September 29, 2020

இராமலிங்கர் பணிமன்றம் செய்தி

இராமலிங்கர் பணிமன்றம் செய்தி

இராமலிங்கர் பணி மன்றம்
பத்திரிகை செய்தி

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அக்டோபர் 1 முதல் 8 வரை சென்னை ஏவி.எம். இராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்று வரும் இராமலிங்கர் பணிமன்றத்தின் 4ஆம் நாள் விழாவில் நிறுவனத் தலைவர்டாக்டர் ம. மாணிக்கம் அவர்கள் வரவேற்புரை நல்கினார்கள்.

புதிய தலைமுறை ஆசிரியர் மாலன் தலைமையேற்று பிரான்கன்ஸ்டைன் எனும் மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் நூலை வெளியிட்டார். வள்ளலாரும், காந்தியும் இணைந்து பரிசளிப்பது இந்த மன்றம். உலகமயமாக்கலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் தமிழை நவீனப்படுத்த விரும்பிய பாரதியின் வழியில் இம்மன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்நூல் 200 ஆண்டுகளுக்கு முன்னால் உள்ளவற்றை உணர்த்துவதாக உள்ளதாகத் தெரிவித்தார்.
அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள் பேசும்போது நடனக்கலை வயது ஆகிவிட்டால் வளைவது கடினம். ஆனால் எழுத்துக் கலை வயது ஆகஆக சிறப்படையும். இப்படி ஒரு திகில் கதையை தமிழில் படிக்க வாய்ப்பளித்த புவியரசுக்கு நன்றி தெரிவித்தார்.

மொழிபெயர்ப்பாளர் கவிஞர் புவியரசு பேசும்போது இன்னுல் உலகிற்கு ரோபோட் விஞ்ஞானத்தை முதன் முதலில் கற்பனையால் கூறியது என்று பெருமிதம் கொண்டார்.

மேலும், வளரும் சக்தி எனும் கோவை, திருச்சி, சேலம், மதுரை, தஞ்சை, புதுச்சேரி, சென்னை, திருநெல்வேலி என எட்டு மண்டலங்களில் நடத்தப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாநில அளவில் இறுதிச்சுற்று போட்டிகள் சென்னையில் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப் பட்டது.

இவ்விழாவில் கவிஞர் சிற்பி, கல்கி ஆசிரியர், ஒளவை நடராசன், ஊரன் அடிகள், சிவப்பிரகாச சுவாமிகள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.