Category Archives: Event Videos

jango-movie-pooja-30

Jango Movie Pooja

Jango Movie Pooja

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக

தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம்

“ஜாங்கோ

jango-movie-pooja-30

 

திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக

தயாரிப்பாளர் சீ.வி.குமார் தயாரிக்கும் புதிய படம்

“ஜாங்கோ

தமிழ் சினிமாவிற்கு புதிய அத்தியாயங்களாக இன்று விளங்கும் பல இயக்குனர்களை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் சீ.வி.குமார்திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக “ஜாங்கோ” எனும் புதிய படத்தை தயாரிக்கின்றார்.

 இப்படத்தின் படப்பூஜை இன்று இனிதே நடைபெற்றது. “ஜாங்கோ” படத்தின் படப்பிடிப்பை பாரதிய ஜனதா கட்சி தமிழக இளைஞர் அணிதலைவரும்,  மஹாராஷ்ட்ரா நவ்நிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக்ரேவின் நெருங்கிய நண்பருமான திரு. சதிஷ் குமார் போன்ஸ்லேதுவங்கி வைத்தார்.

இயக்குனர் அறிவழகனிடம் உதவி இயக்குனராகவும், முண்டாசுப்பட்டி படத்தில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய மனோகார்த்திக்கேயன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

சதிஷ் என்ற புதுமுகம் இப்படத்தின் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கருணாகரன், ராம்தாஸ், RJ ரமேஷ், ஹரிஷ் பெராடி, துளிசி, சந்தானபாரதி, சிவாஜி, கஜராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

 தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

தயாரிப்பு – சீ.வி.குமார் (திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்)

இயக்கம் – மனோ கார்த்திக்கேயன்

ஒளிப்பதிவு – கார்த்திக் K தில்லை

இசை – நிவாஸ் பிரசன்னா

படத்தொகுப்பு – ராதாகிருஷ்ணன் தனபால்

கலை – கோபி ஆனந்த்

காஸ்ட்யும் டிசைனர் – மீனாக்ஷி ஷ்ரிதரன்

சண்டைப்பயிற்சி – ஹரி திணேஷ்

மக்கள் தொடர்பு – நிகில்

  

 

kadikara-manithargal-6

கடிகார மனிதர்கள் விமர்சனம்!

கடிகார மனிதர்கள் விமர்சனம்!

kadikara-manithargal-6

ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.

ஒரு மகள், இரண்டு மகன், கணவன், மனைவி எனக் கிஷோரின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். எவ்வித முன்னறிவிப்புமின்றி, வீட்டைக் காலி செய்யவேண்டிய இக்கட்டான சூழல் நேர்கிறது. பொருட்களை வண்டியில் ஏற்றிய பின்பே வீடு தேடி அலைகின்றனர். பல போராட்டத்திற்குப் பிறகு, 3500 ரூபாய்க்கு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கிறது. ஆனால், ஒரு வீட்டில் அதிகபட்சம் நான்கு பேர் தான் தங்கவேண்டுமென வீட்டு உரிமையாளர் பாலாசிங் கறாராகச் சொல்லிவிடுகிறார்.

அந்த ஒண்டிக்குடித்தனத்துக்குள், தனது கடைசி மகனை எவருக்கும் தெரியாமல் வளர்க்கப் படாதபாடுபடுவதுதான் படத்தின் கதை.

உறைவிடம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. வீடு தேடி அலைந்தவர்களுக்கும், வீட்டு உரிமையாளரின் தொல்லைகளுக்கு ஆளானவர்களுக்கும் படம் மிக நெருக்கமானதாக இருக்கும். தண்ணீர், மின்சாரம், விருந்தாளிகள் ஒருநாளுக்கு மேல் தங்கக்கூடாது என எத்தனை எத்தனை கண்டிஷன்கள்?

குடும்பத்தலைவனாகத் தகப்பனாகக் கணவனாகக் கிஷோர் கலக்கியுள்ளார். தன் மகனைப் பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுக் கொண்டு வரும் வலியையும் குற்றவுணர்வையும் பரிதவிப்பையும் அழகாகப் பிரதிபலித்துள்ளார். வீட்டிற்காகக் குடும்பத்துடன் நடுத்தெருவில் கிஷோர் நிற்கும் காட்சியில் தான் படம் தொடங்குகிறது. பதற்றமடையாமல் அந்தக் காட்சிகளைக் கடப்பது சிரமம். லதா ராவும் சிறப்பாக நடித்துள்ளார்.

வீட்டு உரிமையாளரின் மகளைக் கல்யாணம் செய்து கொண்டு ‘ஹவுஸ் ஓனர்’ ஆவதுதான் கருணாகரனின் கனவும் லட்சியமும். பேச்சுலருக்கு வீடில்லை என்பதால், சாலையில் பிச்சையெடுக்கும் ஒரு பாட்டியுடன் வாடகை வீட்டில் குடியேறுகிறார். படத்தின் கலகலப்புக்கு உதவுவது அந்தப் பாட்டி தான்.

யாருக்கும் பாலா சிங் போலவும், அவரது அம்மா போலவும் வீட்டு உரிமையாளர்கள் அமைந்துவிடவே கூடாது. ஒரு மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அப்பொழுது, “வாடகை வீட்டில் சாகுறதே தப்பு. அதில் இவ்ளோ நேரம் பிணத்தை எடுக்காமல் வச்சிருப்பீங்களா?” எனத் தயவு தாட்சண்யம் இல்லாமல் எரிந்து விழுவார்கள். பெரியவர்களின் உலகில் தன்னை மறைத்துக் கொண்டு வாழும் சிறுவன் கவியாக மாஸ்டர் ரிஷியும் நன்றாக நடித்துள்ளான். விடியற்காலையில் முதல் ஆளாக எழுந்து எவருக்கும் தெரியாமல் கழிவறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துப் பள்ளிக்குத் தயாராகவேண்டும். வீட்டை விட்டுப் போவதும் வருவதும் ஒரு பெட்டிக்குள் ஒடுங்கிய பயணமாகிறது அச்சிறுவனுக்கு. தனது வீட்டில் வரிசையாகச் செல்லும் எறும்புகளைப் பார்த்து, “இந்த எறும்புகளுக்கு எல்லாம் சொந்த வீடா வாடகை வீடாப்பா?” எனக் கேட்கிறான் சிறுவன். “அதற்கும் சேர்த்துத்தான் நாம வாடகை கட்டுறோம்” என விரக்தியாகப் பதில் சொல்வார் கிஷோர். அந்த விரக்தியும் ஏக்கமும் கிஷோரை எந்த அளவுக்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் முடிவு.

வாழ்வியலைத் தேடிக் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருபவர்கள், தாங்கள் உழைக்கும் ஊதியத்தைப் பெரும்பாலும் வாடகை தந்தே இழக்கின்றனர். வீட்டு உரிமையாளர் எப்பொழுது வேண்டுமானாலும் காலி செய்யச் சொல்வார். ‘சொந்த வீடில்லாதவன் இங்கே உள்நாட்டு அகதியே’ என்கிற கருத்தை ஆழப்பதிக்கிறது படம். சாம் C.S.-இன் ஒலிப்பதிவும், உமா சங்கரின் ஒளிப்பதிவும், சாமானியனின் பரிதவிப்பைக் கச்சித.மாகப் பதிந்துள்ளன. இயக்குநர் வைகறை பாலனின் வசனங்கள் மையக்கருவை விட்டு விலகாமல் படத்திற்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

 

kaatrin-mozhi-pooja-stills-news-3

KAATRIN MOZHI POOJA STILLS & VIEDO & NEWS

KAATRIN MOZHI  POOJA STILLS & VIEDO & NEWS

பாப்டா மீடியா ஒர்க்ஸ் இந்தியா PVT தயாரிப்பில் , ராதா மோகன் இயக்கத்தில் , ஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள ” காற்றின் மொழி “ திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது ! 
ஜோதிகா நடிப்பில் இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ” மொழி “. இப்படத்தை தொடர்ந்து சுமார் பத்து வருடத்திற்க்கு பின்னர் ஜோதிகா மற்றும் இயக்குநர் ராதா மோகன் கூட்டணி மீண்டும் “ காற்றின் மொழி “ படத்தில் இணைகிறது. இப்படத்தை பாப்டா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் , S விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இப்படத்தை தயாரிக்கிறார்கள். ஹிந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற துமாரி சுலு திரைப்படத்தின் ரீமேக்காக இப்படம் சிறிய மாற்றங்களோடு உருவாகவுள்ளது.
இப்படத்தின் பூஜை படக்குழுவினர் மங்களகரமாக ஜூன் 4 ( இன்று ) நடைபெற்றது. இதில் நடிகர் சிவகுமார் கலந்துகொண்டு மேலும் சிறப்பு சேர்த்தார். இப்படத்தின் படப்பிடிப்பு  சென்னையில் தொடர்ந்து 50 நாட்கள் நடைபெறவுள்ளது. அனைத்து நடிகர்களும் இப்படத்துக்குக்காக நிறைய நாட்கள் கால்ஷீட் வழங்கியுள்ளனர்.
இப்படத்தில் விதார்த் , லட்சுமி மஞ்சு , M.S. பாஸ்கர் , மனோபாலா , குமாரவேல் , மோகன் ராமன் , உமா  பத்மநாபன் , சீமா தனேஜா , சிந்து மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இசை A.H. காஷீப் , பாடல் மதன் கார்க்கி , கேமரா மகேஷ் முத்துசாமி , கலை கதிர் , உடை பூர்ணிமா , எடிட்டர் பிரவீன் KL , வசனம் பொன் பார்த்திபன் , PRO ஜான்சன்.
அக்டோபர் 2018 வெளியீடாக இப்படம் வெளியாகவுள்ளது.
dubbing-union-press-meet-14

தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராம ராஜ்யம் அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டிடும் ரோகினி பேசியது !!

தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராம ராஜ்யம்  அணி சார்பில் துணை தலைவர் பதவிக்கு போட்டிடும் ரோகினி பேசியது !!
https://www.youtube.com/watch?v=bB14NUmoWrA
டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் எனக்கு தெரிந்து இதயத்தை திருடாதே என்ற படத்தின் மூலமாக நான்  பின்னணி குரல் கொடுத்து வருகின்றேன்.  இதுவரை இந்த சங்கத்தில் எந்த பதவிக்கும் தேர்தல் நடந்தது கிடையாது நானும் எண்ணியது இல்லை ஆனால் இன்று  கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் தோன்றுகிறது.
நான் வெளியில் சென்று பார்க்கும்போது விவசாய பிரச்சினைகள் உட்பட எந்த விதமான பிரச்சினையாக இருந்தாலும் குரல் கொடுக்கும் நான் என்னுடைய துறையில் நடக்கும் பிரச்சினையை  நான் கவனிக்கவில்லை என்பது மிகப்பெரிய தவறு என்பதை நான் உணர்கிறேன். முதலில் நான் மூத்தவர்கள் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் என்ற ஒரு நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையில் தான் நான் மற்ற வேலைகளை  கவனித்துவந்தேன்.
ஆனால் மெல்ல மெல்ல  முறைகேடுகள் நடைபெறுவதும் , உழல் நடைபெறுவதும் இன்னும் நிறைய பின்னணி கலைஞர்கள் வேலை இல்லாமல் திண்டாடி கொண்டிருப்பதை பார்த்ததும் முதலில் இந்த பிரச்சினையை தான் கவனிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த ஒரு மாத காலமாக சங்கத்தில் நடந்த அனைத்து முறைகேடுகளையும் தெரிந்து கொண்டேன். தெரிந்து கொண்ட பிறகு  நானும் பொறுப்புக்கு வரேன் அனைவரும் ஓன்றாக பணியாற்றலாம்  அனைத்தையும் சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
வீடு வீடாக சென்று அவர்களை பார்த்த போது  அவர்கள் அனைவரும் கூறிய ஓரே விஷயம் என்னவென்றால் நங்கள் டப்பிங் பேசியே ரொம்ப வருடங்கள் ஆகிவிட்டதாக கூறினார்கள். பாலன் என்ற ஒரு உறுப்பினர் அவர் இறந்த பின்பு அவருடைய உறப்பினர் அட்டையை கொண்டுவந்து அவருடைய இறுதி சடங்கிற்கு தேவையான பணத்தை கேட்டதற்கு மதிக்கவே இல்லை என்றும் ஏனோ தானோ என்று 15 ஆயிரம் ரூபாய் மட்டுமே கொடுத்ததாக கூறினர்.
இவ்வாறு பல நிகழ்வுகள் கேட்கும்போது மிகவும் கஷ்டமாக இருந்தது இந்த நிலை மாறவேண்டும் என்றால் இந்த தேர்தலில் இவர்களுடன் கைகோர்த்து நிற்கவேண்டும். இந்த தேர்தலில்  நான் துணை தலைவர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்தேன். 34 வருடங்களில் இவர்கள் உறுபினர்களுக்கு ஓய்வூதியம் பணம் , கல்வி உதவி தொகை என பல்வேறு திட்டங்களை வைத்திருந்தாலும் அவர்களுக்கு வேலை இல்லை என்பதை நான் ஓரு கலைஞராக உணர முடிகிறது. டப்பிங் கலைஞர்கள் அனைவர்க்கும் ஓரு சுழற்சி முறையில் வேலைகள் வர ஏற்பாடுகள் செய்யபட வேண்டும்.
இந்த முறைகேடுகளை எல்லா உறுப்பினர்களுக்கும் சென்றடைய வேண்டும் எனபது தான் இந்த நிகழ்வு. இன்னும் 2 நாட்கள் மட்டும்தான் உள்ளது அணைத்து உறுப்பினர்களும் வந்து வாக்களிக்க வேண்டும்.  இனி ஒரு மாற்றம் வேண்டும்  வேண்டும் அந்த மாற்றத்தினால் நன்மை நடக்கும் என்ற நம்பிக்கையில் அனைவரும் வந்து எங்கள் அணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ராம ராஜ்ய அணி சார்பில் பொது செயலாளர் பதவிக்கு போட்டியிடும் தாசரதி பேசியது !!
திரையில் நடிக்கும் அணைத்து நடிகர், நடிகைகளுக்கு உயிர் கொடுக்கும் அதாவது குரல் கொடுக்கும் கலையில் இடுபட்டுள்ள உறுபினர்களை கொண்டுள்ள சங்கம் எங்கள் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம். அணைத்து நடிகர்களுக்கும் குரல் கொடுக்கும் எங்களுக்கு நங்கள் சொந்த வாழ்வுரிமையை மீட்கவும் அதை பாதுகாக்கவும் குரல் எழுப்ப முடியாமல் தவித்த நிலையில் இன்று வணக்கத்திற்குரிய திரு. G.V. ரத்னகுமார் அவர்களின் பெரும் முயற்சியில் உயர்நீதிமன்றத்தின் மேர் பார்வையில் ஒரு நியமான தேர்தலை நோக்கி எங்கள் சங்கம் முன்னேறி செல்கிறது.
1983-ல் பதிவு செய்யப்பட்டது தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்கம். அதில் இருந்து பல கட்ட வளர்ச்சிகளையும் கிட்டத்தட்ட நான்கு தலைமுறைகளையும் எங்கள் சங்கம் பார்த்துள்ளது . திரைத்துறையில் தயாரிப்பாளர்கள் சங்கத்தை தவிர FEFSI கூட்டமைப்பில் உள்ள 23 சங்கங்களில் எங்கள் சங்கமும் ஒன்று.
இதில் மற்ற 22 சங்கங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியில் எங்கள் சங்கத்தின் வளர்ச்சியை ஓப்பிட்டு பார்க்கும்போது மிகவும் பின்தங்கியே உள்ளோம் இதுவே உண்மை. காரணம் என்னவென்றால் மிகவும் பிரபலமான நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தால் மட்டுமே இந்த சங்கம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடையும் என்ற மாயையை 3 தலைமுறைகளாக நம்பவைத்ததுள்ளனர். அதை இந்த தலைமுறையிலாவது அதை உடைக்கவேண்டும் எனபது தான் இந்த போராட்டம்.
மற்ற எல்லா சங்கத்திலும் பெருவாரியாக உறுப்பினர்களுக்கு காப்பீடும் , ஓய்வூதிய திட்டங்கள் , ஓய்வுபெறும் பயன் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு சங்கத்தில் உறப்பினராக உள்ள ஒருவர் அவருடைய உறுப்பினர் அட்டையை கொண்டுவந்து சங்கத்திடம் ஒப்படைத்து ஓய்வு பெற விரும்பினால் அவருக்கு தகுந்த மரியாதையை செலுத்தி விழா அமைத்து சங்கத்தில் உள்ள அணைத்து உறுப்பினர்களும் ஒன்றுகூடி கைதட்டி உற்சாகபடுத்தி அவர் மேல் உள்ள அன்பை வெளிப்படுத்தி அவருக்கு ஓய்வு தொகையாக ஒரு குறுப்பிட்ட தொகையை வழங்கி அவருடைய வாழ்வுரிமையை பாதிக்காத அளவில் பணிகளை செய்கின்றது.
டப்பிங் கலைஞர்கள் சங்கதை பொறுத்தவரை இந்த மாதிரியான செயல்கள் நடைமுறையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். இல்லாமல் போனதிற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் ஆனால் அதற்கு காரணமாக இருந்தது சிலபல முறைகேடுகள் அந்த முறைகேடுகளை பட்டியலிட்டால் ஒரு புத்தகமே போடமுடியும். இருந்தாலும் அதில் உள்ள ஒரு சில முறைகேடுகளை தான் உங்கள் பார்வைக்கு கொண்டுவந்துள்ளோம் உங்கள் மூலமாக எங்கள் அணைத்து உறுபினர்களுக்கும் கொண்டு செல்லவேண்டும் எனபது முக்கியம்.
இந்த மாதிரியான முறைகேடுகள் வேறுஎங்கும் நடக்காமல் தடுக்கவேண்டும் என்ற ஒரு எண்ணம். டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் கல்வி உதவித்தொகையில் முறைகேடு , சம்பளம் பிடித்தலில் முறைகேடு , மருத்துவ உதவி தொகையில் முறைகேடு , இதுமட்டுமல்லாமல் நல்உள்ளம் படைத்த சில கல்லூரிகள் வருடா வருடம் வழங்கும் குறுப்பிட்ட இலவச கல்லுரி சீட்டுகள் வரைக்கும் இவர்களின் முறைகேடுகள் நிகழ்கின்றன.
சில முறைகேட்டை உறுபினர்கள் தட்டிகேட்டனர் ஆனால் அவர்கள் அனைவரும் அடக்கமுறைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் ஆளாகினார்கள். சிலர் சங்க நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் சங்க விரோதிகள் என்கிற முத்திரையுடன் இந்த மாதிரியான செயல்களில் தொடந்து இடுபட்டு வருவதால் தென்னிந்திய திரைப்பட சின்னத்திரை நடிகர்கள் மற்றும் டப்பிங் கலைஞர்கள் சங்க தேர்தலில் ” ராம ராஜ்யம் ” அணியாக சந்திக்கவுள்ளோம்.
dubbing-union-press-meet-1
dubbing-union-press-meet-3
dubbing-union-press-meet-5
dubbing-union-press-meet-7
dubbing-union-press-meet-8
dubbing-union-press-meet-10
dubbing-union-press-meet-11
dubbing-union-press-meet-14
dubbing-union-press-meet-17
dubbing-union-press-meet-19
dubbing-union-press-meet-21
dubbing-union-press-meet-22
dubbing-union-press-meet-23
dubbing-union-press-meet-24
dubbing-union-press-meet-25
dubbing-union-press-meet-27
dubbing-union-press-meet-29
dubbing-union-press-meet-32
dubbing-union-press-meet-34
dubbing-union-press-meet-35
dubbing-union-press-meet-36
dubbing-union-press-meet-39
dubbing-union-press-meet-45
dubbing-union-press-meet-46
dubbing-union-press-meet-48
dubbing-union-press-meet-50
dubbing-union-press-meet-52
dubbing-union-press-meet-53
dubbing-union-press-meet-56
dubbing-union-press-meet-58
dubbing-union-press-meet-59
dubbing-union-press-meet-60
dubbing-union-press-meet-62
dubbing-union-press-meet-64
dubbing-union-press-meet-65

Pathungi Paayanum Thala Movie Team Interview

Actor and Director RNR Manohar explained his role in Pathungi Paayanum Thala Movie

Actor Michael explained his role in Pathungi Paayanum Thala Movie

 

Actor Singapore Deepan explained his role in Pathungi Paayanum Thala Movie

 

Producer Hameena Hussain explained her role in Pathungi Paayanum Thala Movie

Music Director Vallavan Chandrasekaran explained his role in Pathungi Paayanum Thala Movie