Category Archives: Reviews

விஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம்

விஜய் சேதுபதியின் பிறந்நாள் பரிசு ஒரு லட்சம்

நடிகர் விஜய் சேதுபதியின் 41வது பிறந்தநாளை ஒட்டி ஒரு லட்ச ரூபாய்க்கு மேலான பரிசுப் போட்டிகளை திரைப்படம் டாட் காம் இணைய இதழ் அறிவித்துள்ளது.

இந்தப் போட்டிகளில் விஜய் சேதுபதியை வரையும் ஓவியப்போட்டி, மிமிக்ரி போட்டி, டிக்டாக் போட்டி மற்றும் விஜய் சேதுபதியை குறித்த விமர்சன போட்டி இடம் பெறுகிறது.

இந்தப் போட்டிகள் ஒவ்வொன்றுக்கும் முதல் பரிசு ரூபாய் 10,000 இரண்டாம் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் மூன்றாம் பரிசு ரூபாய் 3 ஆயிரம் என வழங்கப்படுகிறது.

இந்தப் போட்டிகள் தவிர பெண்களுக்காக பிரத்தியேகமாக ஒரு போட்டியும் நடத்தப்படுகிறது விஜய் சேதுபதியை எதனால் பிடிக்கும் என்று சிறப்பாகச் சொல்லும் 41 பெண்களுக்கு தலா 1,000 வீதம் பரிசு அளிக்கப் படுகிறது.

இந்த போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 30, 2019.

இந்தப் போட்டிகள் குறித்த மேலதிக விவரங்களுக்கு திரைப்படம் டாட் இன் என்ற இணைய தளத்தை சொடுக்கவும்.

Dr. Raj Palaniappan (Director, Apollo Institute of Bariatrics) presents ‘Reclaim Life’ – A Health and Wellness awareness initiative

Dr. Raj Palaniappan (Director, Apollo Institute of Bariatrics) presents ‘Reclaim Life’ – A Health and Wellness awareness initiative

Dr. Raj Palaniappan, Director and Lead Surgeon of Apollo Hospitals: Institute of Bariatrics, hosted ‘Reclaim Life’- a health and wellness awareness initiative on 26th November at Taj Coromandel commentating World Anti-Obesity Day. Focussing on Holistic Health, the evening featured an outstanding interactive session on Science Behind Weight Loss by him followed by scintillating conversation with guest panelists Ms. Shiny Surendran (Sports & Weight Loss Nutritionist), Ms. Keerthana Swaminathan (Fitness Psychologist) and Mr. Ajit Shetty (Celebrity Fitness Trainer)
The event perfectly suited the concept with emphasis on scientific approach to obesity by the expert speakers which kept the entire crowd of 350+ guests on the edge of their seats with facts and information never heard before. The stunning data put forward by Dr.Raj was an eye opener for all, especially about the body composition comparison Y-Y paradox theory. The icing on the cake was the way the entire event was planning to deliver this strong message in a public-friendly way filled with funny moments and inspiring stories shared throughout the entire evening.
This was followed by a stand-up comedy by Dr.Rohini R (ENT Surgeon) who tickled the funny bone further through her real life jokes. The evening ended with a sumptuous dinner which showed the intent of health concept all over the large spread with low-calorie yet very tasty menu carefully chosen by Raj personally and crafted to perfection by the chefs at Taj. A special mention has to done about two interesting fitness activities that took place along with the event. An instant body composition analysis check to understand your body and a cycle where you pedal your own smoothie. These two activities were a hit as well with guests queuing up to have a go at them even long past the event time. To sum it up, it was a perfect evening to remember for a long time to come. Chennai needed such initiative, especially after knowing it’s the most obese city in the country.

Deva 30 First Live In Concert 21.12.19

Deva 30 First Live In Concert 21.12.19

தேனிசைத் தென்றல் " தேவா ” – முதன் முறையாக
Live Show – பண்ணுகிறார்
400 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேனிசை தென்றல் தேவா இதுவரை இந்தியாவில்
Live Show நடத்தியதில்லை – முதன் முறையாக பாண்டிச்சேரியில் மிகப் பிரம்மாண்டமான
இசைவிழா நடத்த உள்ளார் . தன்னுடன் திரைப்படங்களுக்கு பணியாற்றிய சகோதரர்கள் சபேஷ்
முரளி , சிவா சம்பத் , மகன் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோருடன் ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டம்
என விருந்து படைக்க உள்ளார் .
இதுவரை Live Show பண்ண ஒத்துக்காத தேனிசை தென்றல் தேவா – Show பண்ண
ஒத்துக்கொண்ட தன் காரணம் SRBS Entertainment – தான் .

யார் இந்த SRBS Entertainment ?
சுரேஷ் மற்றும் அவரது சகோதரர்கள் இந்த SRBS Entertainment – ஐ நடத்தி வருகிறார்கள் .

சுரேஷ் திரைப்பட ஸ்டில்போட்டோகிராபர் – நிறைய படங்களில் பணியாற்றி உள்ளார் .
சினிமாக்காரர்களுக்கு இவர் தெரிந்த முகம் – SRBS Modeling Studio நடத்தி வந்தவர் SRBS
Entertainment என்ற பெயரில் கடந்த மூன்று வருடங்களாக பண்ருட்டி , விழுப்புரம் , கடலூர்
போன்ற ஊர்களில் நடிகர் , நடிகைகள் மற்றும் சினிமா கலைஞர்களை வைத்து பிரமாண்டமாய்
கலைநிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார் . –

தேனிசை தென்றல் தேவாவை Live Show பண்ண இவர்கள் அணுகிய போது முதலில் யோசித்த
தேவா அவர்கள் , இவர்கள் நடத்தியுள்ள பண்ருட்டி , விழுப்புரம் , கடலூர் நிகழ்ச்சிகளை பார்த்து
ஆச்சரியப்பட்டு உடனே கூப்பிட்டு சம்மதம் தெரிவித்தார் .தேவா OK சொன்ன வுடன் SRBS Entertainment வுடன் Preniss International Pvt Ltd என்ற
கம்பெனியும் இணைந்து இந்த Show – வை நடத்த முன் வந்துள்ளது .
தேவா * Live show – வின் அறிமுகவிழா வடபழனி சிகரம் ஹாலில் மிக சிறப்பாக நடைப்பெற்றது .
அதில் பேசிய தேவா , பாண்டிச்சேரி ரசிகர்களின் மத்தியில் முதன் முதலில் Live Show பண்ணுவதில்
பெரு மகிழ்ச்சியடைகிறேன் . அவர்கள் வாழ்வில் மறக்கமுடியாத இசை விழாவாக இந்த Deva Live
Show நிச்சயமாக இருக்கும் என்றார் .SRBS சுரேஷ் கூறும் போது ஒண்ணு நம்ம சாதிக்கணும் இல்ல சாதிச்சவங்களை வச்சி சாதிக்கணும்
. இதுதான் என்னோட கொள்கை அந்த வகையில் தேனிசை தென்றல் தேவா சாரை கமிட் பண்ணி
Live show நடத்துறதே ஒரு சாதனைதான்னு நான் நினைக்கிறேன் . இதெல்லாம் என் ஒருத்தனால
நடக்கல – எனக்கு பின்னாடி என் Brothers , Friends என்று பலபேர் இருக்காங்க . அதுல

யோகராஜ்ங்கிற நண்பர் இதுக்கெல்லாம் ஒரு பில்லர் மாதிரி பேர் சொல்ல முடியாத எத்தனையோ
பேர் என் பின்னாடி இருக்காங்க . எல்லார்க்கும் இந்த நேரத்துல Thanks சொல்லிக்கிறேன் .

SRBS Entertainment and preniss International Pvt Ltd ரெண்டும் சேர்ந்ததுதான் இந்த Deva 301 " Live
Show வை நடத்துகிறோம் . – Preniss International Pvt Ltd திரு . பிரேம்நாத் சிதம்பரம் சாருக்கும் ,
திரு . வெள்ளை சேது சார் அவர்களுக்கும் இந்த நேரத்துல நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
டிசம்பர் 21 – ம் தேதி பாண்டிச்சேரியில் நடத்தப்போற Deva 30 | Live Show – ல தேவாசார் Team
வோட , அனுரதா ஸ்ரீராம் , பிரசன்னான்னு ஏகப்பட்ட பிண்ணனி பாடகர் பாடகிகள் ,
இசைக்கலைஞர்கள் பங்கேற்கிற இந்த நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பு பெரும்ன்னு நான் உறுதி
சொல்லுவேன் . . என்று கூறினார் .
Preniss International Pvt Ltd திரு . பிரேம்நாத் சிதம்பரம் மற்றும் வெள்ளை சேது கூறுகையில்
எங்களின் Preniss கம்பெனி பல்வேறு துறைகளில் பல்வேறு நாடுகளில் சாதித்துக்
கொண்டிருக்கிறது . சினிமா , தொலைக்காட்சி , குறும்படங்கள் என மக்களின் பொழுதுபோக்கு
துறையிலும் Preniss கால்பதித்துள்ளது . குறிப்பாக Director திரு சேரன் அவர்களின் திருமணம்
திரைப்படம் எங்கள் நிறுவனம் தயாரித்ததுதான் . சாதிக்க வரும் இளைஞர்களுக்கு எங்கள்
நிறுவனம் என்றும் கைகொடுக்க தயாராக உள்ளது . இப்போது தேவா 30 1 * Live Show – வை SRBS
Entertainment வுடன் சேர்ந்து நடத்துகிறோம் . முதன் முதலில் பாண்டிச்சேரியில் ஆரம்பிக்கும்
எங்களின் Event இனி உலகெங்கும் நடத்த வழிவகுக்கும் பத்திரிக்கை , மீடியா , இணையதள
நண்பர்கள் , ரசிகர்கள் அனைவரும் எங்களின் முயற்சிக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்
கொள்கிறோம் என்று கூறினார்கள்

Deva Sir Is Live Showவின் அறிமுக விழாவையே இவ்வளவு சிறப்பா நடத்துனத பார்க்கிறப்போ . . .
பாண்டிச்சேரியில Function பெரிய அளவுல சக்ஸஸ் ஆகும்ங்கிறதுல எந்த சந்தேகமும் கிடையாது

சினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்…..

சினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்.

சினிமாவில் மீண்டுமொரு கார்த்திக் சிவக்குமார்…..

தினமும் வாய்ப்பு தேடினாலும் ஒரு காட்சியிலாவது தலை காட்டி விட மாட்டோமா என ஏங்குபவர்கள் ஏராளம். அப்படியிருக்க சிலருக்கு அதிர்ஷ்டம் தானாக கதவைத் தட்டும்.

இதில் ரெண்டும் கலந்த கலவை கார்த்திக் சிவக்குமார். திருப்பூர் பின்னலாடை நகரத்தில் பனியன் ஏற்றுமதியை சிறு முதலீட்டில் நடத்தி வரும் இவருக்கு, சென்னையில் சினிமா நண்பர்கள் அதிகம். தொழில் சார்ந்து சென்னைக்கு வந்து போகும்போது, அடித்தது அதிர்ஷ்டம்.

சிவகார்த்திகேயன் நடித்த ‘வேலைக்காரன்’ படத்தில் ஒரு காட்சியில் வந்து போனவருக்கு சினிமா மீது பெருங்காதல் ஏற்பட்டது. தொடர்ந்த தேடுதலில் அடித்தது ஜாக்பாட்.

மிஷ்கின், விக்ராந்த், சுசீந்திரன்  நடிக்கும்,  ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கத்தில் ‘சுட்டுப் பிடிக்க உத்தரவு’ படத்தில் நெகட்டிவ் ரோல், ‘சோம பான ரூப சுந்தரம்’ படத்தில் நெகட்டிவ் ரோல், ‘கண்ணை நம்பாதே’ என தொடர்ந்து வில்லன் வேடத்தில் ஆப்பர்ச்சூனிட்டி கன்டினியூ ஆகிறது.

“நெகட்டிவ் ரோல், கேரக்டர் ரோல், காமெடி ரோல் எது கிடைத்தாலும் பர்ஃபாமென்ஸ் பண்ண ரெடியா இருக்கேன். ஒரே ஒரு சீன் என்றாலும் மக்கள் மனசில் சிம்மாசனம் போட்டு அமரும் கேரக்டரா இருந்தா  பர்ஃபாமென்ஸ் பண்ண நான் ரெடி” என்கிறார் கார்த்திக் சிவக்குமார்.

‘பேரன்பு’ விமர்சனம்!

‘பேரன்பு’ விமர்சனம்!

சென்னை : இயற்கையின் கொடூரத்துக்கு சாட்சியாக நிற்கும் ஒரு அப்பா – மகளின் வாழ்வின் வழியே, நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு ஆசிர்வதிக்கப்பட்டது என்பதை உணர்த்துகிறது ராமின் ‘பேரன்பு’. ‘நீங்க எவ்வளவு நல்ல ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கீங்கனு நீங்க புரிஞ்சுக்கறதுக்காக என் வாழ்க்கையில நடந்த சில சம்பவங்களத் தேர்ந்தெடுத்து இந்தக் கதைய நான் எழுதறேன்’ எனும் மம்மூட்டியின் வசனத்துடன் தொடங்குகிறது படம்.

இயற்கையின் வெறுப்பு, அதிசயம், சுதந்திரம் என பத்து அத்தியாயங்களாக விரிகின்றன காட்சிகள். மனைவி பிரிந்து சென்றுவிட மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள பதின் வயது மகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு மம்மூட்டிக்கு (அமுதவன்) ஏற்படுகிறது. சொந்தபந்தங்கள், அக்கம் பக்கத்து வீட்டாரின் பிடுங்கல்களினால் பாப்பாவை (தங்கமீன்கள் சாதனா) அழைத்துக்கொண்டு ஆள் அரவமற்ற ஓர் இடத்துக்கு இடம்பெயர்கிறார். அங்கு இயற்கையின் அற்புதங்களைக் காண்கிறார். தன்னை வெறுக்கும் மகளின் பாசம் தந்தைக்கு கிடைக்கிறது. ஆனால் நிறைய சங்கடங்களைச் சந்திக்க நேரிடுகிறது. அதன் வழியே பல உணர்வுகளையும், வாழ்வின் யதார்த்தங்களையும் நம்முள் கடத்தி பயணிக்கிறது படம்.

இயற்கையின் கொடூரத்திற்கான சாட்சி அமுதவனும், மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள அவரது மகள் பாப்பாவும். இவர்கள் படும் கஷ்டங்களைப் பார்க்கும் போது நாம் எந்தளவுக்கு ஒரு சந்தோஷமான வாழ்வை வாழுகின்றோம் என்பதை உணர்த்துகிறது பேரன்பு. ஆனால், பல இடங்களில் அமுதவன் போன்ற பெற்றோர்களை சமுதாயமும் என்ற முகமூடியில் நாமும் எந்தளவுக்கு காயப்படுத்துகிறோம். இதை நினைத்துப் பார்த்து நிச்சயம் சம்பந்தப்பட்டவர்களுக்கு குற்ற உணர்ச்சி வர வேண்டும்.

இயற்கையின் கொடூரமான முனையில் ஆரம்பித்து, ‘பேரன்பு’ எனும் மற்றொரு முனையில் படத்தை இணைத்திருக்கிறார் இயக்குனர் ராம். இப்படிப்பட்ட படத்தை ஒரு அசாத்தியமான இயக்குநரால்தான் சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார் ராம்.

எல்லோராலும் யோசிக்க முடியாத மிக அரிதான கதை இது. ராமின் படங்கள் அனைத்துமே தனித்துவமானவை. அதன் உச்சம் தான் பேரன்பு. வாழ்வின் கொடூரங்களை இவ்வளவு அழகியலோடு வேறு எந்த படமும் இதுவரை சொன்னதில்லை.

கதாபாத்திரங்களின் மீது பார்வையாளர்களுக்கு அதீதி பரிவு ஏற்பட்டுவிடாமல், வாழ்க்கையை நாம் அணுகும் முறையை மாற்ற நிறைத்திருக்கிறார். அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். ஒவ்வொருவரையும் விதவிதமாய் படைத்துவிட்டு, அனைவரையும் சமமாய் பாவிக்கும் இயற்கையின் முரண் குறித்து அழகாய் பேசுகிறது படம். கோபம், பொறாமை, குரோதம், எரிச்சல், வருத்தம், இயலாமை என நம் வாழ்வை சிதைக்கும் எண்ணற்ற விஷயங்களை கடந்து, நிம்மதியான ஒரு வாழ்வை வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையை எல்லோருக்கும் தருகிறது பேரன்பு.

தன்னை ஒரு பெண்ணாக, தாயாக உணரும் ஒரு தந்தையின் கதையில் மம்மூட்டி. இவரைத் தவிர வேறு யாராலும் இந்த படத்திற்கு இத்தனை நியாயம் செய்திருக்க முடியாது. வயது வந்த ஒரு நோயாளி மகளை பராமரிப்பதில் ஒரு ஆணுக்கு இருக்கும் சங்கடங்களை, தவிப்புகளை மிகையில்லாமல் வெளிப்படுத்தி வாழ்ந்திருக்கிறார். ப்ளீஸ் மம்முக்கா, அடிக்கடி தமிழ் படம் பண்ணுங்க.

தங்கமீன்களில் பார்த்த வாயாடி செல்லம்மாவா இது என அசர வைக்கிறார் இந்தக் குட்டி தேவதை சாதனா. உடல்மொழி, கண்ணசைவு, பேச்சு, நடை என எல்லாவற்றிலும் தன்னை வருத்திக்கொண்டு, பாப்பாவாகவே வாழ்ந்திருக்கிறார். இந்த படமும் நிச்சயம் அவருக்கு விருதைப் பெற்றுத் தரும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இயற்கையின் அதிசயமாக வந்து, ஆபத்தாக மாறி, புரியாத புதிராக மாறும் விஜயலட்சுமியாக அஞ்சலி. இதுதாங்க நாங்க பார்க்க நினைக்கிற அஞ்சலி. இத்தனை திறமையான நடிகையை தமிழ் சினிமா இன்னும் நன்றாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே ஒவ்வொரு சினிமா ரசிகனின் ஆசையும். சபாஷ் அஞ்சலி. இயற்கையின் முடிவற்ற வினோதங்களில் ஒன்றாக திருநங்கை அஞ்சலி அமீர். மீரா பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்தி போகிறார்.

ஒரு நடிகர் திருநங்கையாக நடித்து, அவர்களின் வலியையும், உணர்வுகளையும் மற்றவர்களுக்கு புரிய வைப்பதை காட்டிலும், ஒரு நிஜ திருநங்கையே தான் அனுபவிக்கும் வலியையும், தனது உணர்வுகளையும் வெளிப்படுத்தினால் எப்படி இருக்கும்? அதைச் சரியாகச் செய்திருக்கிறார் அஞ்சலி அமீர். துணிந்து இப்படி ஒரு விசயத்தை செய்து காட்டியதற்காக ராமை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஒரு காட்சியில் கூட முகம் காட்டாவிட்டாலும், நம் மனதில் தனது நியாயத்தை தெளிவாக விட்டுச் செல்கிறார் பாப்பாவின் அம்மா. மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மகளை 11 வருடங்கள் கணவரின் நேரடி துணை இல்லாமல் வளர்த்தவர், ஒரு கட்டத்தில் மனதால் விரக்தியடைந்து மீதி வாழ்க்கையைத் தனக்காக வாழ வேண்டும் என முடிவெடுக்கிறார். இதை தன் கணவருக்கு தரும் தண்டனையாகவோ, மகளைப் பராமரிக்கத் தவறும் தாயாகவோ பார்க்காமல் ஒரு பெண்ணின் மனதை புரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக பார்க்கலாம்.

இப்படிப்பட்ட புரிதல் ஆண்களுக்கு இருந்தாலே நிச்சயம் சமுதாயத்தில் அபிராமிகள் உருவாக மாட்டார்கள் என நம்பலாம். இதை திரைக்கதையில் தெளிவாக காட்டியிருப்பதற்காக நிச்சயம் பாராட்டலாம். இப்படியாக படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தைப் பற்றியும் பாரா பாராவாக எழுதலாம். அந்தளவிற்கு அவர்கள் நம்மை ஆட்கொள்கிறார்கள். இரண்டு காட்சிகளில் மட்டுமே வந்தாலும், மனவளர்ச்சி குன்றிய பையனின் அப்பா கதாபாத்திரமும், அவர் பேசும் கருத்துக்களும் நம் மனதை விட்டு அகல மறுக்கிறது.

ராம் படம் என்றாலே யுவனுக்கு ஸ்பெஷல் தான் போலும். பாடல்களாகட்டும், பின்னணி இசையாகட்டு ஆத்மார்த்தமாக இருக்கிறது. ‘அன்பே அன்பின் அத்தனையும் நீயே’ பாடல் இன்னொரு ஆனந்த யாழை. படம் வெளியானதும் அனைவரது வாயிலும் இப்பாடல் தான் முணுமுணுக்கப்பட போகிறது. தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவை பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேற்குத் தொடர்ச்சி மலை படத்தைப் போலவே, இப்படத்திலும் இயற்கையின் ஒவ்வொரு பரிமாணத்தையும், அழகோவியமாக திரையில் தீட்டியிருக்கிறார்.

பனி படர்ந்த கொடைக்கானல் மலையாகட்டும், சின்னஞ்சிறிய லாட்ஜ் அறையாகட்டும், படம் முழுவதுமே விஷூவல் ட்ரீட்டாக இருக்கிறது. எந்த அவசரமும் இல்லாமல், நிறுத்தி நிதானித்து எடிட் செய்திருக்கிறார் சூர்ய பிரதாபன். அதேசமயம் கலைப்படம் பார்க்கும் உணர்வையும் ஏற்படுத்திவிடாமல் சாமர்த்தியமாக கத்தரித்திருக்கிறார்.

இந்த படத்தை தயாரித்ததற்காக ஸ்ரீ ராஜ லக்ஷ்மி பிலிமிஸ் பி.எல்.தேனப்பனுக்கு தனி பாராட்டுகள். இதுபோன்ற படங்கள் தமிழில் இன்னும் நிறைய வர வேண்டும். அப்போது தான் உலக அரங்கில் தமிழ் சினிமா ஒளிரும். படத்தில் சொல்லப்பட்டுள்ள சில விஷயங்கள் குறித்து விவாதங்கள் எழலாம். சில கலாச்சார காப்பாளர்கள் சண்டைக்கு வரலாம். படத்திற்கு எதிராக போர் தொடங்கலாம். ஆனால் வாழ்வின் யதார்த்தம் இது தான் என்பதை புரிந்துகொண்டவர்கள் நிச்சயம் பேரன்பை கொண்டாடுவார்கள்.

பெண் துணை இல்லாமல் இப்படிப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைக்கு தகப்பனாக இருக்கும் ஒரு மனிதன், இந்த மாதிரியான முடிவுகள் எடுப்பதில் எந்தத் தவறும் இல்லை. தன் குழந்தைக்கு எந்த வயதில் எது தேவை என்பதை சரியாக உணர்ந்து செயல்படுவது தான் தந்தையின் கடமை என்பதை சரியாக காட்சிப் படுத்தியிருக்கிறார் ராம். படத்தில் வரும் சில காட்சிகள் பார்வையாளர்களை, ‘இப்படியும் ஒரு அப்பாவா’ என சற்று அதிர்ச்சியாக்கலாம், ஆச்சர்யப் படுத்தலாம், ஏக்கப்பட வைக்கலாம். ஆனால் இயக்குநர் இப்படத்தின் மூலம் நமக்கு சொல்ல வருவதெல்லாம், ‘மாற்றுத் திறனாளி குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோரை நாம் புரிந்து கொள்ள வேண்டும்’ என்பது தான்.

அவர்களுக்காக சில நிமிடங்கள் பரிதாபப்படுவதோடு நமது வேலை முடிந்து விடுவதில்லை, அவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த அடிகளுக்கு உறுதுணையாக இருப்பது தான் நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய உதவி. அதோடு, முக்கியமாக இப்படிப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளைப் பெற்றவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்றோ, நாம் ஆசிர்வதிக்கப் பட்டவர்கள் என்றோ யாரும் கருத வேண்டியதில்லை. நாம் கடந்து செல்லும் ஒவ்வொருவரின் மனதிலும் ஏகப்பட்ட சோகங்கள் இருக்கத்தான் செய்கிறது.

மற்றவர்களின் கஷ்டங்களுக்கு முன்னால் இருகோடுகள் தத்துவத்தில் நமது கஷ்டங்களை சிறியதாக்கிக் கொண்டு நமது வாழ்வைக் கொண்டாட வேண்டும் என்பதைத் தான் அழுத்தமாகச் சொல்கிறது இந்தப் படம். படத்தின் எந்தவொரு காட்சியிலும் ரசிகர்களை கண் கலங்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தை மட்டும் முன்னிறுத்தாமல், இப்படிப்பட்ட குழந்தை மற்றும் அவர்களின் பெற்றோர் உலகம் இப்படித்தான் இருக்கும் என்பதை அவர்கள் மீது பரிவு ஏற்படும் வகையில் தெளிவாக திரைக்கதையாக்கி இருக்கிறார் ராம். இது குழந்தைகளுக்கான படம் அல்ல, குழந்தைகள் பற்றிய பெற்றவர்களுக்கான பாடம். நிச்சயம் நாமும், ‘பேரன்பை’க் கொண்டாடலாம்!

‘சகா’ திரைவிமர்சனம்

‘சகா’ திரைவிமர்சனம்

இரண்டு டீன் ஏஜ் நண்பர்கள் சந்தர்ப்ப வசத்தால் ஒரு கொலை செய்துவிட்டு சிறுவர் சிறைக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஏற்படும் நட்பு, பகை, போன்ற அனுபவங்கள் ஏற்படுகிறது. இந்த நிலையில் நண்பனை கொலை செய்தவனை பழிவாங்க ஒருவனும், காதலியை ஆபத்தில் இருந்து காப்பாற்ற ஒருவனும், அக்காவை கொலை செய்தவனை பழிவாங்க ஒருவனும் என மூவர் சிறையில் இருந்து தப்பிக்கின்றனர். அவர்கள் தப்பித்ததன் நோக்கம் நிறைவேறியதா? அல்லது போலீசிடம் மீண்டும் பிடிபட்டார்களா? என்பதே இந்த படத்தின் கதை ஆகும்

சத்யா, கதிர், கங்கா, ஜாக்கி, சிவா என ஐந்து கேரக்டர்களில் சரண், பாண்டி, பிரித்வி, ஸ்ரீராம் மற்றும் கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர். ஐவரின் நடிப்பும் ஓகே ரகம். ஆய்ரா மற்றும் நீரஜா ஆகியோர் ஆண்ட்டிகள் போல் இருப்பதால் டீஜ் ஏஜ் ஹீரோக்களுக்கு அக்கா போல் இருக்கின்றார். சிறை வார்டனாக தீனா நடிப்பில் அசத்தியுள்ளார்.

ஷபீரின் இசையில் பாடல்கள் சுத்தமாக தேறவில்லை. ஆனால் பின்னணி இசையில் மிரட்டியுள்ளார். நிரன்சந்தர் ஒளிப்பதிவு ம்ற்றும் ஹரிஹரன் படத்தொகுப்பு ஆகியவை ஓகே ரகம்

சிறுவர் சிறையில் நடக்கும் சம்பவங்களை நம்பும்படி மிக அழகாக படமாக்கியுள்ளார் இயக்குனர் முருகேஷ். ஐந்து டீஜ் ஏஜ் நடிகர்களிடம் நன்றாக வேலை வாங்கி கதைக்கு தேவையான நடிப்பை வரவழைத்தது இவருடைய வெற்றி. ஹீரோஹின் தேர்வை கொஞ்சம் சரியாக செய்திருக்கலாம்.

படத்தின் கதை கொஞ்சம் மெதுவாக நகரும்போது திடீரென ஒரு டுவிஸ்ட்டை வைத்து பார்வையாளர்களை நிமிர வைப்பதில் திரைக்கதை ஜெயித்திருக்கின்றது. கிளைமாக்ஸ் காட்சிகள் நம்பும்படி இல்லை என்றாலும் படமாக்கப்பட்ட விதம் அருமை.

மொத்தத்தில் ஐந்து டீன் ஏஜ் நடிகர்களின் நடிப்பு மற்றும் விறுவிறுப்பான திரைக்கதைக்காக இந்த படத்தை பார்க்கலாம்.

சர்வம் தாளமயம் படம் – விமர்சனம்

சர்வம் தாளமயம் படம் – விமர்சனம்

இந்த வருடத்தின் துய்வக்கம் மிக சிறப்பு என்று தான் சொல்லணும் காரணம் தமிழ் சினிமாவில் சிறப்பான சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது ஆம் நல்ல படங்கள் தொடர்ந்து வருகிறது அநேகமாக இந்த வருடத்தின் சிறந்த பட பாட்டிலில் நிச்சயம் பிடிக்க போகும் படம் என்றால் அது ராஜீவ் மேனன் இயக்கத்தில் வெளிவந்துள்ள சர்வம் தாளமயம் படம் இடம் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு படத்தில் நான்கு கருவை சுமந்து கதை சொல்லும் படம் வாழ்கையின் ஆதாரம் இதில் தான் இருக்கு என்பதில் மிக பெரிய உதாரணம் தான் இந்த படம் ஒரு மனிதனின் வாழ்கைக்கு என்ன என்ன வேண்டும் எத்தன மூலம் நாம் வெற்றி என்ற இலக்கை அடைவோம் என்பது தான் இந்த படத்தின் கதையின் கரு.

இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ்,அபர்ணா பாலமுரளி,நெடுமுடிவேணு,குமரவேல்,டிடி என்கிற திவ்ய தர்ஷினி,நீண்ட இடைவெளிக்கு பின் வினித் வில்லனாக நடிக்கிறார். படத்துக்கு இசை இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்,ரவி யாதவ் ஒளிப்பதிவில் எழுதி இயக்கி இருப்பவர் இயக்குனர் ராஜீவ் மேனன்

கீழ் ஜாதியில் பிறந்தவர் பீட்டர் (ஜி.வி.பிரகாஷ்) இவர் விஜய் பேன் விஜய் படங்கள் ரிலிஸ் என்றால் தியேட்டர் பொய் அங்கு பால் ஊற்றி ட்ரம்ஸ் அடித்து கலாட்ட பண்ணும இளைஞர்.இவரின் அப்பா குமரவேல் மிருதங்கம் செய்பவர் அம்மா சூப் கடைவைத்து வியாபாரம் செய்பவர் இயில் எந்த பொறுப்பும் இல்லாமல் சுற்றும் ஜிவி ரசிகர் மன்ற தகாரில் மண்டை உடைந்து அதற்கு கட்டும் போடும் பெண்ணுடன் காதல் இப்படி பொருப்பிலாமல் சுட்டும் போது நெடுமுடி வேணு மிக பெரிய மிருந்தங்கவித்த்வான் அவரின் சீடர் வினீத் இருவரும் கச்சேரி போகும் போது வினீத் மிருதங்கத்தை கிழே போட்டு உடைத்து விடுகிறார்.

கச்சேரிக்கு நேரத்தில் இப்படி செய்துவிட்டாயே என்று குமாவேலுக்கு போன் செய்து உடனே ஒரு மிருதங்கம் வேண்டும் என்று சொல்ல ஆள் இல்லை என்பதால் பீட்டர் கிட்ட மிருதங்கத்தை கொடுத்து அனுப்புகிறார் குமரவேல் பீட்டர் அதை சரியான நேரத்தில் அதாவது கச்சேரி ஆரம்பிக்கும் நேரத்துக்கு சரியாக கொண்டு கொடுக்கிறார் பீட்டர் கொடுத்துவிட்டு நான் கிளம்புகிறேன் என்று சொல்ல நெடுமுடி வேணு உக்காரு போகாதே என்று சொல்ல நெடுமுடி வேணு கச்சேரியில் மிருதங்கம் வாசிக்க அதை பார்த்து ரசித்த பீட்டருக்கு மிருதங்கம் மேல் ஒரு காதல் உண்டாகிறது நாமும் வாசிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.

ஆனால் இவர் கிழ் சாதி என்பதால் இவரின் ஆசையை இவரின் அப்பாவிடம் சொல்ல அவரும் அவரை இதெல்லாம் நமக்கு வேண்டாம் என்று சொல்ல ஆனால் இவருக்கு இந்த மிருதங்கம் மீது ஆலதியான காதல் இதில் நாம் சாதிக்க வேண்டும் வேம்பு ஐயரிடம் அதாவது நெடுமுடி வேனுவிடம் சீடராக சேர்ந்து இதை முறையாக பயிற்சி செய்யவேண்டும் என்ற ஆசை ஆனால் இவர் கிழ் சாதி இதனால் இவரை வினித் மிகவும் அவமான படுத்துகிறார் மிகவும் கேவலமாக நடத்துகிறார் இருந்தும் இவரின் ஆர்வத்தை புரிந்த நெடுமுடி வேணு இவரை சீடராக சேர்கிறார் இது மேலும் வினித்க்கு கோவத்தை உண்டு பண்ணுகிறது இதனால் பீட்டரை மிகவும் அவமனா படுத்துகிறார்.

வரி கையை உடைக்கிறார் இதனால் கோவம் அடைந்த நெடுமுடி வேணு வினீதை வீட்டை விட்டே அனுப்புகிறார் போயும் போயும் ஒரு கிழ் சாதி பயனுக்காக என்னை வீட்டை விட்டு வேல்யேற்றி விட்டார் என்ற கோவத்தில் நெடுமுடி வேனுவையும் பீட்டரையும் தன் தங்கை டி டி மூலம் பழிவாங்க நினைக்கிறார் இந்த பழி வாங்கல் படலம் பீட்டர் மீது ஒரு பொய் கேஸ் போட்டு அந்த ஊரை விட்டே போகின்ற நிலைமை ஏற்படுகிறது இதை மீறி பீட்டர் மிருதங்க வித்வான் ஆகிறார இல்லையா என்பது தான் மீதி கதை

தன் திரைகதை மூலம் படத்தை மிக சுவாரியசமாக ஆகியுள்ளார் இயக்குனர் ராஜீவ் மேனன் படத்தின் பலம் நட்சத்திர தேர்வு அது தான் மிக பெரிய பலம் கதை ஓட்டம் தெரிந்து அனைவரும் அதைமிக சிறப்பாக செய்துள்ளனர்.ஒவ்வொரு காட்சியும் அருமையாக பிரதிபலித்து இருக்கிறார். இயக்குனர் முதல் காட்சி முதல் இறுதி காட்சி வரை மிகவும் அழகாக கதை கள்ளமும் சரி காட்சிகளும் அமைத்துள்ளார்.கதைக்கு ஏற்ற திரைகதை மிக சிறந்த ஒளிப்பதிவு பின்னணி இசை தேவைக்கு ஏற்ப பாடல்கள் இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மிகவும் மெனக்கெடல் செய்து இருக்கிறார் இயக்குனர் ராஜீவ் மேனன்

ஜி.வி.பிரகாஷ் கதையின் மற்றும் கதாபாத்திரத்தின் வலிமையை தெரிந்து உணர்ந்து நடித்து இருக்கிறார். தன் அற்புதமான நடிப்பின் மூலம் மிக பெரிய இடத்தை பிடிக்கிறார் அதோடு நம்மை பல காட்சிகளில் த்ன்னடிப்பின் மூலம் நெகிழ வைக்கிறார்.

படத்தின் கதையை மிகவும் தாங்கி பிடிப்பவர் நெடுமுடி வேணு மலையாள நடிகர் மிக சிறந்த நடிகர் என்று பல முறை தன்னைநிரூபித்தவர்.அதை மீண்டும் இந்த படம் மூலம் நிருபித்துள்ளார் பிரமிக்க வைக்கும் நடிப்பு வேம்பு ஐயர் மிருதங்க வித்வான் எப்படி இருப்பாரோ அப்படி காட்சி அளித்தார் ஒரு பிரமாணன அதே நேரத்தில் ஒரு மனிதனா ஒரு மேதையாக இப்படி ஒவ்வொரு பாத்திரத்தையும் மிக நேர்த்தியாக நடித்துள்ளார்.

வினீத் நீண்ட இடைவெளிக்கு பின் தமிழ் சினிமாவில் தடம் பதிக்கிறார் ஆனால் இந்த முறை வில்லானாக அதை மிக சிறப்பாக செய்துள்ளார் இயக்குனரின் நம்பிக்கையை வீணடிக்காமல் சிறப்பாக நடித்து இருக்கிறார்

நாயகியாக அபர்ணா பாலமுரளி பெரிதாக காட்சிகள் இல்லை என்றாலும் கொடுத்த வாய்ப்பை சரியாக பயன் படுத்தி இருக்கிறார் அதேபோல ஜி.வி.பிரகாஷ் அப்பாவாக வரும் குமரவேல் தன் பாத்திரத்தை உணர்ந்து நடித்து இருக்கிறார் பல படங்களில் தன் திறமையை நிருபித்த குமரவேல் இந்த படத்திலும் அதை சரிவர செய்து இருக்கிறார்.