All posts by admin

2 தேசிய விருது வென்ற “ஜோக்கர்”

2 தேசிய விருது வென்ற “ஜோக்கர்”

2 தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்படத்தின் படக்குழு கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு , இயக்குநர் ராஜு முருகன் , நாயகன் சோம சுந்தரம் , இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜு முருகன் பேசியது , நான் ஒரு நல்ல படத்தை இயக்க வேண்டும் என்று நினைத்தேன் , இப்படம் அனைவரின் ஒத்துழைப்பில் திரையரங்குக்கு வந்ததே மிகப்பெரிய வெற்றி. ஜோக்கர் திரைப்படம் இங்கு இருக்கும் அனைவரும் தங்களுடைய கருத்தை சுதந்திரமாக பேச வழிவகுத்து தந்துள்ளது எனக்கு மகிழ்ச்சியை  அளிக்கிறது. இப்படத்தின் நாயகன் குரு சோமசுந்தரம் பாலிவுட் நடிகர் நாவசுதின் சித்திக் போன்ற மிக சிறந்த நடிகர் என்றார் இயக்குநர் ராஜு முருகன்.

நடிகர் குரு சோம சுந்தரம் பேசியது :- ஜோக்கரில் நர்ஸ் வேடத்தில் நடித்த நடிகை ஒருவர் என்னை கைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்துவிட்டு , நானும் இப்படத்தில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று பெருமையாக கூறினார். எனக்கு அது சந்தோஷத்தை தந்தது. இந்த படத்தில் எழுத்து , இசை , தயாரிப்பு என்று அனைத்தும் ஒருங்கே இனைந்து மிகச்சிறப்பாக அமைந்தது. நான் இந்த படத்தில் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியது :- ஜோக்கர் கதையை கேட்டதும் நிச்சயம் படத்துக்கு தேசிய விருந்து கிடைக்கும் என்று நான் இயக்குநர் ராஜு முருகனிடம் கூறினேன். அதற்க்கு அவர் கிடைத்தால் நன்றாக இருக்கும் , மிகப்பெரிய அங்கீகாரமாக இருக்கும் என்றார். தேசிய விருது பெற்றுள்ள சுந்தர் ஐயர் “ ஜாஸ்மீன் “ பாடலை வெறும் இருபதே நிமிடத்தில் பாடினார் என்பது அதன் சிறப்பாகும். சுந்தர் ஐயர் இப்பாடலில் நிறைய புதிய விஷயங்களை கொண்டு வந்தார்  அது மட்டுமல்லாமல் பாடலில் நிறைய எமோஷனை சேர்த்தார் என்றார் ஷான் ரோல்டன்.

தயாரிப்பாளர் S.R.பிரபு பேசியது :-  ஜோக்கர் படத்துக்கு தேசிய விருது கிடைச்சது எனக்கு ரொம்ப சந்தோசம் இருந்தாலும் எங்கள்  நாயகன்  குரு சோமசுந்தரம் அவர்களுக்கும்  விருது கிடைக்கும் என்று ரொம்பவே எதிர்பார்த்தோம்  அவருக்கும் கிடைத்து  இருந்தால்  எங்களுக்கு  மேலும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும். எல்லாம் கூடி வரும்போது ஜோக்கர் திரைப்படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்ய வாய்ப்பு இருக்கிறது என்றார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட 7நாட்கள் திரைப்படத்தின் முன்னோட்டம்!

 ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட 7நாட்கள் திரைப்படத்தின் முன்னோட்டம்!

7நாட்கள் திரைப்படத்தின் முன்னோட்டம் இன்று (ஏப்ரல் 7) , ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவர்களால் வெளியிடப்பட்டது
மில்லியன் டாலர் மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் கௌதம் V.R. இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 7 நாட்கள். 2016 ஏப்ரல் மாதம் இப்படத்திற்க்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பெயர் வைக்கப்பட்டது. இயக்குனர் P.வாசுவின் மகன் சக்தி மற்றும் நிகிஷா பட்டேல் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில். பிரபு, நாசர், கணேஷ் வெங்கட்ராமன், M.S. பாஸ்கர் போன்றோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு அப்புச்சி கிராமம் படத்தில் ஹிட் குடுத்த விஷால் சந்திரசேகர் இசையமத்துள்ளார். M.S.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தில் மதன் கார்க்கியின் வரிகளில், டி. ராஜேந்தர் பாடிய பாடல் ‘புடிச்சிருக்க பெண்ணே சொல்லிபுடு’,பாடல் சமீபத்தில் வெளியிடப்பட்டு  நல்ல வரவேற்பை பெற்றது. படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்து தணிக்கை குழுவினால் இப்படத்திற்கு ‘யூ’ சான்றிதழும் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது, இன்று இப்படத்தின் முன்னோட்டத்தை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்டார்.

திரையில் ஒரு புதிய முயற்சி!

திரையில் ஒரு புதிய முயற்சி!

திரையில் ஒரு புதிய முயற்சி
” 6 அத்தியாயம்” எனும் ‘ஹெக்ஸா’
முதல் முறையாய் உலக சினிமா வரலாற்றில் அமானுஷ்யம் என்பதை மட்டுமே கருவாய் கொண்டு உருவாக்கப்பட்ட ஆறு அத்தியாயங்களை ஆறு இயக்குனர்கள் இயக்கியுள்ள முழு திரைப்படம் தான் இந்த  6 அத்தியாயம்.

‘ஹெக்ஸா’  என்றால் கிரேக்க மொழியில் எண் 6 -ஐக்குறிக்குமாம்.

இதில் என்ன புதுசு? என்று கேட்பவர்களுக்கு “அமானுஷ்யத்தை அடிப்படையாய் வைத்து எடுக்கப்பட்ட இந்த ஆறு அத்தியாயங்களின் முடிவும், படத்தில் இறுதியாய் வரும் க்ளைமேக்ஸில் தனித்தனியாய் சொல்லப்படும்” இது உலக அளவில் முதல் முயற்சி  என்றே சொல்லப்படுகிறது.

இது ஒரு பரபர திகில் படம் தான் என்றாலும் ஆறு அத்தியாயமும், படம் பார்ப்பவர்களுக்கு அறுசுவை உணவுண்ட திருப்தியைத் தரும்.

பிரபல எழுத்தாளரும், மனிதன், சென்னையில் ஒரு நாள், வன யுத்தம் போன்ற படங்களின் வசனகர்த்தாவும் வனமகன், நேத்ரா ஆகிய படங்களுக்கு வசனம் எழுதி வருபவருமாகிய அஜயன் பாலா அவர்கள், ஒர் அத்தியாயத்தை எழுதி முதல் முறையாய் இயக்குனராக அறிமுகமாகிறார்.

பிரபல எழுத்தாளரும், தொட்டால் தொடரும் பட இயக்குனருமான “கேபிள் சங்கர்” ஒரு அத்தியாயத்தை எழுதி இயக்கியிருக்கிறார். அது மட்டுமில்லாமல் படத்தின் எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.

அமெரிக்க நியுஜெர்ஸி பிலிம் ஸ்கூலில் திரைப்பட உருவாக்கம் குறித்து கற்ற சங்கர் தியாகராஜன்,  இந்த படத்தை தயாரிப்பதுடன்,  ஆறு அத்தியாயங்களில் ஒர் அத்தியாயத்தை இயக்கியும் உள்ளார்.

இவர்களுடன் மர்ம் தேசம் முதல் ஜீபூம்பா வரை குழந்தை நட்சத்திரமாக நடித்த லோகேஷ், ‘லைட்ஸ் ஆன் மீடியா’  சுரேஷ், குறும்பட உலகின் பிரபலமான ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோரும் ஒவ்வொரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார்கள்.

‘சட்டம் ஒரு இருட்டறை’, ‘தொட்டால் தொடரும்’ போன்ற படங்களில் நாயகன் தமன், ‘விஜய் டிவி புகழ்’ விஷ்ணு, ‘பசங்க’ கிஷோர்,  ‘குளிர் 100’ சஞ்செய், ‘நான் மகான் அல்ல’ வினோத்,  பேபி, வீர சிவாஜி, நிசப்தம் படங்களில் நடித்த பேபி சாத்தன்யா மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோருடன் மேலும் பல பதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.

சீனியர் கலைஞர்களான சி.ஜே.ராஜ்குமார் இரு அத்தியாங்களில் ஒளிப்பதிவு செய்ய, பிரபல புகைப்பட கலைஞர் பொன். காசிராஜன் இப்படத்தின் ஒர் அத்தியாயத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக களம் இறங்குறார்.  இவர்களைத் தவிர புதியவர்களான அருண் மணி பழனி, அருண்மொழி சோழன் மற்றும் மனோ ராஜா ஒளிப்பதிவாளர்களாய் பணியாற்றியுள்ளனர்.

இசையில் பிரபல இசையமைப்பாளர் தாஜ்நூர்,  சாம், ஆகியோருடன் ஜோஷ்வா, ஜோஸ் ப்ராங்க்ளின், சதீஷ் குமார் போன்ற வளரும் இசைக் கலைஞர்கள் புதிய இசையமைப்பாளர்களாக அறிமுகமாகியுள்ளனர்.

‘தீம் சாங்’ எனப்படும் கருத்துப் பாடலை பிரபல நடிகர், விஜய் டிவி புகழ் மா.கா.ப ஆனந்த் மற்றும் கவிதா தாமஸ் ஆகியோர் இப்படத்திற்காக புரியாத புதிர் புகழ் சி.எஸ்.சாம் இசையில் ஒர் ஷூயூர் ஷாட் சூப்பர் ஹிட் பாடலை பாடியிருக்கிறார்.

மேலும் இப்பாடல்,  நடனக் கலைஞர்களை கொண்டு, படம் ஆக்கப்பட்டு, அதை 2டி அனிமேஷனாக மாற்றப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தயாரித்துள்ள சங்கர் தியாகராஜன், பல உலக புகழ் பெற்ற பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களில் அமெரிக்காவில் பணிபுரிந்து,  தாயகம் திரும்பிய இந்த சேலத்துக்காரர்.  ஐபோன், ஆண்டிராய்ட் போன்களில் பிரபலமான ‘ப்ளாஷ் கார்ட்ஸ் தமிழ் லெசன்ஸ்’ என்னும் ஆப்- யை வடிவமைத்து, பெங்களூரில் ‘வண்ணால மொபல் ஆப்ஸ் (பி) லிமிடேட்’ என்னும், மென்பொருள் நிறுவனத்தை நிறுவி நடத்தி வருகிறார்.  இப்படத்தை ”ஆஸ்கி மீடியா ஹட்” எனும் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

”6 அத்தியாயம்”  எனும் ஹெக்ஸா’   திரையில் ஒரு புதிய அனுபவம் தர இன்னும் சில மாதங்களில் வெளியாகிறது.

Build Your Story with Lego at Oyster kids

Build Your Story with Lego at Oyster kids

 

“Create your own fantasy”

Chennai: Oyster Kids provides children with the opportunities they need to become effective learners and to develop the skills demanded by the 21st century: Collaboration, Communication, Creativity, Critical Thinking and Problem Solving.

Everyone has a story to tell, but sometimes it’s difficult for students to get started, or to find words that match their imagination. The new Story Starter concept is the helping hand that kick-starts their creativity and boosts their literacy skills. Students work together to build better stories with LEGO® bricks and figures, utilizing the concept’s unique software to visualise and communicate their achievements. Story Starter is a hands-on tangible experience that inspires students to collaborate while creating and communicating stories using LEGO bricks as their tools. It is an innovative way of teaching a wide range of essential skills.

Camp Details:

Age Group: 5 to 6 yrs and 7 to 10 yrs

Dates:

Camp 1 April 10th to 14th  April
Camp 2 April 17th to April 21st
Camp 3 April 24th to April 28th

 

Address:

Oyster Kids,

#14, Ananda Road, Alwarpet,

Chennai – 600018

மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகன்!

மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகன்!

மேடை நாடகத்திலிருந்து வெள்ளித்திரையில் ஒரு கதாநாயகன் ஜெகதீஸ்:

ஜெகதீஸ், மார்ச் 31,ஆம் தேதி வெளியாகி இருக்கும் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படத்தில் நான்கு கதா நாயகர்களில் ஒருவராக அறிமுகம் ஆன ஜெகதீஸ் “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” பட வாய்ப்பு குறித்து கூறுகையில், “ஓர் நாள் மணிரத்னம் அவர்களின் இணை இயக்குனர் தினேக்ஷ் செல்வராக்ஷ் அவர்களிடமிருந்து ஒரு போன், அவரை சென்று பார்த்தப் பின் தான் தெரிந்தது, திரு.தினேக்ஷ் அவர்கள் தனது படத்திற்கு திறமையான ஒரு புதுமுகம் தேடியபோது வினோதினி வைத்தியனாதன் அதற்கு உதவியதாகவும் தெரிந்தது, மொத்த குழுவும் திறமையான புதுமுகங்கள் எனவே யோசிக்காமல் இயக்குனரிடம் தன்னை ஒப்படைத்ததாக கூறினார்.

மேலும் இந்த “நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவும் தப்பில்ல” திரைப்படம், தமிழில் உருவாகும் முதல் “கிரவுட் பண்டட்” திரைப்படம் ஆகும். 75க்கும் மேற்பட்ட புது தயாரிப்பாளர்கள் உதவியுடன் உருவாகும் திரைப்படம்.

ஜெகதீஸ் தனது முதல் படம் முடியும் முன்னரே திருமதி.ஜானகி விஸ்வனாதன் (தேசிய விருது இயக்குனர்) அவர்களுடைய படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடிக்க நாடக அனுபவும் மிக்க திறமையான புதிய தமிழ் முகம் தேடி அழைக்க அப்படமும் முடிந்து திரைக்கு வர உள்ளது. அதே படத்தில் ஜெகதீஸின் கவிதை திறமை பற்றி அறிந்த ஜானகி விஸ்வனாதன், அவரை பாடாலாசிரியனாகவும் அறிமுகம் செய்கிறார்.

இவர் மேலும் “ஈக்ஷா” என்ற தமிழ் மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் கதா நாயகனாக நடிக்கிறார், இதன் இயக்குனர் “சமீர்” நான்கு தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர் (பிளாக் ஹார்ட் குறும்படம்) ,இதில் கிட்டதட்ட 350 பேர்கள் ஆடிக்ஷன் செய்து ஜெகதீஸை கண்டு பிடித்ததாக தெரிவித்தார். இப்படத்தின் ஸூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது.

இவர் தனது இஞ்சினியர் படிப்பிற்கு பின்னர் தனது முழு நேர வேலையை நாடகம் மற்றும் நடிப்பு , எழுத்து மீது கொண்ட பற்றினால் முழு நேர கலைஞரானார், இவர் தியேட்டர் “ஒய்” மற்றும் “லிட்டில் தியேட்டர்” மற்றும் சென்னை முழுவதும் உள்ள பிற குழுவினர்களுடன் கடந்த ஐந்து வருடங்களாக விடாது பணியாற்றினார். இவை அல்லாது இயக்குனர் திரு.ராஜிவ் மேனன் அவர்களுடன் துணை இயக்குனராக 2015-2016 ஆண்டுகளில் பணியாற்றினார்.

திறமையாளர்களை தமிழ் திரை உலகம் என்றும் கைவிட்டதில்லை.ஜெகதீஸ் வெற்றி பெற வாழ்த்துவோம்.