Category Archives: Featured

“வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” உதயகுமார்

“வெளிநாட்டு விசாரணைக்கும் உள்ளூர் விசாரணைக்கும் வித்தியாசம் இருக்கணும்” உதயகுமார்

ஒரு திரைப்படம் உருவாவதில் கண்ணுக்குத் தெரியாத  திறமைசாலிகள் பலரின் உழைப்பும் பங்கும் ஒளிந்திருக்கும். அதில் ஒரு படத்திற்கு பக்கபலமாக இருக்கும் ஒலிப்பதிவு பொறியாளரும் அடக்கம். படத்தில் டைட்டில் கார்டு போடும் போது ஒலிப்பதிவு பொறியாளர் என்கிற பெயர் நம் கவனம் பெறும்முன் சட்டென கடந்து போய்விடுகிற ஒன்றாகவே இன்றும் உள்ளது.
சவுன்ட் இன்ஜினீயரான ரசூல்பூக்குட்டி ஆஸ்கார் விருது பெற்றபின் தான் ஒலிப்பதிவாளர் என்கிற வர்க்கமே வெளியே தெரிய ஆரம்பித்தது. அதிலும் டி.உதயகுமார் சமீப வருடங்களாக தனது ஒலி வடிவமைப்பு பணியில் பாராட்டுக்களையும் விருதுகளையும் பெற்று வருகிறார்.
உலக அரங்கில் பாராட்டுகளையும் விருதுகளையும் குவித்த ‘விசாரணை’ படத்தில் ஒளிப்பதிவைப் போலவே ஒலி வடிவமைப்பும் பேசப்படுகிறது. சர்வதேசப் படவிழாக்களில் பாராட்டவும் பட்டது. இந்த பெருமைக்கு சொந்தக்காரரான பிரபல சவுண்ட் என்ஜினியர் டி.உதயகுமார் (‘ஃபோர் பிரேம்ஸ்’ உதயகுமார் என்றால் திரையுலக வட்டாரத்தில் ரொம்பவே பிரபலம்) மீண்டும் ஒருமுறை சிறப்பு மகுடம் சூட்டப்பட்டுள்ளார். .
ஆம்., சமீபத்தில் அறிவிக்கப்பட்ட தமிழக அரசு விருதுகளில் ‘பேராண்மை’ படத்துக்காக சிறந்த சவுண்ட் என்ஜினியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் பிரபல சவுண்ட் என்ஜினியர் உதயகுமார். இவர் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 300 படங்களில் ஒலிப்பதிவாளராகப் பணியாற்றி இருக்கிறார்.
லேட்டஸ்ட் தொழில்நுட்ப வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் KNACK ஸ்டூடியோவில் ‘விவேகம்’ படத்தின் மிக்சிங்கில் இருந்தவர் விருது அறிவிப்பின் சந்தோஷ தருணங்களையும் தனது துறைகுறித்த தொழிநுட்ப விபரங்களையும் தனது அனுபவங்களையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்…
சவுண்ட் இஞ்சினீயரா எப்படி இந்த பீல்டுல நுழைந்தீர்கள்…?
95-98ல பிலிம் இன்ஸ்டியூட்ல சவுண்ட் என்ஜினியர் படிச்சேன். அதுக்கப்புறம் 2000 – 2008 வரை ‘ஊமை விழிகள்’ உட்பட ஆபாவாணன் சாரோட எல்லாப் படங்களுக்கும் வேலை செஞ்ச தீபன் சட்டர்ஜிங்கிற லெஜண்ட்கிட்ட உதவியாளராக இருந்தேன். அவர்கிட்ட தொழிலைக் கத்துக்கிட்டதுக்கப்புறம் தனியா வந்து படங்களுக்கு சவுண்ட் என்ஜினியரா வேலை செய்ய ஆரம்பிச்சேன். அப்படி தனியா வந்ததுக்கப்புறம் 3 வது வருஷத்திலே பண்ணின படம் தான் ‘பேராண்மை’.
பேராண்மை மாதிரி படங்கள், நடிகர் இயக்குனருக்கு மட்டுமல்லாமல் உங்களை மாதிரி தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் சவாலா இருந்திருக்குமே..?
உண்மைதான்.. கடந்த பத்து வருஷத்துக்கும் மேல இந்த துறையில் இருக்கேன். பெரிய பட்ஜெட் படங்களும், சின்ன பட்ஜெட் படங்களும்னு நிறைய பண்ணியிருக்கேன். சில படங்கள் ரொம்ப மெனக்கெட வைக்கும். அப்படி மெனக்கெட வைத்த படமான பேராண்மைக்காக எனக்கு விருது கிடைத்ததில் மிக மிக சந்தோசம்.. காடு சம்பந்தப்பட்ட காட்சிகள், ராக்கெட் லாஞ்ச் ஆகிய விஷயங்கள் தான் அந்தப்படத்துல எனக்கு மிகப்பெரிய சவாலா இருந்துச்சு. ஒரு மரத்தை வெட்டுறப்போ கூட அதோட சவுண்ட் எப்படி இருக்கும்னு யூகிச்சுப் பண்ணினேன். கமர்ஷியலோ, யதார்த்தப் படமோ எல்லாவற்றுக்குமான வேலைகள் ஒன்று தான். அதுக்கேத்த மாதிரி வேலை செய்வேன்.
இப்போ இந்தப்படத்துக்காக சிறந்த சவுண்ட் இன்ஜீனியரா எனக்கு தமிழக அரசோட திரைப்பட விருது அறிவிச்சிருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்த மாதிரி விருதுகள் தான் எங்களுடைய அடையாளம். அதுதான் எங்களுக்கு சந்தோஷத்தையும், இன்னும் உழைக்கணும்கிற உத்வேகத்தையும் தருது” என்கிறார்.
ஒலி வடிவமைப்புக்காக நீங்க என்ன மாதிரி சிரத்தை எடுத்துக்கொள்கிறீர்கள்..?
வேலை நேரம் தவிர மீதி நேரங்களில் பெரும்பாலும் சத்தத்தைப் பற்றி எப்போதுமே நான் யோசிச்சிக்கிட்டுருப்பேன். உதாரணமா பீச்சுக்குப் போனா அங்க அடிக்கிற காற்றோட சத்தம் எப்படி இருக்கு? எந்த அளவுல அடிக்குதுன்னு மனசுல போட்டு வெச்சுப்பேன். ஒரு ஜெனரேட்டர் சத்தத்தைக் கூட கூர்மையா கவனிப்பேன். எந்த இடத்துல இருந்தாலும் குண்டூசி சத்தமா இருந்தாக் கூட அதை காதுல வாங்கிக் கொள்வேன். அப்பதான் படங்களில் நாம அந்த சத்தங்களை முறையான ஒலி அளவுல கொடுக்க முடியும்..
என்று சொல்லும் உதயகுமார் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் கமர்ஷியல் படங்கள் என்றால் அதற்கான வேலை முறை நிறைய மாறும்.. அதற்கு ஸ்பெஷலாக வேலை செய்ய வேண்டியிருக்கும் என்று கூறி நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார்..
ஏன் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டும் ஸ்பெஷல் கவனம்..?
அதுக்கு காரணம் அவங்களோட ரசிகர்கள் தான்.., ஏன்னா இந்த மாதிரி முன்னணி ஹீரோக்களோட படங்களுக்கு முதல் ரெண்டு மூணு நாளைக்கு ரசிகர்கள் குவிஞ்சிருவாங்க. தியேட்டருக்குள்ள விசில் சத்தம், கூச்சல், கைதட்டல்ன்னு பட்டைய கிளப்புவாங்க. அந்த மாதிரி நேரத்துல திரையில பேசுற டயலாக்குகள் ரசிகர்கள் சத்தத்தை மீறி அவங்களுக்கு கேட்கணும்னு அதுக்காகவே சத்தத்தை அதிகமாக்கி வைப்பேன். ஆனா இந்த களேபரங்கள் குறைய ஆரம்பிச்ச சில நாட்கள்ல தியேட்டர் ஆபரேட்டரே அவங்களுக்கு தேவையான சத்தத்தை பிக்ஸ் பண்ணிக்குவாங்க..
எல்லா இடங்களுக்கும்  ஒரே அளவிலான சப்தம் செட்டாகுமா..?
நிச்சயமா செட்டாகாது.. உதாரணத்துக்கு ‘விசாரணை’ படத்தை திரைப்பட விழாக்களுக்கு திரையிட அனுப்பும்போது அங்க உள்ள ஆடியன்ஸ், அங்க இருக்கிற தியேட்டர்களை மனசுல வச்சு ஒலியோட அளவை குறைச்சிருவேன்.. அதே படம் நமம ஊர் தியேட்டர்ல திரையிடும்போது சத்த அளவை கூட்டித்தான் ஆகணும்..
வெளிநாட்டு படங்களின் ஒலி வடிவமைப்பை தூண்டுதலாக எடுத்துக்கொள்கிறீர்களா..?
இல்லவே இல்லை.. ஆனால் அந்த மாதிரி சீக்வென்ஸ் அவங்க பண்ணிருப்பாங்க.. அதை போட்டுக்காட்டி இதை பேஸ் பண்ணி நாங்க பண்ணிருக்கோம் பாருங்களேன்னு ஒரு சில டைரக்டர்கள் சொல்வாங்க.. அந்த மாதிரி படங்கள்ல எப்படி ட்ரீட் பண்ணியிருக்காங்கன்னு பார்ப்பேன்.. ஆனா நம்ம ஊருக்குன்னு வரும்போது நம்ம ஊரோட தியேட்டர் சிஸ்டத்தை மனசுல வச்சுத்தான் பண்ணியாகணும்..
ஒலி வடிவமைப்பை பொறுத்தவரை பெரும்பாலான இயக்குனர்கள் என்ன எதிர்பார்த்து உங்களிடம் வருகிறார்கள்..?
இன்னைக்கும் என்னைத் தேடி வர்றவங்க ”விசாரணை” படத்துல ஹீரோவை போலீஸ் அடிக்கிற அந்த அடி மாதிரி சவுண்ட் கொடுங்களேன்னு கேட்பாங்க” என்று ஆச்சரியப்படுத்துபவர் சமீபத்தில் தான் சைமா விருதையும் கைப்பற்றி வந்திருக்கிறார்.
‘விவேகம்’ படம் பற்றி சொல்லுங்களேன்..?
‘விவேகம்’ படத்துல சவுண்ட்டுக்கான ஸ்கோப் நெறைய இருக்கு. அதுல சவுண்ட் விஷயங்களை கொண்டு வர்றது தான் ரொம்ப முக்கியம். ‘நந்தலாலா’, ‘விசாரணை’க்கு அப்புறம் ‘விவேகம்’ படம் தான் எனக்கு சேலஞ்சிங்கா இருந்துச்சு.
என்கிற உதயகுமாரின் கைவசம் தற்போது ‘விவேகம்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, ‘வீரா’, ‘நெருப்புடா’, ‘செம போதை ஆகாத’ என படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

பாலு மகேந்திராவின் உதவியாளர் இயக்கியுள்ள ‘புயலா கிளம்பி வர்றோம்’

பாலு மகேந்திராவின் உதவியாளர் இயக்கியுள்ள ‘புயலா கிளம்பி வர்றோம்’

பாலு மகேந்திராவின் உதவியாளர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள ‘புயலா கிளம்பி வர்றோம்’ படம்

ஜூலை 28 -ல் வெளிவருகிறது.

ஜெயஸ்ரீ மூவி மேக்கர்ஸ் V .ஹரிஹரன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ஜி.ஆறுமுகம் இயக்கியுள்ள படம் ‘ புயலா கிளம்பி   வர்றோம் ‘.

இது மதுரை மண் சார்ந்த கதை.
படித்து விட்டு தானுண்டு தன் வேலையுண்டு என்று  இருப்பவர்கள் கோழைகள் அல்ல .அவர்களைச் சீண்டி விட்டால் தாங்க முடியாது என்று சொல்கிற கதை .

நாயகனாக தமன் , நாயகியாக மதுஸ்ரீ நடித்துள்ளனர். தவிர இயக்குநர்  ஆர்.என்.ஆர். மனோகர் , சிங்கம்புலி , திருமுருகன் , அழகன் தமிழ்மணி , ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் கதையை  எழுதி இயக்கியுள்ள ஜி.ஆறுமுகம்  பாலு மகேந்திராவிடம் உதவியாளராகப் பணியாற்றியவர். சில குறும்படங்கள் இயக்கிய அனுபவமும் கொண்டவர்.

இயக்குநரிடம்  படம் பற்றிக் கேட்ட போது ,

” இது படித்த இளைஞர்களின் கோபத்தின் முன் எப்படிப் பட்ட பலசாலியும் வீழ்ந்து விடுவான் என்று சொல்கிற கதை.

இது மதுரைப் பகுதியில்  நடக்கும் கதை என்றாலும் மதுரை , சென்னை, கொடைக்கானல் , பாண்டிச்சேரி போன்ற பல  ஊர்களில் படப்பிடிப்பு நடந் துள்ளது. பல நாட்கள் இரவில் படப்பிடிப்பு நடத்தினோம்.
31 நாட்களில் மொத்தப் படப்பிடிப்பையும் முடித்தோம்.” என்றவர் தயாரிப்பாளரை நன்றியுடன் நினைவு கூர்கிறார்.
” தயாரிப்பாளருக்கு இதுதான் முதல் படம். நானும் அறிமுக இயக்குநர் தான் . இருந்தாலும் , எனக்கு முழு சுதந்திரம்  கொடுத்தார். படப்பிடிப்பு நடக்கும்  இடத்துக்கு ஒரு நாளும் அவர்  வந்ததில்லை. படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே நான் தான் தினமும் பணப்பட்டுவாடா செய்தேன் . அந்த அளவுக்கு என்னிடம் நம்பிக்கை வைத்து பொறுப்பு கொடுத்தவர் அவர் . ” என்கிறார் .

இப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருப்பவர் விஜய்.வி. , இசையமைத்திருப்பவர் சார்லஸ் தனா இருவருக்கும் இதுவே முதல் படம் . எடிட்டிங் – எஸ்.சதிஷ் குமார் , வசனம் _ கே.நந்தகுமார் ,கலை இயக்கம் – முத்துவேல் , நடனம் -பாலாஜி ,தினா , ராதிகா. ஸ்டண்ட் – ஆக்ஷன் பிரகாஷ் , தயாரிப்பு நிர்வாகம் -ஒய்.எஸ்.டி. சேகர்.
படத்துக்குத் தணிக்கை முடிந்து யூ சான்றிதழ் கிடைத்து இருக்கிறது.

‘ புயலா  கிளம்பி வர்றோம் ‘படம் ஜூலை 28-ல் வெளியாகிறது.

Cyclothon conducted by hotel Turyaa Chennai in ​association with ​Star riders to create an awareness of living a healthy lifestyle​

Cyclothon conducted by hotel Turyaa Chennai in association with Star riders to create an awareness of living a healthy lifestyle

 

This weekend, saw enthusiastic cyclists, beginners and seasoned, from the Bohra Community cycle up to 40 km through Old Mahabalipuram Road. The event was jointly conducted for the first time by the well-known Star Ryders cycling group in association with Anjuman-e-Vajihi and Nabaat, an initiative promulgated post the Chennai floods to restore the greenery in the city.

This Cyclothon event had been held to create an awareness of living a healthy lifestyle in this large trade-based community. The event organizers donated the proceeds from the event for tree planting across the city and its outskirts. The Cyclothon flaged off at 5 AM over 3 distances of 10K for Beginners, 25K for Challengers and 40K for Champions.

Star Ryders cycling group, comprising of passionate cyclists from Chennai, is a known group within the cycling fraternity and regular face at most cycling and running events in the city. You would spot them early in the morning in Marina, ECR or OMR going about their regular practice sessions through the week.

 

 

 

மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

அவ்னி மூவிஸ் சுந்தர் .c  வழங்கும் ” மீசைய முறுக்கு ” இப்படத்தை ஹிப்ஹாப் தமிழா ஆதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார். மீசைய முறுக்கு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் சுந்தர்.c ,
இப்படத்தில் கதாநாயகனாக நடித்து , இசையமைத்து , கதை – திரைக்கதை – வசனம் – பாடல்களை எழுதி இயக்கும் ஹிப்ஹாப் தமிழா , நாயகிகள்  ஆத்மீகா , மனிஷா , நடிகர் விக்னேஷ் காந்த் , ஒளிப்பதிவாளர் யு.கே. செந்தில் குமார் , ஒளிப்பதிவாளர் கீர்த்தி வாசன் , படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
விழாவில்  தயாரிப்பாளர் சுந்தர்.C பேசியது :- 
 
” கிளப்புல மப்புல ”  பாடல் வெளியான நேரத்தில் நான் ஹிப்ஹாப் தமிழா ஆதியை சந்தித்தேன் அவர் ஏதோ பணக்கார குடும்பத்தை சேர்ந்தர்வர் என்று நினைத்திருந்தேன். ஆனால் பழைய ஜீன்ஸ் , டீ- ஷார்ட் போட்டுக்கொண்டு என்னை சந்திக்க வந்தார் ஆதி. ஆம்பள படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்க வேண்டும்  என்று கூறினேன். முதலில் ஆம்பள படத்தில் 5 பாடல்களுக்கு 5 இசையமைப்பாளர்களை நியமிக்கலாம் என்று இருந்தேன். ஆதி இசையமைத்த ” பழகிக்கலாம் ” பாடலை கேட்டேன் நன்றாக இருந்தது. அதன் பின் ஆதி நான் தான் அனைத்து பாடல்களுக்கும் இசையமைப்பேன் என்று என்னிடம் கூறினார். நானும் அவரிடம் சரி என்றேன். அவர் சொன்னது போலவே ஆம்பள படத்தின் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றது. அதன் பின் ஆம்பள படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  ஆதியை நான் கதாநாயகனாக அறிமுகம் செய்ய உள்ளேன் என்று கூறினேன். சொன்னது இன்று நிறைவேறிவிட்டது ஆதி இன்று கதாநாயகனாக , இயக்குநராக அறிமுகமாகிறார். மீசைய முறுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதியின் பையோ- கிராபி திரைப்படம் போல் இருக்கும்.
கொஞ்சம் கற்பனை கதை , நிறைய உண்மை கதை இது தான் மீசைய முறுக்கு திரைப்படம். ஆதி இந்த கதையை என்னிடம் கூறியதும் எனக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது. ஆதியை மிகப்பெரிய அளவில் நான் லாஞ் செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஆதி தன்னோடு மியூசிக் வீடியோவில் பயணித்த அதே டீமோடு பயணிக்க வேண்டும் என்று என்னிடம் கேட்டார் , அவர் சொன்னது போலவே இந்த குழு சிறப்பாக பணியாற்றி நல்ல படத்தை எடுத்துள்ளது. யூடியூப் ஸ்டார்ஸ் பலர் இந்த படத்தின் மூலமாக அறிமுகமாகி உள்ளார்கள். படத்தில் எனக்கு சாராவின் நடிப்பு மிகவும் பிடித்திருந்தது. நான் சாராவின் ரசிகன். பாடல்கள் , படமென்று அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது. வருகிற 

ஜூலை 21 ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டும் கூறினார் தயாரிப்பாளர் சுந்தர் C .

 
விழாவில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியது :-
இண்டிபெண்டண்ட் மியூசிக்கில் ஆரம்பித்து, திரைப்பட இசையமைப்பாளராகி , தற்போது ஹீரோ மற்றும் இயக்குநராக மீசைய முறுக்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளேன். இதற்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் சுந்தர்.C அவர்களுக்கு தான் நன்றி கூறவேண்டும்.நான் கதாநாயகனாக  அறிமுகமாகும் இந்த படத்தை மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு தயாரிக்க வேண்டும் சுந்தர்.C சார் என்னிடம் கூறினார். ஆனால் எனக்கு என்னுடன் பல ஆண்டுகளாக இனைந்து பயணிக்கும் குழுவோடு நான் இந்த படத்தில் இனைந்து பணியாற்ற விரும்புகிறேன் என்று கூறியவுடன் அதுவும் நன்றாக தான் இருக்கும் என்று உடனே ஒப்புக்கொண்டார் சுந்தர்.c சார்.
இந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் நான் சுந்தர்.C சாரிடம் கேட்ட நடிகர் விவேக் சார் தான். விவேக் சார் தான் அப்பா கதாபாத்திரத்தில்நடிக்க வேண்டும் என்று நான் நினைத்தது போலவே அவரும் நடித்தார். அவருடைய கதாபாத்திரம் மிகச்சிறப்பாக இருக்கும். ஏற்கனவே பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. என்னை போல் யூடியூப் மூலம் புகழ் பெற்ற பலர் இப்படத்தின் மூலம் அறிமுகமாகிறார்கள். குறும்படம் எடுத்து பலர் டீமாக சினிமாவுக்கு வந்தார்களோ அதே போல் இப்போது யூடியூப் மூலம் சென்சேஷன் ஆன நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். எங்களை போல் இன்னும் பலர் வருவார்கள் அதற்க்கு மீசைய முறுக்கு மிகப்பெரிய அளவில் ஊக்கம் அளிக்கும் ஒன்றாக இருக்கும் என்றார் ஹிப்ஹாப் தமிழா ஆதி.

அதர்வாவுக்கு இணையாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நயன்தாரா

அதர்வாவுக்கு இணையாக மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நயன்தாரா  
எந்த வேடம் ஏற்றுக கொண்டாலும் அந்த பாத்திரத்தின் தன்மைக்கு ஏற்ப தன்னை மாற்றி கொண்டு தனக்கான பெயரை ஈட்டிக் கொள்வதில் அதர்வா சமார்த்தியகாரர் என்று திரை உலகினர் பாராட்டி வருவதுண்டு.
ஒரு action ஹீரோவுக்கு உரிய கட்டுமஸ்தான உடலமைப்பு, குரல்  வளம், நடிப்பு திறன் மற்றும் தோற்ற அமைப்பு கொண்ட அதர்வா தற்போது நடித்து வரும்  இமைக்கா நொடிகள்” படம் மூலம் ஒரு முழுமையான action ஹீரோ உரு எடுப்பார் என பெரிதும் நம்புகிறது திரை உலகம்.
கேமியோ பிலிம்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பில் சி ஜெயக்குமார் தயாரிக்கும் “இமைக்கா நொடிகள்” படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து. இவர்  டிமோண்ட்டி காலனி  , திரைப் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.நயன்தாரா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அதர்வாவுக்கு இணையாக நடிப்பவர் புது முகம் ராஷி கண்ணா.பிரபல ஹிந்தி இயக்குநர் அனுராக் காஷ்யப் மிக முக்கிய வேடத்தில் நடிக்க இவர்களுடன்  கௌரவ  வேடத்தில் நடிக்கிறார் விஜய் சேதுபதி. பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகும் இமைக்கா நொடிகள் படம்  திரை உலகில் பெரிதும் எதிர்பார்க்க படுகிறது.
சமீபத்தில் பெங்களூரு நகரில் படமாக்கக்  பட்ட  இந்த படத்தின் சண்டை காட்சி சர்வதேச தரத்தில் உள்ளதாக கருதப்படுகிறது.  Honkong ஐ சேர்ந்த leehonyiu  என்கிற உலக புகழ் பெற்ற சைக்கிள் ஸ்டுண்ட் நிபுணர், சண்டை இயக்குனர் ஸ்டன் சிவாவுடன் இணைந்து  பணியாற்றிய இந்த சண்டை காட்சியில் அதர்வாவுடன் பல சண்டை கலைஞர்களும் பங்கு பெற்றனர்.
“இயக்குனர் இந்த காட்சியை விவரித்தவுடன் இதை எப்படி பிரமாண்டமாக, மற்றவர்கள் பிரமிக்கும் படி செய்ய முடியும் என்று சிந்திக்க ஆரம்பித்தேன். அதர்வா போன்ற வளர்ந்து வரும் ஒரு action ஹீரோவுக்கு இப்படி ஒரு பிரம்மாண்டம் அவசியம் என்பதை உணர்ந்து ஹோலி வூட் ஸ்டண்ட்   இயக்குநர்  ஒருவரை கொண்டு வந்து உள்ளேன்.  படம் எங்கும் பரவி நிற்கும் இத்தகைய  பிரம்மாண்டம் ரசிகர்களை இமையை மூட விடாமல் திரையில் ரசிக்க செய்யும் என்றார் தயாரிப்பாளர் சி ஜெயக்குமார்.
Atharva Murali has been marking his space in the film industry with his versatile performance that puts him in par with the best in the trade. The young handsome hero  has always been touted by the trade pundits to have it in him to be an impressive action hero thanks to his well toned physique, looks, voice and performance. He has lined up an impressive list of films that are slated for release this year.
IMAKKA NODIGAL , one among the much expected films is produced by CJ Jayakumar of Cameo films who had earlier produced Trisha illana Nayanthara . Imaikka nodigal is rated very high by the trade because of the huge star cast and production values. Directed by Ajay Gnanamuthu of ‘Demonte colony ‘ fame, starring Lady superstar Nayanthara in one of her career best roles, Raashi khanna and Bollywood director Anuraj kashyap playing important roles and extended cameo by Vijay Sethupathi. Imaikkaa nodigal is attracting the attention of the trade.
Adding more value to the film was the stunt sequence the team has shot in Bangalore recently.  Cycle stunt specialist from Hongkong Mr.Leehonyiu has been brought down to work on this cycle stunt choreographed by ‘Stun’ Siva master. Producer ‘Cameo films’ Jayakumar said,” When the director shared the idea of this cycle fight ,we decided to make it as stunning as possible. With Atharva in the pedal  we knew for sure this action sequence will be much discussed about. We decided to rope in the best of technicians to give the fight an international feel and quality, so we brought Hollywood cycle stunt specialist Leehonyiu from Hongkong. He has done a mind blowing job along with ‘stun’ Siva master. The combination of Atharva-Leehonyiu-‘Stun’ siva-R D Rajasekar and director Ajay Gnanamuthu will give the audience the feel of a Hollywood action film”.

பாலகிருஷ்ணா கலந்துகொண்ட கெளதமி புத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா

பாலகிருஷ்ணா கலந்துகொண்ட கெளதமி புத்ர சாதகர்ணி இசை வெளியீட்டு விழா 

ரகுநாத் வழங்கும் ஆர்.என்.சி.சினிமா பட நிறுவனம் சார்பாக நரேந்த்ரா தயாரிப்பில் இந்த படம் பிரமாண்டமாக உருவாகி உள்ளது.

இந்த படத்தின் நாயகி ஸ்ரேயா. மற்றும் கபீர்பேடி, தணிகலபரணி, சுபலேகாசுதாகர் இவர்களுடன் முக்கிய வேடத்தில் இந்தி நடிகை ஹேமாமாலினி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் ஆகியோர்  நடித்திருக்கிறார்கள் . நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹேமாமாலினி நடித்த படம் இது.

 

ஒளிப்பதிவு           :         சரஸ்வதி புத்ர ஞானசேகர்

இசை                    :         பாரதி புத்ர சிரஞ்சன்

நடனம்                  :         பாரதி புத்ரி பிருந்தா / சுசிலா புத்ரி ஸ்வர்ணா

ஸ்டண்ட்               :         மனோவரம்மா புத்ர ராம்லஷ்மண்..

பாடல்கள்             :         வைரமுத்து,தனக்கோடி புத்ர மருதபரணி

வசனத்துடன் தமிழாக்கப் பொருப்பேற்றிருப்பவர் தனக்கோடி புத்ர மருதபரணி.

இயக்குனர் பொறுப்பேற்றிருப்பவர் அஞ்சனா புத்ர கிரிஷ். இவர் தமிழில் சிம்பு நடித்த வானம் படத்தை இயக்கியவர். அத்துடன் தெலுங்கிலும் இந்தியிலும் பல வெற்றிப் படங்களை இயக்கிய முன்னனி இயக்குனர்.

 

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலகிருஷ்னா இவர் தமிழ் நாட்டில் ஒரு விழா மேடையில் கலந்து கொள்வது இதுதான் முதல் முறை. மற்றும் விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், நடிகர் கார்த்தி, தயாரிப்பாளர் சி.கல்யான், காட்ரகட்ட பிரசாத், படத்தின் இயக்குனர் கிரிஷ், படத்தின் தயாரிப்பாளர் ரகுநாத்,நரேந்திரா,y.ராஜீவ் ரெட்டி, ஜகர்ல முடி சாய்பாபு, பிபோ ஸ்ரீநிவாஸ், மற்றும் கிருஷ்ணாரெட்டி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

விழாவில் நடிகர் பாலகிருஷ்ணா பேசும் போது…

நான் சென்னையில் இந்த விழாவில் கலந்து கொண்டது ரொம்ப மகிழ்ச்சி நானும் உங்களில் ஒருத்தன் தான் சென்னையில் பிறந்தவன் சென்னையில் வளர்ந்தவன் தமிழ் நாட்டு தண்ணிய குடிச்சி வளர்ந்தவன். என்னோட நூறாவது படத்திற்கு  நிறைய கதைகளை கேட்டேன். புது மாதிரியாக ஏதாவது செய்யணும்னு நினைச்சுட்டு இருந்தேன். எதுவும் சரியா வரலே டைரக்டர் கிருஷ் இந்த கதையை சொன்னார் உடனே ஒகே சொன்னேன். இது நம்மளை ஆண்ட ஒரு நம் மன்னனின் கதை. இந்த கதையை கேட்டவுடனே எங்கப்பா என்.டி.ஆர், பெரியப்பா எம்.ஜி.ஆர், சித்தப்பா சிவாஜி இவங்க இவங்களை நினைச்சுக்கிட்டேன். இவங்க இன்ஸ்பிரேசன் இல்லாம எந்த படங்களும் பண்ண முடியாது..இந்த படத்தில் நடித்தது என்னோட பெத்தவங்க ஆசியும் பெரியவங்க ஆசியும் தான். இது இல்லாம சாதகர்ணியோட அம்மா கவுதமியோட ஆசிர்வாதமும் சாதகர்ணியின் ஆசியும் தான் இந்த படத்தில் நான் நடித்தது. அம்மாவை பெருமைப்படுத்துங்கள். நிச்சயம் நல்லா இருப்போம்.. அடுத்ததா நான் கே.எஸ் ரவிகுமார் படத்திலே நடிக்கிறேன்..சூட்டிங் கூட இங்க தான் கும்பகோணத்தில் 40 நாட்கள் நடக்குது..நானும் உங்களில் ஒருத்தன் தான்.. இந்த படத்தை குடும்பத்தோட போய் பாருங்க. தாயை பெருமைப்படுத்திய இந்த படம் குடும்பத்தில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பிடிக்கும். இவ்வாறு பாலகிருஷ்ணா தமிழில் பேசினார்.

 

மற்றும் கே.எஸ். ரவிகுமார் நடிகர் கார்த்தி, இயக்குனர் கிருஷ், இசையமைப்பாளர் பட் தயாரிப்பாளர் நரேந்திரா, வசனகர்த்தா மருதபரணி மற்றும் சி.கல்யாண் காட் ரகட்டா பிரசாத் உட்பட பலர் பேசினார்கள்..

இசையை கார்த்தி வெளியிட கே.எஸ்.ரவிகுமார் பெற்றுக் கொண்டார்.