Category Archives: Events Gallery

Actress Suhasini launches Naturals Ayur- Salon & Wellness Centre at Opp The Leela Palace, MRC Nagar

Actress Suhasini launches Naturals Ayur- Salon & Wellness Centre at Opp The Leela Palace, MRC Nagar

Naturals Ayur – a concept by India’s No. 1 salon chain, Naturals. Naturals Ayur is a salon that provides hi-end hair and beauty services (Unisex) along with a host of Ayurvedic wellness services in a modern and contemporary environment. 28 September, 2017 marks the launch of the 610th salon for Naturals and the 2nd Naturals Ayur salon in Chennai.

Naturals Ayur focuses on providing customers with International brand such as OPI, Sebastian, Wella for beauty services and uses herbal oils for holistic services such as Abhyangam – full body relaxation massage, Navara Facial – nourishment that makes you look younger, Udhwarthanam- therapy for fat loss, Shirodhaara – therapy for anxiety, depression and stress related issues. To top it all, an Ayurvedic physician, will be present at the wellness centre to advice on the customized beauty and wellness treatment that is apt for you. Overwhelming response to this modern concept will aid penetration in the International market.

Ms. Suhasini Maniratnam is the Chief Guest of the evening. Ms. Veena K (Founder, Naturals) and Mr. C.K.Kumaravel (Co –Founder, Naturals) will also grace the inauguration along with franchise partners, Ms. Kalpana Bhargav and Ms. Padmaja.

The launch of the salon will be followed by Downtown Icon Awards powered by Natural Ayur (DIA 2017) at Hotel Leela Palace, Royal Ballroom.

 

Down Icon Awards powered by Naturals Ayur. ‘Let your neighbor know of your personal and professional achievements’. DIA is an initiative first of its kind in this genre managed by event partners – Brand Avatar. DIA had a successful participation of over 2000 households in MRC Nagar, reaching out to women and children in the family to nominate themselves or their friends who have achieved landmarks in their life. The DIA nomination form covers categories like Mr.  & Mrs. MRC Nagar, Socialite, Best Apartment, Achiever, Customer service, Shop-a-holic, Medical Services, Retail Shop, Community leader and Special recognition. There are 14 award winners in the respective category.

The DIA event starts off at 6.45pm with a panel discussion on Women in Business, Wellness & Fitness. Ms. Geetha Nagu, Dr. Priya Selvaraj and Ms. Suhasini Maniratnam are the panelist which is moderated by Ms. Sanobar Sultan who is also the master of ceremony (MC).

Award Winners:

Inline image 1

Pottu Press Meet & Movie Stills & News

Pottu Press Meet & Movie Stills & News

 மருத்துவ கல்லூரி பின்னணியில்
                              ஹாரர் படமாக  உருவாகிறது  “  பொட்டு “
ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் “ பொட்டு “
இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
வசனம்   –  செந்தில்   /   ஒளிப்பதிவு   –   இனியன் ஹரீஷ்
இசை   –  அம்ரீஷ்   /   பாடல்கள்   –  விவேகா, கருணாகரன்,சொற்கோ, ஏக்நாத்
ஸ்டன்ட்   –  சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங்   –  எலீசா
கலை  –  நித்யானந் /நடனம்    –  ராபர்ட்
தயாரிப்பு மேற்பார்வை  –  ஜி.சங்கர்
தயாரிப்பு  –  ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்
கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்  –  வடிவுடையான்.
 படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்..
இந்த படத்தில் பரத், சிருஷ்டி டாங்கே இருவரும் மருத்துவ கல்லூரி மாணவர்களாக நடிக்கிறார்கள்.
மந்திரம், தந்திரம், பில்லி, சூனியம் தெரிந்த  அகோரியாக நமீதா  நடிக்கிறார்.
இனியா மலைவாசி பெண்ணாக நடித்துள்ளார்.
முழுக்க முழுக்க மருத்துவ கல்லூரி பின்னணியில்  படு பயங்கரமான ஹாரர் படமாக பொட்டு உருவாகி உள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகி இருக்கிறது. மொட்ட சிவா கெட்ட சிவா படத்தை தொடர்ந்து அம்ரீஷ் இசையில் உருவாகும் இரண்டாவது படம் இது. படம் விரைவில் வெளியாக உள்ளது.

Dhanush sings a fun song for Vijay Yesudas’s Padaiveeran

Dhanush sings a fun song for Vijay Yesudas’s Padaiveeran

தனா இயக்கும் படைவீரன் படத்திற்காக தனுஷ் குரலில் விஜய் யேசுதாஸ்
EVOKE PRODUCTIONS A. மதிவாணன் தயாரிப்பில் மணிரத்தினத்தின் துணை இயக்குனராக பணிபுரிந்த தனா இயக்கத்தில் “படைவீரன்” என்ற படம் உருவாகி வருகிறது. கதாநாயகனாக பாடகர் விஜய் யேசுதாஸ் அறிமுகமாக, மிகமுக்கிய கதாபத்திரத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா நடித்திருக்கிறார். நாயகியாக அம்ரிதா ஐயர் அறிமுகமாக, இயக்குனர் மனோஜ் குமார், இயக்குனர் கவிதா பாரதி, நிதிஷ் வீரா, கலையரசன், சுரேஷ் ஏகா, சாரா ஜோசப், கன்யா பாரதி  உள்ளிட்ட பலர் நடித்திருகின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்களில் நடைபெற்றது. படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்துவரும் வேலையில் சமீபத்தில் “படைவீரன்” படத்தை பார்த்த தனுஷ் படத்தை வெகுவாக பாராட்டியதுடன், இந்த வெற்றி படத்தில் தன்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டுமென விரும்பி ஒரு பாடலை பாடி தருவதாக கூறி, உடனடியாக இயக்குனர் தனா, இசையமைப்பாளர் கார்த்திக்ராஜா, விஜய் யேசுதாஸ் மற்றும் கவிஞர் பிரியனுடன் அமர்ந்து, இசையமைப்பாளர் மற்றும் கவிஞருக்கு இயக்குனர் தனா சூழ்நிலையை விளக்கி, கார்த்திக்ராஜாவின் அருமையான டியூனிர்க்கு பிரியனின் வரிகளில்  “ லோக்கல் சர்க்கா பாரின் சரக்கா” என்ற படு துள்ளலான பாடலை பாடி கொடுத்தார் நடிகர் தனுஷ். ஒரு பாடகர் நடிக்கும் படத்திற்கு ஒரு பிரபல நடிகர் பின்னணி பாடியிருப்பது இதுவே முதல் முறை. இப்பாடலுக்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறுகிறது.
ஒளிப்பதிவு – ராஜவேல் மோகன், படத்தொகுப்பு – புவன் ஸ்ரீனிவாசன், கலை இயக்குனர் – சதீஷ் குமார், பாடல்கள் – தனா, பிரியன், மோகன் ராஜன், ஒலிவடிவமைப்பு – S. சிவகுமார், நடனம் – விஜி சதீஷ், சண்டை காட்சிகள் – தில் தளபதி, STILLS – A. ராஜா, PRO – நிகில்
[Gallery not found]

 

Narivettai Audio Launch Stills & News

Narivettai Audio Launch Stills & News

கொள்ளைகார கூட்டத்துக்கு சவுக்கடி கொடுக்கும் “நரிவேட்டை” ; ட்ராபிக் ராமசாமி ஆவேசம்

சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ என்னும் புதிய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘நரிவேட்டை’.. இந்தப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளதுடன் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ஆகாஷ் சுதாகர். நாயகியாக புதுமுகம் மகாலட்சுமி நடிக்க, இவர்களுடன் நெல்லை சிவா, போண்டா மணி, கிங்காங், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்..

சார்லஸ் தனா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ட்ராபிக் ராமசாமி, ஜாக்குவார் தங்கம், தயாரிப்பாளர் அசோக் லோதா.  ‘அய்யனார் வீதி’ பட இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தி பேசினார்கள்.

பொதுவாக போராட்ட களங்களில் மட்டுமே கலந்துகொள்கின்ற, இதுபோன்ற திரைப்பட நிகழ்வுகளில் அதிகம் கலந்துகொள்ளாத ஐயா ட்ராபிக் ராமசாமி, இந்த விழாவில் கலந்துகொண்தார் என்றால் அது இயக்குனர் ஆகாஷ் சுதாகருக்காகவும் ‘நரிவேட்டை’ படத்தில் சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்துக்காகவும் தான்.

இந்தப்படம் குறித்து ட்ராபிக் ராமசாமி பேசும்போது, “இன்றைக்கு பல நடிகர்கள் நிஜத்திலும் நடிச்சிட்டு இருக்காங்க. ஆனால் நான் நடிப்பை செயல்ல காட்டுறவன்.. சமூகத்துல நடக்கிற அவலங்களுக்கு எதிரா தனி ஆளா போராடினா மட்டும் பத்தாது. மொத்தமா ஒன்று திரண்டு போராடணும் என்பதை நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.. அதே கருத்தை வலியுறுத்தி தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஆகாஷ் சுதாகர். இந்தப்படத்தில் இவர் நடித்துள்ள வேம்புலி கேரக்டரை பார்க்கும்போது ட்ராபிக் ராமசாமி என்கிற பெயரைத்தான் வேம்புலி என்கிற பெயராக மாற்றிவிட்டாரோ என்று நினைக்கிறன்.. இந்தப்படம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நம்மைச்சுற்றி இருக்கும் கொள்ளைக்கார கூட்டத்துக்கு சவுக்கடிகொடுக்கும் விதமாக இருக்கும் என நம்புகிறேன்” என வாழ்த்தி பேசினார்.

அடுத்ததாக வாழ்த்திப்பேசிய ஜாக்குவார் தங்கம், “இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘வேம்புலி வர்றான்’ பாடலுக்கு தியேட்டரில் பலரும் சாமியாட்டம் ஆடப்போவது உறுதி. இந்தப்படத்தின் ரிலீஸுக்கு என்னால் முடிந்த உதவிகளை தயங்காமல் செய்வேன்.. அதுமட்டுமல்ல, தற்போது சிறு பட்ஜெட் பட தயாரிப்பளர்களை நட்டத்தில் இருந்து காப்பாற்றுவதற்கு புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த இருக்கிறோம்.

இதன்படி சிறு பட தயாரிப்பாளர்கள் ரிலீஸுக்கு முன்பே எங்களிடம் படத்தை ஒப்படைத்துவிட்டால், தமிழ்]நாடு முழுதும் உள்ள கேபிள் டிவிக்களில் ஒளிபரப்பும் முறையில் சுமார் ஐந்து கோடி வரை ஒரு படத்துக்கு வருமானம் பார்க்க முடியும். அதில் தயாரிப்பாளரின் பங்காக சுமார் இரண்டரை கோடி ரூபாய் இந்த முறையிலேயே கிடைத்துவிடும்.. இன்னும் நான்கு மாதங்களுக்குள் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது” என்று படக்குழுவினருக்கு நம்பிக்கை ஊட்டும் விதமாக பேசினார்.

இறுதியாக மேடையேறிய அய்யனார் வீதி’ இயக்குனர் ஜிப்ஸி ராஜ்குமார், படக்குழுவினரை வாழ்த்தி பேசியதுடன், அடுத்ததாக அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ள யதார்த்த நிலையையும் சுட்டிகாட்டினார். “பல நரிகள் ஒன்று சேர்ந்தால் பலம் வாய்ந்த சிங்கத்தையே சாய்த்துவிடும் என்று ஜாக்குவார் தங்கம் சொன்னார்.. அவ்வளவு ஏன் ஒரே ஒரு நரி மட்டும் கூட தனது தந்திரத்தால் ஒரு சிங்கத்தை வீழ்த்திவிடும்.. இன்று இந்த விழாவில் இயக்குனரின் நண்பர்கள், ஊர்க்காரர்கள் என பலரும் வந்து ஆதரவாக நின்று வாழ்த்துகின்றீர்கள்.. ஆனால் வெறும் கைதட்டலுடன் இந்த விழாவுடன் அப்படியே இந்த ஆதரவு நின்றுபோய்விட கூடாது.. நாளை இந்தப்படம் ரிலீசாவதற்குள் பல பிரசன்னைகளை எதிர்கொள்ள நேரிடலாம். அப்போதும் இதே ஆதரவை ஒட்டுமொத்தமாக நீங்கள் அளிக்க வேண்டும்.. பார்த்தால் பசிதீரும் என்று காமராஜர் சொன்னார். அதே மாதிரி நீங்க பார்த்துக்கிட்டே இருந்தால் தான் பசி தீரும்.. உலகமே எதிர்த்தாலும் ஊர்க்காரங்க துணையிருந்தா எந்த மோதலையும் ஜெயிக்கலாம்” என படக்குழுவினருக்கு உத்வேகம் ஊட்டியதுடன், ஊர்மக்களின் ஆதரவும் இயக்குனருக்கு தொடர்ந்து இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக இந்த ‘நரிவேட்டை’ படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஓர் ஊரில் உள்ள முக்கியமான நான்கு பேரால் ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார். அந்தபெண்ணின் நிலை அடுத்து என்ன ஆனது, அந்த நான்கு பேரும் என்ன ஆனார்கள் என்பதுதான் இந்தப்படத்தின் கதை,

படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் 

நகைச்சுவை நடிகர் போண்டாமனியின் மகன் இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளான். படத்தின் கதாநாயகி மகாலட்சுமி வேகமாக பைக் ஓட்டுவதில் கைதேர்ந்தவராம். இந்தப்படத்தின் ஷூட்டிங் ஏற்காட்டில் நடைபெற்றபோது, அங்கே ‘வேம்புலி வர்றான்’ என்கிற சாமி பாடல் படமாக்கப்பட்டபோது இந்தப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள சீனியர் நடிகரான விஜய் கண்ணன், நிச்சயமாக மழை பெய்யும் பாருங்கள் என கூறினாராம். படக்குழுவினர் யாரும் அதை நம்பாத நிலையில், மழை அடித்து ஊற்றியதாம். இதைப்பார்த்து மகிழ்ந்துபோன ஊர்மக்கள் கிடாவிருந்து அளித்து படக்குழுவினரை திக்குமுக்காட வைத்துவிட்டார்களாம்..

இயக்குனர் (ஆகாஷ்) சுதாகர், கேன்சரினால் உயிர்நீத்த தனது மகன் ஆகாஷின் நினைவாக தனது பெயரை ஆகாஷ் சுதாகர் என மாற்றிக்கொண்டவர். மகனின் கவிதைகளுக்கு இசை வடிவம் கொடுப்பதற்காகவே திரைப்படம் எடுக்க முன்வந்தவர். இந்த நரிவேட்டை படத்தை முடித்த கையுடன், அடுத்ததாக ஒரு படத்தையும் இயக்கி முடித்துவிட்டு, இப்போது மூன்றாவதாக ஒரு படத்தையும் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல.. ஆதரவற்ற ஐம்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தான் நடத்திவரும் காப்பகம் மூலம் படிக்க வசதி செய்துகொடுத்தும் வருகிறார். அந்த குழந்தைகள் தன்னை அன்போடு அப்பா என்று அழைப்பதில் தனது சொந்த சோகத்தைமறக்கிறார் .

அந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஏலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் சென்னை, அதன் சுற்றுப்புறங்களில் நடைபெற்று, தற்போது ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது..

தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம்.

தயாரிப்பு ;  சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ

கதை, திரைகதை இயக்கம் ; ஆகாஷ் சுதாகர்

இசை ; சார்லஸ் தனா

படத்தொகுப்பு ; C.கணேஷ்குமார்

மக்கள் தொடர்பு ; செல்வரகு

Paadam Audio Launch Stills & News

Paadam Audio Launch Stills & News

பாடம் திரைப்படம்.
இன்றய கல்வி முறையில் உள்ள ஒரு சில குறைபாடுகளை சொல்ல வரும் படம் என்றால் அது பாடம்.இந்திய அறிவியல் அறிஞர் அப்துல் காலம் அவர்கள் சொன்ன கருத்தை மையாமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் என்று சொன்னால் மிகை ஆகாது. இந்திய கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்தும் படமாக தான் இந்த பாடம் உருவாகியுள்ளது.
இந்த படத்தில் அறிமுக நாயகனாக கார்த்திக் நாயகியாக மோனா முக்கிய கதாபாத்திரத்தில் விஜித், இயக்குனர் நாகேந்திரன், R.N.R. மனோகர்,நகைசுவை நடிகை மதுமிதா, யாசிகா,கவிஞர் பிறைசூடன் மற்றும் பலர் நடித்துள்ளனர் . இந்த படத்துக்கு இசை கணேஷ் ராகவேந்திரா ஒளிப்பதிவு மனோ. படத்தின் இயக்குனர் ராஜசேகர் இவர் இந்த படத்தின் கதை திரைகதை எழதி இயக்கியுள்ளார், இந்த படத்தை ஜிபின்.P.S தயாரித்துள்ளார் .
பாடம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையராங்கில் மிக விமர்சியாக நடந்தது இதில் முக்கிய விருந்தினர்களாக  இயக்குனர் சீமான், அமீர், பாலாஜி மோகன், சீனுராமசாமி, கார்த்திக் சுப்புராஜ் மற்றும்   நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் கவிஞர் பிறைசூடன் பொற்கோ, வேல்முருகன்,  கலந்துகொண்டனர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
இந்த நிகழ்ச்சியில் படத்தில் இருந்து மூன்று பாடல்கள் மற்றும் படத்தின் ட்ரைலர் ஒளிப்பரப்பினர். இந்த பாடல்களும் ட்ரைலர் அனைவரையும் மிகவும் கவர்ந்தது.  படத்தின் ட்ரைலரில் படத்தின் கருவை மிக தெளிவாக கூறியிருந்தார் இயக்குனர் .
இந்த இசை விழாவில் பேசிய இயக்குனர் பாலாஜி மோகன் இன்றைய பள்ளிகளில் பாடங்கள் மற்றும் மொழியும் திணிக்கபடுகிறது ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கு என்று தெரிந்து அவனுக்கு அந்த பாடத்தை கற்பிக்கவேண்டும் என்பதை மிக தெளிவாக கூறினார்.  அந்த கருத்தை சொல்ல வரும் இந்த பாடம் நிச்சயம் மாணவர்களை கவரும் என்பதில் ஐயம்  இல்லை,  இந்த படம் மிக பெரிய வெற்றி பெறும் என்று வாழ்த்தினார்.
அடுத்து பேசிய இயக்குனர் சீனுராமசாமி “இன்றைய  மாணவர்களின் கல்வி அவலநிலையை சொல்லும் படமாக தான் இந்த படத்தை நான் பார்கிறேன்,  காரணம் இன்று குழந்தைகள் பள்ளிக்கு செல்லவேண்டும் என்றால் தயங்குகிறார்கள் காரணம் அவர்கள் எடையை விட அவர்களின் பள்ளிகூட புத்தக எடை அதிகமாக உள்ளது அதோடு அவர்களின் எண்ணங்களுக்கு புறம்பாக உள்ளது. இதை மாற்றவேண்டும் இதை இந்த படம் நிச்சயமாக வலியுறுத்தும் என்று பேசினார் .
பின்னர் பேசிய இயக்குனர் அமீர் இன்றைய சூழ்நிலையில் பிற மொழிகள் கற்கவேண்டும் காரணம் ஒரு உணவு விடுதிக்கு சென்றால் அங்கு இருப்பவர்களுக்கு தமிழ் தெரியவில்லை அதை விட இன்று தமிழில் நடிக்கும் நாயகிகளுக்கு தமிழ் தெரியவில்லை அவர்களிடம் பேசவேண்டும் என்றாலும் ஆங்கிலம் தெரியவேண்டும் என்ற சூழ்நிலை தான் உள்ளோம் அது மட்டும் இல்லாமல் உலகில் வேறு எங்கு செல்லவேண்டும் என்றாலும் ஆங்கிலம் தெரியவேண்டிய சூழ்நிலை ஆகவே தமிழ் மொழியை மூச்சாக வைப்போம் ஆகிலத்தை தேவைக்கு பயன்படுத்துவோம் என்று கூறினார்.
பின்னர் இறுதியாக பேசவந்த இயக்குனர் சீமான் அமீருக்கு மாற்றான கருத்தை முன்வைத்தார்.
நாம் ஏன் பிற மொழிகளை கற்கவேண்டும்.மற்றவர்களை நாம் தமிழ் படிக்கவைப்போம் என்று கூறினார். அமெரிக்காவில் நான் தமிழில் தான் பேசினேன் எனக்கு மரியாதை கிடைத்தது எனவே நாம் அவர்களை தமிழ் பேச வைப்போம் என்றார்.
மொத்தத்தில் வந்தவர்கள் அனைவரும் படத்தின் மையை கருவை உணர்ந்து மிக அழகாக ஒரு பட்டிமன்றம் போல உரையாடினார்கள். இறுதியில் அனைவருக்கும் நன்றி உரை கூறினார் நடிகரும் இயக்குனரமான நாகேந்திரன்.