All posts by admin

மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017!

மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017!

சென்னையின் முன்னணி மாடலிங் நிறுவனங்களுள் ஒன்றான ‘சென்னை மாடல்ஸ்’, ‘மிஸ்டர் அண்ட் மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ என்ற போட்டியை நடத்தியது. தகுதியும், திறமையும் கொண்ட மாடல்களைத் தேர்ந்தெடுப்பதோடு, புதியவர்கள் மாடலிங் துறையில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையிலும் இந்தப் போட்டி நடைபெற்றது.

கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட இந்தப் போட்டி, ரெஜிஸ்ட்ரேஷன், ஆடிஷன், கால் இறுதி, அரையிறுதி ஆகியவற்றைக் கடந்து, கடந்த 26ஆம் தேதி இறுதிப்போட்டி நடைபெற்றது. 64 பேர் கலந்துகொண்ட இந்தப் போட்டியில், இறுதிப்போட்டிக்கு 20 பேர் (ஆண்கள் 10, பெண்கள் 10) மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சென்னை ராயப்பேட்டையிலுள்ள டெக்கான் பிளாஸா ஹோட்டலில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், நடிகர்கள் ஷாம், சீமோன், தயாரிப்பாளர்கள் ஜே.எஸ்.கே. சதீஷ், சுரேஷ் காமாட்சி, பி.ஆர்.ஓ.க்கள் ஜான், வி.கே.சுந்தர், சங்கர், காஸ்டிங் டைரக்டர்ஸ் அருண் – அரவிந்த், மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட் நவீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ‘மிஸ் சவுத் இந்தியா 2016’ பட்டம் வென்றவரும், இந்தப் போட்டியின் பிராண்ட் அம்பாசிடருமான மீரா மிதுன், விஜய் உள்ளிட்ட பல ஹீரோக்களுக்கு காஸ்டியூம் டிசைன் செய்துதரும் என்.ஜே.சத்யா, மாதவன், அனிருத் உள்ளிட்ட பிரபலங்களின் ஹேர் ஸ்டைலிஸ்ட் தனசேகர் ஆகிய மூவரும் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுத்தனர்.
‘மிஸ்டர் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ ஆக கமருதீன், ஃபர்ஸ்ட் ரன்னர்-அப்பாக தீபன் மோகன், செகண்ட்-ரன்னர் அப்பாக ராஜேஷ் குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ‘மிஸ் ஃபேஷன் ஐகான் ஆஃப் சென்னை 2017’ ஆக ஹர்ஷிதா, ஃபர்ஸ்ட் ரன்னர்-அப்பாக சுஜு வாசன், செகண்ட் ரன்னர்-அப்பாக ஜெய்குமாரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும், மிஸ்டர் – மிஸ் சோஷியல் மீடியா, மிஸ்டர் – மிஸ் பர்ஃபெக்ட் டென், மிஸ்டர் வாக், மிஸ் கேட்வாக், மிஸ்டர் ஹேண்ட்சம், மிஸ் பியூட்டிஃபுல் ஃபேஸ், மிஸ்டர் பிஸிக், மிஸ் பியூட்டிபுல் பாடி ஆகிய விருதுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ஷாம், “ராம்ப் வாக்கில் நடக்கும்போது தன்னை ராஜாவாக நினைத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், தனக்கு முன்னே ராஜாவே அமர்ந்திருந்தாலும், அதைப்பற்றி கவலைப்படாமல் கெத்தாக நடக்க வேண்டும்” என்றார்.
இறுதிப்போட்டிக்கான உடைகளை யுவராஜ் ஹாரி, யக்‌ஷா ஸ்டுடியோஸ் டிசைன் செய்திருந்தனர். மாடல்களோடு இணைந்து ஷோஸ் டாப்பராக விஜே தணிகை மற்றும் மீரா மிதுன் இருவரும் நடந்தது, நிகழ்ச்சிக்கே மணிமகுடமாக இருந்தது.
“மாடலிங் என்றாலே தமிழ்நாட்டு மக்களுக்கு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. அதை மாற்றுவதோடு, மாடலிங் துறையில் நுழைய விரும்புவர்களுக்கு சரியான வழிகாட்டுதல்களை எங்கள் நிறுவனம் மேற்கொள்ளும். தமிழ்நாட்டில் உள்ள மாடல்களை, இந்திய அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளை நாங்கள் செய்ய இருக்கிறோம்” என்கிறார் ‘சென்னை மாடல்ஸ்’ நிறுவனத்தின் சிஇஓ சி. காவேரி மாணிக்கம்.

Earth Hour 2017, Chennai

Earth Hour 2017, Chennai

Massive Earth Hour observed at Elliots Beach

Massive Earth Hour Observed yesterday at the Historic Elliot’s Beach at 8.30PM to 9.30PM. it’s 10th Year of WWF Earth Hour 60+ Campaign.
World’s Biggest Environmental Campaign to Protect Mother Earth from Global Warming & Climate Change.150+ Countries Celebrated yesterday by switching Off lights and showing their solidarity by lighting the candel and taken a pledge.
Every Year Celebrities are identified to be face of the Campaign as Brand Ambassador  for this Global Campaign in Chennai it started by actor Danush, Jeeva, Anirudh etc but this year they have considered  young and youth educationalist as Chennai Earth Hour Brand Ambassador Dr.Regeen J Murli Managing Director of Jeppiaar Group of Instutions and Companies has extended all possible support to take this campaign forward across Tamilnadu.10th Year Campaign was Much Bigger then before.My Special Congratulations to its Brand Ambassador and Chief Guest Dr.Regeen J Murli, MD Jeppiaar Group of Companies Mr.Abilash,Manager, Jeppiaar Engineering College and staffs, and Students for Extending all possible Support and cooperation to make it big. Said WWF Saravanan.Special Guest of the Program was Dr.K.Abdul Ghani Green Man of India and General Secretary of All India Social Activists and NGO’s Association Spoken about the impact of Global warming like Tsunami, Thane, Chennai flood, Vardha and soon water scarcity and threats to Farmers life etc.
365days Co-Founder Prashanth Pandey Conducted Earth Hour Campaign Promotional at various schools and colleges by unique ways and possible to support Earth Hour.2000 Young Youth Students from Jeppiaar Group of Instutions  Participated at Elliot’s Beach to observe Earth Hour and Made it Huge.

இயக்குநர்க​ளுக்கு​ முதல் கதாநாயக​ன் ​பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான இயக்குநர்​ பொன்ரா​​ம்!

இயக்குநர்களுக்கு முதல் கதாநாயகன் பட வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான இயக்குநர் பொன்ராம்!

*பார்த்தவர்களை வியக்க வைத்த ஆல்பம்! *

இயக்குநர்களின் முதல் கதாநாயகன் வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள்தான் என்று
‘ரஜினி முருகன்’ புகழ்  இயக்குநர் பொன்ராம்  ஒரு விழாவில் பேசினார் .இதோ இது
பற்றிய விவரம்:

ஜுபின் இசையில் குமரன் எழுதி இயக்கிய ‘ஒரு காதலின் புதுப்பயணம்’ ஆல்பத்தின்
வெளியீட்டு விழா இன்று பிரசாத் ஆய்வுக்ககூடம் திரையரங்கில் நடைபெற்றது.

விழாவில் ஆல்பத்தை பொன்ராம் வெளியிட்டார். நடிகர்கள் மைம் கோபி,பிரஜின்
,நிஷாந்த் தயாரிப்பாளர் இளையஅரசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

*விழாவில் இயக்குநர் பொன்ராம் பேசும்போது*

” இந்தக் குமரன் என்னிடம் உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு வந்தார். அப்போது
வாய்ப்பு  தரமுடியவில்லை .அடுத்த படத்துக்கு பார்க்கலாம் என்றேன். ஆனால்
அடுத்து இப்படி ஒரு வாய்ப்பு வந்து இருக்கிறது. இதை நான் எதிர்பார்க்கவில்லை.
புதிய படமும் வந்து விட்டது. ஒருவரை நம்பி படவாய்ப்பு கொடுப்பது என்பது
சாதாரணம் அல்ல. முதல் படவாய்ப்பு கொடுக்கும் தயாரிப்பாளர்தான் நமக்கு
கதாநாயகன்- ஹீரோ.எல்லாமே. அதை மறந்து விடக் கூடாது. இந்த நான்கு நிமிட பாடல்
ஆல்பத்தைப் பார்த்தேன். நல்ல வேளை இரண்டு முறை போட்டார்கள்.  அதற்குள் பாடல்,
கதை, காட்சியழகு எல்லாமே இருந்தன.

இதுமாதிரி ஆல்ப முயற்சி தன்னை சோதித்துக் கொள்ளும்ஒரு முயற்சிதான். எஸ்.எம்
எஸ்.ராஜேஷ் கூட ஒரு காட்சியை மாதிரிக்கு எடுத்துக் காட்டி விட்டுத்தான்
படவாய்ப்பை பெற்றார். திரையிட்டபோது இதை முதல் முறை பாடலாகப் பார்த்தேன்.
இரண்டாவது முறை அதில் இருந்த கதையைப் பார்த்தேன்.
இந்த ஆல்பம் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள். “என்று கூறி வாழ்த்தினார்.

*நடிகர் பிரஜின் பேசும் போது* ,

“குமரன் முதலில் இயக்கிய ‘வயோல்’ குறும்படம் சர்வதேச விருதுகளைப் பெற்றது.
இந்த ஆல்பமும் ஒரு படம் போல உணர்ந்து செய்திருக்கிறார். ஒன்றரை வருஷத்துக்கு
முன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அதில் வரும் வில்லன் வேடம் பிரமாதமாக
இருக்கும். கதாநாயகனைவிட பெரியதாக

இருக்கும். அதை செய்ய ஆர்வமாக இருந்தேன். ஆனால் அந்த வாய்ப்பு நிஷாந்துக்குப்
போய்விட்டது. நான் கதாநாயகன் ஆகிவிட்டேன். போராடினால்தான் வெற்றி கிடைக்கும்.
நாங்கள் 5 ஆண்டுகள் போராடி’பழைய வண்ணாரப் பேட்டை’ படம்எடுத்தோம். முதல்வர்
மரணம், வர்தாபுயல் வந்ததால் சரியாகப் போகவில்லை. ஆனால் எங்கள் உழைப்பு
இன்றும்
பாராட்டப்படுகிறது.” என்றார்.

*நடிகர் மைம் கோபி பேசும்போது,*

“இந்தக் குமரனை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும் முதலில் இவர் ஆக்ஷன் சொன்னது
என்னை வைத்து ‘மாற்றம்’ குறும்படம் எடுத்த போதுதான்.

நான் முடியாது என்று எப்போதும் சொல்ல மாட்டேன். ஒரு ஈ கதாநாயகனாகும் போது,ஒரு
ஈ வில்லனாக முடிகிற போது நாம் கதாநாயகனாக ஆக முடியாதா? நான் எல்லாரையும்
ஊக்கப் படுத்தியே பேசுவேன். முயற்சி திருவினை ஆக்கும்.  தம்பி குமரன்
இயக்குநராகியிருக்கிறார்.வாழ்த்துக்கள். தம்பி.”என்றார்.

*இயக்குநர் குமரன் பேசும்போது,*

” நான் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டது இந்த ஒரு நாளுக்காகத்தான். கல்லூரிப்
படிப்பு முடிந்து உதவி இயக்குநராகவும் முடியாமல் இருந்த போது என் அம்மா, அப்பா
இருவருமே பிடிச்சதை  நீ பண்ணுடா நாங்க உனக்கு உதவி செய்கிறோம் என்றார்கள். அதை
என்னால் மறக்க முடியாது ‘வயோல்’குறும்படம் நிறைய விருதுகள் பெற்றது .

இந்த ஆல்பத்தைத் தயாரிக்க முன் வந்த ரெஜினா பிக்சர்ஸ் ரெக்ஸை மறக்க முடியாது .
நாயகன் ரெக்ஸ், நாயகி பார்வதி இருவரையும் எதுவுமே தெரியாமல் வாருங்கள்
என்றுதான் கூப்பிட்டேன்
.
அப்படி வந்து இப்படி அழகாக நடித்துவிட்டார்கள்.
பூஜையே போடாமல் என் அடுத்த படம்
இந்த ஆல்ப
அறிவிப்புடன் தொடங்கி விட்டது. அதற்கு உழைக்க இந்த நிமிடத்திலிருந்தே தொடங்கி
விட்டேன்.”என்றார்.

*நடிகர் ‘ஆடுகளம்’ நரேன் பேசும்போது,*

” நான் இதை எதிர் பார்க்கவில்லை. அசத்தி விட்டாய் குமரன், இது ஆல்பம் அல்ல.
ஒரு படம் முழுப் படம் பார்த்த திருப்தியைத் தந்து விட்டது..”என்றார்.

*ஆல்பம் இசையமைப்பாளர் ஜுபின் பேசும்போது,*

” முதலில் குமரன் இந்தக் கதையைச் சொன்ன போது, அது ஒரு உண்மை நிகழ்ச்சி என்ற
போது ஆச்சரியமாக இருந்தது. நான் கதைக்குள் இறங்கி உடனே வரிகளும் எழுத
ஆரம்பித்துவிட்டேன். ஜல்லிக்கட்டு போராட்டத்துக்குப் போன போது எல்லாரும் ‘
வேண்டும் வேண்டும் ஜல்லிக்கட்டு வேண்டும் ‘  என்ற போது என் கவனம் இதன் மீது
போனது. தனியே வந்து ‘இரு உயிர் இடம் மாறும் ஒரு காதலின் புதுப்பயணம் ‘ என்று
வரிகள் போட ஆரம்பித் துவிட்டேன்.”என்றார்.

ஆல்பம் வெளியீட்டு விழாவிலேயே இயக்குநரின் அடுத்த பட அறிவிப்பும் வெளியிடப்
பட்டது. அனாமிகா பிக்கர்ஸ் சார்பில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ படத்தை விநியோகம்
செய்த இளைய அரசன் ஹன்சிகா எண்டர் டெய்ன் மெண்ட்ஸ் சார்பில் புதிய படத்தைத்
தயாரிக்கிறார்.  குமரன் இயக்கத்தில் பிரஜின் ,நிஷாந்த் நடிக்க உருவாகவுள்ளது
படம்.

நிகழ்ச்சியில் ‘பழைய வண்ணாரப் பேட்டை’ இயக்குநர்  ஜி.மோகன்,ஆல்பம் நாயகன்
ரெக்ஸ் ,நாயகி பார்வதி, நடன இயக்குநர் சுஜாதா, ஒளிப்பதிவாளர் அர்ஜுன்,
எடிட்டர் தீபக், கலை இயக்குநர் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு பேசினார்கள்.

 

மூன்று மொழிகளில் தயாராகிறது பொட்டு!

மூன்று மொழிகளில் தயாராகிறது பொட்டு!

  தமிழ், தெலுங்கு, ஹிந்தி என  

                                மூன்று மொழிகளில் தயாராகிறது

                                                பொட்டு

ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தயாரிக்கும் படம் பொட்டு

இந்த படத்தில் பரத் நாயகனாக நடிக்கிறார்.  நாயகிகளாக நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே ஆகியோர் நடிக்கிறார்கள். மற்றும் தம்பி ராமய்யா, பரணி, நான்கடவுள் ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ்ராம், ஷாயாஜிஷிண்டே, மன்சூரலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவாலட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள்.வசனம்     செந்தில்   /   ஒளிப்பதிவு      இனியன் ஹரீஷ்                         

இசை     அம்ரீஷ்   /   பாடல்கள்     விவேகா, கருணாகரன்,சொற்கோ                        

ஸ்டன்ட்     சூப்பர் சுப்பராயன்  /   எடிட்டிங்     எலீசா                                            

கலை    நித்யானந் / நடனம்      ராபர்ட்                                                       

தயாரிப்பு மேற்பார்வை    ஜி.சங்கர்                                                           

தயாரிப்பு    ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்                                                             

கதை, திரைக்கதை அமைத்து இயக்குகிறார்    வடிவுடையான்.                                      

படம் பற்றி இயக்குனர் வடிவுடையானிடம் கேட்டோம்..                                              

பக்கா ஹாரர்  படமாக இது இருக்கும். படப்பிடிப்பு மொத்தம் 90 நாட்கள் நடைபெற்றது. பரத் இந்த படத்தில் பெண் வேடத்தில் நடித்துள்ளார். நமீதாஇதுவரை நடிக்காத  வித்தியாசமான வேடமம் ஏற்றுள்ளார்.தமிழில்  ( பொட்டு ), தெலுங்கில்  ( பொட்டூ ) , ஹிந்தியில்  ( பிந்தி )  என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.

சமீபத்தில்   இந்த படத்திற்காக பாடலாசிரியர் ஏக்நாத் எழுதி அம்ரீஷ் இசையில் உருவான “ அடி போடி சண்டாளி “ என்ற பாடல் காட்சியை கேரளாவில் உள்ள அதிரம்பில்லி என்ற இடத்தில் உள்ள அருவியில்  பரத் – சிருஷ்டி டாங்கே பங்கேற்க படமாக்கினோம். அந்த பாடல் தற்போது பட்டி தொட்டியெங்கும் பட்டையக் கிளப்பிக்கொண்டு இருக்கிறது.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது பொட்டு  என்றார் இயக்குனர் வடிவுடையான்.