Category Archives: Actress Gallery

social-activist-dr-sheeba-lourdhes-6

Social Activist Dr.Sheeba Lourdhes

Social Activist Dr.Sheeba Lourdhes

social-activist-dr-sheeba-lourdhes-1

மிஸ் தமிழ்நாடு பட்டம் வென்ற முன்னாள் அழகி, எழுத்தாளர், உளவியல் நிபுணர், மனித வள மேம்பாட்டு ஆலோசகர், நாத்திகவாதி, ஆவணப் படம் மற்றும் குறும் பட இயக்குநர், சமூக சேவகி, மனித உரிமை போராளி என பன்முக ஆளுமையுடன் வலம் வருபவர் ஷீபா லூர்தஸ்(Dr.Sheeba Lourdhes). இந்த தமிழ் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக சுவீடன் நாட்டிலிருந்து தமிழகம் வந்து களப்பணியாற்றுபவர். தன்னுடைய பிறந்த நாளையும் தன்னுடைய ரோல்மாடலாக இருக்கும் அப்துல்கலாம் மற்றும் பெரியாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்களுடனும், ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் குழந்தைகளுடனும் கொண்டாடுவதில் பெருவிருப்பமுடையவர் முனைவர் ஷீபா. இவர் அண்மையில் சென்னையில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தின் விழாவிற்கு வந்திருந்த போது சந்தித்து உரையாடினோம்.
 
அழகி பட்டம் வென்ற நீங்கள் பேஷன், மாடலிங், திரைத்துறை போன்றவற்றில் பயணிக்காமல் மக்களுக்கு சேவையாற்றவேண்டும் என்று பயணத்தை திசை மாற்றிக் கொண்டதேன்?
 
நான் கோவையில் பிறந்து, சுவீடன் நாட்டில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தில் அகதிகளுக்கான உளவியல் பயிற்சி அளிக்கும் அலுவலராக பணியாற்றி வருகிறேன். உலகத்தின் பல நாடுகளுக்கு பயணித்து அகதிகளாக இருக்கும் மக்களின் மனதை ஆக்கிரமித்திருக்கும் மரண பயம் குறித்த உளவியல் ரீதியிலான குறைபாடுகளை நம்பிக்கையான மற்றும் அரவணைப்புடன் கூடிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவர்களின் எஞ்சியுள்ள வாழ்நாட்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் அளவிற்கு மனதளவில் தயார் படுத்துகிறோம்.
 
என்னுடைய வாழ்க்கையில் இளமைப் பருவத்தில் அழகி பட்டம் வெல்லவேண்டும். பேஷன் மற்றும் மாடலிங் துறையில் கொடி கட்டிப் பறக்கவேண்டும் என்பதெல்லாம் கனவாகவோ, லட்சியமாகவோ இருந்ததில்லை. சென்னை விமான நிலையத்தில் நிகழ்ச்சி மேலாளர் ஒருவர் என்னை சந்தித்து, உங்களின் உடலமைப்பு மற்றும் தோற்றப்பொலிவு நன்றாக இருக்கிறது ஏன் அழகிப் போட்டியில் கலந்துகொள்ளக்கூடாது? என கேட்டார். அப்போது அதை சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன். இதை ஒரு அனுபவமாக எடுத்துக் கொள்ளலாமே? என எண்ணத்தில் தான் அந்த அழகி போட்டியில் கலந்துகொண்டேன். 
 
அழகி போட்டி பற்றிய எந்தவொரு விதிமுறையையும் அது வரை நான் அறிந்திருக்கவில்லை. இந்த நிலையிலேயே மொத்தம் உள்ள 32 சுற்றுகளில் ஸ்கின் டெஸ்ட், போட்டோஜெனிக் டெஸ்ட்,  பொதுஅறிவு சுற்று, டேலண்ட் ரவுண்ட், எத்னிக் ரவுண்ட் என பல சுற்றுகள் வரை வெற்றிப் பெற்று முன்னிலையில் வந்துவிட்டேன். அப்போது ஒரு நாள் கேட்வாக் சுற்று என்றார்கள். அதுவரை கேட்வாக் என்றால் என்ன? என்பதையே அறிந்திருக்கவில்லை. ஒரே நாள் இரவில் அதைப் பற்றித் தெரிந்துகொண்டு பயிற்சிப் பெற்று அதில் வென்றேன். அந்த அழகி பட்டம் வென்ற தருணங்கள் இன்று வரை ஆனந்தமான அனுபவத்தையும் தன்னம்பிக்கை இருந்தால் வெற்றிப் பெறலாம் என்ற உணர்வையும் எமக்குள் ஏற்படுத்தியதை மறக்க இயலாது.
 
அழகி பட்டம் வென்ற பிறகும் அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை. பேஷன் மாடலிங், திரைத்துறை மற்றும் காட்சி ஊடகங்களில் நுழைந்து ஜொலிக்கவேண்டும் என்ற எண்ணமும் இருந்ததில்லை. அத்துடன் அழகி பட்டம் வென்றுவிட்டோம் என்ற கர்வமும் எனக்கில்லை. அந்த தருணத்தில் சில தனியார் தொண்டு நிறுவனங்கள், மகளிர் அமைப்புகள், பெண்களுக்கான உரிமை குறித்து உரத்து பேசும் சமூக சிந்தனையாளர்கள் மற்றும் மனித உரிமை குறித்த அமைப்பினர் என்னை சந்தித்து, பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் விழாக்களில் நீங்கள் கலந்து கொண்டு பேசினால் அது பெண்களுக்கும், அவர்கள் சார்ந்த சமூகத்திற்கும் நல்லது நடக்கும் என்றார்கள். இது நல்ல யோசனையாக இருக்கிறதே என்று எண்ணி சமூக சேவையின் பக்கம் என்னுடைய கவனத்தை திருப்பினேன்.
 
உங்களின் சமூக சேவை குறித்து..?
 
நான் சுவீடனில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தில் மன நலம் மற்றும் மனித வளம் மேம்பாட்டிற்கான ஆலோசகராக இருந்து பணியாற்றிய போது சுவீடனை கடந்து செல்லும் ஏராளமான அகதிகளை, அவர்களின் மனதில் குடிக்கொண்டிருக்கும் போர் பற்றிய அச்சுறுத்தல்களை உளவியல் பயிற்சி அளித்து அவர்களை இயல்பான மனிதர்களாக்குகிறோம்.. இதனை ஏன் என்னுடைய நாட்டில், நான் பிறந்த இந்த தமிழ் மண்ணில் செய்யக்கூடாது என்று எண்ணி ஒவ்வொரு முறையும் தமிழகம் வந்து களப்பணியில் இறங்கி சேவை செய்து வருகிறேன்.   
 
தமிழக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள். சில பிரச்சினைகள் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. மக்களை மனரீதியாக மட்டும் பயிற்சி அளித்து உற்சாகமளிப்பதும் மட்டும் என்னுடைய வேலையல்ல. அத்துடன் இன்றைய தேதியில் தமிழகத்தில் நிலவும் அரசியல், அரசியல் சட்ட விதியில் மக்களுக்கு அளிக்கப்பட்ருக்கும் உரிமைகள், இதற்குரிய சட்ட விதிகள் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறேன். இதனால் மக்களுக்கு பல வகைகளில் ஆலோசனை தேவைப்படுகிறது. இது வளர்ந்த மக்களுக்கும் மட்டுமல்ல அனாதை ஆசிரமங்களில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் அவர்களின் மனதில் நம்பிக்கையை விதைக்கும் விசயங்களிலும் ஆர்வம் காட்டி அவர்களிடமும் உரையாற்றி வருகிறேன்.
 
எழுத்தாளராக மாறி இலக்கியவாதியும் மிளிர்கிறீர்களே அதைப் பற்றி…?
 
தற்போது தத்துவம் சார்ந்த புத்தகத்தை எழுதியிருக்கிறேன். இதுவரை நான் பெற்ற அனுபவங்களிலிருந்து தான் அந்த நூலை எழுதியிருக்கிறேன். விரைவில் வெளியாகவிருக்கிறது. இந்த புத்தகம் வெளியாவதில் எனக்கு ஒரு மனநிறைவு உண்டு. ஏனெனில் இது வரை நான் கடுமையாக உழைத்து சேகரித்த தரவுகள் மற்றும் அரிய விசயங்கள், நுட்பமான அணுகுமுறை ஆகியவை இதில் இடம்பெற்றிருக்கிறது. இது மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்ற நம்பிக்கையையும் வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.
உங்களின் பார்வையில் சுவீடனைப் பற்றியும், அங்குள்ள மக்களைப் பற்றியும்..?
 
உலகத்தார்களின் பார்வையில் சுவீடன் ஒரு வளர்ச்சியடைந்த நாடு. செல்வ வளம் மிக்க நாடு. இலவசமாக வழங்கப்படும் தரமான கல்வி, இலவச உயர் தர சிகிச்சை ஆகியவை தான் தெரிகிறது. ஆனால் எங்களைப் போன்ற உளவியல் ஆலோசகர்கள் அந்த சமூகத்தில் இணைந்து பணியாற்றும் போது நாங்கள் சந்திக்கும் மக்களின் மனநிலையே வேறு. அங்கு மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலில் சிக்கி தவிக்கும் மக்கள் அதிகமுள்ள நாடு. அத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களும் அதிகம். இதற்கு காரணம் பெரும்பாலானவர்கள் யாருடனும் உரையாடாமல் தனித்தேயிருப்பது தான். அங்கு நிலவும் பருவ நிலையும் ஒரு காரணம். 
 
social-activist-dr-sheeba-lourdhes-6
அங்கு 65வயதுள்ள பெண்கள் கூட கணவரின் அரவணைப்பு இல்லாமல் தனித்தே வாழ்வார்கள். ஆனால் இவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகிவிட்டால் இவர்களை மீட்கவும், இவர்களிடம் பேசவும் யாருமில்லை.இது போன்ற தருணங்களில் அவர்களின் பிரச்சனைகளை கேட்பதற்கு ஒருவர் இருந்தாலே போதும். பிரச்சனையின் பாதிப்பு குறைந்துவிடும். இதுவே அவர்களின் தற்கொலை எண்ணத்தை மாற்றிவிடும் காரணி. நம்மால் அவர்களின் பிரச்சினைக்கு தீர்வை அளிக்க முடியாது. ஆனால் அவர்களிடம் பேசும் போது, பிரச்சனைகளின் தாக்கம் குறைந்து தவறான எணணங்களின் வீரியம் திசை திரும்பும். அதே போல் குடி பழக்கம், புகை பிடிக்கம் பழக்கம் போன்றவர்களையும் அந்த பாதிப்பிலிருந்து மீட்கிறோம். இது சுவீடன் மட்டுமல்ல பல ஐரோப்பிய நாடுகளிலும் இருக்கிறது.
 
ஒவ்வொரு பெண்களும் தன்னிறைவு பெறுவதற்காக என்ன மாதிரியான ஆலோசனைகளை வழங்குவீர்கள்?
பெண் என்பவர் ஆண்களுக்கு அடிமையானவர் என்ற எண்ணத்திலிருந்து முழுமையாக வெளியே வரவேண்டும். அதே போல் என்னுடைய இடம் சமையலறை என்றும், என்னால் இதனை தனித்து செய்ய இயலாது என்ற சிந்தனையிலிருந்தும் வெளியே வரவேண்டும். பெண்கள் முன்னேற வேண்டும் என்றாலோ அல்லது த்ன்னிறைவு பெறவேண்டும் என்றாலோ , அதற்கான வாய்ப்புகள் உருவாகவேண்டும் அல்லது வாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும். அப்போது தான் அவர்களின் சக்தியை அவர்கள் உணர்வார்கள். முன்னேற்றம் பெறுவார்கள். தன்னிறைவு அடைவார்கள். அதிகாரத்திற்கும் வருவார்கள். சிறந்த சமுதாயத்தையும் உருவாக்க இயலும்.
 
எதிர்கால இலக்கு..?
 
பெண்கள் அதிகாரத்திற்கு அதிகளவில் வரவேண்டும். அதற்கான கட்டமைப்பை உருவாக்குவதிலும், இதை நோக்கிய பயணத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்களுக்கு தேவையான விழிப்புணர்வை அளிப்பதில் என்னுடைய பங்களிப்பும் இருக்கவேண்டும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறேன். உலகளவிலான பெண்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்திலுள்ள பெண்களுக்கு இருக்கும் உளவியல் வலிமை வேறு எங்கும் இல்லை. ஆனால் இவர்களை ஊக்கப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும். பல்வேறு வகையில உற்சாகப்படுத்திக் கொண்டேயிருக்கவேண்டும். அதே போல் பெண்களின் உரிமை, குழந்தைகளின் உரிமை இது குறித்தும் போதிய அளவிற்கு விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கான வழிவகைகளிலும் ஈடுபட திட்டமிட்டிருக்கிறேன்..
actress-upasana-rc-stills-news-4

Actress Upasana rc Stills & News

Actress Upasana rc Stills & News

actress-upasana-rc-stills-news-4

88 படம் எனக்கு அறிமுகம் கொடுத்தது

                டிராபிக் ராமசாமி படம் எனக்கு அடையாளம் கொடுத்தது.

                                           உபாசனா RC

 

தமிழ் சினிமா என்கிற முத்தெடுக்கும் கடலில் முத்தெடுக்க எல்லா மா நிலங்களில் இருந்தும் எவ்வளவோ புதுமுகங்கள் நாள் தோறும் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்..

அப்படி புகழ் எனும் முத்தெடுக்க வங்காளத்திலிருந்து வந்திருப்பவர் தான் உபாசனா RC..

தமிழில் அறிமுகம் 88 என்கிற படத்தின் மூலம் என்கிற இவர் திரை அறிமுகம் என்னவோ முதலில் கன்னட படம் மூலமாகத் தான்.

சுமார் 80 விளம்பரப் படங்களின் மூலம்  மக்களிடம் நல்ல அறிமுகமாநவர் இவர்..

டிராபிக் ராமசாமி படம் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருக்கிறது..

ஒரு நல்ல கதையம்சமுள்ள படத்தில் நடித்தது பெருமையாக இருக்கு…

எனக்கு சின்ன வயசிலிருந்தே சினிமா மீது ஆர்வம் உண்டு….

அதனால் பரதனாட்டியம் கிளாசிகல் டான்ஸ் கத்துக்கிட்டேன்.

 

அப்பா அம்மா பிறந்தது வங்காளம் ..நான் பிறந்தது குஜராத். படித்தது கர்நாடகா, இப்போ வாழ்வது தமிழ் நாட்டில்… ஆக இந்தியா முழுக்க ஒரு ரவுண்ட் வர வேண்டும் என்பது என் ஆசை என்கிறார் உபாசனா. அப்பா மெக்கானிக்கல் இஞ்சினீயர் .அம்மா பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருந்து இப்போ என் கூட இருக்கிறார்.

நானும் சாப்ட்வேர் இஞ்சினீயர் தான்.

2015 ல் இந்திய அளவில் எல்லா மாநில அழகிகளும் கலந்து கொண்ட அழகிப் போட்டியில் மிஸ் இந்தியா பட்டம் வென்றிருக்கிறேன்.

[25/06, 6:57 pm] Sir: நான் நல்ல நடிகை என்ற பெயர் எடுக்க வேண்டும்.

சித்தார்த்தை ரொம்ப பிடிக்கும் .

நடிகர் விஜய்யின் டான்ஸை விரும்பி ரசிப்பேன்..நானும் டான்ஸர் என்பதால்..

எனக்கு மிகப்பெரிய அந்தஸ்தை கொடுத்தது ..விஜய் டிவியில் ஒளிபரப்பான    “வில்லா டூ வில்லேஜ்” நிகழ்ச்சி தான்.

நகர பெண்களை கிராமத்துக்கு அழைத்து சென்று  நடத்திய  நிகழ்ச்சி எனக்கு மிகப் பெரிய பெயரை பெற்று தந்தது..

அந்த நிகழ்ச்சியின் மூலம் எனக்கு real fighter என்கிற பட்டப் பெயரும் கிடைத்தது பெருமையாக இருக்கு..

அடுத்து நான் நடித்துக் கொண்டிருக்கும் “கருத்துக்களை பதிவு செய் ” எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன் என்றார் உபாசனா RC.

 

actress-sheriina-press-meet-gallery-news-2

Actress Sheriina Press Meet Gallery & News

Actress Sheriina Press Meet Gallery & News

actress-sheriina-press-meet-gallery-news-2

                                                                        மாடலிங் டு சினிமா  ! 
                                   **ஆறு மொழிகள் தெரிந்த அறிமுக நடிகை  ஷெரினா!

மாடலிங் துறையிலிருந்து  சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் ஒருவர் .பெயர் ஷெரினா .இயற் பெயர் ஷெரின் சாம்.
..  5 அடி 7 அங்குல தாஜ் மஹால் போலத் தோற்றம் . 
கலகலப்பான சுபாவம் , கண்களில் மின்னும் நம்பிக்கை எனத் தெரிகிற ஷெரினாவுக்கு பூர்வீகம் கேரளாவின் கொச்சி,  குழந்தைப் பருவம் பெங்களூரில் , பள்ளிப் பருவம் குவைத்தில் என்று  கழிந்திருக்கிறது. பால்யகால மே பல பிரதேசங்கள் என்று போயிருக்கிறார்.  சேர நன்னாட்டிளம் பெண்ணான  இவருக்கு விமானம் ஓட்ட வே கனவு இருந்ததாம்.  
கனவு என்னவோ  விமானம் ஓட்ட வேண்டும் என்றுதான் இருந்ததாம்.எனவே   முதலில்  மாடலிங் பற்றி அவநம்பிக்கையுடன்  இருந்தவருக்கு  நண்பர் மூலம்  திடுதிப்பென வந்ததாம் ஒரு வாய்ப்பு..இத்துறையில் ஈடுபட பிள்ளையார் சுழி போட்டது   டைம்ஸ் ஆப் இந்தியா நிறுவனம்தான், மும்பை போய்த் தங்க வேண்டும் என்று தவிர்த்துப் பார்த்தார்.  மும்பையில் உள்ள தங்கள் விருந்தினர் மாளிகையிலேயே தங்கலாம் என்று கூறியுள்ளனர் . சரி பார்க்கலாம் என்று அரை மனதுடன் தான் போயிருக்கிறார். ஆனால் ஆரம்ப மே நல்ல அறிகுறியாக வரவேற்பு கிடைத்திருக்கிற து.  மாடலிங் வாய்ப்பு பெமினா மிஸ் ஆந்திரா போட்டிக்கு வந்தது. ஹைதராபாத் போனார் தேர்வு செய்யப்பட்டார். ஏழு நாட்கள் பயிற்சிக்குப் பின் நம்பிக்கை வந்தது. சர்வதேச ராம்ப்பில் அழகு நடை பயிலும் அளவுக்குக் கொண்டு போனது.  ஒரு  விபத்தைப் போல் மாடலிங்கில் இறங்கியவர் , பிறகு பிஸியாகி விட்டார்.மும்பையில் தங்கி ,  அமெரிக்க நியூயார்க்  .,ஐரோப்பிய மாண்டினிக் ரோ என்று  பறந்து போயிருக்கிறார். இவர் எந்த ஊர் என்றவரே இருந்த ஊரைச் . சொல்லவா என்று பாடாத குறையாகப் பல ஊர் வாசம் செய்திருக்கிறார்.  
ஏழு நாட்களில் ஏராள நம்பிக்கை தந்த பயிற்சியுடன் இந்திய அளவில் போர்டு சூப்பர் மாடல் போட்டிக்குச் சென்றார். பிறகு நியூயார்க்கில் நடந்த சர்வதேசப் போட்டிக்குச் சென்றார். 40 நாடுகள் ஏராளமான போட்டியாளர்கள்  , அவர்களில் டாப் டென்னில் ஒருவராக வந்தார் .அங்கு ஏராளமான வெள்ளை வெளேர் ஆங்கிலேயப் பெண்கள் வந்த போதும் ஷெரினாவின் இந்திய நிறம் பலரையும் கவர்ந்து மதிப் பெண்ணை அள்ளியிருக்கிறது  
பிறகு வில்ஸ் இந்தியா பேஷன் ஷோ , லக்மே பேஷன் ஷோ உள்ளிட்ட பல்வேறு வகையில் 500      ஷோக்களில் கலந்து கொண்டு  பூனை நடை நடந்துள்ளார் ஷெரினா 

 

actress-shathigaa-stills-6

எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை!

எனக்கான இடம் கிடைத்தே தீரும்: ஒரு நடிகையின் நம்பிக்கை!

சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்களில் இரு வகையினர் உண்டு. திடுதிப்பென ஒரே படம் மூலம் உயரே செல்பவர்கள் ஒரு ரகம். படிப்படியாக மேலேறி உயரம் செல்பவர்கள் மற்றொரு ரகம். இதில் இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர் தான் நடிகை ஷாதிகா.

அண்மையில் வெளியாகியுள்ள சுசீந்திரனின் ‘நெஞ்சில் துணி விருந்தால்’ படத்தில் நாயகன் சந்தீப்பின் தங்கையும் விக்ராந்தின் காதலியுமான அனு பாத்திரத்தில்  நடித்திருப்பவர் தான்  இந்த ஷாதிகா.

படத்தின் கதாநாயகி ஷாதிகா இல்லையென்றாலும்  கதையில் கவனம் குவியும் கதாபாத்திரத்தில் வந்திருப்பவர் .

இதற்கு முன் ஷாதிகாவின் கதை என்னவென்று கேட்டால் வழக்கமாக பலருக்கும் உள்ளதைப் போல அது  சிறுகதையாக இருக்காது. பெரிய தொடர்கதையே எழுதும் அளவுக்கு வரலாறே வைத்துள்ளார் இந்த ஷாதிகா .

சென்னைப் பெண்ணான  இவர், லயோலாவில் பி.டெக் படித்து  முடித்தவர்.

இவர் குழந்தையாக இருந்த போது ஏன் பேச்சு வராத போதே கேமரா பார்த்து நடித்தவர்.அரிராஜனின் ‘மங்கை’ தொலைக்காட்சித்  தொடரில் நடித்த போது இவருக்கு இரண்டு வயது. சீமானின் ‘வீர நடை’ படம் தான் முதல் சினிமா அனுபவம். அப்போது வயது இரண்டரை தான் . அதன் பிறகு ஆளும் வளர வாய்ப்புகளும் பெருக ‘ரோஜா வன’த்தில் குட்டி லைலா ,’ குபேரனி’ல் கெளசல்யா வின் மகள் , ‘சமஸ்தான’த்தில் சரத்தின் மகள் , ‘ராமச்சந்திரா’வில் சத்யராஜின் மகள் , ‘ஆனந்தம்’ முரளியின் மகள் , என்று வளர்ந்து  ‘குருவி’யில் விஜய்யின் தங்கையாகி ‘மாசிலாமணி’யில் சுனைனாவின் தங்கை என்று கலந்து கட்டி 30 படங்கள் நடித்து விட்டார்.

அது மட்டுமல்ல
தொலைக்காட்சியில் ‘சித்தி’ தொடரில் வில்லி யுவராணியின் மகள் .’ கோலங்கள் ‘தொடரில் தொல்காப்பியனின் சிறுவயது தங்கை என்று நடித்தும் உள்ளவர். சுட்டி டிவியில் சுட்டி தொகுப்பாளராக மூன்று ஆண்டுகள் அனுபவம். அது மட்டுமல்ல குழந்தை நட்சத்திரங்களுக்கெல்லாம்  பின்னணிக் குரலும் கொடுத்திருக்கிறார். சில குறும்படங்களிலும் நடித்துள்ளார். இவர் நடித்த ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம் ‘பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவுக்குப்  போன ஒரே தமிழ்க்  குறும்படம் ஆகும்.

நடிகை ரேவதி இயக்கிய குறும் படமாக ‘கயல்விழி’யில் ஷாதிகா தான் கயல்விழி.
இப்படி இவரது அனுபவம் நீள்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ இவர் நடித்த நான்காவது படம். இப்பட அனுபவம் பற்றிக் கூறும் போது ‘

” சிறு வயதில் குழந்தையாக பல படங்களில் நடித்திருக்கிறேன். சற்று வளர்ந்த பெண்ணாக’ நான் மகான் அல்ல  ‘ படத்தில் நடித்தேன். அந்த வாய்ப்பு எனக்கு பெரிய பிரேக் .பெரிய அடையாளம். அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கியவர் சுசீந்திரன் சார். என்னை எங்கே பார்த்தாலும்  அடையாளம் காண்கிறார்கள் என்றால் ‘நான் மகான் அல்ல’ படமே காரணம்.

சுசீந்திரன் சாரைப் பொறுத்தவரை அவர் என்னைப் போல சிலரைக் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் மாதிரி வைத்திருப்பார். அவர் எப்போது கூப்பிட்டாலும் படப்பிடிப்புக்குக் கிளம்பி விடுவோம். கதை எல்லாம் நாங்கள் கேட்க மாட்டோம்.  படப்பிடிப்பில் தான்  தெரியுமே என்று நம்பி புறப்பட்டு விடுவோம்.  அதற்காகத்  தன் பாத்திரத்துக்கு ஏற்றபடி பயன்படுத்திவிட்டு காரியம் முடிந்தது என்று அவர்களை கறிவேப்பிலையைப் போலத் தூக்கி எறிந்து விட மாட்டார்.

கதாபாத்திரமாக மட்டுமல்லாமல் சிறிது நேரமே வந்தாலும் அந்த நடிகர் அல்லது நடிகைக்கு நடிப்பிலும் பெயர் பெற்றுத் தரும்படி  அந்த வாய்ப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்வார். அப்படித்தான்  ‘நான் மகான் அல்ல’ படத்தில் கொலை செய்யப்படும் பெண்ணாக நடிக்க வைத்தார். ‘பாயும் புலி ‘படத்தில் விஷாலின் தங்கை ,’ மாவீரன் கிட்டு’ வில் ஸ்ரீதிவ்யாவின் தோழி என நடிக்க வைத்தார்.  அப்படியே அந்தப் படங்களிலும் வந்தேன். இப்போது ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ வாய்ப்பு கொடுத்திருக்கிறார். குறிப்பாக  இது தமிழ் , தெலுங்கில் உருவான படம்.   ” என்கிறார்.

சினிமாவில் ஓர் அபாயம் உள்ளது தங்கை பாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளை கதாநாயகியாக நடிக்க அழைக்கத் தயங்குவார்கள் என்று . இது குறித்து ஷாதிகா அஞ்சவில்லையா, ?

” நான் நாயகி , குணச்சித்திரம் எனப் பிரித்துப் பார்ப்பதில்லை.  பத்து நிமிடம் வந்தாலும் மனதில் பதிகிற வாய்ப்பில் நடிக்கவே விரும்புவேன். நல்ல பாத்திரம் முக்கியம். அதில் தான் எனக்கு மகிழ்ச்சி . திருப்தி.
ஆனாலும் கதாநாயகியாகவும் நடிப்பேன். ஒரு பக்கம் அதற்குரிய முயற்சியில் தான் இருக்கிறேன்.  நான் குழந்தையாக நடித்தது முதல் இன்று வரை எனக்கு என்னைத் தேடி வந்து  அமைந்த வாய்ப்புகள் தான் என்னை வளர்த்துள்ளன, செதுக்கியுள்ளன. அதனால்  என் தேடலின் போதே  எனக்கேற்றபடி கதாநாயகி வாய்ப்பும்  வரும் என்று  நம்புகிறேன். எனக்கான காலம் வரும் என்று கருதுகிறேன்.”

படிப்பையும் நடிப்பையும் எப்படி ஷாதிகாவால் தொடர முடிகிறது?

“நான் படிப்பிலும் படு சுட்டி. பள்ளி நாட்களில் பாதிக்கும் மேற்பட்ட நாள்களில்  படப்பிடிபபில் இருந்தாலும் அது படிப்பைப் பாதிக்காதபடி நன்றாகப் படிப்பேன். ப்ளஸ் டூவில் 90% மார்க் எடுத்தேன். பி.டெக் முடித்தேன். எம்.பி.ஏ. கரஸில் சேர  இருக்கிறேன். ” என்கிறார் .

இப்போது ஷாதிகா சுசீந்திரனின் ‘ஏஞ்சலினா ‘ படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடித்து வருகிறார்.

விடைபெறும் முன் ஒன்று சொன்னார் ஷாதிகா.

“தமிழ் தெரிந்த, நடிக்கவும் தெரிந்த, டப்பிங் பேசவும்  தெரிந்த ,நல்ல நடிப்பு வாய்ப்பை மட்டும் விரும்புகிற ஒரு நடிகை இருக்கிறார் . தேடிக் கொண்டிருக்கும் தனக்கான வாய்ப்பு கனியும் என்கிற  தன்னம்பிக்கையுடன் இருக்கிறார் என்று எழுதுங்கள் .” என்றார்.

குறிப்பாகத் ”தமிழ்ப் பேசத் தெரிந்த ” என்பதை அடிக்கோடிட்டுக் குறிப்பிடுங்கள் என்றார் நம்பிக்கை நனைந்த குரலில் .

ஷாதிகா தனக்கான தகுதியுடன் தான் திரைக்களம் புகுந்துள்ளார்.

நன்னம்பிக்கை நாயகி ,தன்னம்பிக்கை தமிழச்சி ஷாதிகா சாதிக்கட்டுமே . வாழ்த்தலாம்.

NENJIL THUNIVIRUNDHAL FAME ACTRESS SHATHIGA
SELF-RADIATING WITH SELF-CONFIDENCE AND HIGH POTENTIALSThe film industry has always witnessed actors of two classifications. One among them achieves overnight stardom and there is another, where they scale success gradually. Actress Shathiga happens to be the one from latter aspect. She is now on cloud nine for getting good reception on her performance in recent release ‘Nenjil Thunivirundhal’. Despites not playing the female lead role in this film, she has garnered everyone’s attention with the entire film revolving her character.

There happens to be a stereotypical fact while trying to ask about an actress’ biography. But Sadhika happens to be a blunt exception. She has completed her graduation of B.Tech in Loyola and is current pursuing MBA.

She has faced the camera before even before she started uttering words as a baby. She was exactly 2 yrs old, when she made her first appearance before camera for a TV serial ‘Mangai’. Shathiga made her debut in cinema through Seeman’s directorial ‘Veera Nadai’ at the same age. Aftermath, she was seen in many movies as child artist playing the baby girl of many leading actors and shot to bigger fame essaying the role of Vijay’s younger sister in ‘Kuruvi’. The actress has now completed 30 films in her filmography, which has given her a wide range of experience.

She has simultaneously working on many TV screens including all time blockbuster TV series ‘Chiththi’ and has even dubbed for several child artists. She holds an important attention for ‘En Veettu Mutrathil Oru Maamaram’ happens to be the only Tamil short film to get screened at Berlin International Film Festival.

Sharing her experience working with filmmaker Suseenthiran in ‘Nenjil Thunivirundhal’, she says, “Although, I have acted in films from childhood, I gained good recognition through Suseenthiran sir’s Naan Mahaan Alla. Everyone got to appreciate me as an actress and from then, I have become a company artist to him. There are few others like me of the same category, who are like company artist to him. Whenever sir calls me, I would instantly go to the shooting spot and only then my role would be revealed by him. He would make sure that even any role is minimal in duration that definitely gets an attention. Such was my characterization in the films like Naan Mahaan Alla, younger sister to Vishal in Paayum Puli, friend to Sri Divya in Maaveeran Kittu and now in Nenjil Thunivirundhal.”

Speaking about her ambitious desire in films, Shathiga says that she is confident that good roles will come to her and her self-confidence is so much radiant.

actress-chitra-new-movie-stills-7

மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா

மீண்டும் நடிக்க வருகிறார் சித்ரா

கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா..
ராஜபார்வை படத்தில் கமலஹாசனுடன் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தவர்..
குழந்தை நட்சத்திரமாக இருந்த அவர் மலையாளத்தில் மோகன் லால் ஜோடியாக ஆட்ட கலசம் படத்தின் மூலம் நாயகியானார்
அதற்கு பிறகு ரஜினியின் ஊர்க்காவலன், சேரன் பாண்டியன், மதுமதி, பொண்டாட்டி ராஜ்யம் உட்பட 300 படங்கள் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என்று நடித்த அவர் நல்லெண்ணெய் விளம்பரத்தின் மூலம் மிகப் பிரபலமானார்.
அதற்கு பிறகு திருமணமாகி செட்டிலான அவர் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்தார்.
இப்போது மீண்டும் நடிக்க இருக்கிறார்..
எனது மகளை வளர்க்கும் பொறுப்பு எனக்கு இருந்ததால் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தேன்..
இப்போது மகள் 10 வது படித்துக் கொண்டிருப்பதால் இனி நடிப்பது என்று முடிவெடுத்திருக்கின்றேன்.
மேக்கப் போட்டு 18 வருடங்கள் ஆகி விட்டது. நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன் என்கிறார் சித்ரா.
actress-samantha-1

Actress Samantha Prabhu unveils the exhibit of Antique Jewelry collection by NAC

Actress Samantha Prabhu unveils the exhibit of Antique Jewelry collection by NAC

Bringing together treasure from the past – NAC Jewelers unveils the exhibit of Antique Jewelry collection

  • NAC Jewelers signs new alliance with Actress Samantha Ruth Prabhu as the Brand Ambassador

India’s trusted jewellery brand, NAC Jewelers today announced its new association with South India’s popular actress Samantha Ruth Prabhu, as a Brand Ambassador at the launch of an exhibit of their Unique Antique Collection named ‘Rewind Collections’ today. The exhibition was unveiled by the new Brand Ambassador, Actress Samantha Ruth Prabhu at their showroom in T. Nagar in the presence of company’s leadership team.

This exhibition of jewellery will showcase a range of carefully curated antique jewellery from across South India. This range of jewellery was inaugurated by Actress Samantha Ruth Prabhu and is open to public from 2nd to 27th August only at their T.Nagar showroom.

Each piece of jewellery from this handpicked assortment depict finely crafted designs that dates back anywhere between 75 and 100 years and reflect the strong heritage and detailed intricacy of South Indian craftsmen. This range of jewelry consists of ruby studded earrings, emerald and Ruby Mugappu Haram, Attigai necklace, Ruby Jhimki, Thala Billai Pendant, Rakodi Necklace and many more stunning jewels which will be at display for the vehement antique jewelry enthusiasts. A concept composed by NAC Jewelers, the exhibit brings together the precious masterpieces of South Indian craftsmanship to be paraded for their customers.

Speaking on the occasion, Mr.  N. Anantha Padmanabhan, Managing Director, NAC Jewelers Pvt. Ltd said, “We are excited to start this new association with actress Samantha with the launch of our unique Rewind Collection. This exhibition is an idea curated by NAC to bring to light the bygone era of unparalleled quality of design and artistry. Every piece of jewelry in display is meticulously handpicked by us and brings us immense pleasure in sharing these treasures with our customers. It is delightful to have our new Brand Ambassador Actress Samantha Ruth Prabhu launch this exhibition”.

Commenting on the occasion, Actress Samantha Ruth Prabhu said, “I am extremely delighted to be associated with NAC jewelers as brand ambassador. I found this Rewind Collection to be close to my heart as I always prefer purchasing jewellery that has story in it. The collection of designs at display is inspired and depicts the all that NAC jewelers stand for”.

The Antique jewelry is on display in NAC Jewelers, T.Nagar, North Usman Road, Chennai.  For further information, please contact 044 4399 6666 or visit the official website – http://www.nacjewellers.com/# Fb: https://www.facebook.com/NACJewellery/

 

About NAC Jewellers (P) Ltd: NAC opened its first store in Chennai in 1973 and is today a leading, premium brand in the Jewellery industry. The NAC group commands a rich history and of immense customer trust and loyalty and its products are supremely crafted, contemporary in design and cater to a wide range of customer preferences.  NAC offers jewellery for all occasions from weddings to festivals and everyday wear. It has a huge array of choices in Diamond, Gold, Platinum, Ruby, Emerald and Silver Jewellery.

 

 

actress-priya-anand-1

Actress Priya Anand New Stills

Actress Priya Anand New Stills

Vanakkam Chennai fame “Priya Anand”is now back in KOOTATHIL ORUTHAN.
The dazzling beauty Priya Anand, after tasted the success in Vanakkam Chennai, Vai Raja Vai and Ethir Neechal is now back in Dream Warriors pictures next production KOOTATHIL ORUVAN.
“It is a glad and happy moment for me to work with director TS Gnanavel and actor ashok Selvan. I am excited to know that the film is getting a huge response from the audience. I would like to extend my deepest thanks to the media, digital media and all the press friends for bringing KOOTATHIL OROVAN to limelight. I would like to act in these type of social message films…” said Priya Anand in a positive tone.
வணக்கம் சென்னை, வைராஜா வை, எதிர் நீச்சல் புகழ் பிரியா ஆனந்த் அவர்கள்  நடிப்பில்  “Dream Warrior Pictures”தயாரிப்பில் தற்போது வெளிவந்து இருக்கும்  “கூட்டத்தில் ஒருத்தன் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளள்ளது.
இந்த படத்தில் இயக்குனர் T.S ஞானவேல் மற்றும் நடிகர் அஷோக் செல்வன் உடன் பணியாற்றியதால் மிகவும்   திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும்  உள்ளது என்றும் ,
இதற்கு காரணமான பத்திரிகை இணையதள பண்பலை நண்பர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்ளகிறேன்  மற்றும் இது  போன்ற சமூக கருத்துக்களை மக்களுக்கு சொல்லும் படங்களில் நடிக்க தயாராக உள்ளேன் என பிரியா ஆனந்த் கூறியுள்ளார் .
adore-boutique-4

Launch of Adore Boutique by Actress Nikki Galrani

Launch of Adore Boutique by Actress Nikki Galrani

Adore – The indo western Closet
 
Concept: Fusion of indian with western . Involving intricate hand embroidery. Also handicraft from various parts of India.
Archana Nayak started her working career as an IT professional in the year 2012 in Bhubaneswar. But she was always inclined towards design and art. She worked in the IT industry with all this passion burning inside of her. Her talent got an out in mid 2016 when she took the decision to give up IT and start designing. Its the husband who could see that burning desire and encouraged her…
This started the journey of Adore. We are now an indowestern boutique located in Ashoknagar and we have a workshop where our artisans have a collective experience of  50+ years. Adore has already taken part in a major fashion show to an unexpectedly amazing response. Adore has also done a photoshoot with a well known supermodel who does not normally agree for a shoot with not-so-known brands. For adore this was an achievement. And now, after a lot of trials and tribulations Adore is ready to showcase its creations in a store near you. This will be launched by the vibrant and very talented Niki Galrani.
nikesha-patel-3

Nikesha Patel Stills & News

Nikesha Patel Stills & News

                                                           ஆல் ஏரியா, நம்ம ஏரியா!

                                           நின்னு விளையாடும் நிகிஷா படேல்!

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த பிரிட்டிஷ் இந்திய அழகியான நிகிஷா படேல், இப்போது இந்திய சினிமாவில் தன் அழகாலும் திறமையாலும் அசத்திக்கொண்டிருக்கிறார். பல பி.பி.சி. ஷோக்களில் தன் திறமையால் அசத்திய நிகிஷா படேல்,”புலி” என்கிற தெலுங்கு படத்தின் மூலமாக இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைத்தார். தொடர்ந்து கன்னடத்திலும் நடித்தார்.

“தலைவன்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த இந்த இங்கிலாந்து அழகி, அடுத்தடுத்து வந்த படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் தன்னால் நடிக்க முடியும் என நிரூபித்தார். “என்னமோ ஏதோ” படத்தில் இளமை கொஞ்சும் அழகியாக, “கரையோரம்” படத்தில் பழிவாங்கும் கோபக்காரியாக நடித்தாலும் கவர்ந்திழுக்கும் ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

நகுல் உடன் “நாரதன்” படத்தில் ஹோம்லியான அழகியாக நடித்து இளைஞர்களை இழுத்தார். இப்போது, இயக்குநர் பி.வாசுவின் மகனும், நடிகருமான சக்திவேல் வாசுவின் ” 7 நாட்கள்” படத்திலும் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் “குண்டூர் டாக்கீஸ்-2” படத்திலும், “100 டிகிரி செல்சியஸ்” படத்திலும் நடித்து வருகிறார்.

அழகு, இளமை, அதிரடி, கிளாமர் என ஆல் ஏரியாவிலும் நின்னு விளையாடுகிறார், நிகிஷா படேல்.