாவும் உயரதிகாரி மன்சூரலிகான் உத்தரவுபடி , இருவரையும் வலை வீசித்தேடி வருகிறார்.

கடைசியில், விமல், சிங்கம் புலி இருவரும் போலீசில் சிக்கினார்களா? ரவுடி கும்பல் அவர்களை கடத்தியதா? அந்த ஐந்து ப்ளஸ் ஐந்து பத்து லட்சம்பணம் என்னவானது? விமல் – ஆஷ்ணாவின் காதல் என்னவானது ..? ஒரு கோடி மதிப்புள்ள பொருள் உரியவரிடம் கிடைத்ததா ? இல்லையா ..? என்பது தான் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு … ” படத்தின் மீதிக்கதையும், களமும்!

காட்சிப்படுத்தல் : சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண் இருவரது தயாரிப்பில் ., விமல் .ஆஷ்னா , பூர்ணா , மியாராவ் , சிங்கம் புலி , ஆனந்தராஜ் ,மன்சூரலி… உள்ளிட்டோர் நடிக்க ,”குண்டூர் டாக்கிஸ் ” எனும்தெலுங்குப்பட ரீமேக்காகஏ.ஆர்.முகேஷ் எழுதி இயக்கிட வெளி வந்திருக்கும் “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு … ” திரைப்படம் ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’மாதிரியான அடல்ட் காமெடி ஜானர் ஸ்டோரி படங்களின் பாதிப்பில் வந்திருக்கிறது .அது மாதிரி கதையை தேர்ந்தெடுப்பதில் இயக்குனர் காட்டிய ஈடு பாட்டை கொஞ்சம் ஸ்கிரீன் ப்ளேயிலும், காட்சிப்படுத்தலிலும்காட்டியிருந்தால் இந்தப்படம் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும்.

கதாநாயகர் : தான்நடித்த,”பசங்க” , ”களவாணி ” படங்களை இளவட்ட பசங்க பார்க்கும் மாதிரி நடித்த விமல் ., இந்த படத்தில்பசங்க பார்க்கக்கூடாத மாதிரி, அதுவும் முழுக்க சதையை மையப்படுத்திய கதையில் அதிலும் , கதையே இல்லாத கதையில் நடித்திருப்பது சற்றே பலவீனம்.

மற்றபடி ., காதல், திருட்டு போன்ற காட்சிகளில் விமல் தனது வழக்கமான பத்தாம் பசலித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே நேரம் , கவர்ச்சி புயல் மியா லியோனிடம் சிக்கித் தவிக்கும் காட்சிகளில் மட்டும் காமெடியும், காம நெடியும் ததும்ப தியேட்டரில் களேபரத்தை ஏற்படுத்துகிறார்.

கதாநாயகி :ஆஷ்னா சவேரி ., எந்தளவிற்கு இறங்கி காட்ட., சாரி நடிக்க முடியுமோ? அவ்வளவு இறங்கி இருக்கிறார். தன் உறவுப்பெண்ணுடன் ஒழுக்கக் கேடாக இருக்கும் விமல் மீது இவருக்கு ஓடிப்போகும் அளவு காதல் வருவது நம்பும்படியாக இல்லை.

காமெடியன் : காமெடியன் சிங்கம் புலியுடனானவிமலின் திருட்டு புரட்டு கூட்டணி ரசனை. அதே நேரம் சிங்கம் புலியின் மனைவி, புடவைக்காகஓடிப்போன கதை,பிள்ளைகளின் பாத்ரூம் அலசல் காட்சிகள்… உள்ளிட்டவை படத்திற்கு தேவையா ? என்பதை இயக்குனர் யோசித்திருக்கலாம். மற்றபடி , சிங்கம் புலி வழக்கமான தனது கடி காமெடிகளால் நெளிய வைக்கிறார்.

பிற நாயகியர் : போலீஸ் சப்-இன்ஸாக நடித்திருக்கும் பூர்ணா நல்ல போலீஸாக ஒரு வழியாக படத்தை க்ளைமாக்ஸில் முடித்து வைப்பது ஆறுதல்.

காமத்துடன் கவர்ச்சியையும் அள்ளித் தெளித்து விட்டு சென்றிருக்கிறார். லண்டன் கன்பைட் காஞ்சனா மியா ராய் லியோன்.அதிலும் , கவர்ச்சிகாட்சிகளில் அச்சம் மடம் பயிர்ப்பு ஞானம் எல்லாம் இல்லாது அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார்.

பிற நட்சத்திரங்கள்: அண்ணாச்சி – ஆனந்த்ராஜ், இன்ஸ்’செங்கல்வராயன் -மன்சூர்அலிகான் , மெடிக்கல் ஷாப் ஓனர் – வெற்றிவேல்ராஜ் மற்றும் லோகேஷ் உள்ளிட்டோர் தங்கள் அனுபவ நடிப்பை சில இடங்களில் ஓவராகவும் சில இடங்களில் பாந்தமாகவும் வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார்கள். பலே!

தொழில்நுட்பகலைஞர்கள் : சங்கர நாராயணன் நடராஜனின் இசையில்

“இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு … ” ,” கிச்சு கிச்சுத்தாடா ” உள்ளிட்ட பாடல்கள் ரசித்துகேட்கும் ரகம். கோபிஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவில் காட்சிகளில் ஒரு குறையுமில்லை … என்பது ஆறுதல்!

பலம் : இப்படிப்பட்ட காம களியாட்டப்படத்தில் , பூர்ணா ., துளியும் கவர்ச்சி காட்டாது , அதிரடி பெண் போலீஸாக அசத்தியிருப்பது பலம்.

இயக்கம் :காதல்,காமம் , காமெடி, கவர்ச்சி இவை நான்கையும் நம்பி மொத்தப்படத்தையும் இயக்கியிருக்கிறார் ஏ.ஆர்.முகேஷ். முதல் பாதி கதையே இல்லாமல் வெறும் காட்சிப்படுத்தல்களுடன் ரொம்பவே மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாவது பாதியில் ஆனந்த் ராஜ், மன்சூரலிகான்வருகைக்கு பின் படம் சற்றே வேகமெடுக்கிறது . ‘ஹர ஹர மகாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படங்களை மாதிரியான அடல்ட் காமெடி ஜானர் ஸ்டோரியை தேர்ந்தெடுப்பதில் காட்டிய ஈடு பாட்டை கொஞ்சம் ஸ்கிரீன் ப்ளேயிலும், காட்சிப்படுத்தலிலும்காட்டியிருந்தால் இந்தப்படம் இன்னமும் சிறப்பாக, இளம் வயதினரை கவரும் படி இருந்திருக்கும்.

மற்றபடி : படத்தில் சிங்கம் புலியின் வாரிசாகஇடம்பெறும் சிறுவர்கள் முதல் ஹீரோ விமல் வரை ஒன் பாத்ரூம் ,டூ-பாத்ரூம் காட்சிகளை அடிக்கடி அசிங்கமாக காட்டுவது ., சிங்கம்புலியின் அம்மாவாக வரும்அந்த பாட்டி கேரக்டர் கூட மூட்டுவலி என தொடையை காட்டியபடியே இருப்பது உள்ளிட்ட அசுசைக் காட்சிகளைக் காட்டிலும் வசனங்களில் பெரிய அளவில் வக்கிரம் இல்லாதது ஆறுதல்!