Actor Vishal Birthday Celebration Stills and News

நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால்ரசிகர்கள் நற்பணி இயக்கம் சார்பில் மெர்சி ஹோம்ஸ் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோருக்கு இன்று காலை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதை தொடர்ந்து நடிகர் விஷால் திருவல்லிகேணியில் உள்ள கஸ்தூரி காந்தி அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 20குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
இவ்விழாவை VFF மேலாளர் முருக ராஜ் , புரட்சி தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்க மாநில தலைவர் ஜெயசீலன் ,செயலாளர் ஹரி மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் ஏற்ப்பாடு செய்து இருந்தனர்.
துணை நடிகர்கள் சிலருக்கு நடிகர் சங்கம் வேலை கொடுப்பதில்லை என்று ARO சங்கையா போன்றோர் புகார்சொல்கிறார்களே ??
இப்போது திடிரென்று ஒரு குற்றச்சாட்டு வைத்துள்ளார்கள் நாங்கள் துணை நடிகர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என்று. அதில் ஒரு சின்ன திருத்தம் இந்த நடிகர் சங்கம் செயல்படுவது துணை நடிகர்கள் மற்றும் நடிகைகளுக்கு வேலை கொடுப்பதற்கு தான். நாங்கள் குருதட்சணை என்னும் திட்டத்துக்கு கீழ் ஓய்வூதியம் கொடுத்து வருகிறோம். இதை கிட்டத்தட்ட 16 நாயகர்கள் சேர்ந்து மாதம்2000 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கி வருகிறோம். 70 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் நாங்கள் ஓய்வூதியம் வழங்கி வருகிறோம். முன்பெல்லாம் துணை நடிகர்கள் 5 வருடம் 1௦ வருடம் என ரசீதை வைத்து கொண்டு காசே வராமல் அலைந்து வந்தனர். தற்போது நாங்கள் தயாரிப்பாளர்களிடம் நீங்கள் அவர்களுக்கு உடனடியாக சம்பளம் கொடுத்தால் தான் அவர்கள் வீட்டில் அடுப்பு எரியும் என புரியவைத்துள்ளோம். இப்போது அவர்களுக்கு உடனடியாக சம்பளம் கிடைத்து வருகிறது. சர்ச்சைக்கூரிய நபர்கள் தேவை இல்லாமல் வதந்தியை கிளப்பி விடுகிறார்கள். துணை நடிகர்கள் அனைவருக்கும் பதவி கிடைக்க வேண்டும் என்ற காரணத்துக்காக தான் நாங்கள் எல்லோரும் பதவிக்கு வந்தோம். நாங்கள் யாரும் பதவி ஆசைக்காக வரவில்லை. நாங்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை போராடுவோம். கட்டி முடித்த பின்னர் துணை நடிகர்களின் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும் என்றார் நடிகர் விஷால்
வாராஹி தங்கள் மீது வைத்துள்ள குற்றச்சாட்டு பற்றி ??
அவர் ஆதாரத்தோடு அதை நிருபிக்கட்டும் நாங்கள் நடிகர் சங்கத்தில் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. நடிகர் சங்கத்தில் ஒரு குண்டு ஊசிக்கு கூட சரியாக கணக்கு உள்ளது. நாங்கள் எங்களுக்கு பேனா தேவை என்று நடிகர் சங்கத்தில் இருந்து எடுத்தால் கூட பொருளாளர் கார்த்தி அதற்க்கு அனுமதிக்கமாட்டார் ஏனென்றால் அவர் சிவ குமார் அய்யா குடும்பத்தில் இருந்து வந்தவர் கார்த்தி எங்கள் பொருளாளர். இங்கே ஊழல் என்ற விஷயத்துக்கு இடமே கிடையாது. அவர்களிடம் என்ன ஆதாரம் இருக்கிறதோ அதை கொண்டு வரட்டும்.
சென்னை மாவட்ட புரட்சி தளபதி விஷால் மகளிர் அணி
மகளிர் அணி தலைவி மஞ்சுளா தலைமையில் மாபெரும் இரத்த தான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதை நடிகர் விஷால் துவக்கி வைத்து ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட புரட்சி தளபதி விஷால் இளைஞர் அணி சார்பில் “ மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா “ இன்று நடைபெற்றது. இவ்விழாவை துவக்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவிற்கான ஏற்ப்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ப. கண்ணன் செய்திருந்தார்.
இன்று நடைபெற்ற நடிகர் விஷாலின் பிறந்தநாள் பிறந்த நாள் விழாக்கள் அனைத்தையும் மேலாளர் எம்.எஸ். முருகராஜ் , புரட்சி தளபதி விஷால் ரசிகர் நற்பணி மன்ற மாநில தலைவர் சி. ஜெய சீலன் , செயலாளர் ஹரி , நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏற்ப்பாடு செய்து இருந்தனர்.
நடிகர் விஷாலின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட புரட்சி நடிகர் தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவை துவக்கி வைத்து ஏழை எளிய மக்களுக்கு நடிகர் விஷால் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விழாவிற்கான ஏற்ப்பாடுகளை சென்னை மாவட்ட தலைவர் எம். ராபர்ட் செய்திருந்தார்.
சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக்
இனைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை நடிகர்விஷால் கலந்து கொண்டு துவக்கி வைத்தார்
நடிகர் விஷால் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணி அரிமா சங்கம் மற்றும் M.P.S.பாலி கிளினிக் இனைந்து நடத்தும் மாபெரும் இலவச குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து நடிகர்விஷால் பேசியது :- இது குழந்தைகளுக்காக நடத்தப்படும் சிறப்பு மருத்துவ முகாம் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே அழைத்து வந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறேன். இது மிகச்சிறந்த மருத்துவ முகாமாகும் தாங்கள் அனைவரும் தங்களுடைய குழந்தைகளை இங்கே உள்ள மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு அழைத்து வருமாறு கேட்டு கொள்கிறேன் என்றார் விஷால்.
நடிகர் விஷால் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மருத்துவ முகாமில் ஒரு குழந்தைக்கு விஷால் தேவி என பெயரிட்டார்.
நடிகர் சங்கத்தை பற்றி குறை கூறுபவர்கள் ஆதாரம் இருந்தால் நிருபிக்கட்டும் பழைய முறைகேடுகள் பற்றிய எல்லா தகவல்களையும் இன்னும் 10 நாட்களில் நாங்கள் வெளியிடுவோம். வாராஹியிடம் ஏதாவது ஆதாரம் இருப்பின் அவர் என்னை வந்து நேரடியாக சந்திக்கட்டும். யார் வேண்டுமானாலும் என்ன குற்றசாட்டுகளை வேண்டுமானாலும் கூறலாம் அதை நான் சந்திக்க தயாராக இருக்கிறேன். நாங்கள் இன்னும் டெண்டரை விடவில்லை எங்களுக்கு இன்னும் சி.எம்.டி.ஏ approval வரவில்லை. வாராஹி சொல்வதில் உண்மை இல்லை. தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இதுவரை எந்த கடிதமும் எனக்கு வரவில்லை , நான் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. என்றார் விஷால்.