Category Archives: General News

kadikara-manithargal-6

கடிகார மனிதர்கள் விமர்சனம்!

கடிகார மனிதர்கள் விமர்சனம்!

kadikara-manithargal-6

ஒண்டிக் குடித்தனத்தில் வாடகைக்குக் குடியிருப்போர்களைக் குறிக்கும் குறியீட்டுச் சொல்லாகக் கடிகார மனிதர்கள் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம். தங்கள் வருமானத்தின் பெரும்பகுதி வாடகையிலேயே கழிந்து விடுவதாலும், அதிலிருந்து தப்பிக்கவோ, இளைப்பாறவோ இயலாச் சூழலில், கடிகார முட்கள் போல் ஓடிக் கொண்டே இருந்தால் தான் சமாளிக்க இயலும். பேக்கரியில் வேலை செய்யும் கிஷோரைப் பெரிய முள்ளாகவும், பூ கட்டி விற்கும் அவரது மனைவி லதா ராவைச் சிறிய முள்ளாகவும் கற்பனை செய்து கொள்ளலாம்.

ஒரு மகள், இரண்டு மகன், கணவன், மனைவி எனக் கிஷோரின் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பேர். எவ்வித முன்னறிவிப்புமின்றி, வீட்டைக் காலி செய்யவேண்டிய இக்கட்டான சூழல் நேர்கிறது. பொருட்களை வண்டியில் ஏற்றிய பின்பே வீடு தேடி அலைகின்றனர். பல போராட்டத்திற்குப் பிறகு, 3500 ரூபாய்க்கு ஒரு வீடு வாடகைக்குக் கிடைக்கிறது. ஆனால், ஒரு வீட்டில் அதிகபட்சம் நான்கு பேர் தான் தங்கவேண்டுமென வீட்டு உரிமையாளர் பாலாசிங் கறாராகச் சொல்லிவிடுகிறார்.

அந்த ஒண்டிக்குடித்தனத்துக்குள், தனது கடைசி மகனை எவருக்கும் தெரியாமல் வளர்க்கப் படாதபாடுபடுவதுதான் படத்தின் கதை.

உறைவிடம் என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. வீடு தேடி அலைந்தவர்களுக்கும், வீட்டு உரிமையாளரின் தொல்லைகளுக்கு ஆளானவர்களுக்கும் படம் மிக நெருக்கமானதாக இருக்கும். தண்ணீர், மின்சாரம், விருந்தாளிகள் ஒருநாளுக்கு மேல் தங்கக்கூடாது என எத்தனை எத்தனை கண்டிஷன்கள்?

குடும்பத்தலைவனாகத் தகப்பனாகக் கணவனாகக் கிஷோர் கலக்கியுள்ளார். தன் மகனைப் பெட்டிக்குள் வைத்து யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டுக் கொண்டு வரும் வலியையும் குற்றவுணர்வையும் பரிதவிப்பையும் அழகாகப் பிரதிபலித்துள்ளார். வீட்டிற்காகக் குடும்பத்துடன் நடுத்தெருவில் கிஷோர் நிற்கும் காட்சியில் தான் படம் தொடங்குகிறது. பதற்றமடையாமல் அந்தக் காட்சிகளைக் கடப்பது சிரமம். லதா ராவும் சிறப்பாக நடித்துள்ளார்.

வீட்டு உரிமையாளரின் மகளைக் கல்யாணம் செய்து கொண்டு ‘ஹவுஸ் ஓனர்’ ஆவதுதான் கருணாகரனின் கனவும் லட்சியமும். பேச்சுலருக்கு வீடில்லை என்பதால், சாலையில் பிச்சையெடுக்கும் ஒரு பாட்டியுடன் வாடகை வீட்டில் குடியேறுகிறார். படத்தின் கலகலப்புக்கு உதவுவது அந்தப் பாட்டி தான்.

யாருக்கும் பாலா சிங் போலவும், அவரது அம்மா போலவும் வீட்டு உரிமையாளர்கள் அமைந்துவிடவே கூடாது. ஒரு மரணம் நிகழ்ந்துவிடுகிறது. அப்பொழுது, “வாடகை வீட்டில் சாகுறதே தப்பு. அதில் இவ்ளோ நேரம் பிணத்தை எடுக்காமல் வச்சிருப்பீங்களா?” எனத் தயவு தாட்சண்யம் இல்லாமல் எரிந்து விழுவார்கள். பெரியவர்களின் உலகில் தன்னை மறைத்துக் கொண்டு வாழும் சிறுவன் கவியாக மாஸ்டர் ரிஷியும் நன்றாக நடித்துள்ளான். விடியற்காலையில் முதல் ஆளாக எழுந்து எவருக்கும் தெரியாமல் கழிவறைக்குச் சென்று காலைக்கடன்களை முடித்துப் பள்ளிக்குத் தயாராகவேண்டும். வீட்டை விட்டுப் போவதும் வருவதும் ஒரு பெட்டிக்குள் ஒடுங்கிய பயணமாகிறது அச்சிறுவனுக்கு. தனது வீட்டில் வரிசையாகச் செல்லும் எறும்புகளைப் பார்த்து, “இந்த எறும்புகளுக்கு எல்லாம் சொந்த வீடா வாடகை வீடாப்பா?” எனக் கேட்கிறான் சிறுவன். “அதற்கும் சேர்த்துத்தான் நாம வாடகை கட்டுறோம்” என விரக்தியாகப் பதில் சொல்வார் கிஷோர். அந்த விரக்தியும் ஏக்கமும் கிஷோரை எந்த அளவுக்குக் கொண்டு செல்கிறது என்பதுதான் படத்தின் முடிவு.

வாழ்வியலைத் தேடிக் கிராமத்திலிருந்து நகரத்திற்கு வருபவர்கள், தாங்கள் உழைக்கும் ஊதியத்தைப் பெரும்பாலும் வாடகை தந்தே இழக்கின்றனர். வீட்டு உரிமையாளர் எப்பொழுது வேண்டுமானாலும் காலி செய்யச் சொல்வார். ‘சொந்த வீடில்லாதவன் இங்கே உள்நாட்டு அகதியே’ என்கிற கருத்தை ஆழப்பதிக்கிறது படம். சாம் C.S.-இன் ஒலிப்பதிவும், உமா சங்கரின் ஒளிப்பதிவும், சாமானியனின் பரிதவிப்பைக் கச்சித.மாகப் பதிந்துள்ளன. இயக்குநர் வைகறை பாலனின் வசனங்கள் மையக்கருவை விட்டு விலகாமல் படத்திற்கு மேலும் அழுத்தத்தைக் கொடுக்கின்றன.

 

chennai-apparel-association-launched-fashion-sixteen-2

Chennai Apparel Association Launched Fashion Sixteen, The 16th Garment Fair, at 4 pm, on the 3rd of August at GRT Hotel T Nagar Chennai..

Chennai Apparel Association Launched Fashion Sixteen, The 16th Garment Fair, at 4 pm, on the 3rd of August at GRT Hotel T Nagar Chennai..

chennai-apparel-association-launched-fashion-sixteen-1 chennai-apparel-association-launched-fashion-sixteen-2

Chennai Apparel Association launched FASH16N SIXTEEN, the 16th Garment Fair on the 3rd of August Friday at GRT Hotel T Nagar Chennai.

Chief Guests Mr. Vishal Hasti Surana (Director of Arihant Retail Pvt Ltd), Mr. Sohail (Brand owner, Basic Life) and Mr. Jagdish Sarda (Brand Owner, Venfield) graced the event with their valuable presenceThe event was addressed by members of the Board, Mr. Ravi Kumar (President CAA), Mr. Vasanth Kumar (Vice President), Mr. Padam Jain (Vice President), Mr. Ishwar Melwani (Secretary), Mr. Dilip Shah (Fair Chairman), Mr. Sandeep Jain (Committee Member).

Chennai Apparel Association will host FASH16N the Biggest Garment Fair of South India for the first time in Chennai starting from 8th to 10th of August 2018 at Chennai Trade Centre, Nandambakkam. This mega event will be spread across an area of 125000 sq.ft. The Expo will feature more than 270 stalls and for the very first time earmarked 50,000 sq.ft. exclusively for women and kids. Top brands from all over the country will showcase their collections.

Sandeep Jain on behalf of Chennai Apparel Association & team will also feature a fashion show on the 9th of August 2018 showcasing the latest styles by Otto, Minister White, Ceremony, Zola & Rapphael Junior.

Around 3000-4000 retailers from the state of Tamilnadu, borders of Andhra Pradesh, Kerala and Karnataka are expected to visit the fair. A separate zone has also been created this time for around 4 brands, those who are looking out for franchisee partners across the state. CAA expects upto 500 Cr worth business to take place in these three days of the Garment Fair.

Approximate about 5000 retailers from apparel industry across tamilnadu and neighbouring states are expected to visit this fair. Entry to the fair is restricted to Retailers of Readymade Garments only.

The fair will be inaugurated by

Thiru O.S.Manian  -(Minister for Handlooms and Textiles,Govt.Of Tamilnadu)

Guest Of Honour

Thiru Nalli Kuppuswami Chetti ( Nalli Silks)

 Few Brands participating in the fair are

Minister White (by Otto), Ceremony, Juliet, Twills, Botticelli, Pan America, Toffy House, Live In, 1st step etc. This fashion show is purely for B2B clients and the entry is strictly by invite only.

For more details – Email-caatime@gmail.com

Date: 8th, 9th, 10th, August 2018
Time: 
10 am to 9 pm
Venue: Chennai Trade Centre, CTC Complex, Mount Poonamallee High Road,
Nungambakkam, and Chennai – 600089

About Chennai Apparel Association

There was always a longstanding need among the manufacturers, distributor and agents of Tamilnadu to come together       and have a platform to address their need of mutual interest. This need gave birth to Chennai Apparel Association during june 2006 .Mr. Jagdish Sarda was our founder president when CAA started with 70 members and today we have about 400 members.

The objectives of our association are

1) To promote and safeguard the interest of the business of manufacturers, distributors and agents of garment industry in general and in particular the members of CAA

2) Represent the matters relating to trade with various bodies, state and central government, statutory and legal bodies, for the overall benefit of the members.

3) To raise funds for carrying on the above activities of the association

4) To frame such guidelines, rules and regulations for members to follow for the benefit of overall members

The first major activity CAA undertook was to conduct a fashion garment fair in Chennai, the response for which was overwhelming. since then CAA has conducted 15 successful garment fairs and  with great happiness and pride we would like to inform you that CAA is conducting its 16th Garment fair on 8th to 10th  August 2018 @ Chennai trade centre (Hall-1, 2 & 3) Nandambakkam, Chennai.

padithavudan-kizhithuvidavum-audio-launch-5

பணம் செல்லாமைக்குப் பின் ., சினிமா நாசம் , விவசாயம் நாசம் , எல்லாம் நாசம். இது தான் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டமா ? ” படித்தவுடன் கிழித்து விடவும் ” ஆடியோ விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!

பணம் செல்லாமைக்குப் பின் .சினிமா நாசம் விவசாயம் நாசம் எல்லாம் நாசம். இது தான்  மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டமா  படித்தவுடன் கிழித்து விடவும் ” ஆடியோ  விழாவில் மன்சூரலிகான் அதிரடி கேள்வி!padithavudan-kizhithuvidavum-audio-launch-5
தெரு நாய்கள் ” படத்தில் மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலங்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏற்படும் பிரச்சினையை பேசிய  “ஐ கிரியேஷன்ஸ்” படக்குழுவின் அடுத்த படைப்பாக உருவாகி இருக்கிறது “படித்தவுடன் கிழித்து விடவும் “.

“தெரு நாய்கள் ” படத்தை இயக்கிய ஹரி உத்ரா இயக்கத்தில் உருவாகியுள்ள “படித்தவுடன் கிழித்து விடவும் ” படத்தின்  ஆடியோ வெளியீட்டு விழா சென்னை , சாலி கிராமம் பிரசாத் லேப் திரையரங்கில் திரையுலக வி.ஐ.பிகள் கலந்து கொள்ள வெகு விமரிசையாக நடந்தது .

விழாவில் பேசிய புரடியூசர் கில்டு அமைப்பின் தலைவர் ஜாகுவார் தங்கம் ., ” தமிழ் சினிமாவில் தமிழன் , தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும், இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன் அதற்கு தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை… என்று பதில் வருகிறது. ‘அழகான தமிழ் பெண்களை நான் தரவா ? ‘”தமிழர்கள் தான் லைட் பாய் முதல் டைரக்டர் வரை … அனைத்து தொழில்நுட்பங்களிலும் பணிபுரிய வேண்டும் . தமிழ்நாட்டில்  தமிழன் தான் ஆள வேண்டும் …. வாழ வேண்டும் . என்று பேசினார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்த நடிகர் மன்சூரலிகான்., இங்கு பேசிய ஜாகுவார் தங்கம் அவர்கள் ., தமிழ் , தமிழன் என்றார். கலைக்கு ஜாதி ,மதம் ,மொழி கிடையாது …. என்பதால் எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றும் முயற்சிக்குக் கூட நான் எதிரானவன் . எம் .ஜி.ஆ,ர் என்.டி .ஆர் ,வி கேஆர் மண்வெட்டி பிடித்து எல்லாம் வளர்த்து எடுத்த சங்கம் அது. எனவே குறுகிய மனப்பாண்மை கூடாது …. என்பது என் கருத்து . மேலும் ,
ஜாகுவார்., இங்கு பேசும் போது ., “தமிழ் சினிமாவில் தமிழன் , தமிழ் பெண்கள் தான் நடிக்க வேண்டும், இதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அதற்கு, தமிழ் பெண்கள் நடிக்க வருவதில்லை… என்று பதில் வருகிறது. ‘அழகான தமிழ் பெண்களை நான் தரவா ? ‘” எனக் கேட்டார். “அப்போ அமலா பால் . ஹன்சிகா மோத்வானி  …. எல்லாம் வேண்டாமா ? இதற்காக தொழிலை மாத்தி பேரைக் கெடுத்துக்காதீங்க… ஜாகுவார் …. என்பதே என் அட்வைஸ்! .என கிண்டலாக பேசிய மன்சூரலிகான் ., அடுத்து, அதிரடிக்கு தாவினார்.

பொதுவா ,நான் எந்த சினிமா விழாவுக்கு  போனாலும் , அந்தப் படத்தை ஆஹா , ஒஹோ அற்புதம் அப்படின்னு சும்மாங்காட்டியும்  பாராட்டி பேச மாட்டேன் .ஆனால், “நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் “, “வளர்ந்தவுடன் சினதத்து விடவும் “, “சாப்பிட்டவுடன் போய் விடவும் ” அப்படிங்கற மாதிரி .,  “படித்தவுடன் கிழித்து விடவும் ” எனும் இப்பட டைட்டிலே ., இப்படக் குழுவினரின் துணிச்சலைக் காட்டுகிறது.

இப்படித்தான் , “ராஜாதி ராஜ, ராஜமார்த்தாண்ட ராஜகு லோத்துங்க ……” என என் படத்திற்கு வித்தியாசமாக மிகப் பெரிய நீளமான டைட்டில் வைத்திருந்த போது , “தெற்கு தெருமச்சான் ” ஷூட்டிங் ஸ்பாட்டில் அதைப் பற்றி என்னிடம் பேசிய நடிகர்சத்யராஜும் , இயக்குனர் மணிவண்ணனும் இது என்னய்யா டைட்டில் ? போய்யா … என்றனர். ஆனால்,அதன் பிறகு ஒரு நாள் சத்யராஜ் என்னிடம் ., ஒரு பங்ஷன்ல என்பேமிலியும் , ரஜினி சார் பேமிலியும் கலந்து கொண்டோம் …. அப்போ , என் பசங்களும் ,ரஜினி சார் பசங்களும் .,உங்க படபேர வச்சு , அதை தப்பு இல்லாது சொல்ற போட்டி நடத்தி சீரியஸா விளையாடினாங்க அப்பவே நினைச்சேன் நீ , ஜெயித்து விட்டாய் …. என்று என என்னைப் பாராட்டினார். அப்படி இந்தப் பட டைட்டிலும் நிச்சயம் எல்லோரையும் பேச வைக்கும்.

மோடி அரசு கொண்டு வந்த  டீ மானிஸ்ட்ரேஷனுக்கு முன்பு ., தமிழ் சினிமா ,தென் இந்திய சினிமா நல்லா இருந்தது .டிமானிஸ்ட்ரேஷனுக்கு அப்புறம் 500 சிறுபட புரடியூசர் காணாமல் போயிட்டாங்க … அப்படித்தான் விலங்குகள் நல வாரியம்னு ஒரு அமைப்பு … எந்த மிருகத்தை வைத்தும் படம் எடுக்கவுடாமல் பண்ணுது. ஒரு படம்னா டீஸர்,டிரைலர் , ஆடியோ ரிலீஸ் விழா எல்லாம் வச்சு இந்தப் படத்துல இது இருக்கு …. அது இருக்குன்னு ….சொல்லி ரசிகர்களை அழைக்கிறாம். ஆனா , திடீர்ன்னு எட்டு வழிச்சாலை போடுவோங்கிறது இந்த அரசாங்கம் . 8 வழி யார் கேட்டா ? 8 வழிச்சாலைக்கு அவசியம் என்னன்னும்  , அதால யார் யாருக்கு வேலை கிடைக்கும் ? யாருக்கெல்லாம் பயன் …?அப்படின்னு இந்த அரசாங்கம் விளக்கணும்ல…? சினிமா விழா எடுத்து ரசிகனை தியேட்டருக்கு வரவழைப்பது மாதிரி 8 வழி ஏன்னு …? சொல்லு. ஏன் சொல்ல மறுக்கிறாய் ..?இதற்கெல்லாம் பதில் சொல்லாத இந்த அரசாங்கம் ,  எந்தளவுக்கு கேடுகெட்ட அரசாங்கம் என்றால் ., 10 ஆயிரம் கோடி வருதுங்கறதுக்காக 8 வழிச்சாலை போடத் துடிக்குது. கோவை சிறுவாணி தண்ணீய  தனியாருக்கு விற்க பார்க்குது . காத்து, ஆக்ஸிஜன் விற்கப் போகுது. அடுத்து தாய்பாலையும் மீட்டர் வச்சு அளந்து குழந்தைகளுக்கு தர முயற்சிக்கும் .தமிழன் முழித்திருக்கும் போதே அவன் பேண்ட்டை அவிழ்க்கப் பார்க்கிறது. தமிழன் என்றால் இளக்காரமாகிவிட்டது. கேட்டால் இதெல்லாம் மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டம் என்கிறார்கள்.  நீ என்ன வெங்காயம் விற்க , மயிர் புடுங்க .. ஆட்சி நடத்துகிறாய் ? ஏழு லட்சம் கோடி என்ன செலவு செய்தீர்கள் ? 5 பைசா பொது மக்களக்கு வந்ததா..? சினிமா நாசம் , விவசாயம் நாசம் , எல்லாம் நாசம் . இது தான்  மத்திய அரசின் ” மேக் இன் இண்டியா” திட்டமா ?  பெரிய பெரிய நடிகன்பின்னாடி போனா இப்படித்தான். மத்திய அரசின்”பணம் செல்லாமை” அறிவிப்புக்குபின் நைட்டோடு நைட்டாக ஓஹோ என ஓடிய படங்கள்  எத்தனை தியேட்டர்களில் எத்தனை படங்கள்  ஒடவில்லை? அதற்கு பணத்தை  திருப்பி தந்தானா ? பணக்காரன்  யாராவது கஷ்டப்பட்டானா ? பலகோடி புது நோட்டுகள் எப்படி ? பல பணக்காரன் கையில் கிடைத்தது ? இது என்ன நாடா ..? திருவள்ளுவர் சொன்னது மாதிரி நம் நாட்டை நமக்கே  வளமாக்கி எடுத்துக்கொள்ளத் தெரியாதா ..? ஏன் இத்தனை எதிர்கட்சி எம்எல்ஏக்கள் இருந்தும் யாரும் பேச மறுக்கின்றனர் ? எல்லாம் கமிஷன் தான் காரணம் . கூடிய விரைவில் நாமெல்லாம் ஒன்று கூடி  நாம் தமிழர்ன்னு ஆட்சி அமைப்போம் .

காந்தி , காமராஜர் எல்லாம் , அன்று  பிரிட்டீஷ்காரனை ஓடவிட்டார்கள். இன்று ,இவர்கள் ,  கொரியா ,ஜப்பான் காரனை எல்லாம் கூவி கூவி அழைக்கின்றனர். இந்தப் படம் , “படித்தவுடன் கிழி க்கவும் ” , நாம் ,,இந்த மாதிரி திட்டங்களை கிழிக்கவும் . நாடு நாசம் ஆவதை தடுக்கவும் தயங்கக் கூடாது … என ஆவேசமாக பேசி அமர்ந்தார்.

மன்சூரைத் தெரடர்ந்து பேசிய இப்பட இயக்குனர் .,
ஹீரோ ஹீரோயின் வேல்யூ இல்லாத புது டீமினரின் படங்களுக்கும்  தியேட்டர்கள்  கிடைக்க அனைத்து சினிமா சங்கங்களும் முயற்சிக்க  வேண்டும் என்றதோடு ., மீத்தேன் எடுப்பதால் விவசாய நிலம் பாதிப்பு குறித்து என் முதல் படமான “தெரு நாய்கள் ” படத்தில் சுட்டி காட்டினேன் அப்படம் பேசப் பட்ட .அளவிற்கு போகவில்லை. இரண்டாவதாக,இந்த ., “படித்தவுடன் கிழித்து விடவும் ” படத்தில் ., ஹாரர்கதை என்றாலும் பேய் வழியாக இன்சூரன்ஸ் எனும் பெயரில் படித்த , படிக்காதவன் உள்ளிட்ட எல்லோரிடமும் நடக்கும் கொள்ளையை பேசி உள்ளேன். எஸ்.டிஆர், யுவன் உள்ளிட்டோர் இப்படத்தின்  சிங்கிள் டிராக், டீஸர் எல்லாம் வெளியிட்டு உதவியது மறக்க முடியாதது நன்றி . இப்படத்தின் வெற்றியை பொறுத்து நிச்சயம் மூன்றாவது படமும் எடுப்பேன் என்றார்.

மேலும் , இவ்விழாவில் , நடிகர்கள் கூல் சுரேஷ், ஆர்யன் . இயக்குனர்கள் ஏ.வெங்கடேஷ் , பேரரசு , ராம் சிவா , ஆண்டனி ,” ஒரு கிடாயின் கருணை மனு ” சுரேஷ் சங்கைய்யா “மொட்டசிவா கெட்டசிவா ” இசையமைப்பாளர் அம்ரீஷ், பாடகர் மலேசியா ஷாஸ் , பாடலாசிரியர் உமா ,தென்னிந்திய  திரைப்பட பத்திரிகை தொடர்பாளர் சங்கத் தலைவர் விஜயமுரளி .,    மற்றும் ,இப்படத் தயாரிப்பாளர்கள் உஷா , சுரேஷ்குமார் , எஸ்எம்டி கருணாநிதி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக “படித்தவுடன் கிழித்து விடவும் ” படத்தின் பாடல்களும் , டிரையிலரும் போட்டுக் காட்டப்பட்டு இசை வெளியீடும் இனிதே நடந்தேறியது!

  

padithavudan-kizhithuvidavum-29

இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ செ.ஹரிஉத்ரா இயக்குகிறார்

   இன்சூரன்ஸ் மோசடி பின்னணியில் ஒரு ஹாரர் படம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “                 செ.ஹரிஉத்ரா இயக்குகிறார்

padithavudan-kizhithuvidavum-29

 நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் ஒவ்வொரு  காமெடியிலும் ஒரு வசனம் மக்களிடையே வரவேற்பை பெரும். அப்படி யாராலும் மறக்க முடியாத வசனம் “ படித்தவுடன் கிழித்துவிடவும் “ அந்த வசனத்தை தலைப்பாக கொண்டு ஒரு படம் உருவாகிறது.

இந்த படத்தை I கிரியேசன்ஸ் பட நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக தயாரித்திருப்பவர் R.உஷா.

கூல்சுரேஷ், பிரதீக், ஸ்ரீதர், சீனி ஆகிய நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மற்றும் பான்பராக் ரவி, காதல் சரவணன்,                                                           நெல்லை சிவா, ரோஜாபதி, சபிதா, ஜெனிபர், சுபாஷி, சுமா, அனிதா, சிறுவன் தனுஷ், சுரேஷ்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக S.M.T.கருணாநிதி அறிமுகமாகிறார்.

ஒளிப்பதிவு   –        வாசு

இசை            –        நிரோ பிரபாகரன்                                            பாடல்கள்     –        மாஷா சகோதரிகள் மற்றும் அபிநந்தன்  கலை            –        இன்ப ஆர்ட் பிரகாஷ்                                          சண்டை       –        ஸ்டன்ட் கோட்டி                                           எடிட்டிங்     –        முத்துமுனியசாமி                                                மக்கள் தொடர்பு  –          மணவை புவன்                                இணைத் தயாரிப்பு –  சுரேஷ்குமார், சேரமணி ஸ்ரீதர்  தயாரிப்பு  –  R.உஷா

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  – செ.ஹரிஉத்ரா  ( இவர் ஏற்கனவே மீதேன் திட்டத்தால் விவசாய நிலங்கள் எப்படி பாதிக்க படுகின்றன என்பதை மையமாக வைத்து “ தெருநாய்கள் “ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது )

 இயக்குனர் ஹரிஉத்ரா பகிர்ந்ததுகொண்டது…

இன்று பரபரப்பான வாழ்க்கை சூழலில் நாம் சில விஷயங்களை செய்வதோடு விட்டுவிடுகிறோம். அப்படி விட்டுவிடுகிற ஒரு முக்கியமான விஷயம் இன்று நாம் வாங்கும் செல்போனிற்குகூட செய்கிறோமே இன்சூரன்ஸ்  அதுதான்.

அதைபற்றிய ஒரு சிறு பயணம் தான் இந்த   “படித்தவுடன் கிழித்துவிடவும் “ இன்சூரன்ஸ் இன்று நம் வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. அப்படி நாம் செய்யும் இன்சூரன்ஸ் தொகையை வாங்க நாமும் முறையிடுவது இல்லை சம்மந்தப்பட்ட கம்பெனிகளும் அதை மக்களுக்கு அதிகமாக தர முன்வருவதும் இல்லை.

இதனால் கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் மக்கள் பணம் முடங்கி உள்ளன. அப்படி ஒரு அரசியல்வாதியால் இன்சூரன்ஸ் மோசடி செய்யப்பட்டு  இறந்தவர்களின் ஆவிகள் மனிதர்களின் துணை கொண்டு எப்படி அந்த அரசியல்வாதியை பழிவாங்கியது என்பதை காமெடி கலந்து கமர்ஷியலாக  திரைக்கதை அமைத்துள்ளோம்.

பிளாஸ்டிக் தொழிற்சாலை கதையின் முக்கிய கதாபாத்திரமாக உள்ளதால் மன்னார்குடி பகுதியில் மிக பிரமாண்டமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செட் அமைத்து படமாக்கினோம். 90 சதவீதம் படப்பிடிப்பு இரவில் மட்டுமே நடத்தியிருக்கிறோம்.

அதற்காக  சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட  ரெட் ஹீலியம் என்ற புதுவகையான  கேமராவில் CP3 எனும் லென்ஸை பயன்படுத்தியுள்ளோம். அது இரவு நேர படப்பிடிப்பு காட்சிகளை மிக துல்லியமாக படம்பிடித்துள்ளது.                                                                                                                           படப்பிடிப்புமன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர்,  சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர் செ.ஹரிஉத்ரா.

  

celebrate-60-years-of-phototherapy-1

India Neodesigns in collaboration with Stanford University of Medicine & National Neonatology Forum of Tamilnadu present a daylong conference to ’Celebrate 60 years of Phototherapy’ on 1st August 2018

India Neodesigns in collaboration with Stanford University of Medicine & National Neonatology Forum of Tamilnadu present a daylong conference to ’Celebrate 60 years of Phototherapy’ on 1st August 2018

celebrate-60-years-of-phototherapy-1

India Neodesigns, a non-profit NGO of academia industry promoting innovative technology in neonatal health, in collaboration with Stanford University of Medicine and National Neonatology Forum of Tamilnadu presented a daylong conference to celebrate 60 years of Phototherapy on 1st August 2018 at Hotel Savera Chennai.

This daylong conference showcased the inventions of different technology in maternal and neonatal health developed by Indian innovators in the forenoon session followed by a phototherapy CME and panel discussion along with stalwarts like Prof Vinod Bhutani from the Stanford University of Medicine and key doctors from South India. The key members of the panel are IAS officer Dr Darez Ahmed, Mission Director – NHM Tamilnadu, Dr Arun Kumar Singh, National Advisor – RBSK, Dr J Kumutha, NHM – Tamilnadu, Dr Rathinakumar, NHM – Tamilnadu and Mr. Sashi Kumar, Phoenix Medical Systems Chennai.

It is fairly common for newborn babies to have mild jaundice, and the condition is usually resolved without any intervention. Sometimes, however, the jaundice is severe, and if it is not treated, it leads to a condition called kernicterus. In this condition, the brain of the baby is damaged by the high level of bilirubin in the blood. This can result in problems with hearing and vision and in intellectual disabilities and cerebral palsy.

Fortunately, the treatment of this condition is simple. It requires exposing the skin of the baby to light, particularly blue light of a particular wavelength. This treatment is called Phototherapy. Phototherapy was discovered around 60 years back. Since then, this simple treatment has saved many babies from the ill effects of kernicterus. Phototherapy is so simple that it can be administered at home.

This daylong conference celebrated six decades of phototherapy. It was aimed at spreading awareness about the serious effects of kernicterus and the benefits of phototherapy and also aimed at promoting the health of newborn infants in general.

“This is a good platform where all practitioners, doctors, Neonatologists, scientists, engineers and solution providers meet. More platforms like these need to be provided and conferences like this need to happen frequently so that there are solutions to problems in real time.”  Said Dr Darez Ahmed, Mission Director – NHM Tamilnadu.

  

img_4632

Ayanavaram Minor Girl Molestation Case solidarity Protest by Students, Celebrities at ValluvarKottam 2018

Ayanavaram Minor Girl Molestation Case solidarity Protest by Students, Celebrities at ValluvarKottam 2018 
img_4632

Activist and TV Host Apsara Reddy organized a protest in Valluvarkottam to push for death penalty and immediate punishment for child rapists. The awareness programme of similar nature was also organized by her during the high-profile Hasini case.

Speaking up for the 11-year old rape victim, Apsara said, “Child molestation is a very real issue that can happen to anyone and in any social strata. Child rapists slowly prey on, groom and molest kids often without leaving any scars. We must have open lines of communication with our children and always educate them on good touch and bad touch.” She added, “Rape is close to terrorism it traumatises a human being life long. It should only be punished with death penalty and immediately. These rapists don’t deserve any empathy.”

Speaking at the protest actor Ganesh Venkatraman, said, “Children are like God. We need to worship their innocence and protect it. Men who rape aren’t real men. It’s a bad show of their masculinity. Real men must protect children and speak up for them. This case is very moving and my full support to the little girl”

Actress Sakshi Agarwal said, “Children fear telling the truth because of threats or they feel they’ve done something wrong. We need to empower kids to open up and communicate to parents freely. It must be punished with death if these rapists have done it”

Dr Kamala Selvaraj speaking strongly said, “If you touch a child and harm a child you deserve death. They have a deviant mind and why waste taxpayer money and keep them in prison”

Apsara’s protest was well attended by 300 people from all walks of life and cutting across political parties and social strata.

The child’s counsellor, Vasanthi Babu said “Children can never lie about abuse. The child has opened up on so many intricate details which are so painful to hear”

 

பாலியல் வண்கொடுமை குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிப்பதோடு அதனை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று பெண்ணியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமி பாலியல் வல்லுரவு செய்து துன்புறுத்தப்பட்டுள்ள நிகழ்வை கண்டித்து சென்னையில் பெண்ணியல் ஆர்வலர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய பெண்ணியல் ஆர்வலரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளருமான அப்சாரா அவர்கள்,  சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிக்க காரணமானவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். பெண்குழந்தைகளுக்கு உடன் பழகுவோர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை சிறுவயதிலிருந்தே கற்றுத்தருவது அவசியமான ஒன்று என்று கூறினார். அதிலும் பிறரிடம் பழகும்போது தொட்டுபேசுவது பேசுவது குறித்த முழுமையான புரிதலை பெண் குழந்தைகளுக்கு இன்றைய காலக்கட்டத்தில் அவசியமாகியுள்ளது என்றார்.

பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில்  ஈடுபடுவோருக்கு மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் சமூகத்தில் இதுபோன்ற குற்றச்செயல்களை செய்ய நினைப்போருக்கு ஒருவித அச்ச உணர்வை இது போன்ற தண்டனைகள் நினைவுப்படுத்தும் என்றார்.

தொடர்ந்து பேசிய டாக்டர் கமலா செல்வராஜ், பெண் குழந்தைகளை தவறான எண்ணத்தில் தொட நினைத்தால் மரண தண்டனை நிச்சயம் என்பது நினைவுக்கு வரவேண்டும் என்றார். பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைப்பதென்பது தேவையற்ற நிர்வாக செலவுகள் என்றும் டாக்டர் கமலா செல்வராஜ் குறிப்பிட்டார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மன நல ஆலோசகர் வசந்தி பாபு, நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராமன், சாக்ஸ் அகர்வால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

classic-mrs-india

Deepali Phadnis and Mrs.India Pageants Pvt. Ltd. proudly presents the Grand Finals of the Sixth Edition – Mrs.India 2018, 30th July 2018 at Feathers Hotel, Chennai

Deepali Phadnis and Mrs.India Pageants Pvt. Ltd. proudly presents the Grand Finals of the Sixth Edition – Mrs.India 2018, 30th July 2018 at Feathers Hotel, Chennai

classic-mrs-india

mrs-india-pageants-sixth-edition-grand-finals-1 mrs-india-pageants-sixth-edition-grand-finals-3 mrs-india-pageants-sixth-edition-grand-finals-4 mrs-india-pageants-sixth-edition-grand-finals-5 mrs-india-pageants-sixth-edition-grand-finals-6 mrs-india-pageants-sixth-edition-grand-finals-7 mrs-india-pageants-sixth-edition-grand-finals-8 mrs-india-pageants-sixth-edition-grand-finals-9 mrs-india-pageants-sixth-edition-grand-finals-10 mrs-india-pageants-sixth-edition-grand-finals-11

‘Mrs. India Pageants Grand Finals 2018’, the only existing Pageant in India for married women has written a new chapter in history with the largest National Beauty Pageant ever with 72 Mrs.India 2018 finalists participating in one single Pageant.

Ms.Avantika Srivastava, Ms.Ujala and Dr.Anupama Soni were chosen as the winners of Mrs.India 2018. Additionally Ms.Jyoti Dogra was awarded with the title ‘Super Classic Mrs.India 2018’. Ms.Radhika Tejpal and Ms.Kajol Bhatia were awarded with ‘Classic Mrs.India 2018’ title.

The Grand Finals witnessed two rounds of ramp walk performances – the first round had all the models representing their own state and culture in beautiful traditional attires. They presented shimmering gowns in the second round. Out of the 72 contestants, 25 contestants were short-listed in the second round. A Q&A session was thrown open to the contestants, following which 3 winners were chosen as winners of Mrs.India 2018.

Mrs. India Pageant was introduced by Deepali Phadnis for the first time in India in the Year 2013. Today, Mrs. India is the one and only National Pageant for Married Women and Gateway to the World’s Premium Beauty Pageants. Mrs. India Pageants system has a huge spread of umbrella with International affiliation to more than Ten International Premium Beauty Pageants of the World.

The Pageant is a great platform to showcase beauty, talent, glamour and culture of Indian married women and celebrate her contribution to family and social values. Mrs. India does not look for models but makes role models and celebrates Beauty in Diversity as they strongly believe that every woman is beautiful, irrespective to her height, weight, age or colour.

cegam-3-0_post-event-1

Alumni Association of College of Engineering,Guindy (AACEG)successfully held its 3rdGlobal Alumni Meet ‘CEGAM 3.0’

Alumni Association of College of Engineering,Guindy (AACEG)successfully held its                                                                                    3rdGlobal Alumni Meet ‘CEGAM 3.0’
cegam-3-0_post-event-1 cegam-3-0_post-event-2
 ~ Dr. Raj Reddy, the chief guest (CEG 1958) and T. K Balaji (CEG 1967), Lucas TVS, Chairman agreed to initiate steps 
to set up a Center for Analytics and Artificial Intelligence in CEG

Chennai, 22 July, 2018: Alumni Association of College of Engineering, Guindy, an oldest alumni association in the country, organized its third CEGAM meet (College of Engineering, Guindy – Global Alumni Meet) at CEG campus today. The event encompasses various knowledge sharing sessions and panel discussions with eminent panelist for the whole day with more than 1500 alumni from the pre-independence batch (1940 batch) to the current student of 2018 in the meet. CEG-ians from across the globe traveled down for the event. The alumni present interacted with the current batch students and exchanged some in-depth knowledge and experience with the students which were insightful and encouraging.
From its humble beginning in 2011 and with its strong objective, CEGAM has set a mark in alumni meet arena. Padma Bhushan Dr. Raj Reddy, Computer Scientist & Turing Award Winner, Dr. V. Balamurugan, Director, Combat Vehicles Research and Development Establishment (CVRDE) Chennai, Mrs. Kamala Devi Subrahmanyan, Superintending Engineer (Retd.), All India Radio and Prof. M. K. Surappa, VC, Anna University graced the occasion.
With an objective to create a platform for the alumni of CEG and encourage collaboration among them, CEGAM also brought in global expertise knowledge of its alumni to the state and inspired the students more into entrepreneurial venture. AACEG president informed that the association is planning to accumulate 225 lakhs rupees to sponsor the hostel and mess fees of the needy and to set up new incubation center at the campus. 
Delivering key note address Padma Bhushan Dr. Raj Reddy, Computer Scientist & Turing Award Winner said  “I have been in the field of computing for over six decades. Artificial Intelligence started in mid 1950s and I wonder why robotics has not taken over the world, as everyone has been predicting. For the past 20 years I ask myself if there are ways to use this technology to help those at the bottom of the pyramid, the digitally illiterate. Voice and regional language technology with AI is at a level now that with relevant data, we can empower the society”, he said.
Recollecting her old days Mrs. Kamala Devi Subrahmanyan, Superintending Engineer (Retd.), All India Radio and alumni of CEG said “I am standing here because of the support from my family members and faculty members. Enthusiasm and courage is what every woman, irrespective of generation, needs to have to achieve their ambitions and CEG education gives one that”, she said. 
Speaking about the initiative Mr. D. Vasudevan, President of AACEG said, “CEGAM was conceived as an event to reconnect and strengthen the ties between alumni, students and the institution. He recollected the prominent names like K L Rao, Verghese Kurien, two former captains of Indian cricket team and few others while addressing. He also pointed that many Padma Shri, Padma Bhushan awardees and IAS officers who played an important role in nation building are the alumni of CEG. The nostalgia filled the eyes of the alumni with tears after seeing their batch mates, visiting their classroom, hostel where they were at their young age. Many even recollected the place where they met their life partner.  
Series of panel discussions with eminent panelists was organized on topics such as topics “Entrepreneurship, Incubation and Start-up at CEG”, “Women in Engineering” and “Role of Engineers in Public Policy Making” which also received great response from the participants.

About AA CEG

Alumni Association of CEG (AA CEG) is a 93 year old organization, and among the oldest and largest alumni associations in India, like our alma mater CEG, which is 225 years old. AA CEG has a registered membership count of over 20000+ and increases by more than 1500 every year. The alumni of CEG are spread all over India and across the globe. Alumni of the pre-independence batch (1940 batch) to the current student of 2018 are expected to take part in the meet.
music-director-ramesh-vinayagam-1

புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்!

புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்!
music-director-ramesh-vinayagam-1 music-director-ramesh-vinayagam-2

இன்றைய திரை இசையமைப்பாளர்களில் குறிப்பிடும்படியான ஒரு சிறந்த இடத்தில் இருப்பவர் ரமேஷ் வினாயகம் அவர்கள். பிரபல இயக்குனர் திரு மௌலி அவர்களுடைய சில தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்த அவர், இயக்குனர் வசந்த் அவர்களின் இயக்கத்தில் உருவான ‘ஏய்.. நீ ரொம்ப அழகா இருக்கே’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படங்களில் தன் கலைப்பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து  நள தமயந்தி, அழகிய தீயே, ஜெர்ரி, மொசக்குட்டி போன்ற படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இயக்குனர் ஞான ராஜசேகர் அவர்களின் அற்புதப் படைப்பான ‘ராமானுஜன்’ திரைப்படத்தின் அவரது இசைக்காக தமிழக அரசு அவருக்கு‘சிறந்த இசையமைப்பாளர்’ விருது வழங்கி கௌரவித்தது. ‘காந்தி’ புகழ் கிங் பென்ஸ்லீ நடித்த ஓர் ஆங்கிலப் படத்திற்கும் அவர் இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக இசையில் மிகுந்த தேர்ச்சியுடைய திரு. ரமேஷ் வினாயகம் தற்போது புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் ஆர்வமுடன் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். கர்னாடக ராகங்களில் அமைந்த கிருதிகளை இயற்றி, அவற்றிற்கு இசையமைத்து, இசைக்கருவிகளுடன் ஒருங்கிணைத்து அவர் இந்நிகழ்ச்சியை வழங்கப் போகிறார். சிறப்பம்சமாக, அக்கிருதிகளை புகழ்ப்பெற்ற இசைக் கலைஞர்களான அருணா சாய்ராம், உன்னி கிருஷ்ணன், அபிஷேக் ரகுராம், ஸ்ரீராம் பரசுராம் மற்றும் அனுராதா ஸ்ரீராம், நித்யஸ்ரீ மகாதேவன், சிக்கில் குருசரண், காயத்ரி வெங்கட்ராகவன், ஸ்ரீரஞ்சனி சந்தானகோபாலன், திருச்சூர் சகோதரர்கள் ஆகிய கர்நாடக இசைக் கலைஞர்கள் பாடப் போகிறார்கள். இதற்காக திரு. ரமேஷ் வினாயகத்துடன் 50 இசைக் கலைஞர்கள் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
சென்னை ஹாரிங்டன் சாலை, லேடி ஆண்டாள் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள முத்தா வெங்கடசுப்பா ராவ் அரங்கத்தில்  இம்மாதம் 28ந்தேதி, மாலை 6.30க்கு இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இதற்கான டிக்கெட்டுகள் ‘Book My Show’ தளத்தில் பரபரப்பாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது.
img_0016

ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா!

ரஜினிக்கு ஒரு நியாயம்..எனக்கு ஒரு நியாயமா!
img_0009 img_0016
ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘சிவா மனசுல புஷ்பா’.. நடிகர் வாராகி தயாரித்து இயக்கி நடித்திருக்கும் இந்தப்படத்தின் டைட்டில் எந்த அளவுக்கு அதிர்வுகளை ஏற்படுத்தியதோ, அதே அளவுக்கு தயாரிப்பாளருக்கு தற்போது சிக்கலையும் இழுத்துவிட்டுள்ளது. ஆம்.. இந்தப்படத்தின் டைட்டிலையே தூக்குங்கள் என கூறி, தயாரிப்பாளரும் இயக்குனருமான வாராகியை அதிரவைத்துள்ளனர் சென்சார் அதிகாரிகள்..
இந்த பிரச்சனையை பொதுவெளிக்கு கொண்டுசெல்வதற்காகவும் சென்சார் அதிகாரிகளின் எதேச்சதிகார போக்கை வெட்டவெளிச்சம் போட்டு காட்டுவதற்காவும் பத்திரிகையாளர்களை சந்தித்தார் வாராகி.
“நான் எடுத்துள்ளது அரசியல் காதல் படம்.. சம கால நிகழ்வுகளை கற்பனை கலந்து படமாக்கி இருக்கிறேன்.. படம் ஓடக்கூடிய மொத்த நேரமே 1 மணி 45 நிமிடம் தான்.. ஆனால் இந்தப்படத்தை பார்த்துட்டு இரண்டரை மணி நேரம்  விவாதிச்சிட்டு சில அரசியல் வசனங்கள், கிளாமர் காட்சிகள், சில  பெயர்கள் உள்ளிட்ட சிலவற்றை நீக்க சொன்னார்கள். நான் அவர்களுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் டில்லியில் உள்ள சேர்மனுக்கு அனுப்பி வைத்தார்கள்.
அங்கிருந்து வந்த உத்தரவில் படத்தின் டைட்டிலையும் மாற்ற சொல்லி வந்ததுடன் படத்தின் மைய கதாபாத்திரங்களான சிவா, புஷ்பா ஆகிய இரண்டு பெயர்களுக்கு பதிலாக வேறு பெயர்களை மாற்றச்சொல்லி இன்னொரு அதிர்ச்சியும் கொடுத்தார்கள்…
சிவா, புஷ்பாங்கிற பெயர்கள் எல்லாம் தடை செய்யப்பட்ட பெயர்களா என்ன..? இல்லை இந்த பெயர்களை மாற்றுங்கள் என யாரவது புகார் கொடுத்தார்களா..? சிவா மனசுல சக்தி வந்தப்போ மட்டும் தடை செய்யலையே.. மோடி மனசுல அமித்ஷான்னு நான் படம் எடுக்கலையே.. அட அப்படியே வக்கிரம் பிடித்த பெயராக இருந்தால் கூட, அவர்கள் சொல்வது நியாயம் என சொல்லலாம். இருட்டு அறையில் முரட்டு குத்துன்னு ஒரு படம் வந்துச்சு.. இப்போ அடுத்ததா பல்லுப்படாம பார்த்து செய்யுங்கன்னு ஒரு படம் வரப்போகுது….இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு சென்சார் அதிகாரிகளுக்கு தெரியாதா என்ன..? அவற்றையே அனுமதித்த சென்சார் அதிகாரிகள் என் படத்தின் டைட்டிலை மாற்றச்சொல்லும் காரணம் என..?
சென்சார் விதிகளின்படி டைட்டிலை மாற்றச்சொல்ல எந்த அதிகாரிக்கும் அதிகாரமில்லை… சென்சார் குழுவில் சினிமா தவிர்த்து பார்த்தால்  பத்திரிகையாளர், சமூக சேவகர்கள் இருக்கலாம்… ஆடிட்டருக்கு சென்சாரில் என்ன வேலை..? இதனால் என்ன கூத்து நடந்துச்சு தெரியுமா..? சம்பந்தமே இல்லாத இடத்தில் வசனங்களை மியூட் பண்ண சொன்னாங்க.. ஆனா எதை வெட்டுவாங்கன்னு நாங்க எதிர்பார்த்தோமோ, அதை அவங்க கண்டுக்கவே இல்லை.. அப்புறம் இவங்க என்ன பெரிய அறிவாளி..?
புகை பிடிக்கிற காட்சியிலயும் மது அருந்துற காட்சியிலயும் அது கெடுதல்னு எச்சரிக்கை வாசகம் போட சொல்றாங்க.. அப்படின்னா என் படத்துல லஞ்சம் வாங்குற காட்சி இருக்கு. கொலை செய்யுற காட்சி இருக்கு. எல்லாத்துக்கும் எச்சரிக்கை வாசகம் போடமுடியுமா..?. இப்படி ஒவ்வோர் விஷயத்துக்கும் குத்தம் கண்டுபிடிச்சா அப்புறம் எப்படி படம் எடுக்குறது..?
ஒரு காட்சி படமாக்குறப்போ ஏதேச்சையா ஒரு பூனை நடந்து போகுது.. அதை நாங்க எந்த தொந்தரவும் பண்ணலை.. ஆனா அதுக்கு வனவிலங்கு வாரியத்துல சான்றிதழ் வாங்கிட்டு வான்னு சொல்றாங்க..
ரஜினி படத்தின் டைட்டில் எல்லாம் பெயர்களில் தான் வருகிறது.. பெரிய படங்களுக்கு ஏன் பண்ணவில்லை..? பெரிய நடிகர் சின்ன நடிகர் பாகுபாடு காட்டுகிறார்களோன்னு சந்தேகம் வருது. சென்சார் ஒருதலை பட்சமா செயல்படுவது நன்றாகவே தெரிகிறது..  அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் உறவினர்களும் வேண்டியவர்களும்  தான் சென்சாரில் இருக்கிறார்கள்.
என்னோட படத்தோட டீசர் ‘சிவா மனசுல புஷ்பா’ எனும் பெயரில்தான் சென்சாரில் இருந்து சர்டிபிகேட் வாங்கினேன்.. அப்போது தவறாக தெரியாத  ‘சிவா மனசுல புஷ்பா’ பெயர் இப்பொழுது தவறாக தெரிவதால்தான்  எனக்கு அவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. நான் கடந்த பல வருடங்களாக பல விஷயங்களில் சமூக நோக்கோடு வழக்கு தொடர்ந்து வருவதால் தற்போது இதன்  பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாமோ என்கிற சந்தேகமும் உண்டாகிறது…
நான் ஒரு சின்ன தயாரிப்பாளர்.. ஒவ்வொரு முறையும் பணம் கட்டி மேல்முறையீடு செய்யும் அளவுக்கு வசதி இல்லை.  தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன்… இப்படி டைட்டில் பிரச்னை ஓடிக்கொண்டு இருப்பது அவர்களுக்கும் தெரியும்.. எல்லாவற்றையும் சொன்னால்தான் செய்வார்களா.?
சான்றிதழ் கொடுப்பதுதான் சென்சாரில் வேலை.. அதை நிறுத்தி வைக்க அவர்களுக்கு உரிமையில்லை.. காழ்ப்புணர்ச்சியில தான் இப்படி செய்கிறார்கள். அதனால் தான் ரிவைசிங் கமிட்டிக்கு விண்ணப்பித்துள்ளேன்.. இதில் எனக்கு நியாயம் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தின் கதவை தட்டுவேன்… என்னைப்போல இனி வரும் தயாரிப்பாளர்களுக்கு சென்சார் மூலம் இதுபோன்ற சோதனைகள் நிகழக்கூடாது என்பதால் தான் நானே நேரடியாக களமிறங்கி விட்டேன்.. ஊடகங்கள் மூலமாக இந்த பிரச்னை உரியவர்கள் கவனத்துக்கு சென்று நல்ல தேர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” என கூறினார் வாராகி.
whatsapp-image-2018-07-25-at-4-17-12-pm

நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர் – 25.7.18

நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர் – 25.7.18
 
whatsapp-image-2018-07-25-at-4-17-12-pmwhatsapp-image-2018-07-25-at-4-17-12-pm
தெனிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் துணை தலைவர் பொன்வண்ணன் மற்றும் செயற்க்குழு உறுபினர்கள் கோவை சரளா, பசுபதி ஆகியோர்கள்   இன்று – 25.7.18 தலைமை செயலகத்தில் மாண்புமிகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர்களை நேரில் சந்தித்து நடிகர் திலகம் செவாலியே சிவாஜி கணேசன் அவர்களுக்கு மணி மண்டபம் அமைத்து சிறப்பித்ததோடு அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடவும் அரசாணை வெளியிட்டு தமிழ் திரையுலகிற்கு பெருமை சேர்தமைக்கும், அரசு பொருட்காட்சிகளில் அரசின் கொள்கைகளை விளக்கும் நாடக குழுக்களுக்கு வழங்கி வரும் சன்மானதொகை ருபாய் 2௦௦௦-யில் இருந்து ருபாய் 5௦௦௦-ஆக உயர்த்தி அரசாணை பிறப்பித்தமைக்கும் நன்றி தெரிவித்தனர் மேலும் 
 
  பொருட்காட்சி நிகழ்ச்சிகளில் தற்போது நாடகக் குழுக்களுக்கு குறைந்தது 10 நபர்கள் நாடகத்திற்க்கு சென்றால் மட்டுமே அரசுப்பேருந்தில் பயண கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.  அதை, அதற்கும் குறைவான நபர்கள் நாடகத்திற்கு சென்றாலும் கூட இது பொருந்தும் என்று மாற்றி தாங்கள் அரசாணை வெளியிடவேண்டும்  
           
           அரசு மூலம் வழங்கும் சன்மானத் தொகையை நாடக கலைஞர்களின் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தவேண்டும் 
           
            நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்த பேருந்தில் செல்லும்போது அவர்களுடைய இசைக்கருவிகள் எடுத்துச்செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே அவர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் நிகழ்ச்சிக்கான உடைமைகளை அரசுப்பேருந்தில் எடுத்துச்செல்ல முன்னுரிமை வழங்க வேண்டும் 
             
             நாடக நடிகர்கள், தெருக்கூத்து கலைஞர்கள் மிகவும் குறைந்த வருமானத்தில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றார்கள். எனவே அவர்களுக்கு நிகழ்ச்சி நடத்த செல்லுவதற்கு அரசு பேருந்தில் வருடாந்திர இலவச பயண சலுகை வழங்குமாறும்.
              
             60 வயதிற்கு மேல் உள்ள திரைப்பட, நாடக கலைஞர்கள் தொழில் வாய்ப்பு கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு மாதந்திர ஓய்வூதிய உதவித்தொகை வழங்கவேண்டும்.
              
             தமிழ் திரைப்பட நூற்றாண்டு மற்றும்  புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆண்டில் நூறாண்டு கடந்த தமிழ் திரைப்பட கலைஞர்களின் வாரிசுகளுக்கு சிறப்பு திட்டமாக மாதந்திர ஓய்வூதிய தொகை  வழங்கிட வேண்டும்.    
 
ஆகிய கோரிக்கைகளையும் நடிகர் சங்க நிர்வாகிகள் இந்த சந்திப்பின் பொழுது முதல்வரிடம் முன்வைத்தனர், முதல்வர் அவர்களும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக தெரிவித்தார், இந்த சந்திபின்போது நடிகர் சங்க பொது மேலாளர் பால முருகன் மற்றும் செய்தி துறை செயலாளர் இரா.வெங்கடேசன் IAS, செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் பொ.சங்கர் IAS ஆகியோர் உடனிருந்தனர்.
steamed-pomfret-spicy-sauce

The Residency presents ‘Something’s Fishy’, the Annual Seafood Festival from 27th July 2018 to 5th August 2018

The Residency presents ‘Something’s Fishy’, the Annual Seafood Festival from 27th July 2018 to 5th August 2018

steamed-pomfret-spicy-sauce

The Residency presents ‘Something’s Fishy’, the Annual Seafood Festival from 27th July 2018 to 5th August 2018

The Residency presents ‘Something Fishy’, the annual seafood festival curated by Chef S Shanmugam from 27th July 2018 to 5th August 2018. This July, Chin Chin is all set up to welcome guests who are all set to feast through a sea of specialties! The interiors will decked up and for the next 10 days, the Chef will dish out handpicked varieties of seafood, irresistible fresh catch of the day.

A sumptuous feast of fish, prawns, lobster and the more exotic and adventurous squid, crab and Pomfret, from mild to fragrant to downright fiery; the fest has become an annual affair, after the immense response to last year’s edition.

Chin Chin’s festival menu is an opportunity to savor a range of seafood specialties from spicy & flavorful to aromatic & low calorie ones. “The catch is best at this time” says Chef Shanmugam, the brain behind the plan to whet our appetite. He goes on to add that seafood is an excellent source of proteins, minerals and vitamins; it is also low in fat & cholesterol. Grill, steam, pan-braise and stir-fry are the cooking techniques that the Chef has used to make the recipes healthy & tasty.

”We start off with a Tangy Raw Mango with cashews & shrimps salad for fresh yet sour flavors.  A Prawn Tom Yum soup is an appetizing way to begin your experience, paired with the Crystal Prawn Dumplings. Then there are Shrimp Cigars and Crab Claws, besides a range of choices from Red Snapper, Grouper, Pomfret and Sea Bass. Start the mains with the all-time favorite Braised Seer, a tangy, dish that goes well with Crab meat Fried Rice. Those who like things spicy must not miss the Thai Curry. One dish curated to make seafood lovers go gaga is the Standing Pomfret, topped with the popular Phuket sauce. Strong sauces have been kept to a minimum so that the succulent taste of seafood can be enjoyed to the fullest. For a sweeter aftertaste, we recommend the fried coconut ice cream, a twist to the all-time favorite recipe.” said Chef Shanmugam.

The Seafood Festival is curated by Chef S. Shanmugam, the Continental Chef at The Residency. With around 40 years of Chef Shanmugam specializes in Chinese cuisine. He started his career in the year 1975 with the Golden Dragon, Taj Coromandel where he specialized in Szechwan cuisine under Chef Ricky and Frank Low. After which he was transferred internally and worked with various hotels under the Taj Group specializing with Chinese Restaurants. While with the Taj group, he played a crucial role in the launch of Jade Pavilion Restaurant, Taj Malabar, Cochin and Ming Garden Restaurant, Taj Gateway, Visakhapatnam. In the year 1996 he joined The Residency group of Hotels. Chef Shanmugam spearheaded the launch of Chin Chin, The Residency Coimbatore in the year 1997. He has even collaborated with Chef Hardy Cheung, Master Chef from Hong Kong for the relaunch of the Chin Chin menu in 2008.

acid-attackers-30

ஒவ்வொரு நாளும் புதிய புதிய நாயகர்களையும், நாயகிகளையும் கண்டுவருவதாக நடிகை கௌதமி குறிப்பிட்டிருக்கிறார்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய நாயகர்களையும், நாயகிகளையும் கண்டுவருவதாக நடிகை கௌதமி குறிப்பிட்டிருக்கிறார்.

acid-attackers-30

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம் பெண்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை பெறுவது குறித்தும், அவர்களுக்கு நம்பிக்கை சார்ந்த உளவியல் சிகிச்சை அளிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் இலவச சிகிச்சை முகாம் இன்று சென்னை சேத்துப்பட்டு பூங்கா வளாகத்தில் நடைபெற்றது. இதில் நியூ ஹோப் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் சைமன்(Dr.Simon Hercules), அதிஜீவன் அறகட்டளை நிறுவனர் ப்ராக்யா(Pragya prasun), பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கணபதி கிருஷ்ணன்(Dr.Ganapathy Krishnan)), கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரியில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் திருமதி டாக்டர் நிர்மலா பொன்னம்பலம்(dr.Nirmala ponnambalam), டாக்டர் கார்த்திகேயன், பெண்ணலம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ராதிகா சந்தானகிருஷ்ணன்(Dr.Radhika santhanakrishnan) இவர்களுடன் மருத்துவ சவால்களை எதிர்கொண்டு இளைய தலைமுறையினரின் மத்தியில் நம்பிக்கையை விதைத்து மன உறுதியுடன் வாழ்ந்து வரும் தன்னம்பிக்கையின் சிகரம் நடிகை கௌதமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ப்ராக்யா சிங் பேசுகையில்.
‘ இந்த சமூகத்தில் பல்வேறு நிலையிலான வன்முறைகளால் பெண்கள் ஆசிட் வீச்சிற்கு ஆளாகிறார்கள். அதிலிருந்து அவர்கள் மீள்வது பெரும் போராட்டமாக இருக்கிறது. பெற்றோர்களின் ஆதரவு முழுமையாக கிடைப்பதில்லை. நண்பர்களின் அரவணைப்பும் கிடைப்பதில்லை. இதன் காரணமாக இதற்குரிய மருத்துவ சிகிச்சை குறித்த முழுமையான விழிப்புணர்வு இவர்களை சென்றடைவதில்லை. இது என்னுடைய வாழ்வில் நடைபெற்றதால், இது போல் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி, அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை கிடைப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தில் தான்ள இந்த அதிஜீவன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கினேன். நானே எதிர்பார்க்காத அளவிற்கு அனைத்து தரப்பினரிடமிருந்தும் இதற்கு ஆதரவும் உதவியும் கிடைத்து வருகிறது. ஒரு நல்ல விசயத்தை தொடர்ந்து மேற்கொள்ளும் போது தான் அது சமுதாயத்தில் நல்ல பலனைத் தரும் என்பார்கள். அதனால் நியூ ஹோப் மருத்துவமனையுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு முகாமை நடத்துகிறோம்.’ என்றார்.
நடிகை கௌதமி பேசுகையில்
‘நான் ஒவ்வொரு நாளும் இந்த சமுதாயத்தில் போராடிக்கொண்டிருக்கும் புதிய புதிய நாயகர்களையும், நாயகிகளையும் பார்க்கிறேன். அவர்களின் தன்னம்பிக்கை என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டிருக்கிறது. இங்கு ஆசிட் வீசப்பட்டதால் பாதிக்கப்பட்டிருக்கும் இளம் பெண்கள்  பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு புதிய தோற்றத்தில் வாழ்ந்து வருவதைப் பார்க்கும் போது அவர்களின் துணிச்சலை பாராட்டத் தோன்றுகிறது. இந்த சமுதாயம் அவர்களை உளவியல் ரீதியாக துன்புறுத்தாமல் இருந்தால் அவர்கள் கூடுதல் தைரியத்துடன் உழைத்து முன்னேறுவார்கள். பலருக்கு முன்னூதாரணமாக திகழ்வார்கள். தற்போதைய சூழலில் இந்த சமுதாயத்தை பாதுகாக்க ஏராளமான வீரர்கள் தேவை. இந்த உலகத்திற்கு தேவை. இவர்களைக் காணும் போது இவர்களுடன் இன்று இருப்பதை நான் பெருமிதமாக உணர்கிறேன். இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வரும் டாக்டர் சைமன், டாக்டர் ராதிகா உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களையும் மனதாக வாழ்த்துகிறேன்.’ என்றார்.
டாக்டர் நிர்மலா பொன்னம்பலம் பேசுகையில்,
‘ தீக்காயங்கள் மற்றும் அமிலத்தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தற்போது ஏராளமான புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள் அறிமுகமாகியிருக்கின்றன. பிளாஸ்டிக் சர்ஜரி மட்டும் இல்லாமல் காஸ்மெடீக் சர்ஜரியும் இத்தகையவர்களுக்க அவசியமாகிறது. என்னைப் பொறுத்தவரை குழந்தைகளுக்கு ஏற்படும் தீக்காயங்கள், மின்சாரத்தால் ஏற்படும் பாதிப்பு, ஆசிட் பாதிப்பு போன்றவற்றை சற்று கூர்ந்து கண்காணித்துக் கொண்டேயிருந்தால் தடுக்க இயலும். ஆனாலும் பெண்களுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் அவர்கள் இந்த சமூகத்தை எதிர்கொள்ள அஞ்சி, தயங்கி வீட்டிலேயே முடங்கி கிடக்காமல், இது போன்ற விழிப்புணர்வு முகாம்களில் கலந்து கொண்டால் அவர்களுக்கு முதலில் மனதளவில் நம்பிக்கை பிறக்கும். பிறகு அவர்கள் ஆபரேசன் செய்து கொண்டு வாழ்வதற்கான வழியை கண்டறிவார்கள்.’ என்றார்.
thisai-movie-stills-and-news-6

‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..!

‘திசை’ படத்தின் சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்டார் இயக்குனர் மற்றும் நடிகர் கே.பாக்யராஜ்..!

thisai-movie-stills-and-news-6

‘காத்தெல்லாம் காதல் வாசனை’; சிங்கிள் வீடியோ டிராக்கை வெளியிட்ட கே.பாக்யராஜ்..!
லைஃப் சைக்கிள் கிரியேஷன்ஸ் சார்பில் பவன் கந்தசாமி மற்றும் GVK இணைந்து தயாரித்துள்ள படம் ‘திசை’. பவன்,யுவன், அதுல்யா ரவி, லீமா பாபு ஆகியோர் நடித்துள்ள இந்தப்படத்தை P.வரதராஜன் என்பவர் இயக்கியுள்ளார். மணி அமுதவன் இசையமைத்துள்ளதுடன் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிப்பதிவை தாணு பாலாஜி மேற்கொள்ள, படத்தொகுப்பை முத்துக்குமரன் கவனிக்கிறார். ஸ்டண்ட் ; ஸ்டண்ட் ரவி மற்றும் ரன் ரவி, நடனம் ; ராதிகா.ஐ.
இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘காத்தெல்லாம் காதல் வாசனை’ என்கிற சிங்கிள் வீடியோ டிராக்கை சமீபத்தில் இயக்குனர் மற்றும் நடிகர் திரு கே.பாக்யராஜ் வெளியிட்டார்.
social-activist-dr-sheeba-lourdhes-6

Social Activist Dr.Sheeba Lourdhes

Social Activist Dr.Sheeba Lourdhes

social-activist-dr-sheeba-lourdhes-1

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற முன்னாள் அழகி, எழுத்தாளர், உளவியல் நிபுணர், மனித வள மேம்பாட்டு ஆலோசகர், நாத்திகவாதி, ஆவணப் படம் மற்றும் குறும் பட இயக்குநர், சமூக சேவகி, மனித உரிமை போராளி என பன்முக ஆளுமையுடன் வலம் வருபவர் ஷீபா லூர்தஸ்(Dr.Sheeba Lourdhes). இந்த தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக சுவீடன் நாட்டிலிருந்து தமிழகம் வந்து களப்பணியாற்றுபவர். தன்னுடைய பிறந்த நாளையும் தன்னுடைய ரோல்மாடலாக இருக்கும் அப்துல்கலாம் மற்றும் பெரியாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுடனும், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடனும் கொண்டாடுவதில் பெருவிருப்பமுடையவர் முனைவர் ஷீபா. இவர் அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் விழாவிற்கு வந்திருந்த போது சந்தித்து உரையாடினோம்.
 
அழகி பட்டம் வென்ற நீங்கள் பேஷன், மாடலிங், திரைத்துறை போன்றவற்றில் பயணிக்காமல் மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்று பயணத்தை திசை மாற்றிக் கொண்டதேன்?
 
நான் கோவையில் பிறந்து, சுவீடன் நாட்டில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தில் அகதிகளுக்கான உளவியல் பயிற்சி அளிக்கும் அலுவலராக பணியாற்றி வருகிறேன். உலகத்தின் பல நாடுகளுக்கு பயணித்து அகதிகளாக இருக்கும் மக்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் மரண பயம் குறித்த உளவியல் ரீதியிலான குறைபாடுகளை நம்பிக்கையான மற்றும் அரவணைப்புடன் கூடிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களின் எஞ்சியுள்ள வாழ்நாட்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு மனதளவில் தயார் படுத்துகிறோம்.
 
என்னுடைய வாழ்க்கையில் இளமைப் பருவத்தில் அழகி பட்டம் வெல்லவேண்டும். பேஷன் மற்றும் மாடலிங் துறையில் கொடி கட்டிப் பறக்கவேண்டும் என்பதெல்லாம் கனவாகவோ, லட்சியமாகவோ இருந்ததில்லை. சென்னை விமான நிலையத்தில் நிகழ்ச்சி மேலாளர் ஒருவர் என்னை சந்தித்து, உங்களின் உடலமைப்பு மற்றும் தோற்றப்பொலிவு நன்றாக இருக்கிறது ஏன் அழகிப் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது? என கேட்டார். அப்போது அதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன். இதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளலாமே? என எண்ணத்தில் தான் அந்த அழகி போட்டியில் கலந்துகொண்டேன். 
 
அழகி போட்டி பற்றிய எந்தவொரு விதிமுறையையும் அது வரை நான் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையிலேயே மொத்தம் உள்ள 32 சுற்றுகளில் ஸ்கின் டெஸ்ட், போட்டோஜெனிக் டெஸ்ட்,  பொதுஅறிவு சுற்று, டேலண்ட் ரவுண்ட், எத்னிக் ரவுண்ட் என பல சுற்றுகள் வரை வெற்றிப் பெற்று முன்னிலையில் வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் கேட்வாக் சுற்று என்றார்கள். அதுவரை கேட்வாக் என்றால் என்ன? என்பதையே அறிந்திருக்கவில்லை. ஒரே நாள் இரவில் அதைப் பற்றித் தெரிந்துகொண்டு பயிற்சிப் பெற்று அதில் வென்றேன். அந்த அழகி பட்டம் வென்ற தருணங்கள் இன்று வரை ஆனந்தமான அனுபவத்தையும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றிப் பெறலாம் என்ற உணர்வையும் எமக்குள் ஏற்படுத்தியதை மறக்க இயலாது.
 
அழகி பட்டம் வென்ற பிறகும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. பேஷன் மாடலிங், திரைத்துறை மற்றும் காட்சி ஊடகங்களில் நுழைந்து ஜொலிக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்ததில்லை. அத்துடன் அழகி பட்டம் வென்றுவிட்டோம் என்ற கர்வமும் எனக்கில்லை. அந்த தருணத்தில் சில தனியார் தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள், பெண்களுக்கான உரிமை குறித்து உரத்து பேசும் சமூக சிந்தனையாளர்கள் மற்றும் மனித உரிமை குறித்த அமைப்பினர் என்னை சந்தித்து, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டு பேசினால் அது பெண்களுக்கும், அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் நல்லது நடக்கும் என்றார்கள். இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று எண்ணி சமூக சேவையின் பக்கம் என்னுடைய கவனத்தை திருப்பினேன்.
 
உங்களின் சமூக சேவை குறித்து..?
 
நான் சுவீடனில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தில் மன நலம் மற்றும் மனித வளம் மேம்பாட்டிற்கான ஆலோசகராக இருந்து பணியாற்றிய போது சுவீடனை கடந்து செல்லும் ஏராளமான அகதிகளை, அவர்களின் மனதில் குடிக்கொண்டிருக்கும் போர் பற்றிய அச்சுறுத்தல்களை உளவியல் பயிற்சி அளித்து அவர்களை இயல்பான மனிதர்களாக்குகிறோம்.. இதனை ஏன் என்னுடைய நாட்டில், நான் பிறந்த இந்த தமிழ் மண்ணில் செய்யக்கூடாது என்று எண்ணி ஒவ்வொரு முறையும் தமிழகம் வந்து களப்பணியில் இறங்கி சேவை செய்து வருகிறேன்.   
 
தமிழக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். சில பிரச்சினைகள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. மக்களை மனரீதியாக மட்டும் பயிற்சி அளித்து உற்சாகமளிப்பதும் மட்டும் என்னுடைய வேலையல்ல. அத்துடன் இன்றைய தேதியில் தமிழகத்தில் நிலவும் அரசியல், அரசியல் சட்ட விதியில் மக்களுக்கு அளிக்கப்பட்ருக்கும் உரிமைகள், இதற்குரிய சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன். இதனால் மக்களுக்கு பல வகைகளில் ஆலோசனை தேவைப்படுகிறது. இது வளர்ந்த மக்களுக்கும் மட்டுமல்ல அனாதை ஆசிரமங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அவர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் விசயங்களிலும் ஆர்வம் காட்டி அவர்களிடமும் உரையாற்றி வருகிறேன்.
 
எழுத்தாளராக மாறி இலக்கியவாதியும் மிளிர்கிறீர்களே அதைப் பற்றி…?
 
தற்போது தத்துவம் சார்ந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன். இதுவரை நான் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் அந்த நூலை எழுதியிருக்கிறேன். விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த புத்தகம் வெளியாவதில் எனக்கு ஒரு மனநிறைவு உண்டு. ஏனெனில் இது வரை நான் கடுமையாக உழைத்து சேகரித்த தரவுகள் மற்றும் அரிய விசயங்கள், நுட்பமான அணுகுமுறை ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கிறது. இது மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களின் பார்வையில் சுவீடனைப் பற்றியும், அங்குள்ள மக்களைப் பற்றியும்..?
 
உலகத்தார்களின் பார்வையில் சுவீடன் ஒரு வளர்ச்சியடைந்த நாடு. செல்வ வளம் மிக்க நாடு. இலவசமாக வழங்கப்படும் தரமான கல்வி, இலவச உயர் தர சிகிச்சை ஆகியவை தான் தெரிகிறது. ஆனால் எங்களைப் போன்ற உளவியல் ஆலோசகர்கள் அந்த சமூகத்தில் இணைந்து பணியாற்றும் போது நாங்கள் சந்திக்கும் மக்களின் மனநிலையே வேறு. அங்கு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கும் மக்கள் அதிகமுள்ள நாடு. அத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களும் அதிகம். இதற்கு காரணம் பெரும்பாலானவர்கள் யாருடனும் உரையாடாமல் தனித்தேயிருப்பது தான். அங்கு நிலவும் பருவ நிலையும் ஒரு காரணம். 
 
social-activist-dr-sheeba-lourdhes-6
அங்கு 65வயதுள்ள பெண்கள் கூட கணவரின் அரவணைப்பு இல்லாமல் தனித்தே வாழ்வார்கள். ஆனால் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டால் இவர்களை மீட்கவும், இவர்களிடம் பேசவும் யாருமில்லை.இது போன்ற தருணங்களில் அவர்களின் பிரச்சனைகளை கேட்பதற்கு ஒருவர் இருந்தாலே போதும். பிரச்சனையின் பாதிப்பு குறைந்துவிடும். இதுவே அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றிவிடும் காரணி. நம்மால் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வை அளிக்க முடியாது. ஆனால் அவர்களிடம் பேசும் போது, பிரச்சனைகளின் தாக்கம் குறைந்து தவறான எணணங்களின் வீரியம் திசை திரும்பும். அதே போல் குடி பழக்கம், புகை பிடிக்கம் பழக்கம் போன்றவர்களையும் அந்த பாதிப்பிலிருந்து மீட்கிறோம். இது சுவீடன் மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறது.
 
ஒவ்வொரு பெண்களும் தன்னிறைவு பெறுவதற்காக என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்குவீர்கள்?
பெண் என்பவர் ஆண்களுக்கு அடிமையானவர் என்ற எண்ணத்திலிருந்து முழுமையாக வெளியே வரவேண்டும். அதே போல் என்னுடைய இடம் சமையலறை என்றும், என்னால் இதனை தனித்து செய்ய இயலாது என்ற சிந்தனையிலிருந்தும் வெளியே வரவேண்டும். பெண்கள் முன்னேற வேண்டும் என்றாலோ அல்லது த்ன்னிறைவு பெறவேண்டும் என்றாலோ , அதற்கான வாய்ப்புகள் உருவாகவேண்டும் அல்லது வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். அப்போது தான் அவர்களின் சக்தியை அவர்கள் உணர்வார்கள். முன்னேற்றம் பெறுவார்கள். தன்னிறைவு அடைவார்கள். அதிகாரத்திற்கும் வருவார்கள். சிறந்த சமுதாயத்தையும் உருவாக்க இயலும்.
 
எதிர்கால இலக்கு..?
 
பெண்கள் அதிகாரத்திற்கு அதிகளவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலும், இதை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வை அளிப்பதில் என்னுடைய பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். உலகளவிலான பெண்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்திலுள்ள பெண்களுக்கு இருக்கும் உளவியல் வலிமை வேறு எங்கும் இல்லை. ஆனால் இவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும். பல்வேறு வகையில உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும். அதே போல் பெண்களின் உரிமை, குழந்தைகளின் உரிமை இது குறித்தும் போதிய அளவிற்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கான வழிவகைகளிலும் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன்..
bharathiraja-vidharth-3

Kurangu Bommai News

Kurangu Bommai News

2017ம் ஆண்டுக்கான “சிறந்த தமிழ் திரைப்படம்” விருதினை வென்ற குரங்கு பொம்மை திரைப்படம்.

bharathiraja-vidharth-3

 

BLUE SAPPHIRE” என்பது கனடாவில் உள்ள முக்கியமான பொழுதுபோக்கு குழுக்களில் ஒன்றாகும். இவர்கள் தற்போது “டொரேண்டோ தெற்காசிய திரைப்பட விருதுகள்” மூலமாக பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளைப் பெற்றவர்களின் பெயர்களை அறிவித்துள்ளார்கள்.
இந்த அறிவிப்பினை  “BLUE SAPPHIRE” நிறுவனத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. அஜீஷ் ராஜேந்திரன் வெளியிட்டுள்ளார். இதன்படி கடந்த ஆண்டு வெளியான தமிழ் மற்றும் மலையாளம் இரண்டு மொழிப் படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 25 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 5 சிறப்பு (ஜூரி) விருதுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் “விக்ரம் வேதா”, “அருவி” “அறம்” என பல வெற்றிப்படங்கள்  இடம்பெற்று  கடுமையான போட்டி நிலவிய சூழலில் சிறந்த தமிழ்த் திரைப்படம் என்ற விருதினை ஷ்ரேயா ஸ்ரீ மூவிஸ் LLP தயாரிப்பில் விதார்த், பாரதிராஜா, டெல்னா டேவிஸ் மற்றும் பலர் நடித்து, நித்திலன் இயக்கியிருந்த “குரங்கு பொம்மை” திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. அது மட்டுமல்லாமல், இப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த துணை நடிகருக்கான விருது “இயக்குநர் இமயம்” பாரதிராஜா-வுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக சர்வேதச அளவிலான ஆன்லைன் வாக்கெடுப்பு முறையில் இந்த விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
vijay-vasanth-news-6

மை டியர் லிசா’ படப்பிடிப்பில் விஜய் வசந்தின் காலில் எலும்பு முறிந்தது.

மை டியர் லிசா’ படப்பிடிப்பில் விஜய் வசந்தின் காலில் எலும்பு முறிந்தது.

vijay-vasanth-news-6

படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய விஜய் வசந்த்…!

‘மை டியர் லிசா’ படப்பிடிப்பில் விஜய் வசந்தின் காலில் எலும்பு முறிந்தது..!

விஜய் வசந்த் நடிக்க, ரஞ்சன் இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் “ மை டியர் லிசா”. திகில் படமாக உருவாகிக் கொண்டிருக்கும் மை டியர் லிசா படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் விறு விறுப்பாக நடை பெற்றுக் கொண்டிருந்தது..விஜய் வசந்த் ரவுடிகளுடன் மோதும் சண்டை காட்சி படமாகிக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராத விதமாக அவரது கால் பள்ளத்தில் சிக்கியதால் தடுமாறி கீழே விழுந்தார்அவரது கால் மீது முழு உடம்பும் அழுத்தியதால் கால் முறிந்தது.உடனடியாக ஊட்டியில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் உடனடியாக சிகிச்சை அளிக்கப் பட்டது. படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டு சென்னையில் சோதனை செய்யப் பட்டது.

vijay-vasanth-news-1

அவரது காலில் முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து இரண்டு மாதங்கள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டதை தொடர்ந்து வீட்டில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆனால் விஜய் வசந்த் இன்னும் மூன்று வாரத்திலே படத்தை முடித்து கொடுப்பதாக கூறியது ,அவர் கலைத்துறை மேல் உள்ள  அர்ப்பணிப்பை காட்டுகிறது .

vijay-vasanth-news-5

இதுபற்றி படத்தின் இயக்குனர் ரஞ்சன் கூறும் போது,”படத்தின் முக்கியமான ஆக்சன் காட்சியை படமாக்கி கொண்டிருந்தபோது விஜய் வசந்துக்கு எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. மருத்துவர்கள் கிட்டத்தட்ட மூன்று வாரம் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் விஜய் வசந்தோ எப்படியும் உறுதியாக விரைவில் எழுந்து வந்துவிடுவேன் என தன்னம்பிக்கையுடன் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அந்த அளவுக்கு படத்துடன் ஒன்றிவிட்டார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 98% சதவீதம் முடிந்துவிட்டது.  அநேகமாக இன்னும் இரண்டு வாரத்திற்குள் படப்பிடிப்பை மீண்டும் துவங்கி முடித்துவிடுவோம் என நம்புகிறோம். படம் நன்றாக வந்துள்ளது” என கூறியுள்ளார்.

tarpai

வேத நூல்கள் பரிந்துரைக்கும் 4 சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி

tarpai

நமது வாழ்வில் நாம் சந்திக்கும் எல்லா வகையான பிரச்சினைகளுக்கும் தர்ப்பணம் இன்றியமையாத சடங்காகும். இது பித்ருக்களை திருப்திப்படுத்தி அவர்களுக்கு நிவாரணம் அளிக்கவும் பித்ரு தோஷத்தால் நமது குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளைக் களையவும் நாம் செய்யக் கூடிய, செய்ய வேண்டிய மிகப் பெரிய செயலாகும். ஆஸ்ட்ரோவேட், வேத நூல்களில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முன்னோர்களுக்கான சடங்குகள் செய்வதற்கான மேலே கூறப்பட்டுள்ள மிக சக்தி வாய்ந்த நான்கு தீர்த்தங்களில் ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சி ஒன்றை உருவாக்கியுள்ளது. முன்னோர் காரியங்கள் செய்வதற்கு உகந்த நாட்களில் செய்யப்படும் 44 தர்ப்பணங்கள் மற்றும் 36 துணை சடங்குகள் அடங்கிய ஒரு வருட தர்ப்பண நிகழ்ச்சியின் மூலம் பித்ரு தோஷம் நீங்கப்பெற்று அவர்களின் ஆசி மூலம் வாழ்வில் சகல நலன்களையும் பெறலாம்.

காசி (கயை) – முக்தி தரும் ஸ்தலம் என்று போற்றப்படும் காசி முன்னோர்களுக்கு தர்ப்பணம்(நீத்தார் கடன்) செய்வதற்கு மிக முக்கியமான இடங்களுள் ஒன்று.

ராமேஸ்வரம் – ராமரும் அவரது மனைவி சீதாவும், மற்றும் சகோதரன் லட்சுமணனும் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபாடு செய்த இந்த புனிதமான தீர்த்தத்தில் தர்ப்பணம் செய்வதன் மூலம் மூதாதையர்களின் ஆன்மாக்களுக்கான பாதையில் இருக்கும் தடைகள் நீங்கி அவர்கள் முக்தி பெற உதவுகின்றது.

திலதர்ப்பணபுரி – ராமன் தனது தந்தையாகிய தசரதருக்கு இங்கு தர்ப்பணம் செய்தார். எனவே இந்த இடம் முக்தி ஷேத்திரம் என்று (முன்னோர்கள் ஆன்மா முக்தியடையும் இடம்) கூறப்படுகின்றது.

கேரளா கோவில் – இந்த குறிப்பிட்ட கேரளா கோவிலருகில் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகிய பரசுராமன் தன்னால் கொல்லப்பட்ட க்ஷத்ரியர்களுக்கு தர்ப்பணங்களை செய்த காரணத்தாலும், இந்த கோவில் தெற்கு கங்கை என்றழைக்கப்படும் நதியின் கரையில் அமைந்துள்ளதால் இங்கு தர்ப்பணம் நிகழ்த்துவதால் கூடுதல் புனிதத்தன்மை கிடைகின்றது.

தர்ப்பணம் செய்வதற்கு ஒரு வருடத்தில் காணப்படும் உகந்த நாட்களைப் பற்றி காண்போமா?

·தமிழ் மாத பிறப்பு: 12 நாட்கள்.

·அமாவாசை: 12 நாட்கள்.

·கிரகணம்: 2 நாட்கள். (சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம்)

·விஷ்ணுபதி: 4 நாட்கள் (ஸ்ரீ மகாவிஷ்ணு முன்னோர்களுக்கு முக்தி அருளும் நாட்கள்).

·மகாளயபட்சம் 15 நாட்கள்.

தர்ப்பணங்களுடன், அன்னதானம், பசுக்களுக்கு உணவளித்தல் மற்றும் கோகர்ண பாகவத சப்தாஹம் படித்தல் போன்ற 36 உப சடங்குகளும் நடைபெறும்.

·12 தடவை அன்னதானம் – அமாவாசை அன்று 11 நபர்களுக்கு உணவளித்தல் (வருடத்தில் 12 நாட்கள்)

·12 முறை – அமாவாசை அன்று பசுக்களுக்கு அகத்திக்கீரை அளித்தல் (வருடத்தில் 12 நாட்கள்)

12 முறை கோகர்ண பாகவத சப்தாஹம் அமாவாசை நாட்களில் படித்தல் –( வருடத்தில் 12 நாட்கள்) புனித நூல்களின் படி கோகர்ண பாகவத சப்தாஹம் படிப்பதன் மூலம் மிகக் கொடிய பாவம் செய்த ஆன்மாக்கள் கூட முக்தி அடைகின்றது.

பித்ருக்களை திருப்தி படுத்தி அவர்களின் ஆசி பெற ஆஸ்ட்ரோவேட் நடத்தும் தர்ப்பண நிகழ்வில் பங்கு கொண்டு பயன் பெற உங்களை அன்போடு அழைக்கிறோம்.

மேலும் விவரங்களுக்கு: www.astroved.com மற்றும் +91 9500096081, +91 9003111077

andhra-mess-photos-2

என் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக்கொள்வேன். – ஜெய் அதிரடி!

என் படத்தை எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக்கொள்வேன். – ஜெய் அதிரடி!
andhra-mess-photos-2
நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது என்று கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார், ஆந்திரா மெஸ் பட இயக்குநர் ஜெய்.
சினிமாவிற்கு இதுவரை பரீட்சயமில்லாத கோணத்தில்  கதை சொல்லப்பட்டிருக்கும் படம் “ஆந்திரா மெஸ்”. நான்கு திருடர்கள், ஒரு முன்னாள் ஜமீன்தார், அவருடைய இளம் மனைவி.. இவர்களின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கிற சம்பவங்களின் தொகுப்பை மாறுபட்ட கோணத்தில் சொல்லியிருக்கும் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார், பிரபல விளம்பரப் பட இயக்குநர் ஜெய்.
“ஷோ போட் ஸ்டுடியோஸ்” சார்பில் நிர்மல் கே.பாலா தயாரித்திருக்கும் இப்படத்தின் கதாநாயகனாக “ஓநாயும் ஆட்டுக்குட்டியும்”, “ரிச்சி” போன்ற படங்களில் நடித்த ராஜ் பரத், கதாநாயகிகளாக தேஜஸ்வினி, பூஜா தேவரியா நடித்திருக்கின்றனர். இவர்களுடன் புகழ்பெற்ற ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய இயக்குநர் ஜெய், தமிழ் சினிமா சூழலில் இருக்கிற வியாபார சிக்கல்களை கொஞ்சம் கடுமையாகவே சாடியுள்ளார். “ஒரே படத்தைப் பற்றி இரண்டாவது முறையாக உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இருந்தாலும் பேசித்தான் ஆக வேண்டும். இந்தப் படத்திற்காக நிறைய மெனக்கெட்டிருக்கிறோம். ஒரு முதல்பட இயக்குநரான நான் சொன்ன இந்தக் கதையை நம்பி, நான் நினைத்த மாதிரி எடுத்து முடிக்கிற வரை எனக்கு பலமாக இருந்த தயாரிப்பாளர் நிர்மல் கே.பாலாவிற்கு முதலில் என் நன்றிகள். அதேபோல் இத்தனை இடர்களிலும் என்னோடு நிற்கிற என் படக்குழுவினர் அத்தனை பேருக்கும் எனது நன்றிகள்.
தமிழ் சினிமா சூழல் என்பது வியாபாரத்தின் மீது கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதை தாண்டி படங்கள் எடுப்பது என்பது மிகவும் சவாலானதாக இருக்கிறது. நாம் எப்படிப்பட்ட சினிமா எடுக்க வேண்டுமென்பதை யாரோ தீர்மானிக்கிறார்கள். இந்த சூழல் நிச்சயம் தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தாது. இந்தப் படம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது திரைக்கு வருகிறது. இப்படத்திற்கான விமர்சனங்கள் எப்படி இருந்தாலும், யார் எப்படி கிழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். எது எப்படியாக இருந்தாலும் அத்தனைக்கும் நான் மட்டும் தான் பொறுப்பு” என்று பேசியுள்ளார்.
ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் பேசும்போது, “இயக்குநர் ஜெய், விமர்சனங்களில் எப்படிக் கிழித்தாலும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார். ஆனால், அதற்கெல்லாம் “ஆந்திரா மெஸ்” வேலை வைக்காது. நிச்சயம் இந்தப் படத்தை எல்லோரும் தூக்கி நிறுத்துவார்கள். பத்திரிக்கையாளர்களோடு 25 வருட பழக்கம் எனக்குண்டு. அவர்களால் அங்கீகரிக்கப்பட்டு மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட்டவர்கள் தான் இன்று முன்னணி இயக்குநர்களாக தமிழ் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் அந்த வரிசையில் ஜெய்யையும் மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கிறது” என்று பேசினார்.
actress-aditi-honours-blood-donors-4

Actress Aditi Balan of Aruvi fame honours blood donors at Fortis Malar hospital

Actress Aditi Balan of Aruvi fame honours blood donors at Fortis Malar hospital

actress-aditi-honours-blood-donors-4

– Event to raise awareness about nobility of blood donation on World Blood Donor Day

Chennai 14 th June, 2018 : On World Blood Donor day, Fortis Malar Hospital recognized and honoured voluntary blood donors for their life saving gift at an event held at the hospital auditorium today. Noted and critically acclaimed Tamil actress Aditi Balan of Aruvi fame graced the occasion and felicitated the blood donors with special mementos for their yeoman service.
Speaking about this initiative Dr Jyotsna Codaty, HOD, Transfusion Medicine, Fortis Malar Hospital, Chennai said, “The amazing fact about donating blood is that a single donation can save up to three lives, because we can receive different blood samples from a single donor and it can thereby accordingly be transferred to other patients. Any adult over the age of 18 can donate blood and it takes only 30 minutes in any licensed
blood bank; and the volume is replaced in a few hours while the cells take around 48 hours to regenerate. A single unit blood can benefit several patients.”
Blood donation helps save millions of people every year. It is a critical element for patients undergoing treatment for life threatening conditions, supports complex medical & surgical procedures and helps them to recover well with a better quality of life. Availability and access of safe blood in requisite quantity remains key components of an effective healthcare system. An adequate supply can only be ensured through regular
donations by voluntary and unpaid donors.

Around 112.5 million blood donations are collected globally every year 1 . The average blood donation rate in India remains at a low rate of 0.8 only 2 About Fortis Healthcare Limited: Fortis Healthcare Limited is a leading integrated healthcare delivery service provider in India. The healthcare verticals of the company primarily comprise hospitals, diagnostics and day care specialty facilities. Currently, the company operates its healthcare delivery services in India, Dubai, Mauritius and Sri Lanka with 45 healthcare facilities (including projects under development), approximately
10,000 potential beds and over 374 diagnostic centres.
About Fortis Malar Hospital:

Fortis Malar Hospital was acquired by Fortis Healthcare (India) Limited in early 2008. The hospital founded in 1992, is established as one of the largest corporate hospitals in Chennai providing quality super specialty and multi-specialty healthcare services. Fortis Malar Hospitals, with 180 beds, focuses on providing comprehensive medical care in the areas of Cardiology and Cardiac Surgery, Neuro Surgery, Gynaecology, Orthopaedics, Gastroenterology, Neurology, Paediatrics, Diabetics, Nephrology and Internal Medicine. Fortis Malar Hospital has a state of the art Cath Lab and multiple dedicated cardiac operation theatres and intensive coronary care units.

Several rare and complex Adult and Paediatric Cardiac surgeries, Orthopaedic and Joint replacements, Neurosurgeries and Plastic reconstruction surgeries have been performed at this hospital. The hospital’ Obstetrics and Gynaecology services are among the busiest in the city, successfully performing many complicated deliveries and surgeries. They are supported by adedicated Neonatology unit.

img-20171115-wa0033

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக அம்ரீஷ் இசையில் ஆண்ட்ரியா!

பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக அம்ரீஷ் இசையில் ஆண்ட்ரியா!

img-20171115-wa0033

அரவிந்த்சாமி அமலாபால் நடிக்க சித்திக் இயக்கத்தில் அம்ரீஷ் இசையில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்திற்காக ஆண்ட்ரியா ஒரு பாடலை பாட பதிவானது..இந்த படத்தின் இசையை டிரிபிள் வி ரெகார்ட்ஸ் நிறுவனம் இம்மாதம் 30 ம் தேதி வெளியிடுகிறது…
சூப்பர் ஹிட் பாடலாக பாஸ்கர் ஒரு ராஸ்கல் உருவாகி உள்ளதாக அம்ரீஷ் தெரிவிக்கிறார்.
img_0051

Big Boss stars Launched Naturals B Café the all new venture by Naturals

Big Boss stars Launched  Naturals B Café the all new venture by Naturals

dsc_6211

dsc_6222

dsc_6316

dsc_6320

dsc_6327

ganesh-venkatraman

gayathri

harish

img_0049

img_0050

img_0051

kumaravel-veena

prachi

ranjith

sakthi

sonali-poorvi

suja

tilak-jayashree-owners-naturals-b-cafe

twinkle-risha

Big Boss stars Ganesh Venkatraman, Gayatri Raghuram, Suja Varunee, Sakthi Vasudevan, Harish Kalyan, 

Launched  Naturals B Café the all new venture by Naturals

For the very first time in India – Ethnic Indian Food in Mexican Chipotle Style

Naturals has now entered into a new café venture and they are all set to launch their first outlet Naturals B Café – in the presence of popular Big Boss celebrities on Tuesday, 14thNovember at 6 pm.

 Naturals B Café specializes in offering ethnic Indian food in modern style, where wraps and Barottas from all over the world can be combined with traditional Indian food. For the first time in India, Natural B café offers ethnic Indian food in Mexican chipotle style and Barottas and wraps in Subway style .The combos are just mind boggling and mouthwatering. Naturals B Café tagline “Wrap a new combo. Every day” is to be taken literally too. Every day is a surprise because there are wraps, bowls and 10,000+ combos to be enjoyed.


Venue: Naturals B Café, Jaganathan Road
(Next to Vijay TV office), Nungambakkam.

antony-movie-posters-2

19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம்!

19 வயது மாணவி இசை அமைக்கும் ஆண்டனி படம்!

இளைய தலைமுறையினரின் புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும் ஆண்டனி புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருக்கும் படம் ‘ஆண்டனி‘ . அறிமுக இயக்குனர் குட்டிக் குமார் தயாரிக்கும் இப்படத்தில் சண்டைக் கோழி புகழ் லால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இளம் புதுமுகங்களை கொண்டு உருவாகியுள்ள ஆண்டனி படத்தின், ஃபர்ஸ்ட் லுக், சிங்கிள் ட்ராக் மற்றும் டீசரை இயக்குனர் பா. ரஞ்சித் அவர்கள் ட்விட்டரில் வெளியிட்டார்.
சினிமா ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்த ஆண்டனி படத்தின் டீசர் யூ- டியூபில் டிரென்ட் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது.
சகாப்தம் படைத்த வில்லன் நடிகரான  ரகுவரனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக உருவாகியுள்ளது.  மியூசிக் எமோஷன் திரில்லரான உருவாகியுள்ள ஆண்டனி படத்திற்கு 19 வயது மாணவி சிவாத்மிகா இசையமைத்துள்ளார். தென்னிந்திய சினிமா வரலாற்றில் 19 வயது பெண் ஒரு படத்திற்கு இசையமைத்திருப்பது இதுவே முதன் முறையாகும். தமிழ் சினிமாவை ஆண்டனிஅடுத்த நிலை தரத்திற்கு எடுத்து செல்லும் படமாக இருக்கும் என்று படத்தின் இயக்குனர் கூறியுள்ளார்.