August 10, 2020

தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் புது கதாநாயகன் ரங்கேஷ்

தமிழ் திரையுலகில் கால்பதிக்கும் புது கதாநாயகன் ரங்கேஷ்

கேக்கிறான் மேக்கிறான், நெஞ்சம் நிமிர்த்து படங்களை இயக்கிய இயக்குனர் எஸ். சாம் இம்மானுவேல் தற்போது ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார் இத்திரைப்படத்தின் கதை 25 வருடங்களுக்கு முன் திருநெல்வேலியில் நடந்த திகில் & ஆக்ஷன் கலந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதையை திரைக்கதையாக உருவாக்கியுள்ளார்.

எனவே இத்திரைபடதில் நடிக்க திருநெல்வேலியைச் சார்ந்த கதாநாயகனை தேடி உள்ளார் அப்போதுதான் திரைப்படத்தின் கதாநாயகன் ரங்கேஷ் அறிமுகமாகியுள்ளார் கதாநாயகன் ரங்கேஷ் நடிப்பு டான்ஸ் சண்டை பயிற்சிகள் முதற்படி கற்றுள்ளார், எனவே இந்தக் கதைக்கு இவர்தான் சரியான கதாபாத்திரமாக இருப்பார் என்று கதாநாயகன் ரங்கேஷ்ஐ தயாரிப்பாளர்களிடம் கூறி ஒப்புதல் பெற்று உள்ளார் இயக்குனர் சாம் இமானுவேல்

இப்படத்தில் முதல்கட்ட பணிகள் முடிந்து நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது மிக விரைவாக இப்படத்தின் சூட்டிங் ஆரம்பிக்க திட்டமிடப்படுவதாக இயக்குனர் எஸ் சாம் இம்மானுவேல் கூறி உள்ளார்., இத்திரைப்படத்தை ஒரு முன்னணி நிறுவனம் தயாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.