Actor Arya Movie & News

Actor Arya Movie & News

மீடியா நண்பர்களுக்கு ஆர்யாவின் வணக்கமும் அன்பும்…

நம்ம ஊருக்கு மெட்ரோ ட்ரெய்ன் வந்திருச்சு… நூற்று நாலு டிகிரி வெயில் குறைஞ்சு கொஞ்சம் மழையும் வந்திருச்சு. அடுத்து என்ன… நம்ம படத்தோட டீஸர் வரவேண்டியதுதான…

வர்ற வெள்ளிக்கிழம 10. ஜூலை, 2015 அன்னிக்கு மாலை ஆறு மணிக்கு வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) படத்தோட முதல் டீஸர் யூ டியூப்ல வருது. இதை சோனி நிறுவனம் வெளியிடுறாங்க.

எனக்கு நடந்த எல்லா நல்ல விஷயங்களிலும் நீங்க இருந்திருக்கீங்க… கொண்டாட்டங்களிலும் கஷ்டங்களிலும் கூட நின்னுருக்கீங்க.

இப்போது என் சினிமா பயணத்தில் முக்கியமான சந்தோஷமான கட்டத்தை அடைந்திருக்கிறேன். இதை எப்போதும் போல முதலில் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். என்னுடைய 25வது படமான ‘வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க’ (VSOP) இறுதிக் கட்டத்துக்கு வந்திருக்கிறது. டீஸருக்கு பிறகு படத்தின் சிங்கிள் 18 ஜூலை 2015 அன்று வெளியாகிறது. ஆகஸ்ட் 14, 2015 அன்று படம் திரைக்கு வருகிறது.

ஐந்து வருடங்களுக்குப் பிறகு நான், சந்தானம், ராஜேஷ் சேர்ந்து வருகிறோம். இந்தப் படமும் பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரியே செம ஜாலியான கலகலப்பான குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும். உங்களை முழுமையாக சந்தோஷப்படுத்தும். இதில் என்னுடன் ஹீரோயினாக தமன்னா சேர்ந்திருக்கிறார். இன்னும் கருணாகரன், வித்யூலேகா, முக்தா பானு எனப் பெரிய நட்சத்திர பட்டாளம் இருக்கிறது!

கேமரா என் நண்பன் நீரவ் ஷா, இசைக்கு மியூசிக் சென்சேஷன் இமான், எடிட்டிங்கிற்கு தேசிய விருது விவேக் ஹர்ஷன், ஆர்ட் டைரக்டர் ஜாக்கி என அழகான டீம் அமைந்திருக்கிறது.

இந்த கால் செஞ்சுரி பயணத்தில் அன்பிலும் பாராட்டுகளிலும் ஆரோக்கியமான விமர்சனங்களிலும் என்னை வளர்த்தெடுத்த அத்தனை இதயங்களையும் நினைத்துக் கொள்கிறேன். உங்களால்தான் இது சாத்தியப்பட்டது.

மீடியா நண்பர்களுக்கும் என் ரசிகர்களுக்கும் தமிழக மக்களுக்கும் எப்போதும் என் நன்றிகள்… ப்ரியங்கள்..!

எப்போதும் போல்  வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க (VSOP) படத்துக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.

ஆர்யா.