மேற்கத்திய இசையில் தடம் பதிக்கும் மூன்று தமிழர்கள்

மேற்கத்திய இசையில் தடம் பதிக்கும் மூன்று தமிழர்கள்.

தமிழ் இசை உலகில் திரைப்படப்பாடல்களுக்கும்,பக்தி பாடல்களுக்கும் இருக்கும் அதே வரவேற்பு தற்போதுதிறமையான இசை கலைஞர்கள் உருவாக்கும் ஆல்பங்களுக்கும் இருக்கிறது. ‘இசைக்கு மொழியில்லை, ‘கலைக்கு எல்லையில்லைஎன்பார்கள்.அதைப்போல் இன்றைய இளைய தலைமுறையினர் உலகளாவிய இசையை தமிழில் கேட்பதை விரும்புகிறார்கள்அதிலும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மேற்கத்திய இசையை கேட்பதில் மட்டுமல்லஅத்தகைய இசையிலும் தங்களது முத்திரையையும் பதித்து கவனத்தை ஈர்த்து வருகிறார்கள்.அந்த வரிசையில் தற்போது இணையத்தில் லட்சக்கணக்கான லைக்குகளை பெற்று ‘திருவிழா’ என்ற ஆல்பம் வைரலாகி வருகிறது.

        இதுகுறித்து அந்த ஆல்பத்தின் இசை அமைப்பாளர்பாடலாசிரியர்தயாரிப்பாளர்நடிகர் என பன்முகத்திறமையுடன் வலம் வரும் வினுஷன் விஷ்ணுகுமார் (Vinushan Vishnukumar- FSPROD Vinu) பேசுகையில்,“ FSPROD என்ற இசைக்குழுவின் சார்பில் நானும்,என்னுடைய நண்பர்களான மிதுலன் வாசன் (Mithulan Vasan-FSPROD Mithu) மற்றும் விதுர்ஷன் கணேசராஜா (Vithurshaan Kanesarajah-FSPROD Vithi)ஆகிய மூவரும் இணைந்து இந்த ஆல்பத்தை உருவாக்கினோம்.

        எங்களுடைய பெற்றோர்கள் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு புலம் பெயர்ந்தார்கள்நாங்கள் மூவரும் சுவிட்சர்லாந்தில் தான் பிறந்தோம்பதிமூன்று வயதிலிருந்து எங்கள் மூவருக்கும் இசை மீதிருந்த தீரா காதலால் ஒன்றிணைந்தோம்பெரும் முயற்சிக்கு பிறகு 2010 ஆம் ஆண்டில் நாங்கள் மூவரும் இணைந்து ‘FSPROD’என்ற இசைக் குழு ஒன்றினை தொடங்கினோம்முதலில் சுவிஸ் மற்றும் ஜெர்மன் மொழியில் பாடல்கள் எழுதி இசையமைத்தோம்அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுஅதன் பிறகு தமிழில் ஆல்பம் செய்யவேண்டுமென்று விரும்பினோம்.

வித்தியாசமானதாகவும்தரமாகவும் இருக்கவேண்டும் என்பதற்காக எங்களின் தேடல் தொடங்கியதுகடந்த ஆண்டில் 12 பாடல்கள் அடங்கிய ‘சட்டப்படி’ என்ற ஆல்பத்தையும்அதே ஆண்டில் 15 பாடல்கள் அடங்கிய ‘திருவிழா’ என்ற ஆல்பத்தையும் வெளியிட்டோம்இதற்கு நாங்கள் எதிர்பார்க்காத அளவிற்கு பெரும் ஆதரவும்பாராட்டும் கிடைத்ததுஇந்த பாடல்களை வீடியோவாகவும் தயாரித்துஇணையத்தில் வெளியிட்டோம்அதற்கும் லட்சக்கணக்கான பார்வைகள் பெற்று எங்களை உற்சாகப்படுத்தியது.

           ஒரே ஆண்டில் இரண்டு பெரிய ஆல்பங்களை எங்களுடைய இசைக்குழு மட்டும்தான் வெளியிட்டிருக்கிறதுஅத்துடன் ஐரோப்பிய நாடுகளில் இசை நிகழ்ச்சி நடத்த ஏராளமான வாய்ப்புகளும் கிடைத்ததுஅழைப்பினை ஏற்று இதுவரை ஜெர்மனிடென்மார்க்கனடாபிரான்ஸ்சிங்கப்பூர்மலேசியாலண்டன்அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வெற்றிகரமாக இசை பயணம் மேற்கொண்டோம்.

      எங்களது தயாரிப்பில் வெளியான ‘திருவிழா ’என்ற ஆல்பம்,  கடந்த 2019 ஆம் ஆண்டில் ஸ்விட்சர்லாந்தில் அதிகமானவர்கள் பார்வையிட்ட ஆல்பம் என்ற பெருமையும்அதிகளவில் பிரபலமான பாடல் என்ற பாராட்டும்சிறந்த ஆல்பம் என்ற விருதும் எங்களுக்கு கிடைத்திருக்கிறதுஅந்நியத் தேசத்து மண்ணில் பிறந்து வளர்ந்தாலும்இங்குள்ள கலாச்சாரத்தையும்எங்களது ஆதி கலாச்சாரத்தையும் சமமாகவே பாவித்து வருகிறோம்தொடர்ந்து இசைப்பயணம் மேற்கொண்டுஇசையால் இந்த உலகை ஒன்றிணைக்க திட்டமிட்டிருக்கிறோம்.”என்றார்

         இதனிடையே ‘FSPROD’ என்ற இவர்களது இசைக்குழுவின் சார்பில் இவர்கள் ஆல்பங்கள் தயாரித்து வெளியிட்டாலும்இசைத் தொடர்பான அனைத்து பணிகளையும் இந்நிறுவனம் சார்பில் மேற்கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

              இவர்கள் இயற்றிய பாடல்கள் எல்லாமே  

பிரபல்யம் தான் .அதில் ஹபீபி (Habibi) மற்றும் வத்திக்குச்சி (Vathikuchi) ஆகிய இரண்டும் பிரபல்யமான பாடல்கள் ஆகும் .இரண்டுமே youtubeil சரித்திர சாதனைகள் படைத்தது .இதில் ஹபீப் 10 மில்லியன் பார்வையாளர்களை கொண்டது .ஸ்விட்சர்லாந்தில் மக்களை அலற விட்ட பாடல்கள் என கூறலாம்

VR CHENNAI Presents the 12th edition of KATHAI KALAI PARAMPARIYAM WALKS

VR CHENNAI Presents the 12th edition of KATHAI KALAI PARAMPARIYAM WALKS

VR CHENNAI presents the 12th edition of “KATHAI, KALAI, PARAMPARIYAM” WALKS – a unique opportunity to discover the stories that shaped Chennai through Culture, History & Art on 8th February 2020 at 11.30 am

Curated by VR Chennai and conducted by historian V. Sriram, the “Kathai, Kalai, Parampariyam” Walks trace the rich heritage of South India by way of art, design and architecture.

The Virtuous Retail philosophy of “Connecting Communities ©” draws from the concept of creating lifestyle centres that bring people together and strengthen social pride while reflecting local aesthetics. The city of Chennai is a fascinating blend of the mighty southern dynasties, the charming Madras of yore and the ambitions of the modern-day city.

The process of translating Virtuous Retail’s design ethos and vision into reality has been backed by extensive research into the art, architecture, culture and history of the region. As part of its commitment to encourage and nurture indigenous craft, VR Chennai has actively tried to engage with local artists and artisans. The collective of exquisite, especially commissioned artworks at VR Chennai, has been created in partnership with acclaimed artists and guilds such as Kalarings Art Studio, Cholamandal Artists’ Village, Klove Studio, Satish Gupta and Sri Sankara Silpa Sala, amongst others.

The Kathai, Kalai, Parampariyam Walks have been designed to take our visitors, across age groups, through a narrative of the rich heritage of this region. Thousands of man-hours have gone into handcrafting the art and in curating this one-of-a-kind experience, to perfection.

The Kathai walk explores the mythical tales of the Dasavataram, the 10 primary forms of Lord Vishnu, the inspiration of which stems from the discovery of the earliest known epigraph found in the Adi-Varaha Temple in Mahabalipuram (erstwhile Mamallapuram), a shore town not very far from Chennai. It marks the earliest known instance where all the 10 avatars are mentioned in one place. Modern interpretations of the Dasavataram are found scattered across the Centre waiting to be explored.

The Kalai walk showcases the indigenous art and architecture of the region through the multiple element that have been incorporated in the contemporary design of the centre including the soaring Gopurams and their intricately carved bases, the pillared mandapams and various bell installations at each of the four entrances, all an ode to the traditional temple architecture with a contemporary and sometimes playful twist.

Finally, the Parampariyam walk features a depiction of the tradition and history of this great city and stories behind them in the form of maps, motifs, coins and seals all etched into stone and a not-to-miss hand-painted mural, which traces the historical and cultural legacy of Chennai, detailing the evolution of the city from 250,000 BC through colonial era till present day.

Each work of art that is featured in the Kathai, Kalai, Parampariyam Walks is the result of extensive research and painstaking processes undertaken by the team at Virtuous Retail to create an atmosphere of artistic immersion for all who visit.

The previous editions of the walks have seen active participation of various groups from across the city, including the Duchess Club and The International Women’s Association (IWA). Chennai is home to many of us; yet not many know the story of its origin & transformation into the cosmopolitan City it is today. Kathai Kalai Parampariyam walks intend to fill this gap, to remind and to educate the people about the importance of their City in the pages of history.

காண்டு கண்ணம்மா’ சிங்கிள் ட்ராக்

காண்டு கண்ணம்மா’ சிங்கிள் ட்ராக்

சோனி மியூசிக் பிரம்மாண்டமாக ஒரு சிங்கிள் ட்ராக் ஒன்றை வெளியிடுகிறது. தமிழ்சினிமாவின் இளம் இசை அமைப்பாளர்கள் விவேக் மெர்வின் இசை அமைத்து பாடியுள்ள ‘காண்டு கண்ணம்மா’ எனும் பாடல் வெளிவருவதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர்கள் கலகலப்பாக பேசினார்கள்,

விவேக் மெர்வின்: பேசியதாவது ,

“ஸ்கூல் டேஸில் இருந்தே நாங்கள் ஒன்றாக இசையில் பயணித்து வருகிறோம்.  ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு கான்செப்ட். பட்டாஸ் ஒரு ஜானர். டோரா ஒரு ஜானர், குலேபகாவலி ஒரு ஜானர். பட்டாஸ் படத்தின்  பின்னணி இசையை  பத்து நாட்களில் செய்தோம்.  ரெண்டுபேருமே  லைவ் இண்ட்ஸ்ருமெண்ட்ஸ் யூஸ் பண்ண வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறோம். பட்டாஸ் படத்தில் 25 பேரை வயலின்க்கு மட்டுமே யூஸ் பண்ணோம்.


விஸ்வநாதன் ராமமூர்த்தி என இரட்டை ஜாம்பவான்களோடு  எங்களை ஒப்பிடும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு..அதே டைம் ரொம்ப பொறுப்பாக இருக்க வேண்டும் என்ற பயமும் இருக்கிறது.
ஒரசாத பாட்டு பண்ணும் போது தான் இப்படி ஒரு  மார்க்கெட் இருப்பதை உணர்ந்தோம். இதற்கு முந்தைய எங்களின் சிங்கிள் ட்ராக் பாடலான ஒரசாத பாடல் இணையத்தில் 150 மில்லியன் வீவ்ஸைத் தாண்டி இருப்பதை சாதனையாகப் பார்க்கிறோம்.  தமிழ்சினிமாவிலே
மொத்தம் 10-க்கும் குறைவான பாடல்கள் தான் இவ்வளவு வீவ்ஸை எட்டியுள்ளது. அந்த வரிசையில் ஒரு தனி ஆல்பம் பாடலும் பெற்றுள்ளது என்பது பெரிய விசயம். மக்கள் தரமாக இருந்தால் அது எந்த மீடியமில் வந்தாலும் கொண்டாடுவார்கள்

இப்போது பாட்டு இல்லாமல் படம் வருகிறதே?
பட்டாஸில் ஆறு பாட்டு இருந்தது. டோராவில் இரண்டு பாடல்கள் தான். அதே டைம் பாடல்கள் இல்லாவிட்டாலும் அதற்கு எங்களால் முடிந்த பெஸ்ட் பேக்ரவுண்ட் இசையை  கொடுப்போம்..நாங்கள் யாரோடும் போட்டி போடவில்லை. எங்கள் ஜெனரேசனில் எல்லா இசை அமைப்பாளருமே பிரண்ட்ஸாக இருக்கிறோம்.

இந்த காண்டு கண்ணம்மா  ட்ராக்கும் ஒரசாதே மாதிரி ஒரு சிங்கிள் ட்ராக்.

கு.கார்த்திக் தான் இந்தப்பாட்டை எழுதி இருக்கிறார். நாங்கள் சினிமா படங்களுக்கு இசை அமைத்துக் கொண்டே ரெகுலராக  இண்டிபெண்ட் சாங்ஸும் பண்ணலாம் என்று  முடிவெடுத்துள்ளோம்.

காண்டு கண்ணம்மா பாடலை நாங்கள் இருவரும் இணைந்து பாடியுள்ளோம்..காண்டு கண்ணம்மா ஜாலியான பாடலாக இருக்கும். இப்பாடல் பாங்காங்கில் படமாக்கப்பட்ட பாடல்.

சினிமாவில் நடிக்க  ஆர்வம் இல்லை. எங்களுக்கு ஆர்வம் இசையில் தான். பாடலில் நாங்கள் பெர்பாமன்ஸ் பண்ணுவதை எல்லாம் நடிப்பு என்று சொல்லக்கூடாது.

நிறைய பாடகர்களைப் பிடிக்கும். பாடல் கம்போஸிங்கின் போதுஎங்களுக்குள் நிறைய சண்டை வரும். ஆனால் அது பாட்டு நல்லா வரணும் என்பதற்காகத் தான். அதை  சண்டை என எடுத்துக்கொள்ள முடியாது. ஆக்கப்பூர்வமான  திறன் ஆய்வாக தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிறைய கமர்சியல் படங்கள் பார்ப்போம்..நல்ல எண்டெர்டெயின்மெண்ட் படங்கள் பிடிக்கும்..எல்லா பிராசஸையும் நாங்க ரெண்டுபேருமே பண்ணுவோம். சீக்கிரம் ஒரு பாடலை பண்ணிவிட்டோம்னா அந்தப்பாட்டு சீக்கிரம் ரீச் ஆகிடும். ஒரு பாட்டுக்கு ஒரு மெயின் ஐடியா வரும். அப்படி வந்த பிறகு தான் இயக்குநரிடம் எடுத்துச் செல்வோம்.

வெளிநாட்டிற்குச் சென்றால்  தான் கம்போஸ் பண்ண முடியும் என்பதெல்லாம் கிடையாது..நாங்கள் போட்ட நிறைய ஹிட் சாங்ஸ் எல்லாம் நம்ம ஊர் மொட்டை மாடியில் இருந்து போட்டது தான்” என்றனர்.

பாடலாசிரியர் கு.கார்த்திக்:

இந்தப் பாடலின் கான்செப்ட் பொண்ணு கோபமாக இருக்காங்க..அவங்க சொல்றதை எல்லாம் பையன் பாசிட்டிவாக எடுத்துக்கிறான் இதான் பாட்டு.” என்றார்.

பாடல் பற்றிய அறிமுக விழாவில் பாடல் உருவாக்கத்திற்கு காரணமாக இருந்த அனைவருக்கும் விவேக் மெர்வின் நன்றி தெரிவித்தனர்

JITO SPORTS 2020 ORGANISED BY JAIN INTERNATIONAL TRADING ORGANIZATION

JITO SPORTS 2020 ORGANISED BY JAIN INTERNATIONAL TRADING ORGANIZATION

Being in consonance with the concept of HUM FIT TOH INDIA FIT promoted nationwide, JITO or the Jain International Trading Organization initiated the JITO GAMES project across its Chapters few years ago. Now, it’s not unknown that even to this day, the importance given to sports, although picking up, is majorly lacking whereby sports is hardly pursued and encouraged as a potential career prospect and is majorly looked at as a mere additional to a person’s life. Understanding this scenario JITO through its JITO GAMES project is consistently and aggressively working towards promoting sports, fitness and health.

JITO is a pan world, unique and a multi-stakeholder community of visionary Jain who share a commitment to shaping the future. It’s the single largest organization of prominent Jain businessmen, industrialists and professionals worldwide with current members exceeding 12,000 in number spread across 70 chapters in India and 11 Chapters outside India. It envisions towards achieving ‘socio-economic empowerment’, ‘value based knowledge’ and ‘service with compassion’ of the Jain community and the country at large. Our members are highly accomplished and eclectic in their respective fields. In a span of ten years, JITO through its various projects has established many notable benchmarks in the vast landscape of professional and non-governmental organizations.

The JITO GAMES is a biennial sports event whose primary objective is to discover and nurture the latent talents of young Jain sportspersons so that they can become competent and participate at the National and International levels. The event is first held at the Chapter level, the winners of which thereafter become eligible to compete at the National level. This year, the National level JITO GAMES is due to be held in Namma Chennai in the month of May. The entire process, right from registration to selection to execution of the event is conducted in the utmost professional and transparent manner. In fact, to further strengthen its vision, a scholarship policy is currently effective to provide financial support to talented Jain sportspersons. Through this policy four sportspersons are currently making our country proud. A round of positive talks to open a world-class National Sports Academy is being held at the JITO Apex.

This year under the dynamic leadership of Shri Doulat Jain, Chairman and Shri Nimish Tolia, Chief Secretary of the JITO Chennai Chapter, a third edition of the JITO GAMES was held in Chennai at the Jawaharlal Nehru Stadium. The engine of the event was able to run on account of the financial support provided by the sponsors: Fybros (Title Sponsor),  MIGlobal (Powered by sponsor), Mohan Mutha Group and SunEdison (Associate Sponsors) and KV Finance & Investments (Food Sponsor) and others. Sharing key information, Mr. Praful Mutha, Convener and Mr. Rajesh Jain, Co-convener, revealed that they’d received the highest number of entries to date, close to 1500 in a record breaking period of just 10 days through the JITO GAMES App. In fact, badminton alone had received close to 600 entries for participation. Two new games – Squash and Athletics were added to the existing games of Chess, Table Tennis, Tennis, Badminton and Swimming. The participants who have been divided into 6 teams namely; Futura, Fotos, Clair, Paceman, Astro and 4S will compete in various categories. Our youngest player is 12 years old and the oldest is 60 years old. The entire event was organized and executed in a span one month with the support and dedication of almost 35 members from the main wing and the youth wing of the Chennai Chapter.

The two days event was held on the 25th and 26th of January at the Jawaharlal Nehru Stadium. The inaugural ceremony witnessed the participation and support of dignitaries from the JITO Apex, namely, Shri  Ganpathraj Chowdhary, President, Shri Abhaykumar Srisrimal , Vice-Chairman and Shri Anil Jain, Chief Secretary , Shri Kiran Dantewadia, Director, Shri Ranjit K Jain, Director, the TNAPTS Zone, the National Youth Wing,  and the Chennai Chapter.  The act of a talented football juggler had wowed the audience. Most of the games was held and completed effectively on 25th Jan 2020 except for the Athletics, finals of Badminton and Table tennis which was held on 26th January 2020. A gala entertainment night was also scheduled but before that various teams had marched after the torch of the JITO GAMES 2020 was lit in an Olympic style at the Stadium in front of more than 1000 people. The Chief Guest of the evening was Ms. Aparajitha Balamurugan who is a National Squash Player representing the Indian team. Also the occasion was graced by the Guest of Honor, two such players whom JITO through its scholarship policy under the JITO GAMES project has supported – Mr. Anshul Kothari, International Swimming Player and Ms. Simran Aman Singhi, Badminton International Player. The evening was filled with amazing and jaw dropping performances by the talented team from the Raack Academy in Chennai.

The closing ceremony was held on 26th January from 4PM-6PM at the Jawaharlal Nehru Stadium where Winners and Runners-up were honoured by the Chief Guest of the evening, Mr. A.K. Chithirai Pandian, Chairman of Tamil Nadu Volleyball Association. The singing of the National Anthem post all ceremonies marked the closure of the third edition of JITO GAMES CHENNAI 2020.

Although it’s the end of an edition, the game still continues and the next mega event – the NATIONAL JITO GAMES is scheduled to take place in the month of May at Namma Chennai. Stay tuned because this is just the beginning…

சிறகுகள் கால்டாக்ஸிஓட்டுனர்கள்சங்கம் கோரிக்கை

ஓலா, உபேர்போல் கால் டாக்ஸிகாகதமிழக அரசு பிரத்யேகசெயலியை அறிமுகப்படுத்தவேண்டும்.-சிறகுகள் கால்டாக்ஸிஓட்டுனர்கள்சங்கம் கோரிக்கை.

தமிழக நகரங்களில் இயங்கிக்கொண்டிருக்கும் ஓலா, உபேர் போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களை போல், தமிழக அரசும் பிரத்யேக செயலியை அறிமுகப்படுத்தினால், அதனை அனைத்து கால்டாக்சி ஓட்டுனர்களும் ஆதரவு தருவார்கள்.

இதுகுறித்து அந்த சங்கத்தின் தலைவர் சபரிநாதன் பேசுகையில்,“ கஜா புயலால் பாதிக்கப்பட்ட அதிராம்பட்டினம் பகுதியை சேர்ந்த கிராம பகுதிகளுக்கு சென்று, அவர்களுக்கு தேவையான கொசுவர்த்தி சுருள், போர்வை, மின்விளக்கு, கோதுமை மாவு, வாட்டர் பாக்கெட், டார்ச்லைட் போன்ற பொருட்களை வழங்கியதுடன், அவர்களுக்கு தேவையான பாதை வசதியையும் செய்து கொடுத்தோம். அப்பகுதிகளில் புயல் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காக எங்கள் ஓட்டுனர்கள் சங்கத்தின் சார்பாக ஒரு லட்ச ரூபாயை சேகரித்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரடியாக சென்று உதவி செய்தோம்.

ஓட்டுநர்களுக்கான சங்கம், ஓட்டுநர்களுக்கான உரிமைகளை கடந்து முதன்முறையாக சமூக சேவையில் ஈடுபட்டது அந்த தருணத்தில்தான்.. இதன் மூலம் ஓட்டுநர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையே ஒரு நேர்மறையாயன புரிந்துணர்வை ஏற்படுத்தும் பணியின் மூலம் சிறகுகள் அமைப்பு தொடங்கப்பட்டது.

மனிதனின் பிறப்பு முதல் இறப்பு வரை ஓட்டுனரின் பங்களிப்பு இருக்கிறது. அதேபோல் மனிதன் வாழ்வதற்கு தேவையான அனைத்து அத்தியாவசியமான பொருட்களிலிருந்து ஆடம்பரமான பொருட்கள் வரை, அனைத்து வகையான பொருட்களையும் அவர்களிடம் சேர்ப்பிப்பதற்கும் ஓட்டுனர்கள் பங்கு அளப்பரியது.

போக்குவரத்து காவலரின் அநாகரீகமான செயலால் பாதிக்கப்பட்ட திருமங்கலத்தைச் சேர்ந்த ஓட்டுநர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். அதுதொடர்பான பிரச்சனையில் சங்கத்தின் சார்பாக சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்பத்தினருக்கு காவல் துறை சார்பாகவும், அரசின் சார்பாகவும் நிவாரண தொகையை  பெற்று வழங்கினோம்.

தொழிலாளர் தினத்தன்று அன்னதானம், கண் தானம், மருத்துவ முகாம், கல்வி உதவித்தொகை, மரக்கன்று நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளிலும் எங்கள் சிறகுகள் அமைப்பு தொடர்ந்து முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது.

விபத்தில்லா வாரம், விபத்தில்லா சென்னை, விபத்தில்லா தமிழகம் என பல்வேறு பொருளில் விபத்து குறித்தும், சாலை விதிகள் குறித்தும், போக்குவரத்து விதிகள் குறித்தும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள சிக்னல்களில் நின்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். சீட் பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து புதுமையான பாணிகளில் விளக்கமும் கொடுத்து வருகிறோம். இதன்போது போக்குவரத்து காவலர்கள் படும் சிரமங்களையும், மக்கள் பாதுகாப்பாக செல்வதற்காக அவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறித்தும் விவரித்து வருகிறோம்.

ஓட்டுனர்களுக்கு சுயக்கட்டுப்பாடு தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறோம். இதற்கு முயற்சி செய்யவேண்டும் என்பதையும், அதற்கு தொடர் பயிற்சி தேவை என்பதையும் வலியுறுத்தி வருகிறோம்.

ஆட்டோக்களுக்கு அரசு குறைந்தபட்ச கட்டணத்தை நிர்ணயித்து இருப்பதைப்போல் கால் டாக்ஸி களுக்கும் குறைந்தபட்ச கட்டணத்தை தமிழக அரசு நிர்ணயிக்க வேண்டும்.

ஓலா, உபர் போன்ற தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு 25 சதவிகிதம் கமிஷன் தொகையை அவர்களுக்கு வழங்குவதைக் காட்டிலும், தமிழக அரசே கால்டாக்சிக்கென பிரத்யேக செயலி ஒன்றை உருவாக்கினால், அதனை நாங்கள் பதிவிறக்கம் செய்து அரசுக்கு வருவாயை ஈட்டித் தருவோம். இதுகுறித்து தமிழக அரசு சிந்திக்க வேண்டும் என்பதை இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்கிறோம்.

டோல்கேட் போன்ற சுங்கச்சாவடிகளில் கால் டாக்ஸி ஓட்டுனர்களுக்காக கழிப்பறை மற்றும் ஓய்வறையை ஏற்படுத்தி தரவேண்டும். இதனை நடைமுறைபடுத்துவதில் ஏதேனும் சிக்கல் எற்பட்டால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் தற்காலிக கழிவறையை அங்கு இடம் பெறச் செய்யலாம் என்ற ஆலோசனையும் முன்வைக்கிறோம்.

அரசுக்கு எதிராகவோ அல்லது அதிகாரிகளுக்கு எதிராகவோ போராட்டத்தில் ஈடுபடாமல், கால்டாக்சி ஓட்டுநர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் சட்டரீதியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம்.சிறகுகள் அமைப்பு அறவழியில் தன்னுடைய சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ” என்றார்.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் சிறகுகள் 

ஓட்டுநர் சங்கத்தின் மாநில தலைவர்  S.சபரிநாதன் ,

மாநில பொது செயலாளர் E .வெற்றி செல்வன் ,

மாநில பொருளாளர் E .ஆனந்த குமார், 

துணை தலைவர்  D.தனபால் ,

துணை தலைவர்  M .விஜயகுமார்  கொள்கை பரப்பு செயலாளர்

 M.வினோத் ,காப்பாளர் சாரதி ,

ஒருங்கிணைப்பாளர் கோபி கண்ணன் 

நிர்வாகி ஜெகதீசன் ,

இணை செயலாளர் லோகேஷ் 

துணை செயலாளர் ,ராஜ்குமார் நிர்வாகி 

குமார் கலந்து கொண்டனர்

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தமிழர் சிறப்பை போற்றும் தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழா

தமிழரின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் மிகப்பெரிய அடையாளம் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று
அழைக்கப்படும் தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம். உலகமே வியக்கும் வகையில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட
இந்த ஆலயம் ஆயிரத்தி பத்து ஆண்டுகள் தாண்டியும் கம்பீரமாக தமிழரின் பெருமையை பேசிக்கொண்டிருக்கிறது. இந்த
கோவிலின் கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5 ஆம் தேதி விமரிசையாக நடைபெறுகிறது.

தமிழர்களின் பெருமையை உலகிற்கு எடுத்துரைக்கும் இக்கோவில் அமைந்திருக்கும் தஞ்சை மண்ணில் பிறந்த பலர்,
தமிழகத்திற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக பல்வேறு துறையில் பணியாற்றி வருகிறார்கள்.

அரசியல், கலை, சினிமா, தொழில்த்துறை, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தஞ்சை மண்ணை சேர்ந்தவர்கள்
வெற்றிக் கொடி நாட்டியுள்ளார்கள்.

இசைத் துறைக்கு எம்.கே. தியாகராஜ பாகவதரை கொடுத்த தஞ்சை, நடிப்புக்கு சிவாஜி கணேசனை கொடுத்தது. இவர்களை
தொடர்ந்து நடிகைகள் டி.ஆர்.ராஜகுமாரி, ஹேமாமாலினி என்று தமிழ் சினிமா மட்டும் இன்றி இந்தி சினிமாவிலும் வெற்றிக்
கொடி நாட்டிய இவர்களும் தஞ்சையை சேர்ந்தவர்கள் தான்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், நடிகர் ராஜேஷ், நடிகர் விஜயகுமார், இயக்குநர் ஷங்கர் என்று அக்காலம் முதல் இக்காலம்
வரை தமிழ் சினிமாவில் ஜாம்பவனாக திகழ்பவர்கள் தஞ்சையைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்.

தஞ்சை மண்ணில் பிறந்தவர்களுக்கு கலை என்பது ரத்தத்தில் கலந்த ஒன்றாகும். அதனால் தான் பிற துறையில்
ஈடுபட்டாலும், கலைத்துறையில் கால் வைத்துவிடுகிறார்கள். சமீபத்தில் கூட, தஞ்சையை சேர்ந்த தொழிலதிபரும், சமூக
ஆர்வலருமான துரை சுதாகார், என்பவர் ‘களவாணி 2’ மூலம் நடிகராக வில்லனாக அறிமுகமாகி பாராட்டு பெற்றார்.

FIDA ORGANISED“KRITYA 2020 THE ANNUAL INTERIOR DESIGN EXHIBITION

FIDA ORGANISED“KRITYA 2020” – THE ANNUAL INTERIOR DESIGN EXHIBITION

KRITYA 2020, Annual Interior Design Exhibition celebrated original concepts, design ideas and design oriented products from budding interior designers were able to demonstrate innovative and functional design solutions along with aesthetical properties and artistic content under various design categories. Kritya over the years has become a platform for emerging interior designers to showcase their fresh design ideas to the outside world.

Mrs. Suma Harris, Entrepreneur/Director of Saravana Bavaa Entertainment Pvt Ltd graced the event and motivated the students for their extraordinary and ground-breaking designs.

The Exhibition brought forward people from the design fraternity, who share the same interests and also created an interactive atmosphere which made Kritya engaging.

What are the takeaway for the students? / Who is the audience?

The students meanwhile understand the importance of the elements and principles of design as the building blocks of creativity that would develop their originality, expression, skill and lateral thinking. It is important that they understand how theoretical principles relate to practical design. The audience include prominent Interior Designers, Architects, Faculty members from Educational institutions and all the parents of the participating students.   

About FIDA:

FIDA the design school is imparting Design education for the past 10 years. It has its branches in Chennai-Kilpauk & Taramani & Bangalore-M.G Road. FIDA focuses on design based education where students can get trained hands on in subjects like Interior Design, Fashion Design Photography, Fashion Styling & Visual Merchandising, Interior Decoration; that are fields which provide maximum  scope for self-employment. We have placed quality students in the design industry.

FIDA the design school  is headed by S. Fareeda Khan, and has seen immense growth under her leadership. Having been associated with Inter-National Institute of Fashion Design, Annamalai University, London School of Trends, Lakme Fashion Week, New York Fashion week, London Fashion Scout, Femina Miss India her students have got the very best exposure in the field of Design nationally and internationally.

நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம்

பிரதமர் மக்கள் நல திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக “நம்மவர் மோடி” பைக் ரேலி முன்னோட்டம்

நம்மவர் மோடி பைக் ரேலி முன்னோட்டம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகிகள் நியமன கூட்டத்தால் கேளம்பாக்கத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசார் அபியான் PMJKYPPA (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) நடத்தும் ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டம்.

 

பிரதான் மந்திரி ஜன் கல்யாண்காரி யோஜனா பிரசார் பிரசர் அபியான் அமைப்பின் சென்னை மற்றும் காஞ்சிபுரம் நிர்வாகிகளை அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் இந்த ‘நம்மவர் மோடி’ இரு சக்கர வாகன ஊர்வல முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் திரு. கண்ணன் கேசவன் காஞ்சிபுர மாவட்ட நிர்வாகி. திரு. செந்தில், திரு.பால்ராஜ், திரு.ஜீவரத்தினம் ஆகியோர் மத்திய சென்னை நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர்.

நம்மவர் மோடி எனும் இருசக்கர ஊர்வலத்தை அதன் தேசிய தலைவர் திரு.ஜெய் கோஷ் திவேதி கொடி அசைத்து துவங்கி வைத்தார்.

இந்த ஊர்வலம் முன்னோட்டம் சென்ற கேளம்பாக்கம் மற்றும் படூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

நம்மவர் மோடி இரு சக்கர வாகன ஊர்வலம் முன்னோட்டத்தின் நோக்கம்…

மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்களை பற்றிய விழப்புணர்வை ஏற்படுத்திய பயனாளிகளை உருவாக்கும் PMJKYPPA (Tamilnadu & Puducherry) பிரிவை மக்களுக்கு அறிமுகப்படுத்தி

PMJKYPPA (Tamilnadu & Puducherry) என்பது ஒரு இயக்கம். மக்களுக்கு தொண்டு செய்ய பாரத பிரதமரால் உருவாக்கப்பட்ட திட்டம். இது பாஜக.வின் கட்சி சார்ந்த திட்டமல்ல.

இந்த இயக்கமானது 4 மந்திரிகள், 7 பாராளுமன்ற உறுப்பினர்கள், ஓய்வு பெற்ற ஆட்சியர்கள் ஆகியோரை கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பில் உள்ள மத்திய அரசின் திட்டங்களை நேரடியாக மக்களிடம் கொண்டு சேர்க்க திட்டமிட்டுள்ளோம்.

இந்த பைக் ரேலி செல்வதன் மூலம் மக்களின் கவனம் ஈர்க்கப்படும். இதன் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு வெகுஜன மக்களிடையே ஏற்படும்.

இதனை மக்கள் அறியும் போது அதை முழுமையாக பயன்படுத்தவும் பயன் அடையவும் முடியும்.

முதலில் 50 பேரை கொண்டு இந்த பைக் ரேலியை ஆரம்பிக்க திட்டமிட்டோம். ஆனால் தற்போது 2000 பேர் வரை இந்த பைக் ரேலிக்கு வர தயாராகவுள்ளனர்.

தமிழகத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் எல்லா தாலுக்காக்களிலும் முகாம் வைத்து இதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

விவசாயிகளின் வளர்ச்சி, பெண்கள் முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் கல்வி வளர்ச்சி உள்ளிட்ட 165 திட்டங்கள் பற்றிய பிரச்சாரங்களை செய்ய உள்ளோம்.

சென்னையில் தொடங்கி தொடர்ந்து 48 நாட்கள் முழுவதும் நடத்தி மீண்டும் சென்னைக்கு வந்து முடிக்க திட்டமிட்டுள்ளோம். இதில் மத்திய மந்திரிகள் கலந்துக் கொள்வார்கள்.

நிறைய திட்டங்கள் இருந்தும் சாதாரண மக்களிடம் திட்டங்கள் சென்று சேர்வதில்லை என்பதால் இந்த வழியில் மக்களிடம் சென்றடைய உள்ளோம்.

முக்கியமாக முத்ரா திட்டம். இந்த திட்டத்தை இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முத்ரா லோன் அதிகமாக பெறப்பட்டுள்ளது. இது போல சில திட்டங்களை மக்களுக்கு தெரிகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதே மத்திய அரசுதான் என்பது பலருக்கும் தெரியவில்லை. அதனையும் இந்த பைப் ரேலி விழிப்புணர்வு மூலம் தெரியப்படுத்துவோம்.

மேலும் மத்திய அரசின் நிறைய திட்டங்கள் தமிழக மக்களுக்கு சென்று அடைவதில்லை. எனவே தான் நாங்கள் களத்தில் நேரடியாக இறங்கி செயல்பட உள்ளோம்.

இவ்வாறு PMJKYPPA அமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜெய் கணேஷ் அவர்கள் கூறினார்.

இந்நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களான மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்குமார் சேர்மக்கனியும், காஞ்சிபுர மாவட்ட நிர்வாகியான திரு.கண்ணன் கேசவன் இருவரையும் தேசிய பொதுச் செயலாளரும் மாநில பொதுச் செயலாளரும் பெரிதும் பாராட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

குறள் இணையத்தொலைக்காட்சி