Category Archives: News

Maruti Suzuki and Radio Mirchi back with second season of Traffic Heroes of India!

Maruti Suzuki and Radio Mirchi back with second season of Traffic Heroes of India!

Maruti Suzuki and Radio Mirchi in association with the Traffic Police Department of Chennai have come together for the second edition of ‘Maruti Traffic Heroes of India’ for Mirchi Traffic School, to address the issues of road traffic awareness that plagues the country.

As part of the activity in the city of Chennai, a convoy of branded cars will be flagged off daily visit 10 traffic signals and cover important market places, residential colonies, schools and colleges on the way. At every traffic signal, the Radio Mirchi personnel will gratify the city’s traffic police personnel for helping the city improve their traffic sense.  They will also give out prizes to those citizens who are adhering to traffic rules. The people will also be asked to take pledge to follow road safety by signing a pledge card.

 

Present at the meet were Mr. Shyam Tallamraju, Cluster Head, Radio Mirchi and Mr. Anup Sinha, Regional Manager, Maruti Suzuki India and

Speaking at the event, Anup Sinha, Regional Manager, Maruti Suzuki said, “We’d received a tremendous response for the campaign last year, and this year we hope to get more people to pledge to follow road safety and traffic rules. Our only aim is to curb wilful violation of traffic rules and make driving in the city a safe and pleasant experience for everyone.”

Speaking about the initiative Shyam Tallamraju, Station Head at Radio Mirchi said, “I think it is high time we as people took active participation in being good citizens of this country. One empowered person can educate hundred others, and we hope to educate people on the importance of adhering to road traffic rules.”

The week-long initiative starting today till January 15th will carry out activities across different cities like Gurugram, Delhi, Bangalore, Chennai, Kolkata, Lucknow, Chandigarh, Indore, Ahmedabad, Kochi, Pune, Mumbai, Hyderabad and Ranchi. The campaign will also look to recognize commuters who will be adhering to the traffic rules and wearing the protective gear; as well as acknowledge the traffic police personnel’s at the signals. Apart from this, the activity will also encourage people to take pledge to follow traffic rules across various corporates, mall and marketplaces.

City commuters can support this initiative by giving a miss call number to – 8000100129 and also be a part of the initiative by posting pictures of their fellow commuters’ #pledgeforroadsafety who will be seen following the traffic rules. Lucky winner will be awarded by Radio Mirchi.

 

நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் பொதுக்குழு நிகழ்வு!

நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் பொதுக்குழு நிகழ்வு!

தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் பொதுக்குழு இன்று           (8 ஜனவரி) கிருஷ்ண கான சபாவில் இனிதே நடைபெற்றது.
தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க தலைவர் திரு.ஷோபி பவுல்ராஜ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திரு. சுந்தரம் மாஸ்டர், திருமதி. புலியூர் சரோஜா, திரு. தருண் குமார், திரு. சீனு, திருமதி. கிரிஜா ரகுராம், திருமதி. மாதிரி பல்ராம், திரு. ஜான் பாபு ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
பொதுகுழுவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள்:
1. திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் இனி முதல் “தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம்”  எனப் மாற்றம் செய்யப்பட்டு சங்கத்தின் புதிய முத்திரை அறிமுகம் செய்யப்பட்டது.
2. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கம் தற்போது 50வது (பொன் விழா) ஆண்டை அடைந்ததால், இந்த ஆண்டு மிக பிரம்மாண்டமான கலை நிகழ்ச்சி ஒன்றை நடத்த வேண்டும் என உறுதி மொழி எடுக்கப்பட்டது.
3. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்க மொத்த உறுப்பினர்களுக்கு இலவச மருத்தவ காப்பீடு.
4. தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக்கலைஞர்கள் மற்றும் நடன இயக்குனர்கள் சங்கத்தின் (1967 முதல் 1979 வரையிலான) மூத்த உறுப்பினர்களுக்கும், மூத்த நடன இயக்குனர்களுக்கும் கேடயம் அளித்து அவர்களை கௌரவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் செயலாளர் திரு.Y.சிவா, பொருளாளர் திரு.K.புவனசங்கர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களுடன் ஏராளமான நடன இயக்குனர்களும், நடன கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

தர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

தர்மதுரை குழுவினரை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

தர்மதுரை வெற்றிபெற்றதை அடுத்து அப்படத்தின் 100 ஆம் நாள் கேடயத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் மனமகிழ்ந்து தர்மதுரை படக்குழுவினரை வாழ்த்தி பெற்றுக்கொண்டார்.

இந்த சந்திப்பு ஏறக்குறைய 1 மணி நேரம் 20 நிமிடங்கள் நீடித்தது. தர்மதுரை படத்தின் தயாரிப்பாளர் R.K சுரேஷ், இயக்குனர் சீனு ராமசாமி, படத்தின் கதாநாயகன் விஜய் சேதுபதி ஆகியோரை பாராட்டி படத்தின் அம்சங்களை குறிப்பிட்டு அவற்றை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

விஜய் சேதுபதி, எம்.எஸ். பாஸ்கர், ராஜேஷ், தமன்னா, ராதிகா சரத்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் இயல்பான நடிப்பு தன்னை மிகவும் கவர்ந்ததாக குறிப்பிட்டார்.

சீனு ராமசாமியின் படங்களில் அவர் கவனித்து வரும் முக அக்கறையுள்ள தன்மைகளை விவரித்து பாராட்டினார்.

வில்லனாக நடிக்கும் போது தனது முழுமையான நடிப்புத்தினை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறது அந்த வகையில் தாரைத்தப்பட்டை, மருது போன்ற படங்களில் சிறப்பாக நடித்து முன்னேறி வருவதாக நடிகர், தயாரிப்பாளர் ஆர்.கே. சுரேஷை பாராட்டினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

முள்ளும் மலரும் – காளி தந்த பாதிப்பில் சினிமாவில் நுழைந்த எனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை சந்தித்ததும், அவரின் பாராட்டும் தெம்பும் இந்த நாள் தந்த மிக சிறந்த பரிசாக நான் பார்க்கிறேன் என்றார் இயக்குனர் சீனு ராமசாமி.

உண்மையான தர்மதுரைக்கு தங்கள் தர்மதுரையின் 100ம் நாள் கேடயத்தை வங்கியதில் மகிழ்ச்சி அடைந்தனர் படக்குழுவினர்.

தரமான குறும்படங்களை சரியான விதத்தில் சேர்க்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’!

தரமான  குறும்படங்களை சரியான விதத்தில் சேர்க்கும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’!

 

குறும்படங்களும், குறும்பட படைப்பாளிகளும், தமிழ் திரையுலகில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறார்கள். அவர்களின் திறமையை கண்டறிந்து, அவர்களையும், அவர்களது குறும்படங்களையும் வெளிச்சத்திற்கு கொண்டு வரும் பணியை, இணையத்தளம் மற்றும் ஊடகம் மூலமாக சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது, தமிழகத்தில் குறும்படங்களை விளம்பர படுத்துவதில் முன்னணி நிறுவனமாக செயல்படும் ‘பெஞ்ச் பிலிக்ஸ்’. தரமான  குறும்படங்களை சரியான விதத்தில் ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்க்கும், ‘பெஞ்ச் பிலிக்ஸ்’ நிறுவனத்தின் அடுத்த படைப்பு, இயக்குநர் ராஜசேகர் சம்பத் இயக்கத்தில் நகைச்சுவை களஞ்சியமாக உருவாகி இருக்கும் ‘டைமண்ட் கேம்’.
பல திட்டங்களோடு திருட்டு தொழிலில் முதல் முறையாக இறங்கும் ஒரு முட்டாள் கும்பலுக்கு, ஏமாற்றமே மிச்சம்! இது தான் ‘டைமண்ட் கேம்’ நகைச்சுவை குறும்படத்தின் ஒரு வரி கதை.
Bench Flix starts the ‘Diamond Game’
 
Short Films and Short Film makers are increasing day by day in Tamil Film Industry. Identifying those young talents and bringing them to the limelight with the technology wing and the media wing is the only motive of Bench Flix. By providing innovative media solutions to creative minds, Bench Flix is becoming one of the most prominent short film promoters in Tamilnadu. The next release of Bench Flix is ‘Diamond Game’, a rib-tickling film filled with laugh-out-loud moments, directed by Rajasekar Sampath. 
 
When a bunch of fools decide to play thieves, logic goes for a toss, and all that is left is a whole lot of comedy of errors. This is the core concept of the short film ‘Diamond Game’.

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக!

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில் கோடிட்ட இடங்களை நிரப்புக!

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் இயக்கத்தில், சந்தனு கதாநாயகனாக நடித்திருக்கும் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ திரைப்படம் வருகின்ற ஜனவரி 14 ஆம் தேதி அன்று வெளியாக இருக்கின்றது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர், மற்றும் டிரைலர் தமிழக ரசிகர்களிடம் அமோக பாராட்டுகளை பெற்றது. பிரபுதேவாவின் நடன இயக்கத்தில், சந்தனு நடனம் ஆடி இருக்கும் ‘டமுக்காட்லான் டுமுக்காட்டலான்’ பாடல், நடிகர் தனுஷ் உட்பட ஒட்டுமொத்த தமிழ் திரையுலகினரின் பாராட்டுகளையும் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
“பார்த்திபன் சார் என்னை ஒரு நாள் அழைத்து, ‘நான் கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்கின்ற படத்தை இயக்குகிறேன். அதில் நீ தான் கதாநாயகன். நாளை முதல் படப்பிடிப்பு’ என்று கூறினார்’. ஆரம்பத்தில் எனக்கு சற்று மகிழ்ச்சி கலந்த ஆச்சரியமாக இருந்தாலும், பார்த்திபன் சார் மீதும், அவருடைய கதை மீதும் நான் வைத்திருக்கும் ஆணித்தனமான நம்பிக்கையால், என்ன கதை என்பதை கூட கேட்காமல், படப்பிடிப்புக்கு தயாராகி விட்டேன். சிறிது நாட்களுக்கு பிறகு தான், பார்த்திபன் சார் என்னை இந்த படத்திற்காக ரகசியமாக கண்காணித்து வந்தார் என்பதை தெரிந்து கொண்டேன்.
ஒரு திரைப்படத்தில் வழக்கமாக இருக்கும் அம்சங்களை மாற்றி, ஒரு வித்தியாசமான திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குபவர் பார்த்திபன் சார். அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு அளவுகடந்த மகிழ்ச்சியாக இருக்கின்றது. நிச்சயமாக கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் மூலம், ரசிகர்கள் ஒரு புதிய சாந்தனுவை காண்பார்கள்.” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சாந்தனு.
“Parthiban sir observed me in clandestine…” reveals the filler of ‘F_ll in the B_anks’ Shanthnu  
Filmmaker Radhakrishnan Parthiban’s next drawing ‘Koditta Indagalai Nirappuga’ is all set to release on 14th January, 2017 by making the festive contest much tougher. The avatar of the male lead Shanthnu and his drastic performance in the teaser and trailer of Koditta Idangalai Nirappuga has turned the heads of Audience. Shanthanu who has plenty of promise in his earlier  films  is all set to convert that promise of potentiality into success in Koditta idangalai nirapouga. The teaser of ‘Damukaatlan Dumukaatalan’ song in which Shanthnu shakes his legs for Prabhudeva’s choreography has received huge praises from Media Critics as well as from the entire Tamil film industry, including actor Dhanush.
“Parthiban sir called me one fine day, he again called me and said that, ‘We are going on floors from day after tomorrow. Film name is Koditta Idangalai Nirappuga and you are the hero.’ And that’s how our Koditta Idangalai Nirappuga commenced with a Surprise Shock. Knowing him i wasn’t surprised because he is a director who has got many aces up is sleeves and surprise and innovativeness are his second names.  Only after few days I came to know that Parthiban sir has observed my body language and nuances secretly for several days.
I never asked about the script to Parthiban sir because, I had a blind trust on him. As soon as he called me, I departed for the shoot.  He is the updated director who can break the regular grammars of Film Making and I am extremely happy to be a part of his film. Until now Koditta Indangalai Nirappuga is surprising me on every little factor, and I am quite sure that the same surprise will be experienced by the Audience too. Get ready to answer the fill in the blanks from January 14th” says Shanthnu confidently.

India’s First Palindrome Song

India’s First Palindrome Song
unnamed-6
 
The Imman-Karky duo has created a novel song for the upcoming movie, ‘Vinothan’. Directed by Victor Jayaraj under the Prabhudeva Productions banner, ‘Vinothan’ is a movie about a man afflicted with Obsessive Compulsive Disorder, commonly known as OCD.
 
Palindrome is a word or phrase that reads the same backwards and forwards with no change in meaning. For instance, ‘Malayalam’, ‘விகடகவி’, ‘பாப்பா’ and so on.
 
Lyricist Madhan Karky and composer Imman have created an entire such song. This is a romantic song, full of palindromes and it is the first of its kind in India. Haricharan and Shashaa Tirupati have sung this song. 
 
The song is scheduled to be released on a palindrome website, DooPaaDoo (www.doopaadoo.com) on a palindrome date (7-1-17) at a palindrome hour (7:1:17).
 
 
இந்தியாவின் முதல் பாலிண்டிரோம் பாடல் 

‘விநோதன்’ பிரபுதேவா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படம். விக்டர் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் ‘மனசுழற்சி’ எனும் மனநோயால் பாதிக்கப்பட்ட ஒருவனின் கதை. இந்தக் கதைக்காக வித்தியாசமான பாடல் ஒன்றை இமான் – மதன்கார்க்கி கூட்டணி படைத்துள்ளது. பாலிண்டிரோம் பாடல் என்று இந்தப் பாடல் அழைக்கப்படுகிறது.

பாலிண்டிரோம்(palindrome) என்பது ஒரு சொல் அல்லது வாக்கியத்தைப் பின்னிருந்து முன்னாக படித்தாலும் அதே ஒலியை, பொருளைத் தருவது. எடுத்துக்காட்டாக ‘malayalam’ ‘விகடகவி’, ‘பாப்பா’ போன்ற சொற்களைச் சொல்லலாம். இப்படி இருக்க ஒரு முழு காதல் பாடலை பாலிண்டிரோம் கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள் இமானும் மதன்கார்க்கியும்.

இந்திய மொழிகளில் பாலிண்டிரோம்கள் கொண்டு உருவாக்கப்பட்ட முதல் பாடல் இது. இந்தப் பாடலை ஹரிசரண் மற்றும் சாஷா ட்ரிபாதி பாடியுள்ளனர்.

இந்த பாலிண்டிரோம் பாடல் ஒரு பாலிண்டிரோம் தேதியில், பாலிண்டிரோம் நேரத்தில், பாலிண்டிரோம் தளத்தில் வெளியாகிறது.  7-1-17 (சனிக்கிழமை) அன்று, மாலை 7:1:17 மணிக்கு,  ‘டூபாடூ’  (www.doopaadoo.com) இணைய தளத்தில் வெளியாகிறது.

G.V.Prakash Kumar’s Bruce Lee Press Meet Stills

G.V.Prakash Kumar’s Bruce Lee Press Meet Stills

ARTISTS

G.V. PRAKASH KUMAR * KRITI KHARBANDA * BALA SARAVANAN

MUNISH KANTH * ANANDRAJ * MANSOOR ALI KHAN *

NAAN KADAVUL RAJENDREN * SHADHIKA * VIJAYAMUTHU *SHANMUGAM

 

TECHNICIANS LIST

STORY, SCREENPLAY & DIRECTION * PRASANTH PANDIYARAJ

CINEMATOGRAPHY * P.V.SHANKAR

MUSIC * G.V.PRAKASH KUMAR

LYRICS * ARUNRAJA KAMARAJ,GANA

VINOTH . VAIRACHANDRAN, MANI KANDAN

EDITOR * PRADEEP E RAGAV, MANOJ GYANN

ART DIRECTOR * UMESH J KUMAR

STUNT * ANBARIV

COSTUME * JOY CRIZILDAA

CHOREOGRAPHER * BRINDA, BABA BASKAR,

RADHIKA MAKE UP* SABARI GIRISAN VISUAL

EFFECTS * UNIFI

STILLS * R.S.RAJA

PRODUCTION EXECUTIVE * BALAKUMAR

EXECUTIVE PRODUCER * RAJA SENTHIL

PRODUCTION * KENANYA FILMS, LINGA BHAIRAVI CREATIONS & PK FLIM FACTORY

PRODUCER’S * SELVAKUMAR J, RAVI CHANDRAN.P, VITTAL KUMAR.G

JOHNSON PRO

 

 

சுற்றிலும் துப்பாக்கிகள்… சுழலும் பனிப்புயல்… நடுங்கும் குளிர்..!

சுற்றிலும் துப்பாக்கிகள்… சுழலும் பனிப்புயல்… நடுங்கும் குளிர்..!
காஷ்மீரில் பதைபதைக்கும் படப்பிடிப்பு அனுபவங்கள் : ‘சாலை’ பட இயக்குநர்
சார்லஸ்!

முகிலன் சினிமாஸும், தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும்
படத்திற்கு “சாலை” என்று பெயரிட்டுள்ளனர். “சாலை” படத்தை “நஞ்சுபுரம்”, “அழகு
குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம்
மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.
சென்னையிலிருந்து காஷ்மீர் சென்ற ஒருவன் பற்றிய திகில் கதைதான் படம்.

‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார்.
கிரிஷா (KRISHA) ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘அழகு குட்டிச்
செல்லம்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.’ஆடுகளம்’
நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் முக்கிய
கதாபாத்திரமேற்றுள்ளனர்.   ‘ஆடுகளம்’ நரேன் தவிர  பலரும் புதுமுகங்கள்.

‘சாலை’ படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. இப்போதுள்ள
அசாதாரணத் சூழலில் காஷ்மீரில் தாங்கள் சுற்றித்திரிவது போல் காதலர்கள்
கற்பனையில் கூட கனவு காண அஞ்சுகிறார்கள்; தயங்குகிறார்கள்.

இந்தச் சூழலில் காஷ்மீர் பகுதியில் 45 நாட்கள் பனி கொட்டிக் கிடக்கும் பால்
வண்ண நிலப்பகுதியில் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறது  ‘சாலை’  படக் குழு .

படத்தை முகிலன் சினிமாஸ் நிறுவனம் சார்பாக சார்லஷூம், தங்கதுளசி
புரொடக்‌ஷன்ஸ் சார்பாக
ரஞ்சித்தும், கிரிஷ்ஷூம்   இணைந்து  தயாரித்துள்ளனர்.

காஷ்மீரில் படப்பிடிப்பு நடத்திய அனுபவம் பற்றி இயக்குநர் சார்லஸ் கூறுவதைக்
கேட்டால் ,

படத்தின் கதையைப் போலவே படப்பிடிப்பு நடத்திய கதையும் திகில் வரவழைக்கிறது.
முதலில் நான் அழகு குட்டி செல்லம் படத்துக்கு ஒரு நல்ல இடத்தைக் கொடுத்த
பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். சரிவர
திரையரங்குகள் அமையாத போதிலும் படம் எல்லோர் மத்தியிலும் நல்ல படம்பா என
பேசப்பட்டதற்கு காரணம் பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான். அதற்கு என்
மனமார்ந்த நன்றி!

காஷ்மீர் என்ற பனிபொழியும் வெள்ளை தேசத்துக்கு இந்த படத்தில் மிக முக்கியமான
பங்கு இருக்கிறது. இந்த படம் காஷ்மீரில் எடுக்க வேண்டிய அவசியம் என்ன என்ற
கேள்வி நிச்சயம் வரும். ஒரு சில இயக்குனர்கள் தங்களது படங்களை மீடியம்
பட்ஜெட்டில் எடுக்க வேண்டிய  கட்டாயம் இருக்கிறது. அதைத் தாண்டி எடுக்கும்
வசதியில்லாத போது படத்தில் தரம் எப்படியும் குறந்துவிடும்.

ஆனால்  நான் எனக்கு உள்ள அந்த மீடியம் பட்ஜெட்டில் எடுத்தாலும் படத்தின் தரம்
குறைந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அது ஒரு விஷூவல் ட்ரீட்டாக
இருக்கவேண்டும். அதாவது சின்ன பட்ஜெட் படம்  போன்ற  தோற்றம் வந்துவிடக்கூடாது.
ஒரு பெரிய படமாக இருக்கவேண்டும். மேலும்   ‘சாலை’   படம் ஒரு சைக்கலாஜிக்கல்
த்ரில்லர். இதை ஒரு ரோடு மூவி என்றும்  கூறலாம். ஒரு பயணம் என்று இதைச்
சொன்னாலும், படம் ஒரு தத்துவார்த்தமான முடிவைக் கொண்டது. எந்தவிதமான பயணத்தை
ஒருவன் தன் வாழ்வில் அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதையும்  படம் சொல்லும்.
இந்தத் திகில் படத்துக்கு பனி படர்ந்த நிலப்பகுதி முக்கிய பின்னணியாக
மட்டுமல்ல ஒரு பாத்திரம் போலவே அமையவேண்டும்.    அதற்காகவே நாங்கள் காஷ்மீர்
போவது என்று முடிவு செய்தோம். ஆனால் அதற்குள்ள சிரமங்களையும் எதிர்கொள்ள
நேர்ந்தது.

காஷ்மீரில் நிலவும் அசாதாரணமான பதற்றமான சூழலில் அங்கு படப்பிடிப்புக்கு
நுழையவே யாரும் நினைக்க மாட்டார்கள். அப்படி இருக்கும் போது நாங்கள் நடத்தி
முடித்து வந்திருக்கிறோம்”. சற்றே நிறுத்துகிறார் சார்லஸ். மெல்ல
ஆசுவாசப்படுத்திக் கொண்டு தொடர்கிறார். காஷ்மீருக்கென்று தனி விமான தளம்
கிடையாது.   ராணுவத்தின் விமானதளம்தான் காஷ்மீரில் உள்ள ஒரே விமான தளம்.

” அங்கே லடாக் , ஜம்மு, காஷ்மீர் என மூன்று  மாவட்டங்கள் அடங்கிய பகுதிகள்
சேர்ந்ததுதான் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் என்று அழைக்கப்படுகிறது. இதில் காஷ்மீர்
பள்ளத்தாக்கு பகுதி மிகவும் பதற்றமான பகுதியாகும்.

நாங்கள் அரசின் முறையான அனுமதி பெற்றுத்தான் படப்பிடிப்பு  நடத்தினோம்.
என்றாலும் கத்தியின் மேல் நடப்பது போல் தான் ஒவ்வொரு நாளும் பயமாக பதற்றமாக
இருந்தது. அனுமதி கிடைத்து விட்டதே என்று ஊரில் போய் இறங்கினால் ஊர் முழுக்க
ஆயுதம் தாங்கிய ராணுவ வீரர்கள் அதுவும் பத்தடிக்கு ஒருவர் சுற்றிலும்
துப்பாக்கிகளுடன்  நிற்கிறார்கள்.

இப்படி ஆரம்பமே பீதியைக் கிளப்பியது.அது மட்டுமல்ல அந்தப் பகுதியில் எப்போது
தீவிரவாதிகள் சார்ந்த பிரச்சினை வெடிக்கும் என்று தெரியாது என்றும்
சொன்னார்கள். திகிலில் உறைந்து விட்டோம். இருந்தாலும் படப்பிடிப்புக்கு
புறப்பட்டுவிட்டோம். அங்குள்ள மக்கள் உதவி இல்லாமல் எதுவும் செய்யமுடியாது.
பனித்துகள்களைப் போல் அங்கு வறுமையும் பரவிக்கிடக்கிறது. நாங்கள் மக்கள்
உதவியுடன் களத்தில் இறங்கினோம். அவர்கள் எங்களுக்கு பெரும் உதவியாக
இருந்தார்கள் என்று சொல்வதைவிட நாங்கள் உயிருடன் திரும்பி வர உதவியாக
இருந்தார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

நாங்கள் போனது பனியும் குளிரும் உச்சத்தில் இருக்கும் காலம். காஷ்மீரில்
நிலப்பகுதியைப் பனி ஒரு போர்வை போல மூடி இருக்கும் காலம்.  அங்கே குளிர் மைனஸ்
15 டிகிரி 20 டிகிரி என்று இருக்கும்.  குளிர் பகலிலேயே எலும்பை ஊடுருவிப்
பார்க்கும். இரவில் உயிரை உறைய வைக்கும்படி இருக்கும் .

சாலைகளில் பனி பொழிந்து வழுக்கும் நிலையில் இருக்கும். அப்போது பயணம் பெரும்
சவாலாக இருக்கும். ஒருபுறம் அதளபாதாள பள்ளத்தாக்கு இருக்கும்.. கரணம்
தப்பினால் மரணம் தான். சாலை முழுக்க பனி உறைந்து வழி மறித்திருக்கும். அரசு
வாகனம் ஒன்று பனியை அகற்றி போக்குவரத்துக்கு வழிசெய்யும்.

சில இடங்களில் நாமே வாகனங்களைத் தள்ள வேண்டும் .காஷ்மீரிகளுக்கு இந்தி
பேசத்தெரியாது.காஷ்மீரி மொழி மட்டுமே பேசுவார்கள். நாங்கள் வண்டிகளை ”தள்ளு
தள்ளு”. என்று உயிர் பயத்தில் கத்திக்கொண்டே தள்ளியதைப் பார்த்த ,உதவிக்கு
வந்த உள்ளூர் காஷ்மீரிகள் தமிழில் ”தள்ளு ..தள்ளு வேகமா !” என்று சேர்ந்து
கத்திக்கொண்டே தள்ளினர். அவர்கள்  எங்களைப் பார்த்து ”தள்ளு ..தள்ளு வேகமா
!”  என்று தமிழ் பேசியது எங்களுக்கு அந்த  பதற்றத்திலும் வேடிக்கையாக
இருந்தது. அது மட்டுமல்ல நாங்கள் காஷ்மீர் மலைப்பாதையில் சிரமப்பட்டு நிறைய
காட்சிகள் எடுத்தோம்.

இப்படிப்பட்ட சூழலில் ஒரு நாள்  சுழலும் பனிப்புயலில் சிக்கிக்கொண்டு
அவதிப்பட்டோம். இரவு தொடங்குவதற்குள் ஹோட்டலுக்கு திரும்பி கம்பளிக்குள்
புகுந்துவிடவேண்டும். ஆனால் சாலைகளில் உள்ள பனிப்பொழிவால் ஒரு நாள்  நடு
இரவுதான் வரமுடிந்தது. உயிர் போய் உயிர் வந்த நாள் அது. அங்குள்ள மக்களுக்கு
இந்த சூழலை அணுகும் விதம் நன்றாகவே தெரிந்திருப்பதால் லாவகமாக
நடந்துகொள்கிறார்கள். ஐந்து மணிக்கெல்லாம் ஆள் நடமாட்டம் குறைந்துவிடுகிறது.

நாலைந்து வாகனங்கள் முழுக்க படக்குழுவினர் நாங்கள் 50 பேர் இருந்தோம் . சற்றே
வேகம் காட்டினால்கூட, பாதை சறுக்கும். விழுந்தால் பாதாளம்தான். இப்படி மாலை 3
30 மணிக்கு புறப்பட்ட நாங்கள்,  இரவு 12.30 க்குத்தான் தங்கியிருந்த
இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம்.

இரண்டரை மணிநேரத்தில் செல்ல வேண்டிய தூரத்தை  ஒன்பதுமணி நேரத்திற்குப்
பிறகுதான்   அடைய முடிந்தது.. அவ்வளவு பயந்து  பயந்து போனோம். ஒரு கட்டத்தில்
ஊர்ப் போய்ச் சேருவோமா இங்கேயே சாகப் போகிறோமா என்று நினைத்தோம்.
அப்படியெல்லாம் சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்தோம்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் குல்மார்க், சோனா மார்க், பெஹல்காம் பகுதிகளில்
படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது..இப்படி காஷ்மீரில் இதுவரை யாரும் பார்க்காத
இடங்களில் எடுத்திருக்கிறோம். .படமே ஒரு காட்சி அனுபவமாக இருக்கும்.

இவ்வளவு போராட்டங்களுடன் 45  நாட்கள் படப்பிடிப்பு நடத்தி வந்திருக்கிறோம்.
படத்தின்  கதையில் 90 சதவிகித காட்சிகள் காஷ்மீரில்தான் நடக்கும். மீதி 15
நாட்கள் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. எடுத்ததைப் பார்த்தவர்கள்
வியந்து பாராட்டும் போது படப்பிடிப்பு அனுபவம் நம்ப முடியாத கனவு போல
இருக்கிறது. நிச்சயம் ‘சாலை’ நான் எதிர்பார்த்த மாதிரியே பிரம்மாண்டமான படமாக
வந்திருக்கிறது. ஒரு விஷுவல் விருந்தாக இருக்கும்” ” என்கிறார் இயக்குநர்
நம்பிக்கையுடன்.

‘சாலை’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் அறிமுக ஒளிப்பதிவாளர்
ஜி.பாலமுருகன். இசை-. வேத் சங்கர்.

கதை, திரைக்கதை, வசனம் ,பாடல்கள் எழுதி இயக்கி தன்னுடைய முகிலன் சினிமாஸ்
நிறுவனம் சார்பில்  தயாரித்திருக்கிறார் சார்லஸ். தயாரிப்பில் தங்கதுளசி
புரோடக்ஷன்ஸ் இணைந்துள்ளது.

படப்பிடிப்பு முடிந்து,  இப்போது  தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகின்றன.