August 6, 2020

ஒரு காதல் ஜோடியின் கதையே சீமத்துரை – விமர்சனம்!

 ஒரு காதல் ஜோடியின் கதையே சீமத்துரை – விமர்சனம்! ஊரில் உள்ள காதல் ஜோடிகளை சேர்த்து வைப்பது தான் நாயகன் கீதன் மற்றும் நண்பர்களின் தலையாயப்பணி. தெருத்தெருவாக சென்று கருவாடு விற்று மகனை கல்லூரியில் …

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்!

இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு – விமர்சனம்! கரு:வீடு புகுந்து சின்ன சின்ன பொருள்திருட்டுகளும், பெண்கள் திருட்டும் செய்யும் இரு திருடர்கள்., பெரிய திருட்டு செய்து மாட்டிக் கொள்ளும் கரு. கதை :விமல், சிங்கம் புலி …

எனக்குன்னு ஒரு இடம் கிடைச்சிருக்கு சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடலுக்கு கிடைத வெற்றியால்  அம்ரீஷ்!

எனக்குன்னு ஒரு இடம் கிடைச்சிருக்கு சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடலுக்கு கிடைத வெற்றியால்  அம்ரீஷ்! சின்ன மச்சான் செவத்த மச்சான் என்ற பாடல் சார்லி சாப்ளின் 2 படத்தில் இடம் பெற்றிருந்த பாடல் இது…அம்ரீஷ் இசையில் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி …

அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “   ராஜபாண்டி இயக்குகிறார்.இன்று படப்பிடிப்பு துவங்கியது!

அரவிந்த்சாமி – ரெஜினா நடிக்கும் “ கள்ளபார்ட் “   ராஜபாண்டி இயக்குகிறார்.இன்று படப்பிடிப்பு துவங்கியது! விக்ரம் நடித்து வெற்றி பெற்ற “ ஸ்கெட்ச் “ படத்தை தயாரித்த மூவிங் பிரேம் பட நிறுவனம் சார்பாக எஸ்.பார்த்தி, எஸ்.எஸ்.வாசன் இருவரும் தற்போது …

Odu Raja Odu Tamil Movie Review

Odu Raja Odu Tamil Movie Review ஓடு ராஜா ஓடு விமர்சனம் கரு: பழைய பெருமையில் வாழும் இறந்த கால தாதாவுக்கும், கஞ்சா கடத்தல்… என சிட்டியை கைக்குள் வைத்திருக்கும் நிகழ்கால தாதாவுக்கும், அண்ணன் விட்டதை பிடிக்க நினைக்கும் வருங்கால தாதாவான தம்பி, இவர்கள் மூவருக்கும் இடையிலான ஈகோ மோதலில் சிக்கித் தவிக்கும் நாயகர் மற்றும் நண்பர்களே ஓடு ராஜா ஓடு படக்கரு.  கதை: சென்னையில் சினிமா கதாசிரியராக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார் நாயகன் குருசோமசுந்தரம். இவரது மனைவி லட்சுமி பிரியா மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். தங்கள் திருமண நாளில் வீட்டில் செட்–அப் பாக்ஸ் வாங்கி வைத்து புருஷனுடன் படம் பார்க்க ஆசைப்படுகிறார் லட்சுமிபிரியா. இதற்காக குருசோம சுந்தரத்திடம் பணம் கொடுத்து செட்–அப் பாக்ஸ் வாங்கி வரச் சொல்லுகிறார்.  அந்த பகுதியில் கஞ்சா விற்று வரும் தனது நண்பருடன் சேர்ந்து செட்–அப் பாக்ஸ் வாங்க செல்லுகிறார் குரு சோமசுந்தரம். அங்கு எதிர்பாராத விதமாக மனைவி கொடுத்த பணத்தை இழக்கிறார். மேலும் சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். இது ஒரு பக்கம் நடக்க, மற்றொரு பக்கம் அந்தப் பகுதியில் பெரிய தாதாவாக இருக்கும் சாருஹாசன், கவலைக்கிடமான நிலையில், இனிமேல் ரவுடி தொழில் செய்யக் கூடாது என்று அவரது மகன் நாசரிடம் சத்தியம் வாங்கி விட்டு இறந்து போகிறார். ஆனால், நாசரின் தம்பி ரவீந்திர விஜய்யோ நாசரை கொன்று விட்டு, தாதாவாக முயற்சி செய்கிறார். இச்சூழலில் நாசரால் ஏமாற்றப்பட்ட மற்றொரு நாயகர் ஆனந்தசாமி 5 வருடம் சிறை தண்டனை பெற்று வெளியில் வருகிறார். நாசரை கடத்தி அவரிடம் பணம் பறிக்க முயற்சி செய்கிறார்.  அதே பகுதியில் ஆதரவற்ற சிறுவர்கள், சிறு சிறு திருட்டு தொழில்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் எல்லோரும் ஒரு அசாதாரண சூழலில் சந்திக்கிறார்கள். இறுதியில் என்ன ஆனது? குருசோம சுந்தரம் செட்–அப் பாக்ஸ் வாங்கினாரா? நாசர் ஆனந்தசாமி, ரவீந்திர விஜயால் கொல்லப்பட்டாரா? இல்லையா…? இப்படத்தில், சிம்ரன் அவரது கணவர் திபக்பாஹா ஆகியோரின் ரோல் என்ன…? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொல்கிறது… “ஓடு ராஜா ஓடு” படத்தின் மீதிக்கதையும், களமும்!  காட்சிப்படுத்தல்: விஜய் மூலன் டாக்கிஸ் வழங்கும் கேன்டல் லைட் புரொடக்சன்ஸின் தயாரிப்பில் “ஜோக்கர்” குருசோமசுந்தரம், ஆனந்தசாமி, ப்ரியா சந்திரமெளலி, ஆஷிகா செல்வம், நாசர், சிம்ரன்,தீபக் பாஹா, சோனா ஹைடன், ரவீந்திர விஜய், மெல்வின் எம்.ரஞ்சன், அபிஷேக் கே.எஸ் வெங்கடேஷ், ஹரிநாத், வினுஜான், அருண்மொழி சிவப்பிரகாசம், அமுதன், பேபி ஆர். ஹரணி, மாஸ்டர் ஏ.ராகுல் உள்ளிட்ட ரசிகர்களுக்கு நன்கு தெரிந்த தெரியாத, ரசிகர்கள் அறிந்த அறியாத ஒரு பெரும் நட்சத்திர பட்டாளம் நடிக்க டோஷ் நந்தாவின் இசையில், நிஷாந்த் ரவீந்திரன் மற்றும் ஜத்தின் ஷங்கர் ராஜ் இருவரது இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் “ஒடு ராஜா ஓடு.” படத்தில், “எவ்ளோ பெரிய வாயி…”, ” 500 ரூபாக்கு உன் வாயில தான் வைப்பேன்… துப்பாக்கிய…”, “காலையில நான் டெய்லி எழுந்ததும் பயப்படுற விஷயம் ஒண்ணே ஒன்னு தான் வேற யார் கூடயும் என் பொண்டாட்டி ஒடிப்போயிடுவாளோங்கற பயம் தான், அது…” , “இம்ரான் நீ எங்க வந்த? இதுல ப்ரண்ட்லியா பண்ண என்ன இருக்கு?”ரொம்ப நாள் ஆச்சு இப்படி நடந்து இன்னொரு ரவுண்ட் போலாமா? “என் ஜாவ உடைச்சுட்டான்….” “ஹெல்ப் தானடா பண்ண சொன்னேன்… ” …

கடிகார மனிதர்கள் விமர்சனம்!

கடிகார மனிதர்கள் விமர்சனம்! ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் …