Category Archives: Actor Gallery

act-karikalan-news-5

நடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்

நடிகர் கரிகாலன் தயாரிக்கும் பத்து படங்கள்

 

act-karikalan-news-5

கஸ்தூரி ராஜா இயக்கத்தில் உருவான சோலையம்மா படத்தில் கொடூர வில்லனாக நடித்தவர் கரிகாலன்…

அதற்கு பிறகு தமிழ் தெலுங்கு கன்னட மொழிகளில் 70 படத்திற்கும் மேல் நடித்திருந்தார்…

அதில் ரமணா அரவான் அடிமைசங்கிலி நிலாவே வா கருப்பி ரோஜா தயா தேவன் படங்கள் குறிப்பிடத்தக்கவை.  இவர் இயக்கி நடித்த படம் “வைரவன் “

சில காலம் நடிப்பு இயக்கம் எதிலும் ஈடு படாமல் ஒதுங்கி இருந்தார்…ரியல் எஸ்டேட் துறையில் கால் பதித்து உச்சத்தை தொட்டார்.

தற்போது மீண்டும் கலைத்துறைலயில் கால் பதிக்கிறார்…

அரசியலில் நேர்மையானவர்..ஊழலற்றவர்…தன்னலம் பார்க்காமல் பொது நல நோக்கம் கொண்டவர் என்று புகழப்பட்டவர் காமராஜர். அவர் மீது அதிக பற்று கொண்டவர் கரிகாலன். அதனால் காமராஜர் கனவுக் கூடம் என்கிற பெயரில் ஒரு பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.

மது ஒரு மனிதனையும் அவன் குடும்பத்தையும் மட்டும் அல்ல..ஒரு நாட்டையே சின்னா பின்னமாக்கி விடுகிறது. அடிப்படை கல்வியாக போதிக்க வேண்டிய கல்வி ,ஒழுக்கம் , தேசப்பற்று, பெரியவர்களுக்கு மரியாதை , உற்சாகமாக இருப்பது., உடற்கல்வி போன்றவையோடு பெண்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதை, பக்தி ஆகியவற்றை போதிக்க தவறி விட்டோம். அது மட்டுமல்லாமல் ஏழை எளியோருக்கு பள்ளிகள் ,குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான திரையரங்குகள்,திருமண மண்டபங்கள் என்று செயலாற்ற இருக்கிறோம்…

அதோடு இன்றைய தேவையான கம்ப்யூட்டர் கல்வியையும் போதிக்க உள்ளோம்…

இதையெல்லாம் அடிப்படை கல்வியாக போதித்து இருந்தால் நம் நாடு உலக மக்களிடையே முதல் நாடாக இருந்திருக்கும்…

இதையெல்லாம் நடை முறை படுற்ற வேண்டுமானால் என் கையில் உள்ள ஆயுதத்தால் செயலாக்க முடியும் என்று யோசித்தேன்…

அந்த ஆயுதம் “”சினிமா” அதனால் தான் சினிமா கம்பெனி ஆரம்பித்துள்ளேன்..

அதன் மூலம் சமுதாயத்திற்கு ஏற்ற வகையில் ஆபாசம் இல்லாத குடும்ப உறவுகளின் மேன்மையை சொல்லும் விதமாக் கலாச்சாரம் மீறாமல் நல்ல கதைகள் கொண்ட படமாக வருடத்திற்கு பத்து படங்கள் தயாரிக்க உள்ளோம்..

எங்களால் எல்லாரையும் திருத்த முடியாது., ஒரு சிலராவது மாறினால் நல்லது என்கிற எண்ணம் தான் எங்களுக்கு.

நான் கெட்டவனாக நடித்து நல்லவனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறேன்…

அதனால் எனக்கு ஒரு ஆசை .,என்னை சுற்றி எல்லாமே சரியாக இருக்க வேண்டும் என்று. அதற்காக நிறைய முயற்சிகளை எடுக்கிறேன். என்றார் நடிகர் கரிகாலன்.

bodha-actor-vicky-1

போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..!

போத’ படத்தில் ‘ஆண் பாலியல் தொழிலாளி’யாக நடித்த நாயகன் விக்கி..!

bodha-actor-vicky-1

என் அப்பா சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டார்… நான் நடிகனாகிவிட்டேன் ! – சொல்கிறார் “போத”  பட நாயகர்  விக்கி..!

“போத”  படத்தின் வாயிலாக கதாநாயகராக அடியெடுத்து வைத்துள்ளார்  ஆர்.எஸ்.விக்னேஷ்ரன் எனும் விக்கி.

சின்ன வயது முதலே எனக்கு  சினிமாவில் நடிக்க ஆசை… எனும் விக்கிக்கு., அதிலும்  கும்பகோணம் அரசு கல்லூரியில் பி.டெக் ஐ.டி படிக்கும் போது சினிமாவில் நடிக்க ரொம்பவும் ஆசை. காரணம் .அவரது தந்தை   ராஜசேகர் .

பல வருடங்களுக்கு முன் ‘எத்தனை மனிதர்கள்’ உள்ளிட்ட ஒரு சில டி.வி. சீரியல்களில் தலை காட்டிய என்  தந்தை குடும்ப பாரம் காரணமாக சினிமா நடிகனாக ஜெயிக்க முடியவில்லை. அதனால் எனது சின்ன வயதிலேயே அவரது நிராசை … எனது ஆசை மற்றும் லட்சியமானது.. என்கிறார் விக்கி!

அதன் விளைவு ., சென்னைக்கு காலேஜ் ப்ராஜக்ட் ஒர்க்கிற்காக வந்த விக்கி .,  பெசன்ட் நகரில் உள்ள “ஆக்டர்ஸ்  ஸ்டுடியோ ” எனும் பிரைவேட் ஆக்டிங் ஸ்கூலில்    நடிப்புக் கற்றபடி நடிக்க வாய்ப்பு தேடி இருக்கிறார்.

“வடகறி ” , “அச்சமில்லை அச்சமில்லை” , “நிலா ” உள்ளிட்ட திரைப்படங்களில் சின்னதும் , பெரிதுமான ரோல்களில் நடித்த படி ., தான் நடிப்பு கற்றுக் கொண்ட, பெசன்ட் நகர், “ஆக்டர்ஸ்  ஸ்டுடியோ ” ஆக்டிங் ஸ்கூலிலேயே மற்றவர்களுக்கு நடிப்பு  கற்றுத் தந்தபடி ., கோடம்பாக்கத்தையே வலம் வந்தவருக்கு நண்பர்  கணேஷ்  மூலம் சுரேஷ் ஜி இயக்கத்தில்  “போத” பட வாய்ப்பு கிட்டியிருக்கிறது .

ஆமாம் ., விக்கிக்கு ., இப்படத்தில்  “ஆண் பாலியல் தொழிலாளி ” வேடமாமாமே ? எனக் கேட்டால் ., “அது சும்மா ஒன்றிரண்டு சீன்களில் மட்டுமே சார் ., மொத்த ஸ்க்ரிப்டிலும்,  சரி தப்பு எதுன்னு தெரியாமல் பொய், திருட்டு… என பணத்தை சேஸ் பண்ணிப் போறது தான் என் கேரக்டர்…. படத்தில் ஹீரோயினே இல்லன்னாலும் காமெடியாக கதை சொல்லப்பட்டிருக்கும் “போத” படத்தை  . பேமிலியா போய் பார்க்கலாம் சார் … “என கேரண்டி சொல்கிறார் விக்கி. அதையும் பார்ப்போமே!

actor-ragu-002

சீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி.

சீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி.

actor-ragu-002

முதல் படத்திலேயே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து இழுத்த நடிகர் ரகு..!
 
‘பயப்படாம அடி’ ; அறிமுக நடிகருக்கு ஊக்கம் கொடுத்த விஜய்சேதுபதி…!
 
பரியேறும் பெருமாள் இயக்குனரை அதிர்ச்சியடைய வைத்த நடிகர் ரகு..! 
 
‘சீமராஜா’வுக்காக சிக்ஸ் பேக் வைத்த விஜய்சேதுபதியின் தம்பி..! 
 
அறிமுக நடிகருக்கு இயக்குனர் பொன்ராம் போட்ட கண்டிஷன்..!
சினிமாவில் வாய்ப்புத்தேடி எத்தனையோ பேர் நுழைந்தாலும் அத்தனை பேருக்கும் வாய்ப்பு கிடைத்து விடுவதில்லை. அப்படியே கிடைத்தாலும் ரசிகர்களின் மனதில் பதிவது என்பது கூட ஒருவகையில் அதிர்ஷ்டம் தான்.. அப்படி ‘தர்மதுரை ‘ படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக, அவரது சட்டையை பிடித்து இழுக்கும் வில்லன் கேரக்டரில் நடித்து ரசிகர்களின் மனதில் தனது உருவத்தை பதியவைத்தவர் ரகு.
நடிப்பின் மீதான ஆசையால் ஜப்பானில் சாப்ட்வேர் இஞ்சினியராக ஐந்து வருடம், தான் பார்த்துவந்த வேலையை உதறிவிட்டு சென்னைக்கு வந்த ரகு பாலுமகேந்திராவின் சினிமா பட்டறையில் நடிப்பு பயிற்சிக்காக சேர்ந்தார்.. முதல் வாய்ப்பாக பூஜை படத்தில் விஷாலின் நண்பர்களில் ஒருவராக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தாலும், தர்மதுரை படத்தில் விஜய்சேதுபதியின் தம்பியாக நடித்தபின் தான் பலரும் இவரை அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக ஒரு வெளிச்சம் கிடைத்தது.
“அந்தப்படத்தில் என்னை தவிர மற்ற அனைவரும் மிகப்பெரிய ஜாம்பவான்கள்.. நான் மட்டும் தான் புது ஆள்.. அதிலும் முதல் காட்சியே விஜய்சேதுபதியின் சட்டையை பிடித்து சண்டைபோடும் காட்சி  என்பதால் பதட்டமாக இருந்தது.. மேலும் ஆரம்பத்தில் அந்த காட்சி காமெடியாக இருந்தாலும் க்ளைமாக்சில் சேது அண்ணாவையே தாக்கும் அந்த வில்லத்தனம் தான் என்னை ரசிகர்களிடம் ஓரளவுக்கு அறிமுகம் செய்துவைத்தது.. சேது அண்ணா தான் “பயப்படாம அடி” என ஊக்கம் கொடுத்தார்.. இப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் சீனுராமசாமி சாருக்குத்தான் நன்றி  சொல்லவேண்டும்.” என்கிறார் ரகு.
தற்போது பரியேறும் பெருமாள், கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள ரகு, சிவகார்த்திகேயனுடன்  ‘சீமராஜா ‘ படத்தில் முக்கிய  கேரக்டரில் நடித்து வருகிறார்.  தர்மதுரை படம் மூலமாகத்தான் பரியேறும் பெருமாள் வாய்ப்பு தேடிவந்ததாம். அதில் கிராமத்து கேரக்டருக்காக அழைத்தபோது மாடர்ன் லுக்கில் வந்து நின்ற ரகுவை பார்த்து ஷாக் ஆனாராம் இயக்குனர் மாரிசெல்வம். ஆனால் படப்பிடிப்பின்போது பக்காவான கிராமத்து கெட்டப்பில் ரகு வந்து நின்றதும் தான், இயக்குனருக்கு முழு நம்பிக்கை வந்ததாம். இந்தப்படத்தில் ஆனந்தியின் அண்ணனாக வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ரகு.
கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் நாயகி பிரியா பவானி சங்கரின் ப்ரண்ட் ஆக நடித்துள்ளார் ரகு. இதற்குமுன் பாண்டிராஜின் ‘கதகளி’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த ரகுவுக்கு 2டி  தயாரிப்பாளர் ராஜசேகர் மூலமாக இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு உருவானது. “கிட்டத்தட்ட 30 நட்சத்திர நடிகர்கள் கொண்ட கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்தது போன்ற உணர்வு அந்தப்படத்தில் நடித்தபோது ஏற்பட்டது. கார்த்தி அண்ணாவுடன் இணைந்து நடித்த காட்சிகள் கலகலப்பாக இருந்தது” என்கிறார்.
ரஜினி முருகன் படத்திலேயே இவர் நடிக்கவேண்டியது.. ஆனால் ரொம்ப சின்ன ரோல் என்பதால், உனக்கு அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன் என கூறினாராம் பொன்ராம்  சொன்னபடி ‘சீமராஜா’ படத்திற்காக அழைத்தவர், “நீ ஒல்லியாக இருக்கிறாய்  இந்த கேரக்டருக்கு நன்றாக உடம்பை ஏற்றவேண்டும். அப்படி வந்தால்தான் உனக்கு வாய்ப்பு” என கண்டிஷன் போட்டுவிட்டாராம். அதற்காக ஜிம், உடற்பயிற்சி என உடம்பை ஏற்றி, சிக்ஸ் பேக் எல்லாம் வைத்து  ஆளே மாறியதை பார்த்து இயக்குனர் பொன்ராம் ரொம்பவே சந்தோஷப்பட்டாராம். ஆனால் சீமராஜா படத்தில் என்ன கேரக்டர் என்பதை சொன்னால், கதை கசிந்துவிடும் என்பதால் அதை பற்றி மனிதர் மூச்சுக்கூட காட்டவில்லை.
நடிப்பில் சிவாஜி, விஜய்சேதுபதி இவர்களை ரோல்மாடலாக எடுத்துக்கொண்டுள்ளாராம் ரகு.. “அவர்கள் சின்னவேடம் என்றாலும் தயங்காமல் நடித்தவர்கள்.. அதில் தங்களது நடிப்பு பேசப்படும்படியாக செய்தவர்கள்.. அதேபோல நானும், நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதம் காட்டாமல், எந்த கேரக்டராக இருந்தாலும் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு இருக்கிறதா என பார்த்தே ஒப்புக்கொள்வேன்” என்கிறார்.
‘நெருப்புடா’ மற்றும் பாலாஜி சக்திவேலின் ‘யார் இவர்கள்’ படங்களை தயாரித்த சந்திரா ஆர்ட்ஸ் ரகுவின் சகோதரர் நிறுவனம் என்பதால் கூடியவிரைவில் அந்த நிறுவனத்தின் புதிய படத்தில் மெயின் ரோலில் நடிக்க இருக்கிறாராம் ரகு.. அதற்கான கதை தேடல் ஒருபக்கம் நடந்துகொண்டிருக்கிறது. அதில்  நீங்கள் ஹீரோவா, வில்லனா என கேட்டால், எனக்கு செட்டாக கூடியது  எதுவாக  இருந்தாலும் அதில் நடிப்பேன்” என்கிறார் ரகு நம்பிக்கையாக….
actor-mass-ravi-news-1

தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்!

தட்டிக் கொடுத்த விக்ரம் : நெகிழும் நடிகர்!

actor-mass-ravi-news-1

actor-mass-ravi-news-2

actor-mass-ravi-news-3

தான் ‘ஸ்கெட்ச் ‘படத்தில் நடித்த போது நடிகர் விக்ரம் தட்டிக் கொடுத்ததாக நடிகர் மாஸ் ரவி நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
விக்ரம் நடித்து பொங்கலுக்கு வந்துள்ள படம் ‘ஸ்கெட்ச்.’ இதில் விக்ரமுடன் மோதும் எதிர் தரப்பு அணியில் ஆர்.கே.சுரேஷின் தம்பியாக நடித்துள்ளவர் நடிகர்  மாஸ் ரவி.
ஒரு பெரிய நடிகரான விக்ரம் படத்தில் நடித்ததில் தன் மேல் விளம்பர வெளிச்சம் விழுந்துள்ளதாகப் பரவசத்துடன் கூறுகிறார் மாஸ் ரவி.
தான் கடந்து வந்த பாதை பற்றி அவர் கூறும் போது, ” எனக்குச் சின்ன வயதிலிருந்தே சினிமா மீது ஆர்வம் .
டி வி யில் கூட ஒரு நாளைக்கு நாலைந்து படம் பார்க்கிற அளவுக்கு மோகம். எங்கள் ஊரிலிருந்து சினிமா தியேட்டருக்கு ஏழெட்டு கி.மீ. போக வேண்டும்.. நான் அந்த தூரத்தை நடந்தே செல்வேன். அப்படி நடந்து சென்றே பல படங்கள் பார்த்திருக்கிறேன்.
பள்ளியில் எக்ஸாம் இருந்தால் கூட படம் பார்க்காமல் இருக்க மாட்டேன். பள்ளி நாட்களில் சிவாஜி நடித்த  “ஜிஞ்ஜினுக்கான்” பாட்டுக்கு நடனம் ஆடினேன். அதற்கு முதல் பரிசு கிடைத்தது. விருதும் கொடுத்தார்கள், 8மேடையேற பயப்படுகிற எனக்கு அது ஊக்கமாக இருந்தது.
எனக்குள் சினிமா ஆர்வம் அதிகமாகவே, சென்னை வந்தேன். பலவிதமான இடங்களில் பலவிதமான வேலைகள் பார்த்தேன். எங்கு ஷூட்டிங் நடந்தாலும் வேடிக்கை பார்க்க ஓடி விடுவேன். அது டிவி சீரிய லோ சினிமாவோ எதுவாக இருந்தாலும் போய்ப் பார்ப்பேன். பிறகு,சினிமா வாய்ப்பு தேட ஆரம்பித்தேன்.
எனக்கு உடம்பை கட்டாக வைத்துக் கொள்ளப் பிடிக்கும். எனவே ஜிம் போய் உடற்பயிற்சி செய்தேன். அங்கு நிறைய சினிமாக்காரர்கள்  வருவார்கள். அந்தப் பழக்கத்தில் வாய்ப்பு தேடலாம் என்பதும் ஒரு காரணம். நிறைய பேர் வந்தார்கள். பழக்கமும் ஆனார்கள். ஆனாலும் பெரிதாக வாய்ப்பு ஒன்றும் வரவில்லை. பிறகு கம்பெனி கம்பெனியாக ஏறி வாய்ப்பு கேட்டேன். தினமும் 25 கம்பெனியாவது போவேன். இப்படி 1000 கம்பெனியாவது ஏறி வாய்ப்பு கேட்டிருப்பேன். சிறு சிறு காட்சிகளில் வந்த எனக்கு ‘மாஸ் ‘படத்தில் அடையாளம் தெரிகிற மாதிரி சில காட்சிகளில் நடிக்க வைத்தார் வெங்கட் பிரபு சார்.
என்னை நம்பி பெரிய ரோல் கொடுத்தவர் சுப்ரமணிய சிவா சார் தான். அவர் ‘உலோகம் ‘என்கிற படத்தில் எனக்குப் பெரிய கேரக்டர் கொடுத்தார். அது ஜெயமோகனின் கதை. இலங்கைப் பின்னணியிலான கதை. படம் வந்தால் எனக்குப் பரவலான பெயர் கிடைக்கும். சுப்ரமணிய சிவா சாருக்கு மிக பெரிய நன்றி
வாய்ப்புக்குப் போராடுவதை விட நமக்கு நாமே ஏதாவது செய்து திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று ‘தாகம்’ என்றொரு குறும்படம் எடுத்தேன். பலரும் பாராட்டினார்கள். பிறகு ‘ஒன் லைக் ஒன் கமெண்ட்’ என்றொரு குறும்படம் எடுத்தேன். அதைத் திரையிட்ட போது சந்தானம் , சுப்ரமண்ய சிவா , சரவண சுப்பையா போன்று திரையுலக விஐபிக்கள்  பலரும் வந்தார்கள். பாராட்டினார்கள் . அதற்கு விஜய் சந்தர் சாரை அழைத்து இருந்தேன். அவரால் வர முடியவில்லை. பிறகு அவரைச் சந்தித்த போது அதைப் பார்த்து விட்டுப் பாராட்டிப் பேசினார். வாழ்த்தி ஊக்கமாகச் சில  வார்த்தைகள் சொன்னார். அவர் தன் இயக்கத்தில் அடுத்த பட வாய்ப்பான ‘ஸ்கெட்சி ‘ல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார். “
என்றவர் ‘ஸ்கெட்ச்’ படத்தில் நடித்த அனுபவம் பற்றிப் பேசினார்.
” நான் 12 ஆண்டுகள் சினிமாவில் போராடி வருகிறேன். இந்திய அளவில் சிறந்த நடிகராக விருது பெற்ற விக்ரம் சாருடன் நடிக்கப் போகிறோம் என்பதை நினைத்துப் பெருமையாக இருந்தது. அப்படிப்பட்ட வாய்ப்பை வழங்கிய இயக்குநர்  விஜய் சந்தர் சாரை நான் என்றும் மறக்க மாட்டேன். பத்து படங்களில் நடித்த அனுபவத்தையும் புகழையும் அந்த ஒரு படத்தின் மூலம் பெற்றேன். காரணம் இயக்குநர் தான்.  இன்றைய இளைய தலைமுறையை நடிப்பின் மூலம் கவர்ந்திருக்கும் விக்ரம் சார் பெரிய நடிகர் மட்டுமல்ல பெருந்தன்மைக்கும்  சொந்தக்காரர் என்பதை அவருடன் நடித்த போது நேரில் பார்த்த போது உணர்ந்து கொண்டேன்.
என் கேரக்டருக்கு யாரோ பெரிய நடிகரைக் கூட போட்டிருக்கலாம். என்னைப் போல ஒரு சிறிய நடிகனுடன் அவர் நடிக்கச் சம்மதித்தது பெரிய விஷயம். அது மட்டுமல்ல அவருடன் நான் சண்டைக் காட்சிகளில் மோதும் காட்சிகளில் நடிக்க சம்மதித்தது அவர் மனசால் எவ்வளவு உயர்ந்தவர் என்பதைக் காட்டியது. உடன் நடிக்கும் போதும் சகஜமாகப் பேசினார். ஒரு தம்பியைப் போல அன்பு காட்டி ஊக்கம் கொடுத்தார் .
படப்பிடிப்பின் போது  எனக்குக்  காலில் அடிபட்டு இருந்தது அதை மறைத்தபடி நடித்தேன். நிறைய டேக் வாங்கினேன் – ஏன் என்று விசாரித்தார் காலில் அடிபட்டு இருந்ததைச் சொன்னேன். ஏன் என்னிடம் இதை முன்னாடியே சொல்லவில்லை? என்றார். அப்போது தன் காலைக் காட்டினார். அதிலும் பேண்டேஜ் போட்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘ஸ்கெட் ச்’ படத்தைப் பொறுத்தவரை  அது எனக்கு மறக்க முடியாத  அனுபவம். தாணு சாரின் மிகப் பெரிய கம்பெனியில்  பெரிய ஹீரோவுடன் நான் நடித்து பொங்கல் படமாக  வெளியாகியிருப்பது எனக்கு பெருமை யான விஷயம். ஏதோ கனவு போல நம்ப முடியாத சந்தோஷத்தில் இருக்கிறேன். ” என்கிறார் மாஸ் ரவி.
இவர் நடித்து ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’  படங்கள்  வெளியாகவுள்ளன.
இப்போது  சுப்ரமண்ய சிவா இயக்கத்தில்  சமுத்திரக்கனியுடன்  ‘வெள்ளையானை ‘ படம் , திருமுருகன் இயக்கத்தில் ஒரு படம்  என நடித்து வரும் மாஸ் ரவி , மேலும் 3 புதிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.மாஸ் ரவி டைரக்ஷனில் அன்லாக் குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது இக்குறும்படத்தை பார்த்த பிரபலங்கள் பாராட்டி உள்ளனர் மாஸ் ரவிக்கு கூடுதல் மகிழ்ச்சி
vishal-in-irumbu-thirai-news-1

Vishal in Irumbu Thirai News

Vishal in Irumbu Thirai News

vishal-in-irumbu-thirai-news-1

அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களை கவர் தயாராகும் நடிகர் விஷால் !
 
இந்த வருடம் நடிகர் , தயாரிப்பாளர் என்ற பன்முகம் கொண்ட விஷாலுக்கு வெற்றி வருடம் என்றே சொல்லலாம்… தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , தென்னிந்திய நடிகர் சங்க பொது செயலாளர் என்று அவர் தொட்டதெல்லாம் வெற்றி தான். தற்போது விஷால் தயாரிப்பில் – நடிப்பில் , இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த துப்பறிவாளன் திரைப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்ப்பை பெற்று தமிழகம் , கேரளா என அனைத்து இடத்திலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
 
          துப்பறிவாளன் தெலுங்கு டப்பிங் “ Detective “ வருகிற அக்டோபர் 18ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாகவுள்ளது. அதே தீபாவளிக்கு விஷால் மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள த்ரில்லர் படமான “ வில்லன் “ வெளியாகவுள்ளது. இதை தொடர்ந்து விஷால் நடிப்பில் – புதுமுக இயக்குநர் மித்ரன்  இயக்கத்தில் உருவாகிவரும் த்ரில்லர் படமான “ இரும்புதிரை “ வருகிற ஜனவரி 12, 2018 தை பொங்கல் விருந்தாக வெளியாகவுள்ளது.
 
      இந்த வருடம் விஷால் தன்னுடைய வித்யாசமான படைப்புகளால் ரசிகர்களை கவரவுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
music-director-c-sathya-9

Music Director C.Sathya News and Stills

Music Director C. Sathya News and Stills

‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் மூலம் வெள்ளித் திரையில் இசையமைப்பாளராக தனது இசை பயணத்தை ஆரம்பித்து, தொடர்ந்து ‘தீயா வேலைசெய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற ஹிட்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் C.சத்யா.

கிட்டத்தட்ட தமிழ் சினிமாவிற்கு வந்த 6 ஆண்டுகள் கடந்த C.சத்யா. இதுவரை 15 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். எண்ணிக்கை என்ன ரொம்பகம்மியா இருக்குன்னு நினைக்குறீங்களா? அதுக்கான பதிலையும் அவரே சொல்லிட்டாருன்னா பாருங்களேன்.

சத்யா இசையமைக்கும் ஒவ்வொரு படத்திற்கும் பாடல்களுக்கான புரோகிராமிங், மிக்சிங் என அனைத்து வேலைகளும் இவர் ஒருவரே அதிகமெனக்கெட்டு அவுட்புட் கொடுப்பதில் வல்லவர் என்பதால் இவர் தேர்வு செய்யும் படங்களின் பாடல்களும் இளைஞர்கள் மத்தியில் ரிப்பீட் மோடில்இருந்து கொண்டே இருக்கிறது.

உங்களுக்குள்ள நல்ல திறமை இருக்கே டக்கு டக்குன்னு அடுத்தடுத்த படங்களை புக் செஞ்சிட்டு பணம் சம்பாதிக்க வேண்டியது என்ற கேள்விக்கும்அற்புதமான பதிலை தருகிறார் சத்யா.

நீங்க சொல்றதும் சரிதான் சார், கோலிவுட்டின் டாப் ஹிரோக்கள் பட வாய்ப்பும் எனக்கு வந்துச்சு, படத்துல கமிட் ஆகுறது விஷயமில்ல, ஆனால் சரியானநேரத்துல பாடல்களும், பின்னணி இசையும் என்னால தர முடியுமான்னு ஒரு யோசனை வந்துட்டே இருந்தது. இதனால் பல படங்களை நான்தவிர்த்துவிட்டேன்.

ஆனா இனி என்னுடைய வேலையை இன்னும் வேகமாக்கியுள்ளேன். இதனால் பெரிய ஹிரோக்களின் படங்களுக்கு சரியான நேரத்தில் என்னால்அவுட்புட் தர முடியும் என்று நம்பிக்கையோடு கூறுகிறார் சத்யா.

தற்போது விக்ரம் பிரபு, நிக்கி கல்ரானி நடித்துக் கொண்டிருக்கும் ”பக்கா” படத்தின் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்படத்தின் பெரும்பாலானபகுதி திருவிழா செட்டப் இருப்பது போலவே இருக்கும். இதுவரைக்கும் பல கரகாட்ட பாடல்கள் தமிழ் சினிமாவில் பார்த்திருப்பீங்க. ஆனால் பக்காபடத்தில் ஒரு கரகாட்ட பாடல் இருக்கு அது முற்றிலும் மாறுபட்ட புதுவித அனுபவத்தை தரும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் சத்யா.

இத்துடன் அசுரகுலம், பயமா இருக்கு ஆகிய படங்களின் அனைத்து வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்கிறார் மகிழ்ச்சியுடன்.

“பயமா இருக்கு” படத்தில் வரும் மயிலு பாடல் இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி முதல் முறையாகஅந்தோனிதாஸ் காதல் பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ramya-nambeesan-sings-a-song-for-koothan-17

“கூத்தன்” படத்தில் பாடிய நடிகை “ரம்யா நம்பிசன்”

 “கூத்தன்” படத்தில் பாடிய நடிகை  “ரம்யா நம்பிசன்”

பை பை பை கலாச்சி பை என்ற பாடலை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது இந்த பாடலை பாடிய நடிகை  “ரம்யா நம்சபீன்” பாண்டிய நாடு படத்திற்கு பிறகு “கூத்தன்” என்ற திரைப்படத்தில்  மீண்டும் பாடியுள்ளார். நீல்கிரிஸ் ட்ரீம்  எண்டர்டெயின்மெண்ட்  தற்போது “கூத்தன்” இத்திரைப்படம்  ஒரு  நடன கலைஞர்கள் வாழ்க்கையும் துணைநடிகர்கள் வாழ்க்கையில் நடக்கும் பின்னணியில் எடுக்கபடுகின்ற  திரைப்படமாகும்.

ஹீரோவாக களம் இறங்கும் நடிகர் “ராஜ்குமார்” இவருக்கு வில்லனாக (பிரபுதேவா தம்பி) “நாகேந்திர பிரசாத்” நடிக்கிறார். ஹீரோயினாக “ஸ்ரீஜீதா”, “கிரா” மற்றும் “சோனா” புதுமுக நாயகிகள் நடிக்கின்றனர்கள், இதை எழுதி இயக்குகிறார் இயக்குனர் “AL.வெங்கி”

“சூரன்” மற்றும் பல கன்னட படங்களில் இசையமைப்பாளரான பனியாட்சிய இசையமைப்பாளர் “பாலாஜி” அவர்கள் இசையமைக்க துள்ளவைக்கும் குத்து கலந்த கவிஞர் “விவேகா” வரிகளில் “ஓடு ஓடு காதல் காட்டு மிராண்டி” என்ற பாடலை நடிகை மற்றும் பாடகியான  “ரம்யா நம்பீசன்” நேற்று பாடினார்.

“ரம்யா நம்பீசன்” அவரது பாடும் அனுபவத்தைப் பற்றி கேட்டபோது நடிகை கூறியது ,

இசை அமைப்பாளர் பாலாஜியின் இசையில் நான் முதல் முரையாக பாடுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்  மேலும் பல மொழிகளில் நான் பாடி இருந்தாலும் இந்தப் பாடல் வரிகளில் அமைந்துள்ள ஒரு சில வார்த்தை உச்சரிப்பை ஆரம்பத்தில் அறிந்திட சற்றே சிரமப்பட்டாலும் பாடலாசிரியர் விவேகா பாடல் ஒலிப்பதிவின்  போது உடனிருந்ததால் அவரது உதவியுடன் நன்கு பாடிட முடிந்தது சில தினங்களாக தொண்டைக் கட்டு இருந்த போதும் துள்ளல் மிகுந்த இப்பாடலைப் பாடிப்பழகியதும் சோர்வு நீங்கி குரலும் வளம் பெற்று சிறப்புடன் பாடி முடித்தேன் என்று கூறினார்.

இசையமைப்பாளர் கூறியபோது, நடிகை “ரம்யா நம்பீசன்”  ஒரு மாயஜால குரலைக் கொண்டிருக்கிறார், இது மந்திரம் செய்வதாக உணர்ந்தேன்,அது உண்மையில் மந்திரம் செய்தது. நிர்வாகத் தயாரிப்பளார் மனோஜ் கிருஷ்ணாவுக்கு மற்றும் நீல்கிரிஸ் முருகனுக்கு, ரம்யாவில் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்பவர்களுக்காக நான் நன்றி கூறுகிறேன்.

                            RAMYANAMBISAN SINGING A SONG FROM KOOTHAN MOVIE

Fy Fy Fy Kalachify Girl Records one more peppy song for the Film “KOOTHAN”

Nilgris Dream Entertainment is currently producing a Dance Oriented Musical Film titled “KOOTHAN”. A peppy fast kuthu number was sung by actress/singer Remya Nambeesan yesterday. The Lyrics for the song is penned by Kavignar Viveka and music is composed by BalzG who is a notable composer for his hit songs in Inba,Sooran and many kannada films.

When asked about the song “Odu Odu Kadhal Kattu Merandi” and her singing experience, the actress says, “I really enjoyed singing this catchy tune by the composer BalzG. I initially had some difficulty in pronouncing many words as it had a lot of colloquial tamil phrases. Past few days I was suffering from throat infection and bad flu but after I started singing this number I thoroughly felt super active and enjoyed every bit of it. I am confident that this song will turn out to be a Super Hit”.

The composer says “Remya has a silvery sotto voce which I felt would do the magic and it actually did. I thank Manoj Krishna the executive producer and Nilgris Murugan the Producer of the movie for roping in Remya”.

KOOTHAN is a film Directed by Al.Venky with debutant actors Rajkumar,Srijitha,kira and sonal.

 

 

sound-engineer-udhaya-kumar-3

“வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” உதயகுமார்

“வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” உதயகுமார்

ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத  திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவு பொறியாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவு பொறியாளர் என்கிற பெயர் நம் கவனம் பெறும்முன் சட்டென கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது.
சவுன்ட் இன்ஜினீயரான ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றபின் தான் ஒலிப்பதிவாளர் என்கிற வர்க்கமே வெளியே தெரிய ஆரம்பித்தது. அதிலும் டி.உதயகுமார் சமீப வருடங்களாக தனது ஒலி வடிவமைப்பு பணியில் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்று வருகிறார்.
உலக அரங்கில் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த ‘விசாரணை’ படத்தில் ஒளிப்பதிவைப் போலவே ஒலி வடிவமைப்பும் பேசப்படுகிறது. சர்வதேசப் படவிழாக்களில் பாராட்டவும் பட்டது. இந்த பெருமைக்கு சொந்தக்காரரான பிரபல சவுண்ட் என்ஜினியர் டி.உதயகுமார் (‘ஃபோர் பிரேம்ஸ்’ உதயகுமார் என்றால் திரையுலக வட்டாரத்தில் ரொம்பவே பிரபலம்) மீண்டும் ஒருமுறை சிறப்பு மகுடம் சூட்டப்பட்டுள்ளார். .
ஆம்., சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு விருதுகளில் ‘பேராண்மை’ படத்துக்காக சிறந்த சவுண்ட் என்ஜினியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பிரபல சவுண்ட் என்ஜினியர் உதயகுமார். இவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 300 படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் KNACK ஸ்டூடியோவில் ‘விவேகம்’ படத்தின் மிக்சிங்கில் இருந்தவர் விருது அறிவிப்பின் சந்தோஷ தருணங்களையும் தனது துறைகுறித்த தொழிநுட்ப விபரங்களையும் தனது அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்…
சவுண்ட் இஞ்சினீயரா எப்படி இந்த பீல்டுல நுழைந்தீர்கள்…?
95-98ல பிலிம் இன்ஸ்டியூட்ல சவுண்ட் என்ஜினியர் படிச்சேன். அதுக்கப்புறம் 2000 – 2008 வரை ‘ஊமை விழிகள்’ உட்பட ஆபாவாணன் சாரோட எல்லாப் படங்களுக்கும் வேலை செஞ்ச தீபன் சட்டர்ஜிங்கிற லெஜண்ட்கிட்ட உதவியாளராக இருந்தேன். அவர்கிட்ட தொழிலைக் கத்துக்கிட்டதுக்கப்புறம் தனியா வந்து படங்களுக்கு சவுண்ட் என்ஜினியரா வேலை செய்ய ஆரம்பிச்சேன். அப்படி தனியா வந்ததுக்கப்புறம் 3 வது வருஷத்திலே பண்ணின படம் தான் ‘பேராண்மை’.
பேராண்மை மாதிரி படங்கள், நடிகர் இயக்குனருக்கு மட்டுமல்லாமல் உங்களை மாதிரி தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சவாலா இருந்திருக்குமே..?
உண்மைதான்.. கடந்த பத்து வருஷத்துக்கும் மேல இந்த துறையில் இருக்கேன். பெரிய பட்ஜெட் படங்களும், சின்ன பட்ஜெட் படங்களும்னு நிறைய பண்ணியிருக்கேன். சில படங்கள் ரொம்ப மெனக்கெட வைக்கும். அப்படி மெனக்கெட வைத்த படமான பேராண்மைக்காக எனக்கு விருது கிடைத்ததில் மிக மிக சந்தோசம்.. காடு சம்பந்தப்பட்ட காட்சிகள், ராக்கெட் லாஞ்ச் ஆகிய விஷயங்கள் தான் அந்தப்படத்துல எனக்கு மிகப்பெரிய சவாலா இருந்துச்சு. ஒரு மரத்தை வெட்டுறப்போ கூட அதோட சவுண்ட் எப்படி இருக்கும்னு யூகிச்சுப் பண்ணினேன். கமர்ஷியலோ, யதார்த்தப் படமோ எல்லாவற்றுக்குமான வேலைகள் ஒன்று தான். அதுக்கேத்த மாதிரி வேலை செய்வேன்.
இப்போ இந்தப்படத்துக்காக சிறந்த சவுண்ட் இன்ஜீனியரா எனக்கு தமிழக அரசோட திரைப்பட விருது அறிவிச்சிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரி விருதுகள் தான் எங்களுடைய அடையாளம். அதுதான் எங்களுக்கு சந்தோஷத்தையும், இன்னும் உழைக்கணும்கிற உத்வேகத்தையும் தருது” என்கிறார்.
ஒலி வடிவமைப்புக்காக நீங்க என்ன மாதிரி சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்..?
வேலை நேரம் தவிர மீதி நேரங்களில் பெரும்பாலும் சத்தத்தைப் பற்றி எப்போதுமே நான் யோசிச்சிக்கிட்டுருப்பேன். உதாரணமா பீச்சுக்குப் போனா அங்க அடிக்கிற காற்றோட சத்தம் எப்படி இருக்கு? எந்த அளவுல அடிக்குதுன்னு மனசுல போட்டு வெச்சுப்பேன். ஒரு ஜெனரேட்டர் சத்தத்தைக் கூட கூர்மையா கவனிப்பேன். எந்த இடத்துல இருந்தாலும் குண்டூசி சத்தமா இருந்தாக் கூட அதை காதுல வாங்கிக் கொள்வேன். அப்பதான் படங்களில் நாம அந்த சத்தங்களை முறையான ஒலி அளவுல கொடுக்க முடியும்..
என்று சொல்லும் உதயகுமார் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் கமர்ஷியல் படங்கள் என்றால் அதற்கான வேலை முறை நிறைய மாறும்.. அதற்கு ஸ்பெஷலாக வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று கூறி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்..
ஏன் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனம்..?
அதுக்கு காரணம் அவங்களோட ரசிகர்கள் தான்.., ஏன்னா இந்த மாதிரி முன்னணி ஹீரோக்களோட படங்களுக்கு முதல் ரெண்டு மூணு நாளைக்கு ரசிகர்கள் குவிஞ்சிருவாங்க. தியேட்டருக்குள்ள விசில் சத்தம், கூச்சல், கைதட்டல்ன்னு பட்டைய கிளப்புவாங்க. அந்த மாதிரி நேரத்துல திரையில பேசுற டயலாக்குகள் ரசிகர்கள் சத்தத்தை மீறி அவங்களுக்கு கேட்கணும்னு அதுக்காகவே சத்தத்தை அதிகமாக்கி வைப்பேன். ஆனா இந்த களேபரங்கள் குறைய ஆரம்பிச்ச சில நாட்கள்ல தியேட்டர் ஆபரேட்டரே அவங்களுக்கு தேவையான சத்தத்தை பிக்ஸ் பண்ணிக்குவாங்க..
எல்லா இடங்களுக்கும்  ஒரே அளவிலான சப்தம் செட்டாகுமா..?
நிச்சயமா செட்டாகாது.. உதாரணத்துக்கு ‘விசாரணை’ படத்தை திரைப்பட விழாக்களுக்கு திரையிட அனுப்பும்போது அங்க உள்ள ஆடியன்ஸ், அங்க இருக்கிற தியேட்டர்களை மனசுல வச்சு ஒலியோட அளவை குறைச்சிருவேன்.. அதே படம் நமம ஊர் தியேட்டர்ல திரையிடும்போது சத்த அளவை கூட்டித்தான் ஆகணும்..
வெளிநாட்டு படங்களின் ஒலி வடிவமைப்பை தூண்டுதலாக எடுத்துக்கொள்கிறீர்களா..?
இல்லவே இல்லை.. ஆனால் அந்த மாதிரி சீக்வென்ஸ் அவங்க பண்ணிருப்பாங்க.. அதை போட்டுக்காட்டி இதை பேஸ் பண்ணி நாங்க பண்ணிருக்கோம் பாருங்களேன்னு ஒரு சில டைரக்டர்கள் சொல்வாங்க.. அந்த மாதிரி படங்கள்ல எப்படி ட்ரீட் பண்ணியிருக்காங்கன்னு பார்ப்பேன்.. ஆனா நம்ம ஊருக்குன்னு வரும்போது நம்ம ஊரோட தியேட்டர் சிஸ்டத்தை மனசுல வச்சுத்தான் பண்ணியாகணும்..
ஒலி வடிவமைப்பை பொறுத்தவரை பெரும்பாலான இயக்குனர்கள் என்ன எதிர்பார்த்து உங்களிடம் வருகிறார்கள்..?
இன்னைக்கும் என்னைத் தேடி வர்றவங்க ”விசாரணை” படத்துல ஹீரோவை போலீஸ் அடிக்கிற அந்த அடி மாதிரி சவுண்ட் கொடுங்களேன்னு கேட்பாங்க” என்று ஆச்சரியப்படுத்துபவர் சமீபத்தில் தான் சைமா விருதையும் கைப்பற்றி வந்திருக்கிறார்.
‘விவேகம்’ படம் பற்றி சொல்லுங்களேன்..?
‘விவேகம்’ படத்துல சவுண்ட்டுக்கான ஸ்கோப் நெறைய இருக்கு. அதுல சவுண்ட் விஷயங்களை கொண்டு வர்றது தான் ரொம்ப முக்கியம். ‘நந்தலாலா’, ‘விசாரணை’க்கு அப்புறம் ‘விவேகம்’ படம் தான் எனக்கு சேலஞ்சிங்கா இருந்துச்சு.
என்கிற உதயகுமாரின் கைவசம் தற்போது ‘விவேகம்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘வீரா’, ‘நெருப்புடா’, ‘செம போதை ஆகாத’ என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
rk-sureshs-stills-news-5

RK Suresh’s Stills & News

RK Suresh’s Stills & News

இயக்குநர் சொன்ன கதையைக் கேட்டவுடனே  நடிக்கச் சம்மதித்த ஆர்.கே சுரேஷ்  உடனடியாகப் படப்பிடிப்புக்கும்  தயாராகியிருக்கிறார்.

விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ் , இயக்குநர் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ க்குப் பின் ஒரு நடிகராக அழுத்தமான அடையாளம் பெற்றார். அதன் பிறகு தொடர்ச்சியான பட வாய்ப்புகள் வரவே வரிசையாகப் படங்களில் நடித்து வருகிறார் .

ஒரு வில்லனாக அறியப்பட்ட ஆர்.கே.சுரேஷ்  , இப்போது தனி நாயகனாக ‘தனி முகம் ‘ , ‘பில்லா பாண்டி’ போன்ற படங்களிலும் வேறு நாயகர்களின் படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

ஓய்வில்லாமல் நடித்து வரும் அவரிடம் ஓர் இயக்குநர் கதை சொல்ல முன் வந்த போது  தேதிகள் இல்லை என்று ஆரம்பத்தில்  தவிர்த்திருக்கிறார். கதையைக் கேளுங்கள் என்று இயக்குநர் கேட்டபோது அரை மனதுடன் கேட்க உட்கார்ந்தவர்  , கதையைக் கேட்டு முடித்தவுடன்  எப்போது  படப்பிடிப்புக்குப்  போகலாம் என்றிருக்கிறார். அது மட்டுமல்ல தனது  தேதிகளைச் சரி செய்து கொடுத்துள்ளார். விரைவில் படம்  ஆரம்பிக்கப்படவுள்ளது. அந்தப் படம் தான்  ‘வேட்டை நாய் ‘. அப்படிக் கதை சொல்லி ஆர்.கே. சுரேஷைக் கவர்ந்திருப்பவர் தான்  எஸ்.ஜெய்சங்கர். இவர் ஏற்கெனவே அப்புக்குட்டியை நாயகனாக்கி இயக்கிய ‘மன்னாரு  ‘ படம் பாலுமகேந்திரா போன்ற படைப்பாளிகளால் பாராட்டப்பட்டது.  ‘வேட்டை நாய் ‘இவரது இரண்டாவது படம் .

நாயகனாக ஆர்.கே.சுரேஷ்  நடிக்க, நாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்ஷா நடிக்கிறார். ராம்கி, வாணி விஸ்வநாத் , தம்பி ராமையா, சரவண சக்தி , ‘என் உயிர்த் தோழன் ‘ ரமா  ஆகியோரும் நடிக்கிறார்கள் .  இப்படத்தை தாய் மூவீஸ் தயாரிக்கிறது.

படம் பற்றி இயக்குநர் எஸ். ஜெய்சங்கர் பேசும் போது ” படத்தின்  நாயகன்  முரடன் என்றால் அப்படி ஒரு முரடன். என்கிற அளவுக்குக் கடினமான மூர்க்கனாக இருப்பவன். ஆனால் அடிப்படையில் நல்லவன். இவ்வளவு நல்லவனா என்று அவனுக்குத் தெரியாது அப்படிப் பட்டவனை  உலகையே அறியாத குழந்தைத்தனம் கொண்ட பெண்  அவனை யார் என்று உணர வைக்கிறாள்.

இப்படிப்பட்ட இரு துருவ குணச்சித்திரங்களும் எப்படி இணைய முடியும்.?

அவர்கள் என்னென்ன பிரச்சினைகளை எதிர் கொண்டார்கள் என்பதே கதை.

இந்த நாயகன் பாத்திரத்தில் ஆர்.கே. சுரேஷ் சாரைத் தவிர யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. அப்படியே அவரிடம் கதை சொன்னேன் . பிடித்து விட்டது. இதோ அடுத்த வாரம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளோம். ” என்கிறார்.

மலையும்  மலை சார்ந்த கொடைக்கானல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

vimal2

துருவங்கள் பதினாறு பாணியில் அடுத்த படம்!

துருவங்கள் பதினாறு பாணியில் அடுத்த படம்!

துருவங்கள் பதினாறு பாணியில் விமலின் அடுத்த படம்!

‘மன்னர் வகையறா’வை தொடர்ந்து விமலின் அடுத்த படம்!

மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிப்பில் விமல் நடிக்கிறார்!

” பசங்க ” படத்தின் மூலம் அறிமுகமாகி ” களவாணி ”  மூலம்  மக்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விமல். இதுவரை 22 படங்கள் இவரது நடிப்பில்வெளிவந்துள்ளது. அவற்றில் களவாணி, வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் பெரிய வெற்றிபடங்களாக அமைந்தன. பல படங்கள் சுமார் ரகமாக இருந்தாலும் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டத்தை கொடுக்கவில்லை.

திருட்டு விசிடி முன்கூட்டியே வெளிவந்தும் ” மாப்ள சிங்கம் ” திரைப்படம் தமிழக திரையரங்குகளில் 5 கோடி ரூபாய் வசூல் செய்தது.    நல்ல கதையம்சம்கொண்ட படங்களாக இருந்தால் வசூல் சக்கை போடு போடும் என்பதற்கு தேசிங்கு ராஜா, கலகலப்பு, மாப்ள சிங்கம் படங்கள் உதாரணமாகும்.

இவரது நடிப்பில் வெளிவந்த ” காவல் ” திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றாலும் தமிழக திரையரங்குகள் மூலம் கிடைத்த வசூல் மட்டும் 1.5 கோடி ஆகும்.

இந்நிலையில் சரிந்து விழுந்த தன்னுடைய மார்க்கெட்டை நிலை நிறுத்தும் வகையில் இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் ” மன்னர் வகையறா ” என்ற படத்தை தயாரித்து வருகிறார் விமல்.

தன்னுடைய சொந்த படமாக இருந்தாலும் தனக்கான முக்கியத்துவத்தை குறைத்துக்கொண்டு ஆனந்தி, பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ ஷங்கர், சிங்கம் புலி, வம்சி கிருஷ்ணா, கார்த்திக், நீலிமா ராணி, ஜெய பிரகாஷ், என நட்சத்திர பட்டாளங்களை உடன் வைத்து கொண்டு பயணம் செய்கிறார்.

இதுவரை 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் மீதி படத்தை முடிப்பதற்கு நன்கு திட்டமிட்டு டிசம்பர் 12 முதல் படப்பிடிப்பை நடத்த ஆயத்தமானநிலையில் வர்தா புயலால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. டிசம்பர் 12 அன்று SKR பொறியியல் கல்லூரியில் படப்பிடிப்பு நடத்த இருந்த நிலையில் புயலால்மரங்கள் விழுந்து விட்டதால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் “மாப்ள சிங்கம்” படத்திற்கு பிறகு “மன்னர் வகையறா” படத்தின் வெளியீட்டிற்கு பிறகே அடுத்த படத்தில் நடிப்பது என்று முடிவெடுத்திருந்தநடிகர் விமல் ” மன்னர் வகையறா ” திரைப்படத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்து வரும் காட்சிகள் பெருமளவில் இருப்பதால் அவர்களைஒருங்கிணைத்து படப்பிடிப்பை நடத்த காலதாமதமாகி வருவதால் நடுவில் ஒரு சிறிய படத்தை முடித்து விட திட்டமிட்டுள்ளார்.

தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ” துருவங்கள் பதினாறு ” பாணியில் குறும்பட இயக்குனர் ‘தரண்’ சொன்ன கதை பிடித்து போனதால் அந்தகதைக்கு ஓகே சொல்லியவர் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேதி கொடுத்துள்ளார்.

” துருவங்கள் பதினாறு ” படத்தின் பின்னணி இசையில் மிரட்டிய ஜாக்ஸ் மீண்டும் இந்த திரில்லர் படத்தில் கலக்க உள்ளார். நட்சத்திரங்கள், டெக்னீஷியன்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடந்து வருகிறது.

இந்த படத்தை மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.

மார்ச் முதல் வாரத்தில் படத்தை தொடங்கி ஜூலை முதல் வாரத்தில் படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

actor-ambani-shankar-stills-1

முழு நீள காமெடியனாக வருவதே என் லட்சியம் காமெடி நடிகர்!

முழு நீள காமெடியனாக வருவதே என் லட்சியம் காமெடி நடிகர்!

முழு நீள காமெடியனாக வருவதே என் லட்சியம்

காமெடி நடிகர் “ அம்பானி சங்கர் “

 

நடிகர் அஜீத்தின் ஜி படத்தின் மூலம் காமெடி நடிகராக அறிமுகமானவர் சங்கர். தொடந்து சிம்புவின் வல்லவன், கருப்ப சாமி குத்தகைதாரர், குசேலன், பட்டத்துயானை போன்ற படங்களில் சிறு வேடத்தில் காமெடியனாக வளம் வந்தார். கருணாஸ் நடித்த அம்பா சமுத்திரம் அம்பானி படத்தில் கருணாஸுடன் இணைந்து காமெடியில் கலக்கி இருப்பார். அந்த படத்தின் மூலம் தனக்கு ஒரு அடையாளம் கிடைத்ததால் தனது பெயரை அம்பானி சங்கர் என்று மாற்றிக் கொண்டு ஏராளமான படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பட்டதாரி படத்தில் காமெடியில் கலக்கி இருக்கிறார். எனக்கு  ரோல் மாடலே நடிகர் வடிவேலுதான் அவரை போன்று படங்களில் முழு நீள காமெடியனாக நடித்து மக்கள் அனைவரையும் சிரிக்க வைக்க வேண்டும் என்பதே தனது லட்சியம் என்கிறார் அம்பானி சங்கர்.

 

வளரும் கலைஞனுக்கு இந்த செய்தியை பிரசுரித்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

 

new-comer-music-director-murali-krishnan-5

சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்!

சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் : புதிய இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்!

அண்மையில் வெளியான ஒருபட்ஜெட் படம்தான் ‘வென்று வருவான்’ ,ஆனால் படத்தைப் பார்த்த ஊடகங்கள் அதில் பாராட்டத்தக்க ஒன்றாக படத்தின் இசையைப் குறிப்பிட்டிருந்தன. அப்படி அதற்கு இசையமைத்திருந்தவர்தான் அறிமுக இசையமைப்பாளர் முரளி கிருஷ்ணன்.

கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை, கைநிறைய சம்பளம் என்றிருந்தவரை சினிமா அழைத்துக் கொண்டு விட்டது. இசையமைப்பாளர் ஆகி விட்டார்.இனி முரளிகிருஷ்ணனுடன்…!

உங்கள் முன் கதை?

எனக்கு சொந்த ஊர் சென்னைதான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாமே இங்கேதான். எனக்குள் சினிமா பாடல்கள் இசைபற்றிய ஆர்வம் சின்ன வயதிலிருந்தே தொடர்ந்து கொண்டு இருந்தது. கல்லூரி செல்லும்போது ஆடியோ கேசட் ரெக்கார்டு கடையில் பாடல்கள் கேட்டு கேட்டு பழக்கமாகி ரசனை வளர்ந்தது.பி.எஸ்ஸி மேத்ஸ் முடித்தேன்., இரண்டு எம்.பி.ஏ. முடித்தேன்.

இசையை எங்கே கற்றுக் கொண்டீர்கள்?

எனக்கு சின்ன வயதிலிருந்தே இசையைக் கற்றுக் கொடுத்தவர் இளையராஜா சார்தான். அவர் பாடல்களையே சுவாசமாக்கி வளர்ந்தவன் நான்.  அவர் பாடல்களைக் கேட்டுக் கேட்டு ஒவ்வொரு பாடமாக கற்றேன். என் மானசீக குரு,முதல் குரு  எல்லாமே அவர்தான். நான் நேரடியாக இசை கற்றது பலரிடம். கீபோர்டை டேனியல் மாஸ்டரிடம் கற்றேன். பாலா அவர்களிடமும் கற்றேன்.

இசையமைப்பாளர்கள் ‘மசாலாபடம்’ கார்த்திக் ஆக்சார்யா, பிரபல புரோகிராமர் ராஜேஷ், ‘பண்ணையாரும் பத்மினியும்’ ‘ஒரு நாள் கூத்து’ இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், பக்திப் பாடல்கள் இசையமைப்பாளர் பாலா ஆகியோரிடம் அருகிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். நட்புடன் ஏராளம்  சொல்லிக்கொடுத்தார்கள்.பிரபல இசையமைப்பாளர்களுக்கு இசைக்கருவிகள் வாசிக்கும் இசைக்கலைஞர்கள் கவிராஜ், விஜய் ஆனந்த்ஆகியோர் சினிமா இசை நுணுக்கம் பற்றி நிறையவே சொல்லிக் கொடுத்தார்கள். ஐந்தாண்டுகள் இப்படி போனது.

சகட்டு மேனிக்கு நானே சூழல்களை அமைத்து பாடல்கள் வரிகள் எழுதி இசையமைத்து ‘டேமோ’ பாடல்கள் பதிவு செய்து வைப்பேன். இப்படி அமைத்த டெமோ பாடல்களைக் கேட்டுத்தான் முதல் படமான ‘வென்று வருவான்’ வாய்ப்பு வந்தது.

முதல் படஅனுபவம் பற்றி..?

என் முதல் படம் ‘வென்று வருவான்’  சிக்கனமாக எடுக்கப்பட்டு இருந்தாலும்  அதற்காக லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் பயன்படுத்தினோம்.

அது ஒரு கிராமியக்கதை. எண்பதுகள் போன்ற காலக்கட்டத்து இசைக்கு வாய்ப்புள்ள கதை. தூக்குமேடை கைதியின் கடைசி ஆசை தன்னை வளர்த்த தாயின் பாட்டைக் கேட்க வேண்டும் என்பதுதான் என தாயப்பாசம் சொல்லும் கதை..இப்படி    இசைக்கு  வாய்ப்புள்ள படம். ‘வென்று வருவான்’ வெளியான பிறகு  வந்த விமர்சனங்களில் பல ஊடகங்கள் என்னை இளம் கண்டு எழுதியது பெரும் மகிழ்ச்சி.. அ து எனக்குப் பெரிய ஊக்கம் தந்தது.

இப்போது இசையமைக்கும் படம?

நான் இசை என்று இறங்கியபிறகு தினந்தோறும் இசையமைக்கத் தவறுவதில்லை.வீட்டிலேயே ஒலிப்பதிவுக்கூடம் வைத்துள்ளேன்.வித விதமான சூழல்களுக்கான .நிறைய டெமோ பாடல்கள், டெமோ பின்னணி இசை என்று நூற்றுக் கணக்கில் உருவாக்கி வைத்திருக்கிறேன்.  இப்போது இசையமைத்துவரும் அடுத்த படம் ‘லவ்குரு’ இதில் கார்த்திக், பிரசன்னா, ஜானகி ஐயர், வேல்முருகன், அந்தோனி தாஸ் பாடியுள்ளனர்.

நல்ல வாய்ப்பு வந்தால் என்னை நிரூபிக்கத் தயாராக இருக்கிறேன்.சான்ஸ் கொடுத்தால் சாதிப்பேன் என்கிற நம்பிக்கை இருக்கிளது.காரணம் இசையமைப்பதை என் வேலையாக நினைக்கவில்லைல விருப்பமாக நினைக்கிறேன்..

நம்பிக்கையுடன் கூறுகிறார் முரளிகிருஷ்ணன். நன்னம்பிக்கை என்றும் பொய்ப்பதில்லை..முரளிகிருஷ்ணனை வாழ்த்தலாம்.!

dhayam-movie-stills-4

Actor Santhosh Prathap says about his movie DHAYAM!

Actor Santhosh Prathap says about his movie DHAYAM!

“It is not that much easy to play ‘Dice’ with ‘The Masked Man’…” says ‘DHAYAM’ lead Santhosh Prathap
Apart from being a Ramp walk model, an athlete, a scuba diver, a swimmer and a rock climber, the MBA graduate Santhosh Prathap has earned huge praise for his realistic acting in Parthipean Radhakrishnan’s ‘Kathai Thiraikathai Vasanam Iyakkam’.
It is a must to say that the handsome actor has won many hearts of Women Audience by his arresting expressions and perfect dialogue delivery…And now he is all set to continue his success journey by his upcoming flick ‘Dhayam’.
Produced by ARS sunder under the banner ‘Future Film Factory International’ and Co-Produced by P.Thiru, the Horror-Suspense-Thriller ‘DHAYAM’ is directed by debutante Kannan Rangaswamy (Artistry Short film Maker).
“I have seen some posts on Social Media which says that, Dhayam’s teaser looks like Hollywood films ‘SAW’ and ‘EXAM’….. But it is not true… ‘DHAYAM’ is completely revolves around an Interview that takes place in a single room… What is the crux of that interview is the story of ‘DHAYAM’….”starts Santosh Prathap by clearing the air.
“We have a unique specialty in our plot…Every ten minutes, the genre of the film will be changing from Mystery to horror to thriller to suspense, and so it was a challenging task for me too…. But with the support of my Director Kannan Rangaswamy it became easier for me…The highlight of our film Dhayam is ‘The Masked Man’.
It is a matter of risk if we decide to play Dice with that Masked Man…But I play… To make that character to look more real, our Producers ARS sunder and P Thiru has specially imported a prosthetic mask from US for a wholesome amount…. I am pretty sure that ‘DHAYAM’ will play a major role in my career graph…” says and signs off Santosh Prathap, the lead of ‘DHAYAM’.
 
 
முகமூடி மனிதனுடன் ‘தாயம்’ விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…” என்கிறார் ‘தாயம்’ படத்தின் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப் 
தடகள வீரர், ஆழ் கடல் மூழ்காளர், மலை ஏறுபவர், நீச்சல் வீரர், மாடல் ஆகியவற்றை தாண்டி, தமிழ் சினிமாவில்  சிறந்து விளங்கி கொண்டிருக்கிறார்  பார்த்திபன் ராதாகிருஷ்ணனின் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப்.
கம்பீர தோற்றம் மற்றும்  கட்டுமஸ்தான உடல் வாகை கொண்டு கட்டழகனாக தோற்றமளிக்கும் எம் பி ஏ பட்டதாரியான சந்தோஷ் பிரதாப், தன்னுடைய இயல்பான பாவனைகளாலும், யதார்த்தமான நடிப்பாலும் ரசிகர்களின் பாராட்டுகளை, குறிப்பாக பெண் ரசிகர்களின் பாராட்டுகளை  அதிகளவில் பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது…..இவரின் நடிப்பில் அடுத்ததாக வெளி வர இருக்கும் திரைப்படம், ‘பியூச்சர் பிலிம் பேக்டரி இன்டர்நேஷனல்’ சார்பில் ஏ.ஆர்.எஸ்.சுந்தர் தயாரித்து  இருக்கும் ‘தாயம்’.
கலை நயத்தோடு குறும்படங்களை உருவாக்கும் அறிமுக இயக்குனர் கண்ணன் ரங்கசாமி இயக்கி இருக்கும் இந்த ‘தாயம்’ திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்திருக்கிறார் பி.திரு.
“தாயம் திரைப்படத்தில் ‘சா’ மற்றும் ‘எக்ஸாம்’ போன்ற ஹாலிவுட் படங்களின் சாயல் இருக்கின்றது என்று கூறும் சில பதிவுகளை நான் சமூகவலைத்தளங்களில் பார்த்தேன்…. அது எந்த விதத்திலும் உண்மை இல்லை. முழுக்க முழுக்க ஒரு நேர்க்காணலை மையமாக கொண்டு உருவாகி இருப்பது தான் எங்களின் ‘தாயம்’.
எதனை நோக்கி அந்த நேர்க்காணல் நகர்கிறது என்பது தான் தாயம் படத்தின் கதை….” என்று தெளிவாக கூறுகிறார் சந்தோஷ் பிரதாப்.
“எங்களின் தாயம் படத்தின் கதைக்களத்தில் ஒரு தனித்துவமான சிறப்பம்சம் இருக்கின்றது….
ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் படத்தின் கதைக்களம் மாறி கொண்டே இருக்கும்….
மர்மம், திகில், சஸ்பென்ஸ் என கதைக்களம் மாறி கொண்டே இருக்கும் தாயம் படத்தில் நடிப்பது எனக்கு சவாலாகவே இருந்தது… ஆனால் இயக்குனர் கண்ணன் ரங்கசாமியின் ஒத்துழைப்பால் எனக்கு அது எளிதாகி விட்டது….இந்த படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமே ‘முகமூடி மனிதன்’ தான்….
அந்த முகமூடி மனிதனுடன் ‘தாயம்’ விளையாடுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை…ஆனால் நான் விளையாடுகிறேன்….
அந்த கதாபாத்திரத்தின் தோற்றம் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று எண்ணி, ‘ப்ரோஸ்த்தெடிக் மாஸ்க்’ எனப்படும் முகமூடியை  அமெரிக்காவில் இருந்து அதிக தொகை கொடுத்து இறக்குமதி செய்தனர் தயாரிப்பாளர்கள்  ஏ.ஆர்.எஸ்.சுந்தர் மற்றும் பி.திரு. நிச்சயமாக என்னுடைய திரையுலக வாழ்க்கையில் இந்த தாயம் திரைப்படம் அடுத்த ஒரு மைல் கல்லாக அமையும் என்று முழுமையாக நம்புகிறேன்….’ என்று கூறுகிறார் தாயம் படத்தின் கதாநாயகன் சந்தோஷ் பிரதாப்.
actor-r-k-suresh-5

‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்!

‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய ப்ரோமோ பாடல்கள்!

விநியோகஸ்தர் ,தயாரிப்பாளர்  என்று இயங்கி வந்த ஸ்டுடியோ 9 சுரேஷ் இயக்குநர் பாலா மூலம் ‘தாரை தப்பட்டை’ படத்தில் அறிமுகமாகி ஆர்.கே. சுரேஷ் என்கிற நடிகராகிவிட்டார்.இப்போது நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இதுவரை விநியோகஸ்தராக 40 படங்களை வெளியிட்டி ருக்கிற ஸ்டுடியோ 9 சுரேஷ், ‘சலீம்’ முதல் அண்மையில் வெளியாகியுள்ள ‘தர்மதுரை’ போல சில படங்களைத் தயாரித்தும் இருக்கிறார்.

அண்மையில் வெளிவந்து 50 நாட்களைக்கடந்து வெற்றிப்பாதையில் போய்க்கொண்டிருக்கிறது  ‘தர்மதுரை’.. இந்தப்படம் குடும்பத்துடன் மக்களை திரையரங்கிற்கு படையெடுக்க வைத்திருக்கிறது. ‘தர்மதுரை’ படத்தின பாடல்களை மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.

எந்த அளவுக்கு என்றால் விளக்கவே வியப்பூட்டும். ‘மக்க கலங்குதப்பா ‘பாடலுக்கு தாங்களே நடனமாடியும் குடும்பத்துடன் நடனமாடியும்,குழுவாக நடனமாடியும் பலவாறாக யூடியூபில் பதிவேற்றி அவற்றை லட்சணக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்க வைத்துள்ளார்கள்.இன்றும் பார்த்து வருகிறார்கள்.

இப்படி ஏராளமான வீடியோக்கள் பதிவேற்றப்பட்டு ரசிக்கப்பட்டு வருகின்றன. இப்படி ‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே  உருவாக்கிய பல ப்ரோமோ பாடல்கள் கலக்கி வருகின்றன.சாதாரண சினிமாப்பாட்டு என்பது இன்று புதிய பரிமாணத்தை அடைந்து மகிழ்விக்கிறது என்பது காலமாற்றம் சாத்தியப்படுத்தியுள்ள காட்சியாகும்.

இப்படி வீடியோக்களை பதிவிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழும் தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ் ,அவர்களைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் விரும்புகிறார்.

பதிவேற்றிய ஆர்வலர்களை தேர்வு செய்து, ‘தர்மதுரை’படத்தின் 75வதுநாள் விழா மேடையில் திரைப்பிரபலங்கள் மத்தியில் அங்கீகரிக்கவும் பாராட்டவும் நடனத்திறமையுள்ளவர்களுக்கு விழாமேடையிலேயே ஆட வாய்ப்பளிக்கவும் எண்ணியுள்ளார்.

இதற்காக திறமையான ஆட்டக்காரர்கள் அந்தப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை பதிவேற்றக் கேட்டுக்கொள்கிறார்.

ஸ்டுடியோ 9 சுரேஷ், தன் தயாரிப்பில் குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான வணிகரீதியான தரமான படங்கள் தயாரிக்கவே ஆசைப்படுகிறார்..நடிப்பதை எடுத்துக்கொண்டால், இவர் இப்போது நடிக்கும் படங்கள் எல்லாம் வெளி நிறுவனப் படங்கள்தான்.

நடிக்கும் படங்கள் பற்றிப் பேசும் போது,” ‘ தனிமுகம்’ என்கிற படம் இப்போது தொடங்கப் பட்டிருக்கிறது. இயக்குபவர் சஜித்.இவர், பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஸின் இணை இயக்குநர்.  இது ஹீரோயிசக் கதையல்ல. . இருவேறு முகம் காட்டி, நடிப்புத்திறமையை வெளிப்படுத்த  வாய்ப்புள்ள கதை.

கதாநாயகனாகவே நடிப்பது என்பது என் கொள்கையல்ல. பிற நாயகர்கள் படங்களில் நல்ல நடிப்பு வாய்ப்புள்ள  கதைகளிலும் நடிப்பேன்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளேன்.

சரவண ஷ்க்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் கதை நாயகனாக நடிக்கிறேன். சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படம் உள்ளது. இவை தவிர, புதிதாக  சிலபடங்களும் இருக்கின்றன.” என்கிறார்.

விஜய் நடிக்கும் பைரவா படத்தில்
ஸ்டுடியோ 9 சுரேஷ் வில்லனாக நடிப்பதாக செய்திகள் வந்து கொண்டிருந்தன.. அதை சுரேஷ் மறுத்தார்.. “நான் ‘பைரவா ‘படத்தில் நடிக்கவில்லை. அதில் நான் நடிப்பதாக வரும் செய்திகள் தவறானவை ” என்று தானாகப் பரவி வந்த விளம்பரத்தைக்கூட தவிர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

THE WORLD CELEBRATED ‘DHARMADURAI’ SONGS

NOW IT’S TIME FOR ‘DHARMADURAI’ TEAM TO CELEBRATE YOU

Spearheading with distribution of commercial and offbeat movies, producer RK Suresh made his acting debut through Bala’s Thaara Thappattai, which whom incredible praises. With his stores filling with whole lots of acting projects, he is so much high-spirited with the grand success of his recent production ‘Dharmadurai’.

 With the film successfully completing 50 days in theatres, it is still witnessed house-packed shows. It is not just about forgetting the film with its theatre experience, but family audiences have celebrated the film beyond such paradigms. They have welcomed the songs with great response and going a step ahead has being celebrating them with their own performances.

They haven’t merely been an amateur video, but have turned to be viral on YouTube and online portals with the fame reaching towards the far-flung corners. In accordance to this graceful gesture and support of fans and audiences, Producer RK Suresh has decided to felicitate them on the event of 75th Day Celebrations. The best videos based on the song performance will be selected and would be honoured amidst celebrities and crowds during this event. The celebration doesn’t end there as they would be given a chance to perform on the dais too.

 Speaking about the grand success of Dharmadurai, Producer RK Suresh says that with the grand success of a film with good content and family audiences giving warm welcome, it motivates him to continue making such movies.

 Henceforth, the fans and audiences can exhibit their creative abilities with the performance for the songs in ‘Dharmadurai’ that they might get their blast of show during the grand occasion of 75th Day celebrations.

 

Actor Aryan Stills & News (7)

Actor Aryan Stills & News

Actor Aryan Stills & News

Actor Aryan Stills & News (7)

 

கஸ்தூரிராஜா மூலம் ‘ட்ரீம்ஸ்’ படத்தில் அறிமுகமான ஆர்யன், விஜய்யுடன் ‘திருப்பாச்சி’ யில் பான்பராக் ரவியாக நடித்தபிறகு  பான்பராக் ரவி என்கிற அந்தப் பெயரே ஒட்டிக் கொண்டு விட்டது. எங்கே போனாலும்அந்தப் பெயர் சொல்லியே  அழைக்கிறார்களாம். இனி ஆர்யனுடன் பேசுவோம்!

கொஞ்சம் முன்கதை..? 

நடிப்பு மீதுள்ள காதலில் நாடகங்களில் நடித்து வந்தேன். லெஜண்ட் ஆர்ட்டிஸ்ட் ப்ளே தியேட்டர்ஸில் நிறைய நடித்தேன்.அவற்றில் ‘எட்டு திருடர்கள்’, ‘ஜீசஸ் க்ரைஸ்ட்’ முக்கியமானவை ,பல முறை அரங்கேற்றப் பட்டவை. இன்று என்னை ‘பான்பராக்ரவி’ என்கிறார்கள். ஒரு வில்லனாகவே பார்க்கிறார்கள்.ஆனால் நான் ஜீசஸாக.- ஏசு கிறிஸ்துவாக நடித்தவன். ‘ஜீசஸ் க்ரைஸ்ட்’ என்கிற அந்த நாடகத்தைப் பார்த்தவர்கள் அச்சு அசலாக என் தோற்றம் ஏசு கிறிஸ்துவைப் போலவே இருப்பதாகக் கூறுவார்கள். இப்படி இருந்த நான், கஸ்தூரிராஜா சாரால் ட்ரீம்ஸ்’ படத்தில் அறிமுகமானேன். அதன் வெளியீடு தாமதப் பட்டது. அதில் வந்திருந்த படங்கள் மூலம் என் தோற்றத்தை, பார்த்து பேரரசு சார் மூலம் ‘திருப்பாச்சியில்’ பான்பராக் ரவி பாத்திரத்தில் அறிமுகமானேன் அந்தப் பெயர்தான் இன்னமும் இருந்து கொண்டிருக்கிறது.

ஒரு பாத்திரம் பேசப்படுவது இயற்கைதானே?

ஒரு பாத்திரம் பேசப்படுவது இயற்கைதான் .அது அந்த அளவுக்குப் பேசப்படுகிறது, போய்ச் சேர்ந்திருக்கிறது மகிழ்ச்சிதான். ஆனாலும் அதை அப்படியே விட்டுவிட்டு பெருமைப்பட்டுக் கொண்டு இருந்துவிடக் கூடாது. காரணம் எந்த ஒரு கலைஞனுக்கும் மாற்றம் தேவை. ஒரு வட்டத்துக்குள்ளேயே சிக்கிக் கொண்டு இருந்து விட முடியாது.அதிலிருந்து வெளியே வர விரும்புகிறேன்.

‘திருப்பாச்சி’ க்குப் பிறகு ‘ஆறு’, ‘ஆழ்வார்’,’சபரி’, ‘பரட்டை என்கிற அழகு சுந்தரம்’ ,’அலெக்ஸ் பாண்டியன்’ சமீபத்தில் வந்த சந்தானத்தின் ‘இனிமே இப்படித்தான்’ வரை இருபது படங்களில் நடித்திருக்கிறேன்.
ஆனாலும் இன்னமும் என்னை பான்பராக் ரவி என்றே கூப்பிடுகிறார்கள் என்றால் அதைத் தாண்டும் அளவுக்கு  அடுத்த படம் பண்ணவில்லை என்றுதானே அர்த்தம்..? எனவேதான் அதிலிருந்து வெளியே வர விரும்புகிறேன்.

ஏன் இடையில் இடைவெளி?

‘திருப்பாச்சி’ படத்துக்குப் பிறகு அதே போல ரவுடி ,தாதா, பொறுக்கி என்றே வாய்ப்புகள் வந்தன என்று தவிர்த்து வந்தேன். நான் பாசிடிவ் நெகடிவ் என்று எப்படியும் நடிக்கத் தயார். ஆனால் ஒரே மாதிரி நடிக்க விருப்பமில்லை.
இடைவெளி யோசிக்க வைத்தது. பக்குவம் கொடுத்தது. நிறைகுறைகளை ஆராயவைத்தது. நாம் என்ன செய்திருக்கிறோம் என்று திரும்பிப் பார்த்து யோசிக்க வைத்தது.

இப்போது நடித்து வருபவை?

இப்போது நல்ல மாற்றத்தை உணர்கிறேன்.  புதிய மாற்றமாக இப்போது நல்ல நல்ல வித்தியாசமான வாய்ப்புகளில் நடித்து வருகிறேன்.  பரத் – இனியா நடிக்கும் ‘பொட்டு’ என்கிற படத்தில் நடிக்கிறேன்.வடிவுடையான் இயக்கும் படம்.பரத், நெப்போலியன், நான்,என்று நல்ல கூட்டணி.
அதில் எனக்கு முழுக்க  முழுக்க பாசிடிவான  ரோல். இது நிச்சயம் எனக்குத் தலைகீழ் மாற்றமாகத் தெரியும். இரண்டு பாடல் காட்சி உண்டு என்றால் பாருங்கள் .படத்தின் முதல்பாதி கிராமம், மறுபாதி நகரம் என்று இருக்கும். கொல்லி மலையில் படப்பிடிப்பு நடந்தது.
இன்னொரு படம் ‘முத்துராமலிங்கம்’ . கௌதம் கார்த்திக் நாயகன். ப்ரியா ஆனந்த் நாயகி. முழுக்க முழுக்க இது நேட்டிவிட்டி சட்ஜெக்ட். ராஜதுரை இயக்குகிறார். திருநெல்வேலி மண் சார்ந்த கதை.

அஞ்சலி நடிக்கும் ‘காண்பது பொய்’ மற்றொரு நல்ல வாய்ப்பு. பெண்களை மையப் படுத்திடும் கதை.  கிஷோர் செய்ய வேண்டிய வாய்ப்பு அது.அவருக்கு தேதி அமையாததால் எனக்குக் கிடைத்தது. .

இது தவிர ‘ராதானேகண்டா’ என்கிற கன்னடப் படத்திலும் நடித்து வருகிறேன். கோமல் குமார் நாயகன். பூர்ணா நாயகி. இது ஒரு சினிமா உலகம் சம்பந்தப்பட்ட கதை.

கதாநாயகிகளைப் போலவே வில்லன் நடிகர்களையும் பிற மாநிலத்திலிருந்து இறக்குமதி செய்கிறார்களே?

கலைக்கு மொழி கிடையாதுதான். ஆனாலும் இங்கேயே ஆட்கள் இருக்கும் போது வெளியிலிருந்து அதுவும் வில்லன் நடிகர்களை அழைத்து வருவது வருத்தமாக இருக்கிறது இங்கே இலையென்றால் பரவாயில்லை, திறமையானவர்கள் பலர் இங்கேயே இருக்கும் போது இப்படிச் செய்யலாமா?  வருத்தமாக இருக்கிறது.

உடன் நடித்த கதாநாயக நடிகர்களிடம்  பிடித்தவை?

‘திருப்பாச்சியில் நடித்த போது விஜய் சார்கூட நெருங்கிப் பழகத் தயக்கம். ஏனென்றால் அது எனக்கு முதல் படம் மாதிரி. அவர் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவர். ‘ஆழவாரில்’ அஜீத் சார்கூட நடித்த போது யதார்த்தமாகப் பேசுவார் பழகுவார் .எதுவும் நிரந்தரமில்லை என்று கூறிக் கொண்டே இருப்பார். நாம் நம் வேலையை செய்து கொண்டே இருக்க வேண்டும் என்பார்.

சூர்யா, கார்த்தி இருவரும் பெரிய இடத்துப் பிள்ளைகள் என்கிற பந்தா இல்லாமல் சகஜமாகப் பழகினார்கள். அவர்களது பழக்கம் கண்டு, குடும்ப வளர்ப்பு பற்றி பெருமைப் பட்டேன். இப்படி ஒவ்வொருவரிடமும் ஒவ்வொருஅனுபவம்.

Director Myskkin Movie News and His Actor Maitreya Pictures (8)

Director Myskkin Movie News and His Actor Maitreya Pictures

Director Myskkin Movie News and His Actor Maitreya Pictures

Director Myskkin Movie News and His Actor Maitreya Pictures (2)

 

 

இயக்குனர் மிஷ்கின் இயக்கும் புதிய படம்

சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, யுத்தம் செய், ஓனாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் தற்போது விஷால் கதாநாயகனாக நடிக்கும் துப்பரிவாளன் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து தனது அடுத்த படமாக 100க்கும் மேற்பட்ட படத்திற்கு பண முதலீடு செய்தவரும் பிரபல தயாரிப்பாளருமான ரகுநந்தன் தயாரிப்பில் மைத்திரேயா (Maitreya) என்பவர் இயக்குனர் மிஷ்கின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். மைத்ரேயா லண்டனில் MBA பட்டம் படித்து, மும்பையில் உள்ள நடிப்பு கல்லூரியில் பயின்று, சினிமாவிற்கு தேவையான அனைத்து பயிற்சிகளையும் கடந்த 2 வருடமாக முறையே கற்றுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் பிரபல முன்னாள் கதாநாயகனும் குணசித்திர நடிகருமான ரவிசந்திரனின் பேத்தி தானியா கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

கதாநாயகன் மைத்ரேயா தயாரிப்பாளர் ரகுநந்தன் அவர்களின் மகன் என்பது குறிப்பிடதக்கது.

விஷால் நடிப்பில் உருவாகிவரும் துப்பரிவாளன் படம் முடிந்தவுடன் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் வேலைகள் முழுவீச்சில் துவங்கப்படும்.

ACTOR JAYAM RAVI INAUGURATED THE ALL NEW STATE-OF-THE-ART CENTRE OF DR. AGARWAL’S EYE HOSPITALS AT ANNA NAGAR

ACTOR JAYAM RAVI INAUGURATED THE ALL NEW STATE-OF-THE-ART CENTRE OF DR. AGARWAL’S EYE HOSPITALS AT ANNA NAGAR

ACTOR JAYAM RAVI INAUGURATED THE DR. AGARWAL'S EYE HOSPITALS  (10)

 

 

ACTOR JAYAM RAVI INAUGURATED THE ALL NEW STATE-OF-THE-ART CENTRE OF DR. AGARWAL’S EYE HOSPITALS AT ANNA NAGAR

Chennai, 12 June, 2016: In line with its vision to provide world-class ophthalmic treatment facilities across the country, Agarwal’s Eye Hospital today unveiled it’s all new centre at Anna Nagar. Renowned actor Jayam Ravi in the presence of Prof. Dr. Amar Agarwal, CMD, Dr. Agarwal’s Group of Eye Hospitals and Dr. Adil Agarwal, CEO, Dr. Agarwal’s Group of Eye Hospitals inaugurated the new facility. The event also witnessed Jayam Ravi extending his support towards Dr. Agarwal’s Eye Hospital’s eye donation campaign. The Actor announced to donate his eyes as part of the hospital’s eye donation campaign and the hospital authorities declared to sponsor 100 surgeries to extend their appreciation for Actor Jayam Ravi.

Inaugurating the new centre, Mr. Jayam Ravi, said, “I am extremely delighted to be a part of the opening. The treatment facilities offered at the new centre are at par with any international clinics abroad. I am confident the new centre will take the clinical excellence that Dr. Agarwal’s Eye Hospital has been synonymous with to a higher notch. It will set new standards for eye care treatments in the city.”

Prof. Dr. Amar Agarwal, CMD, Dr. Agarwal’s Group of Eye Hospitals, said, “In India more than 80% of the visual impairments are preventable or treatable, but are left unattended due to lack of awareness, availability and cost. Through our aggressive expansion and renovations, we not only want to address accessibility, we want to bring a paradigm shift in the way eye care is perceived and practiced. Going forward, we will be investing extensively in providing better clinical experience and developing advanced & affordable eye care solutions”

Elaborating on the new centre, Dr. Adil Agarwal, CEO, Dr. Agarwal’s Group of Eye Hospitals, said, “With increasing incidence of ophthalmic ailments, there is a growing need for greater number of holistic and advanced eye care centres across the city. The new centre is a manifestation of our vision to bridge this gap. Backed by the best of opthalmologists and state of the art infrastructure, the new centre will serve as a one stop solution for all eye care needs.

Located at #31, ‘F’ Block, II Avenue, Anna Nagar, Chennai the all- new centre will act as a secondary eye care hospital. Apart fromcommon eye ailments like Cataract and Refractive Errors the new super specialty eye care centre offers treatments for diseases such as Glaucoma, Diabetic Retinopathy, Macular degeneration, Squint, Cornea conditions, Cosmetic Oculoplasty, UVEA, Pediatric Care and Computer Vision Syndrome. Equipped with the latest operation facilities (Modular Operation Theatre, Precision Cataract and Retina Operation Theatres) the centre will provide patients with the best in surgical care as well. The hospital also has facilities like laboratory, pharmacy and optical wing that offer wide range of frames and lenses of high quality and leading brands.

 

About Dr. Agarwal’s Eye Hospital:

Dr. Agarwal’s Eye Hospital a comprehensive eye hospital offering a one-stop solution for eye ailments; was started in the year 1957. Now the hospital is in its 57th year of offering quality services in eye care. It has 15 branches in Chennai and a visible footprint in the states of Tamil Nadu, Telangana, Andhra Pradesh, Karnataka, Odisha, Andaman and Rajasthan. A tertiary eye care centre at Mauritius marks its first step towards establishing an international presence extended upto 13 branches covering the Indian Ocean region, African countries and East Asia.

The hospital has received various awards for its inventions and services. In March 2006, Late Dr. J Agarwal, Founder-Chairman was awarded Padma Bhushan by the former President of India, Dr. APJ Abdul Kalam for his dedicated services to the poor and downtrodden. The hospital received visibility in the global arena for its inventions – Micro-Phakonit (Cataract surgery with 0.7 mm size incision) in 1999 and ‘Glued Intraocular Lens Implant’ performed on a 4 year old girl in January 2008 by Prof. Amar Agarwal. In February 2009, the world’s first Anterior Segment Eye Transplant Surgery was performed on a 4 month old child to treat corneal disorder. In November 2013, for the first time in the World, Dr. Agarwal’s Eye Hospital, Chennai transplanted a one year old donor cornea giving a new lease of sight to a 60 year old man through the new technique PDEK (Pre Descemet’s Endothelial Keratoplasty).

Actor Nepolean Press Release and Stills

Actor Nepolean Press Release and Stills

5

 

 

மீண்டும் அதே கம்பீரத்துடன் நடிகர் நெப்போலியன்

1991ம் வருடம் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் கதாநாயகன், வில்லன், குணசித்திர வேடம் என அனைத்து கதாபாத்திரத்திலும் தனது நடிப்பில் முத்திரை பதித்தவர் நடிகர் நெப்போலியன்

நடிகர், சிந்தனையாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்ட நெப்போலியன் சில காலம் தீவர அரசியலில் ஈடுபட்ட பின்னர் தற்போது தனது இயல்பான கலையான நடிப்பில் மீண்டும் முழுகவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார்.

பாபி சிம்ஹா தயாரித்து நடிக்கும் வல்லவனுக்கு வல்லவன், சசிகுமார் தயாரித்து நடிக்கும் கிடாரி, குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் D.விஜய் பிரகாஷ் தயாரிக்க ராஜதுரை இயக்கத்தில் உருவாகி வரும் முத்துராமலிங்கம் மற்றும்இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராய் பணியாற்றிய நரசிம்மராவ் இயக்கத்தில் ஜெயபிரதாவுடன் சரபா (தெலுங்கு) உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

புது பொலிவுடன் தனக்கென உரிய அதே கம்பீரத்துடனுடம் உத்வேகத்துடனும் தற்பொது நடித்து வரும் நடிகர் நெப்போலியனுக்கு தற்போது தமிழ் மொழி மட்டுமன்றி தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன.