அணில் உணவு வகைகளின் விளம்பரத் தூதுவராக நடிகர். விஜய் சேதுபதி ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

அணில் உணவு வகைகளின் விளம்பரத் தூதுவராக நடிகர். விஜய் சேதுபதி
ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

actor-vijay-sethupathi-26

 

actor-vijay-sethupathi-1

actor-vijay-sethupathi-3

actor-vijay-sethupathi-6

actor-vijay-sethupathi-9

actor-vijay-sethupathi-17

actor-vijay-sethupathi-20

actor-vijay-sethupathi-22

actor-vijay-sethupathi-23

actor-vijay-sethupathi-27

actor-vijay-sethupathi-33

actor-vijay-sethupathi-37
அணிலின் புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்திய நடிகர்
விஜய்சேதுபதி
===============
அரியலூர் பெண் பிள்ளைகளுக்கு நடிகர் விஜய்சேதுபதி ரூ. 50 லட்சம் நிதியுதவி
• விளம்பரத்தில் நடித்த பணத்தைக் கொடுத்தார் திண்டுக்கல்லில் உள்ள அணில் நிறுவனம் சேமியா தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. இதுவரை டாப் அணில் மார்க்கெட்டிங் நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிறுவனம், தற்போது புதுப்பொலிவுடன் புதுச்சுவையுடன் பாரம்பரியம் மாறாமல் ‘அணில் ஃபுட்ஸ்’ என்று அறிமுகமாகிறது.

நவம்பர் 9-ம் தேதி, திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்வில், அணில் நிறுவனத்தின் புதிய சிறுதானிய சேமியா வகைகளை மக்கள் செல்வன், விஜய் சேதுபதி அறிமுகம் செய்து வைத்தார்.கம்பு, வரகு, தினை, சோளம், கோதுமை ஆகிய சிறுதானியங்களை
மூலப்பொருளாகக் கொண்டு இந்தச் சேமியா வகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றும் புதுச்சுவையுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. தரம், ஆரோக்கியம், சுவை
ஆகியவற்றை மையமாக வைத்து மக்கள் நலனுக்காக இந்தச் சிறுதானிய சேமியாக்களை
அணில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.”துரித உணவுகள் பிரபலம் அடைந்துள்ளதால், அதில் உள்ள ஈர்க்கும் வேதியியல் சுவைக்கு மயங்கும் குழந்தைகள், பெரியவர்கள் என அனைவருக்கும் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.

இதனால், மக்களின் நலனுக்காக, குழந்தைகளுக்கும் பிடிக்கும் சுவையில், ஆரோக்கியமான முறையில், தரமான, உணவுகளைத் தயாரிக்க வேண்டும் என்று திட்டமிட்டு இந்தப் புதிய சிறுதானிய சேமியா வகைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

” என அணில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான கமலஹாசன் தெரிவித்தார்.
மேலும், அணில் நிறுவனத்தின் செயல் இயக்குனரான, சுகுமாரன் அவர்கள்,
‘’எளிதாகச் சமைக்கக்கூடிய வகையிலும், அதேசமயம் காலை உணவு ஆரோக்கியம்
நிறைந்ததாக இருக்க வேண்டும் என்றும் இந்தச் சேமியா வகைகளைத் தயாரித்துள்ளோம்.
இதில் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் எந்த வேதிக்கலப்பும் இல்லாத தரமான சேமியாவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை உண்போரின் உடல்நலமும்ஆரோக்கியமாகும்.என அறிவித்தார்.

அணில் உணவு வகைகளின் விளம்பரத் தூதுவராக நடிகர். விஜய் சேதுபதி ஓப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். புதிய ரகங்களை அறிமுகப்படுத்திய பின்னர் அவர் பேசியபோது,

“ அனைத்து செய்தியாளர்களுக்கும் வணக்கம்.நான் விளம்பர படங்களில்
அதிகமாக நடிக்காமல் இருந்தேன். சில விளம்பரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து
வருகிறேன். இப்போது, அணில்  உணவு வகைகளின்   (Anil Food   Products )
விளம்பரத்தில் நடித்துள்ளேன்.

இந்த விளம்பரப் படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையில், ஒரு பகுதியை கல்வி உதவித் தொகையாக  வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின் தங்கிய மாவட்டமாக அரியலூர் இருக்கிறது. இந்த மாவட்டத்தில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடிகளுக்கு  தலா 5000 ரூபாய் வீதம்

முப்பத்துஎட்டு லட்சத்து எழுபது ஆயிரம் ( 38,70,000 ). ரூபாயும்  மேலும் தமிழ்நாட்டில் உள்ள 10
அரசு பார்வையற்றோர் பள்ளிகளுக்கு தலா – ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சம் ( 5,00,000
) ரூபாயும் மேலும் தமிழ்நாட்டில் உள்ள 11  அரசு  – செவித்திறன் குறைந்தோர்
பள்ளிகளுக்கு தலா ரூபாய்   ஐம்பதாயிரம் வீதம் ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாயும்
( 5,50,000 ) மொத்தம் நாற்பது ஒன்பது லட்சத்து இருபதாயிரம் ரூபாய்  (49,20,000 )
தமிழக அரசிடம்  வழங்க முடிவு    செய்துள்ளேன்.
கல்வியில் பின் தங்கிய மாவட்டமான அரியலூரில் இருந்து அதிக மதிப்பெண் எடுத்து
டாக்டராக ஆசைப்பட்டு, அது முடியாமல் உயிர்நீத்த அனிதாவின் நினைவாக இந்தத்
தொகையை வழங்குகிறேன்.’’ என்று குறிப்பிட்டுப் பேசினார்.

 

Anil Foods signs Actor Vijay Sethupathi as its brand ambassador

~ Actor Vijay Sethupathi donates a share of his remuneration towards the education of the needy ~

Dindigul, 9th Nov 2017: Anil Semia, today announced its association with famous Kollywood actor Vijay Sethupathhy, who has been signed as the brand ambassador of the company. Rebranded as Anil Foods, Top Anil Maarketing Company is the holding company of the popular brand Anil Semiya. Anil Foods also introduced 5 different varieties of millet based products in the market along with unveiling new logo and introducing new product packaging.

Speaking at the press conference, Actor Vijay Sethupathi announced him donating a share of his remuneration towards the education of the needy. “Ariyallur is the most backward district when it comes to education and the infrastructure. There are 774 for Anganvadis in the district, for which an amount of 5000 will be donated per campus. (38,70,000/-).Another share will be donated to 10 blind schools, 11 Schools for the Deaf from Tamil Nadu; rupees 50,000 for each campus. (10,50,000/- ).A total amount of 49,20,000/- will be donated to the government of Tamil Nadu.

The funds will be distributed to the above mentioned institutions via the state government. The amount will be donated to the government in the memory of late Anitha, the student from Ariyalur district, a victim to the Neat exam issue” said the actor.

“In a time where junk food is popular regardless of its adverse effects on health & well being, Anil Foods has introduced varieties of healthy millet based Semiya varieties to the market” said Kamal Hassan, Managing director, Anil Foods.

Executive Director, Mr.Sugumar.N further added,”keeping in mind not only health & taste but also the ease to cook, Anil Semiya has introduced this product to the Market”.